யாழ்.வசந்தபுரத்தில் மக்கள் மீள்குடியேற இராணுவம் அனுமதி வழங்க மறுப்பு

யாழ்ப்பாணத்தின் கொழும்புத்துறை வசந்தபுரத்தில் தமிழ் மக்கள் குடியேறுவதற்கு படையினர் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர். மிக நீண்டகாலத்திற்கு முன் 1995இல் யுத்தம் காரணமாக வசந்தபுரத்தில் தமிழ் மக்கள் இங்கிருந்து இடம் பெயர்ந்து சென்று வெளியிடங்களில் வாழ்ந்து வந்தனர். கடந்த சனிக்கிழமை தமது கிராமத்தில் மீளக்குடியேறுவதற்காக தமிழ் மக்கள் சாந்தபுரம் சென்றனர். ஆயினும் இராணுவதத்தினர் மேலிடத்திலிருந்து உத்தரவு வரவில்லை, மிதி வெடிகள் அகற்றப்படவில்லை எனக்காரணம் கூறி மக்களை அங்கு குடியேற அனுமதிக்கவில்லை. எனினும் மக்கள் அங்கிருந்து செல்லாது தற்காலிக கூடாரங்களை அமைத்து தங்கியிருக்கத் தொடங்கியுள்ளனர்.
வசந்தபுரம் கடந்த மார்ச் மாதம் உயர்பாதுகப்பு வலயப் பகுதியாகவிருந்து விடுவிக்கப்படடது என்பதுடன் தற்போது அங்கு சிங்கள மக்களைக் குடியேற்றலாம் என்ற அச்ச நிலைமை ஏற்பட்டதனைத் தொடர்ந்து சாந்தபுரம் மக்கள் மீளக்குடியேறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இராணுவம் மீளக்குடியேற அனுமதிக்க மறுத்த போதும் ‘தயவு செய்து எங்களை இங்கிருந்து வெளியேறுமாறு பணிக்காதீர்கள்” எனக்கூறி தறப்பாள் கொட்டில்களை அமைத்து குடியேறியுள்ளனர்.
இதேவேளை, யாழ்.பச்சிலைப்பள்ளி மேற்குப் பிரதேசத்தில் விரைவாக மீளக்குடியேற்றும் பணிகளை மேற்கொள்ளுமாறு கோரிய மகஜரை ஒன்றை அப்பிரதேச மக்கள் ஒன்றியத்தினர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்திருக்கின்றனர். இதற்கிடையில் வவுனியாவில் 91 வீதமான பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, 8 ஆயிரத்து 860 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளன எனவும் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன எனவும் வவுனியா மாவட்ட அரச அதிபர் தெரிவித்திருக்கிறார்.
மீள் குடியேற்றம் என்பது அதன் உள்ளர்த்ததில்  நடைபெறவில்லை மக்கள் இலங்கை அரசாங்கத்தால்   திட்டமிட்டே கைவிடப்பட்டுள்லனர் என்ப்தை ஒரு வகையில் அரச தரப்பே ஒத்துக்கொண்டுள்ளது  என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

One thought on “யாழ்.வசந்தபுரத்தில் மக்கள் மீள்குடியேற இராணுவம் அனுமதி வழங்க மறுப்பு”

  1. “இலங்கையின் வடக்கு , கிழக்கு பகுதிகளில் தமிழர் குடி இருக்கத் தடை”- இப்படி ஒரு அறிவிப்பும் சீக்கிரம் வந்தாலும் , தமிழர்நாம் ஆச்சரியப்படத் தேவை இல்லை. இதுக்குத் தானெ துரோகிகள் அவசரப்பட்டவை, தமிழர் போராட்டத்தை சாகடிக்க……. :@

Comments are closed.