ரஜபக்ச குடும்ப சர்வாதிகாரம் : கட்சிக்குள் பிளவு?

Rajapakshaதென் மாகாணத்தின் கிருவாபத்துவ மெதமுலன வளவில் ஆரம்பிக்கப்பட்ட ராஜபக்ஷக்களின் அரசியல் தற்போது 75 வருடங்களுக்கு மேலாக மிகநீண்ட வரலாற்றைக் கொண்டதாக பயணித்துள்ளதாக துறைமுகம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வரும் தேர்தலில் ஐந்து ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் முதன்மை மாவட்ட வேட்பாளர்களாகப் போட்டியிடும் அதேவேளை பல இரண்டாம் நிலை குடும்ப உறுப்பினர்களும் தேர்தலில் வேட்பாளர்களாப் பங்கேற்கின்றனர்.
ராஜபக்ச குடும்பத்திற்கு மிக நெருக்கமான முன்நாள் இலங்கை அழகியும், நடிகையுமான அனார்க்கலி தென்மகாண வேட்பாளராக நியமிக்கப்பட்டது தவிர, அனார்க்கலிக்கு ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதனால் அதிர்ப்தி அடைந்துள்ள தென்மாகாண சுதந்திரக்கட்சி அமைப்பாளர் முத்துகெதிகமவை விசேட பொலிஸ் பிரிவினர் விசாரணைக்குட்படுத்தி தாக்குதல் நடத்தியதுடன், அவர் பொலிஸ் கண்கானிப்பிற்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.
ராஜபக்சவின் குடும்ப அதிகாரத்தை நிலை நாட்டும் நடவடிக்கைக்கு எதிரான அதிர்ப்தி கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

One thought on “ரஜபக்ச குடும்ப சர்வாதிகாரம் : கட்சிக்குள் பிளவு?”

Comments are closed.