ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை:அரசாங்கத்திலுள்ள மலையகக் கட்சியொன்று சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவு?

ponse அரசாங்கத்தில் இணைந்துள்ள மலையக தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவு பொது வேட்பாளர் சரத் பொன்சேக்காவிற்கு கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா சென்றிருந்த ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் நாடு திரும்பியதை அடுத்து மலையகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவருடன் இரகசியமாக ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளார்.

பேச்சுவார்த்தைகளின் பலனாக குறித்த அரசியல் கட்சி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்திற்குள் ஐக்கிய தேசிய முன்னணியில்

இணையவுள்ளது. இதனைத் தவிர ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் இந்தியாவில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரைச் சந்திக்கவுள்ளதாகவும் அந்த சிரேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.