யுத்தத்திற்கான யுத்த நிறுத்தம் : இனக்களுக்கிடையே சமத்துவத்திற்கும் சமாதானத்திற்குமான குழு அறிக்கை

தமிழ் மக்க்களின்  அழிவிலிருந்து  தமது  சாம்ராஜ்யத்தை நிறுவிக்கொண்டவர்கள் தான் புலிகள்.   ஒடுக்குமுறைக்கெதிரான தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தைத் தமது  கையிலெடுத்து ஏகாதிபத்தியங்களின்  சார்பில்  போராட்டத்தைச் சீர்குலைத்து, மொத்த மக்கள் கூட்டத்திற்கும்  போராட்டத்தின் மீதான வெறுபுணர்வை ஏற்படுத்தியவர்கள். எப்போதுமே மக்கள் சார்ந்த  அரசியல் நிலைப்பட்டை முன்வைக்காது  தெற்காசியப் பிராந்தியத்தின்  மக்கள் போராட்டங்களைச் சீரழித்தவர்கள்.
ஜனநாயகம் கோரும் முற்போக்கு சக்திகளையும்,  தமிழ் பேசும் மக்களின்  விடுதலையையும் சமூக உணர்வோடுநேசித்தவர்களை கொன்றொழித்து  அரசின் பக்கம் விரட்டியடித்தனூடாக  புலியெதிர்ப்பென்பது  அரச சார்பு என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு  சிறீ லங்கா  அரசைப் பலப்ப்படுத்தியவர்கள்.

இ.ன்று வரையிலான புலிகளின்  போராட்டம்,  தமிழ்மக்களின் நியாயமான போராட்டத்தின்  எல்லா  ஆதரவுத்தளத்தையும்   திட்டமிட்டு நிர்மூலமாக்கியுள்ளது. இந்திய மக்கள் ஆதரவில்லை, சிங்கள் முற்போக்கு சக்திகள்  அன்னியப்படுத்தப்பட்டுள்ளார்கள்,  உலகெங்கும் பரந்த்து வாழும்  ஜனநாயக சக்திகள்,  போராட்டத்தின்  ஆதரவு சக்திகளாக இருந்தவர்கள் இன்று அதன் நியாயத்தையே கேள்வியெழுப்புகிறார்கள்.

இலங்கை  அரசு தனது பேரினவாதத்தை  நிறுவிக்கொள்ள  மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும்  புலிகள் செய்து  முடிக்கிறார்கள்.
தமிழ் பேசும் மக்களைக் கொன்றொழித்து  சிங்கள பெளத்த மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ளும்  சிறீ லங்கா  அரசின்  சர்வதேசிய அரசியல்நிலைபாட்டுடன்  முரண்நிலை  கொள்ளாத புலிகள், சிறீ லங்கா  அரச பாசிசத்துடன்  அதற்கு நெருக்கடி  ஏற்படும் போதெல்லாம்  கை கொடுத்தவர்கள். மகிந்தவை  ஆட்சி பீடத்தில்  அமர்த்திய  அதே புலிகள் இன்று மகிந்த அரசு  இந்திய  அரசிடமிருந்து  அழுத்தங்களை  எதிர்  கொள்ளும் போது  மறுபடி ஒரு முறை  போர் நிறுத்தத்தை  அறிவித்து மகிந்தவிற்கும் பேரின வாதத்திற்கும்  கைகொடுத்திருக்கிறார்கள்.

தெற்காசியப் பிராந்த்தியத்தில் இந்தியநலன் என்பது மக்கள்நலன் சார்ந்த ஒன்றல்ல என்பது மறுக்க முடியாதெனினும், புலிகளைப் பொறுத்தளவில்  அவர்களின் வாழ்நிலையை  யுத்ததினூடாக மட்டுமே உறுதி செய்துகொள்ள முடியும். தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டம் என்பது  இவர்களுக்கு இரண்டாம் பட்சம்.  யுத்ததினூடான அவர்களின் இருப்பு என்பதே இன்றைக்கு  அவர்களின் குறிக்கோள்.
யுத்தத்தைத் தொடர்வதற்கான யுத்தநிறுத்தமே இன்றைய புலிகளின் யுத்த நிறுத்தம்.
புலிகளின்  ஏகாதிபத்திய சார் சமூக விரோதப் போராட்டம்  அழிக்கப்பட்ட்டு  பேரின வாதத்திற்கெதிரான  அனைத்து மக்களினதும் போராட்டம் மட்டுமே 3 தசாப்தகால யுத்தத்தை  முடிவுக்குக் கொண்டுசெல்லும்.

இவ்வாறு  இனங்களுக்கிடையே சமத்துவத்திற்கும் சமாதானத்திற்குமான  குழுவின்  பத்திரிகை  அறிகையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.