ரஜபக்ச பயணம் ரத்து; கைது செய்யப்படலாம் என அச்சம்?

போர்க் குற்றங்கள் புரிந்தமைக்காகக் கைது செய்யப்படுவேனோ என்ற அ‌‌ச்ச‌த்‌தி‌ல் இல‌ங்கை அ‌திப‌ர் ராஜப‌க்ச ல‌ண்ட‌ன் பய‌ணத்தை ரத்து செ‌ய்து‌ள்ளா‌ர் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன..

லண்டன் செல்லவிருந்த ராஜப‌க்ச, ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்ற இருந்தார்.

“அ‌திப‌ர் தனது திட்டங்களை மாற்றியுள்ளார்” என்று மட்டுமே இ‌ங்‌கிலா‌ந்து அய‌ல்நாட்டு அலுவலகம் பதிலை அளித்துள்ளது.

இ‌ங்‌கிலா‌ந்து சட்ட விதிமுறையின் பிரகாரம், ஒருவர் போர்க்குற்றங்களையோ அல்லது மனித உரிமை மீறல்களையே இ‌ங்‌கிலா‌ந்‌தி‌ல் செய்திருக்காவிட்டாலும் கூட, அந்நபர் அங்கு வரும்போது அவரை விசாரணை செய்வதற்கு இடமுள்ளது.

இதன் பிரகாரமே, 1998 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் சிலியன் சர்வாதிகாரி ஒகஸ்ரோ பினோசெட்டை லண்டனில் வைத்து ஸ்கொட்லாந்து யார்ட் காவ‌ல்துறை‌ கைது செய்தது. இவர் தனது 17 வது ஆண்டு ஆட்சியின்போது ஸ்பனிஷ் மக்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்திருந்தார் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

27 thoughts on “ரஜபக்ச பயணம் ரத்து; கைது செய்யப்படலாம் என அச்சம்?”

 1. கொடுங்கோலனே..லண்டன் நோக்கிய உனது பயணம் ரத்தாகலாம். ஆனால்… நரகம் நோக்கிய உனது பயணம் ஒரு போதும் ரத்தாகாது. எல்லா வினைக்கும் எதிர் வினை உண்டு. உனது பாவங்களுக்கும் தண்டனை உண்டு.

 2. இங்கிலாந்து விசா மறூக்க முடியுமே தவிர கைது செய்ய முடியாது என நினைக்கிறேன்.இது சன்நாயக நாடு தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் ஒருவரைக் கைது செய்ய முடியாது.

  1. பினோஷே 1988இல் இங்கிலாந்தில் தான் கைதானார்.

   இங்கிலாந்து கைதாக வேண்டிய சிலரை நாட்டிலிருந்து வெளியேற்றியுமுள்ளது. (அந்தச் சனநாயகம் பற்றி THAMILMARAN பேசவில்லை எனநம்புகிறேன்).

   1. I belive that Thamilmaaran is correct as pinocet was not a serving president at the time of arrest. he had nothing but a diplomatic passport. This is why his arreast is different nad rajapakse will not be arrested if he arrives here.

 3. இலங்கை சனாதிபதி கைது செய்யப்பட்டால் அது தன்னை அவமானப்படுத்துவதாகவே இலங்கையர் கருதுவர் எனவே இது உணர்வு சம்பந்தப்பட்ட விசயம் இங்கிலாந்து கைது எனும் காரியத்தைச் செய்து தன் முகத்தில் தானே கரியைப் பூசாது.சந்தோசத்திற்கு வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.தலைவர் மாவீரர் நாளூக்கு வரவார் மாதிரித்தான் இதுவும்.

  1. அனேகமாக அப்படிக் கருதாத தமிழரல்லாத இலங்கையர் பலரை என்னால் கூறிப்பிட முடியும்.

   1. தமிழ்மாறன் என்ற இலங்கையர் ராஜபக்ச என்ற இலங்கையர் அவமானப்படுவதை தனக்கு ஏற்படும் அவமானமாகக் கருதுகிறார். ராஜபக்ச அவமானப்பட்டால் அவரின் நண்பர்களான கருணா, மன்மோகன், சோனியா இவர்களுக்கும் அவமானம். அத்துடன்  இவர்களோடெல்லாம் நல்லுறவைப் பேணும்சம்பந்தர் ஐயாவிற்கும் அவமானம்தானே. 
     

 4. தமிழ்மாறன் ராஜபக்ஸ கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. ஏன் கைது செய்யப்பட்டால் விடுதலை செய்ய சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ணுவீர்கள் போலிருக்கிறது.

  1. ஆம்! நான் விடுதலைச் சொல்லியே ஆர்ப்பாட்டம் செய்வது மல்ல பிரித்தானிய அரசுக்
   கெதிராக வழக்கும் பதிவு செய்ய முயற்சிப்பேன்.பினோஷ்சையும் மகிந்தராஜய பக்சாவையும் ஒப்பிடுவது புலம் பெயர்தமிழருக்கு இருக்கிற முட்டாள் தனங்களில் ஒன்று.

   பொய்மூட்டையும் புழுகினிகளாக போன புலம் பெயர்தமிழரின் பெரும் பகுதியினருக்கு
   எந்த பிரச்சனைகளையும் ஆதாயம் நோக்கி அணுவார்கள். அரசியல் ஞானம் என்பது அறவே கிடையாது.2009 மேமாதம் 19 ம் திகதிக் பிறகு என்ன? நடந்தது. இதற்கு முப்பது
   வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்கிறதை சிந்திக்க தெரியாத சுத்தசூனியப் பேர்வழிகள்.

   சொந்தநாட்டிலேயே அகதியானோம்.உறவுகளைப் பிரிந்தோம். எனது அருமை தகப்பனின் பிணத்தைக் கூட காண முடியாத துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. என்னளவில்
   இதுமட்டுமே!என் இனத்தை பொறுத்தவரை என் இனத்தில்வந்தவர்களே என்யினத்தை
   உயிருடன் தீமூட்டி எரித்தார்கள்.. புலத்துபணத்தால் புகழ்ளாகிப் போனவர்கள் என்இனத்தை நோக்கியே மூளைபதனிடப்பட்டவர்களைக் கொண்டு தற்கொலை போராளிகளை கொண்டு அழித்தார்கள்.இதையெல்லாம் சிந்திக்கும் பொழுது மகிந்தா?

   எனதுகருத்துக்கள்.ஈழத்தமிழருக்கும் அங்கிருக்கும் அடக்கியொடுக்கப் பட்டவருக்கான
   குரலாக வருகிறதே ஒழிய இங்கிருக்கும் நாடோடி தமிழ் அரசாங்கத்திற்காக அல்ல.
   குண்டுவைச்சு குண்டுவைச்சு கொலைசெய்து கொலை செய்து என்னையும் நாடோடி
   ஆக்கிவிட்டார்கள்.கவலைப்பட்டு இனி பயன் ஏதும் இல்லை. ஒரு முட்டாள் முத்துக்குமாருக்கும் ஒரு முட்டாள் முருகதாஸ்சுக்கும் நிச்சியம் நான் தலை வணங்கியே ஆகவேண்டும்.உயிரோடு இருக்கிற முட்டாள்கள் இலங்காபுரி இன்னும்
   தீ பற்றி எரிவேண்டுமென கனவுகாணுகிறார்கள். மகிந்தாவை கைது செய்தால்..அது கிழக்காசிய பொருளாதரத்திற்கு அடிக்கிற சாவுமணி என்பதை உணருவதற்கு அவர்களுக்கு மிருகயறிவாகவே இருக்கிறது.மன்னிக்கவும்.மிருகயறிவு ஒருபோதும்
   தன்னிதைக் காட்டிக்கொடுப்பதில்லை.
   இங்கிருப்பவர்கள் அநேகமாக இந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்களாகவே இருந்து
   கொண்டு கருத்துச் சொல்ல வருகிறார்கள்.இந்த நாட்டு சட்டதிட்டத்திற்கு ஒழுகிநடப்பேன் என்றே உறுதிப்படுத்தியிருக்கிறர்ர்கள்.இவர்கள் இந்தநாட்டு சமூக
   பொருளாதர அரசியலில் ஈடுபட முழுஉரிமையும் உண்டு.அப்படி செய்வதே நீதியானது
   அறிவானது.
   பரிசோதணைக் கூடத்தில் பரிசோதித்து பார்க்கிற முயல் எலி பல்லி போல ஈழத்தமிழரை
   பாவிக்க முற்படாதீர்கள். அவர்கள் பறிகொடுத்தது ஏராளம்.பைத்தியக்காரர்களாக அலைந்தார்கள். மகிந்தாராஜபக்சாவினாலேயே அமைதி வாழ்வைப் பெற்றார்கள்.
   வெடிகுண்டு நாற்றத்தின் முடையும் விமாக்குண்டுவீச்சும் தமிழ்னின் அறிவீலித்தனத்தாலேயே தமிழ்பிரதேசங்களுக்கு கொண்டு வரப்பட்டது என்பதை முதல்
   உணருங்கள். கெற்றப்போல் அடித்துதிரிந்தவனை தேசியதலைவர் ஆக்கியது புலம்பெயர் தமிழர்மட்டுமல்ல..ஐரோப்பிய-அமெரிக்க அரசியலுமே இந்த சூத்திரத்தை
   புரிந்துகொள்ள இன்னும் நாளெடுக்கும்.

   1. ராஜபக்சவைப் போல இன்னொரு “மனிதாபிமானியை” சந்த்ரன் ராஜா அறியார்.

    பினோஷெ எப்படி சிலியைக் ‘கம்யூனிச அபாயத்திலிருந்து’ காத்தார் என்றதை மறந்தல்லவா அவர் கைது செய்யப்பட பிரித்தானிய அரசு இடங் கொடுத்தது.
    ராஜபக்சவை அவர்கள் கைது செய்து எதைச் சாதிக்கலாம்? ராஜபக்ச என்ன, தான் முன்பு வரைந்த தொழிளாளர் பட்டயத்தை அறிமுகப் படுத்தப் போகிறாரா? உலகமயமாக்கலை எதிர்க்கப் போகிறாரா? எதோ இங்கேயுள்ள ஏமாளிகளுக்குக் கொஞ்சம் போக்குக் காட்டுகிறார். அவ்வளவும் தான்.

    குற்றவாளிகள் தமது நிழலுக்கும் அஞ்சுவார்கள். அது தான் நிலைமை போல தெரிகிறது.

    1. கடந்த முப்பது வருடயுத்தங்கள் அதில் ஐக்கியதேசிய
     கட்சி புலிகள் வகித்த பாத்திரங்கள் பற்றி கதைக்கும்
     போது மட்டும் நான் மகிந்தாராஜபக்சாவை முன்னுக்கு
     இழுக்கிற பழக்கமுண்டு.உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் என்பதிலும் ஒரு மரியாதை உண்டு.வேறு எந்த சந்தர்ப்பதிலும் அவர் பெயரை நான் இழுப்பதில்லை.அவர் எனக்கு தத்துவார்த்தவாதியோ வழிகாட்டியோ அல்ல.இலங்கை அரசியலில் வேறு எந்த கட்சிதலைவர்களை நாம் நம்பமுடியும்?.
     எனக்கிருக்க கூடிய அரசியல் இலங்கை-அரசியலுக்கு மட்டும் உட்பட்டதில்லை. அப்படி பார்ப்பது அரசியலும் அல்ல.தற்போதைக்கு இதுவரை தான் கூறமுடியும்.

     1. ஐயோ ஐயோ என்று தலைம்யிரைப் பிய்த்துக்கொண்டு கத்தவேண்டும்போல் இருக்கு. ஆனால் தலையில மயிரில்லை. மகிந்த உள்நாட்டு யுத்தத்தை முடித்து வைக்கவில்லை. தொடக்கி வைத்திருக்கிறார். சம உரிமை கேட்ட இலங்கையின் ஒரு சனத்தொகையை “சந்தடியில்லாமல்” கொன்றுகுவித்துள்ளார். ம்கிந்தவிற்கு மரியாதை கொடுக்க அவர் எந்த விதத்திலும் தகுதியானவர் அல்ல. மகிந்த விரைவில் கம்பி எண்ணும் நாட்தள் வெகுதூரத்தில் இல்லை. அல் யசீரா இன்று பார்த்தீர்களா?

     2. அல் யசீரா இப்போது யாருக்காக வெலை செய்கிறது என்பதில்தான் அடுத்ததை யோசிக்க முடியும்.அல்லது உண்மைகளூக்கு இருபது வருடம் காத்திருக்க வேண்டும் ஆக நாம் வாழ்ந்தாக வேண்டும்.நம்ம தமிழ் என தெலுங்கர் ஆடும் நாடகத்தை இனி நம்ம ராஜபக்ஸ் என மாற்றீனால் மட்டுமே நமது பருப்பு வேகும் சூர்யா.இனி நடக்கிற் காரியத்தை மட்டும் கதைப்போம்.

   2. மகிந்த சாதித்ததை பினோசெற்றுடன் ஒப்பிடுவது முட்டாள்தனம்தான்! மகிந்தவின் சாதனை இமாலய சாதனை. ஒரு சிலநாட்தளில் பல ஆயிரம் பேரை பரலோகம் அனுப்புவது என்ன இலகுவான காரியமா? 

    கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய பிச்சைக்காரன் கைதுசெய்யப்பட்டால் முதலில் பயனடைவவர்கள் இலங்கையின் ஏழைத் தொளிலாளிகள்தான். நாடு ஒருபோதும் மீட்தவே முடியாதபடி அதள பாதாளதிற்குள் விழுந்துகொண்டு இருக்கிறது. ஆனால் ஒன்றுமட்டும் உண்மை, மகிந்தவை ஐயோ கைது செய்யப்போகிறார்களே என்று கவலைப்படுவோர் கவலையை விடுங்கள், அவரை இப்போது ஒருவரும் கைதுசெய்யமாட்டார்கள். 

    முன்பு எமது பாட்டிமார் கதை சொல்லி வளர்த்தார்கள், எப்படி இனக்கலவரதின்போது சிங்களவர் சிறு பிள்ளைகளை கொதிக்கும் தார்ப்பீப்பாயில் போட்டு எடுத்தார்கள், காருக்குள் வைத்து தமிழரை உயிருடனே  குடும்பமாக பெற்றோல் ஊற்றி உயிருடன் எரித்தார்களென்று. இப்படி நாமும் இனி எமது பேரப்பிள்ளைகளுக்கு மகிந்த எப்படி ஊரை மாதிரமல்ல அங்கிருந்த எல்லா உயிரையும் அழித்தர் என்று சொல்வோம். 

   3. சொல்லப் போனால், பினோஷேக்கும் ஒரு மரியாதை இருந்தது. சுகார்த்தோவுக்கும் ஒரு மரியாதை இருந்த்தது
    வென்றிருந்த்தால் ஹிற்லருக்கு எல்லாரையும் விட மரியாதை இருந்திருக்கும்.

    இன்று இலங்கையில் ஊழல் மிக்க ஒரு அடக்குமுறை ஆட்சி உள்ளது. அது தனிமனிதை குடும்ப அதிகாரமாகவும் மாறி விட்டது.
    இன்று இலங்கை போல ஊடகவியலாளடர்கட்குப் பாதுகாப்பற்ற நாடுகள் வெகு சிலவே.

    புலிகளை எதிர்க்கிற சாட்டில் ஒரு பேரினவாத சர்வாதிகார அடக்குமுறை ஆட்சியை நியாயப்படுத்துவதற்கு ஒரு தேவை தான் உண்டு: மனச்சாட்சியைத் தொலைத்து விடுவது.

 5. Bridgadier Carlone can be arretsed if he arrives in UK as I have evidence of his crimes and i will take action if i am notified about his aarival in UK.. Rajapakse’s situation is different and he is serving president. I love to see him in prison. Is it reality?

 6. பிரித்தானியாவில் வைத்து மகிந்தாவை கைது செய்திருக்க முடியும்: த இன்டிப்பென்டன்ட்

  http://www.eutamil.com/?p=531

 7. சரி.
  செய்யவில்லையே!
  ஏன்?
  கருணாவை ஏன் போக விட்டார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

  1. இல்லை கருணாமீது போர்க்குற்ற சாட்டுகளை அப்போதைய புலி பினாமிகள் சரியாக முன்னெடுக்கவில்லை காரணம் அவை மேதகு மீதும் பாய்ந்து விடும் என்ற பயம்தான்.

   1. மாமணி உமக்கு வந்து புலிகள் சொனவர்களா? அதிகப்பிரசங்கித்தனமா கதையாதையும்

  2. கருணா விடயத்தில் ‘புலிப் பினாமிகள்(?)’ என்போரல்லாது வேறு அமைப்புக்கள் தான் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தின. அதைப் பற்றி எதையும் செய்ய வாய்ப்பு ஏற்பட முன்னரே அவர் திருப்பி அனுப்பப் பட்டார்.
   நாங்கள் மேற்கு நாடுகளின் மனித உரிமை அக்கறைகள் பற்றிப் படிக்க நிறைய உண்டு.

   1. இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ அலைகிறார் தங்க்மே அவர் எல்லம் தெரிந்தவரடி தஙகமே
    தமிழ் மாறன் தனது உணர்வுகளை உண்மையாகச் சொல்லுகிறார் மற்றவர்கள் மறைத்து கதைக் கின்றனர் . முள்வேலித்தமிழனை முற்றிலும் மறந்து மேற்குநாட்டின் மனித உரிமைகளைப் பற்றிப் படிக்கப்,போகிறார்களாம்

  3. ” ‘பூமி சுழல்கிறது’ என்கிறார் மாணவர்.
   ‘அப்படியில்லை, பூமி சுழல்கிறது’ என்கிறார் ஆசிரியர்.
   ‘மலைகள் பசுமையாகின்றன’ என்கிறார் மாணவர்.
   ‘அப்படியில்லை, மலைகள் பசுமையாகின்றன’ என்கிறார் ஆசிரியர்.
   ‘ஈரிரண்டு நான்கு’ என்கிறார் மாணவர்.
   ‘அப்படியில்லை, ஈரிரண்டு நான்கு’ என்று திருத்துகிறார் ஆசிரியர்.
   ஏனென்றால் ஆசிரியருக்கே அதிகம் தெரியும்.”
   –மிரொஸ்லாவ் ஹொலுப் (Miroslav Holub)

 8. வேறு எதய்யவது சொல்லும் இதைக் கேட்டு அலுத்துப் போய்விட்டது
  வெற்றி பெற்றமனிதன் எல்லாம் புத்திசாலி இல்லை புகழ் பெற்றவனும் இல்லை

  1. இன்னமும் விளங்கின மாதிரித் தெரியவில்லையே!
   அது தான் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப……….ச் சொல்ல வேன்டியிருக்கிறது.

   “தளபதிகள் தவறு செய்வதில்லை” என்று ஒரு கவிதை பார்த்ததுண்டு. ஆனால் கொஞ்சம் நீண்டு விடும். இது மிக நல்ல கவிதை. (உரை எழுதக், கலித்தொகைப் பாடல்களை விட எளிதுமாகும்).

   உங்கள் பாடல் வரி மிகுதி: “… புத்தியுள்ள மனிதன் எல்லாம் வெற்றி காண்பதில்லை!”
   அது தான் வாத்தியாரே, “வென்று” கொண்டேயிருக்கிறீர்கள் போல.

Comments are closed.