ரஷ்யா இலங்கைக்கு ராணுவ உதவி : பயங்கர வாதத்திற்கு எதிராக.

இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளை இல்லாதொழிப்பதற்கு ரஸ்யா பூரண ஒத்துழைப்பு வழங்குமென தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் அலெக் சீ செடர் அரசாங்கத்திடம் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கு ரஸ்யா பூரண ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகத்தில் பயங்கரவாத்திற்கு எதிரான இலங்கையின் குரல் ஓங்குவதற்கு ரஸ்யா ஆதரவு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு தொடர்ச்சியாக இராணுவத் தளவாடங்களை வழங்குவதற்கும் ரஸ்யா உறுதியளித்துள்ளது.