ராஜபக்சகளுக்கு எதிராக : போன்சேக – அமரிக்கக் கூட்டு

Rajapaksகூட்டுப்படை தலைமையதிகாரி சரத் பொன்சேகாவை அமெரிக்கா விசாரணை செய்யப்போவதாக வெளியான தகவல், இலங்கையின் அரசியல் தரப்பில், முக்கிய பிரச்சினையாக, எழுந்துள்ளது.

இந்தநிலையில் இது தொடர்பில் ஜனாதிபதி நேற்று முக்கிய அமைச்சர்களுடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.

இதன் போது யுத்தக்குற்றம் தொடர்பாக எவராவது குறிப்பாக அமெரிக்கா, எதனையும் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அதனை தம்மிடம் கேட்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எது எவ்வாறாயினும் அமரிக்கா செல்ல முன்னர் சரத் பொன்சேக அமரிக்கத் தூதரைச் சந்தித்ததும், அமரிக்கா சென்றதும் அவரது நகர்வுகளும் இது அமரிக்கா – பொன்சேகா இணைந்த முன் கூட்டியே திட்டமிட்ட செயல் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இலங்கை மீதான இந்திய சீன ஆதிக்கத்தை முறியடிக்க  பிறிதொரு போர்க்குற்றவாளியான போன்சேகாவை துருப்புச் சீட்டாக அமரிக்கா கையாள்கிறது என அவர்கள் மேலும் கருதுகின்றனர்.

2 thoughts on “ராஜபக்சகளுக்கு எதிராக : போன்சேக – அமரிக்கக் கூட்டு”

  1. இருக்கலாம் .எம்மை ஏமாளீயாக்காமல் விட்டால் சரி

Comments are closed.