ரஷ்யாவில் ரயில் தடம்புரண்டமைக்கு குண்டுவெடிப்பே காரணம்:ரஷ்ய உளவுத்துறை

russiatrainரஷ்யாவில் வெள்ளிக்கிழமை பின்னேரம் விரைவு ரயில் ஒன்று தடம் புரளக் காரணம் குண்டுவெடிப்புதான் என்று அந்நாட்டின் உள்நாட்டு உளவுத்துறையான எஃப்.எஸ்.பி. கூறுகிறது.

மாஸ்கோவுக்கும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கும் இடையில் சென்றுகொண்டிருந்த ரயில் தடம்புரண்ட சம்பவத்தில், குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டும் நூறு பேர் வரையிலானோர் காயமடைந்தும் உள்ளனர்.

ரயிலுக்கு அடியில் வெடிப்பொன்று நிகழ்ந்ததாக ரயிலின் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். தண்டவாளத்துக்கு அருகில் பள்ளமும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

7 கிலோ டி.என்.டி. குண்டுக்கு ஒப்பான நாட்டு வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ரஷ்ய உள்நாட்டு உளவு நிறுவனத் தலைவர் அலெக்ஸாந்தர் போர்ட்னிகோவ் கூறியுள்ளார்.