யாழ். மேட்டுக்குடிச் சிந்தனையும் வன்னி மக்களின் அவல வாழ்வும்

வன்னி மக்கள் பட்டு வந்த அவலங்களும் கண்டுகொண்ட பேரழிவுகளும் விபரிக்க இயலாதவை. பேரினவாத ஒடுக்குமுறையும் தவறான போராட்ட மார்க்கமும் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட வன்னி மக்களை வெறுவிலிகளாக்கி வனாந்தரத்திற் திக்கற்ற நிலைக்கு உள்ளாக்கி விட்டுள்ளது. இவ்வாறு துயரங்களையும் சோகங்களையும் சுமந்தவாறே தமது இழந்த வாழ்வை மீட்பதற்குச் சோதனைகளையும் வேதனைகளையும் எதிர்நோக்கி நிற்கும் மக்களுக்கு உதவவோ கைதூக்கி விடவோ வாய்ப்புவசதிகளும் செல்வாக்கும பெற்ற வடபுலத் தமிழர்கள் என்போர் முன்வருவதாக இல்லை. ஏதோ பாவத்திற்கு இரங்கிக் கிள்ளிப் போடுவதாக அங்கொன்று இங்கொன்று செய்யப்படுகிறதே தவிரத், திட்டமிட்ட பரந்தளவிலான எத்தகைய வேலைத் திட்டத்தையும் தயாரிக்க எவரும் முன்வருவதாக இல்லை. எதிலும் பிடுங்கினது லாபம் என்ற மனோநிலைதான் குடாநாட்டு வசதி வளம் கொண்டோரிடம் காணப்படுகிறது.

குடாநாட்டில் யுத்தம் முடிந்த ஒரு வருடத்துக்கு மேலான காலப்பகுதியில் எத்தனை கோவில்கள், கோபுரங்கள், சுற்று மதில்கள், மூலத்தானங்கள், வசந்த மண்டபங்கள் பெருமெடுப்பிலான கலியாண மண்டபங்கள் ஆங்காங்கே வேக வேகமாக எழுந்து வருகின்றன. கடைக் கட்டத் தொகுதிகள், முதலீட்டு நிலையங்கள், வர்த்தக வியாபார விரிவாக்கங்கள் எத்தனை எத்தனையாக வளர்ந்து வருகின்றன. அரசாங்கம் அபிவிருத்தி என்ற பெயரில் கண்கவர் பம்மாத்துக்கள் காட்டி நிற்க, உயர் வர்த்தக மேட்டுக்குடித் தமிழர் எனப்படுவோர் தத்தமது சொத்துச் சுகபோகப் பெருக்கங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கே வீழ்த்தப்பட்ட மனிதர்கள்– தமிழர்கள் –பற்றி அத்தகையோரிடம் எத்தகைய அனுதாபத்தையும் காண முடியவில்லை.

தமிழ் இனம், தன்மானத் தமிழர்கள், ‘பொங்கு தமிழர்கட்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசம் என்று சங்கே முழங்கு’ என்றெல்லாம் கூவியவர்கள் இன்று எங்கே போய்விட்டார்கள்? தமிழர்களைத் தமிழர்களே ஆள வேண்டும் என சண்டமாருதம் கிளப்பியவர்கள் இன்று தமிழர்களுக்குத் தமிழர்களே உதவ வேண்டும் என்று பேசாது ஓடி ஒளிந்து கொண்டது ஏன்? தமிழ் இரத்தம் கொதிப்பதாகக் கூறி இன உணர்வேற்றி முள்ளிவாய்க்கால் வரை ஏழை உழைப்பாளர்களைத்– தமிழர்களை –அழைத்துச் சென்று கொள்ளி வைக்க வழிகாட்டியவர்களின் சகபாடிகள் தான் இன்று வன்னி மக்களுக்குப் புறமுதுகுகாட்டி நிற்கிறார்கள்.

வன்னி மக்களினதும் குடாநாட்டின் இழப்புகளுக்கு உள்ளான மக்களினதும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனரமைப்பு என்பனவற்றின் ஊடக மறுவாழ்வு ஏற்படும் வரை, எந்தப் பெரும் திருவிழாவும் வேண்டாம், கோவில் கட்டிடங்கள் வேண்டாம், எந்த ஆடம்பரத் திருமணங்களும் வேண்டாம், பணச் செலவு மிக்க நிகழ்வுகள் எதுவும் வேண்டாம் அத்தனை பணத்தையும் பொது நிதியமாக்குவோம். பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பகிர்ந்து அளிப்போம் என எந்தவொருவரும் அல்லது தாமே தமிழரின் ஆதிக்க அரசியல் பிரதிநிதி எனத் தேர்தலில் வெற்றி பெற நிற்கும் கட்சிகளும் முன்வரத் தயாராக இல்லை. அல்லது நாடு கடந்த அரசை உருவாக்கி அதனையே தமது மூலதனத் திரட்சியாக்கி வரும் ஆண்ட பரம்பரை வாரிசுகள் வன்னி மக்களுக்கு உதவ முன்வரவில்லை.

இவை ஏன் என்பதைத் தமிழ் உழைப்பாளர்களான தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சாதாரண மக்கள் புரிந்து கொள்வது அவசியம். இங்கே தான் பழமைவாத மேட்டுக்குடிப் பிற்போக்குக் கருத்தியலும் சிந்தனையும் முன்னெழுந்து நிற்கிறது. ஆண்ட பரம்பரைக் கருத்தியல் இவர்களை வழி நடத்துகின்றது. இன மொழிப் பாசம் என்பவை போலியானவையாகும். வர்க்க வேறுபாடு, சாதி வேறுபாடு வன்னியான், மட்டக்களப்பான் என்பன போன்ற யாழ்ப்பாண மேட்டுக்குடிச் சிந்தனையும் செயற்பாடுமே இத்தனைக்குப் பின்பும் முன்னெழுந்து நிற்கின்றது. இத்தகைய கருத்தியலும் அதன் சிந்தனை நடைமுறைகளும் கண்ணோட்டங்களும் அடித்து வீழ்த்தப்படாத வரை, தமிழ்த் தேசிய இனத்திற்கு விமோசனமோ விடுதலையோ கிடைக்கமாட்டாது. அகத்திலும் புறத்திலும் ஆயிரம் மாநாடுகள் கூடினாலும், யாழ் மேட்டுக்குடி ஆதிக்கக் கருத்தியலை அரசியலிலும் சமூகத்திலும் பலவீனப்படுத்த வேண்டும். தமிழ்த் தேசிய இனத்தின் மத்தியில் உள்ள உழைக்கும் வர்க்கம் தன்னைப் பொத்தியுள்ள, இறுகிப் போன மூடிகளை உடைத்தெறிய முன்வர வேண்டும்.

இதுவே வன்னி மக்களைப் பற்றிய யாழ் மேட்டுக்குடிச் சிந்தனையை உடைத்து மனித நேயத்தையும் மறுவாழ்வையும் முன்னெடுக்கவுள்ள வழிமுறையாகும். இதனைத் தமிழ் இளந்தலைமுறை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இனிமேலும் இரண்டாயிரம் ஆண்டு காலப் பழைய, இற்றுப் போனவற்றை இனம் மொழி மதத்தின் பேரால் சுமந்து கொண்டு ஆதிக்க அரசியல்வாதிகளின் வாகனமாக இளந் தலைமுறையினர் குருட்டுத்தனமாக வழிநடக்கக் கூடாது. ‘கேள்விகள் எழுப்பி உண்மைகளைக் காண இளைஞர் யுவதிகளே முன்வாருங்கள்’ என்பதே இன்றைய அறைகூவலாகும்.

இலங்கை புதிய ஜநாயகக் கட்சியின்  புதியபூமி இதழிலிருந்து

35 thoughts on “யாழ். மேட்டுக்குடிச் சிந்தனையும் வன்னி மக்களின் அவல வாழ்வும்”

 1. கிழுவை வேலிகள் தாண்டிக் கடந்தால் தெரியும் வயலில் நடக்க மனசுக்கு விருப்பமாய்தான் இருக்கிறது ஆனால் அதே வயலகள் முள்ளீவாய்க்காலில் எரிந்த நினைவே மனதில் வந்து அமைதியைக் கெடுக்கிறது.எதுவுமே தெரியாமல் இல்லை ஆனால் எதுவுமே செய்ய முடியாத நிலை.வாழவும் வேண்டும்,மனைவியோடு கூடவும் வேண்டும்,மனதிலே கோபத்தைக் குடிவைத்து நான் என்ன செய்ய முடியும்? என்ன செய்ய?வீட்டு முற்றத்தில் நிற்கும் கோயா மரங்களீன் வாசத்தில் என்னை மறப்பதைத் தவிர.

 2. நீங்கள் ஒரு தீர்க்கதரிசினி தமிழ் மக்களை கொலை செய்வதற்க்கு சிங்கள்காடையனுடன் கைகோர்த்தவன் யார்?? டக்கிளஸ், சித்தார்த்தன், போன்ற அடிவருடிக்காடையர்கள் என்பது உமக்கு தெரியாதா??? தமிழ் மக்களை காடையன் மகிந்தன் குடும்பம் முள்ளிவாய்க்காலில் 40, ஆயிரம் மக்களை கொலை செய்து வெற்றி கொன்டுவிட்டான் என்று யாழ்நகரிலே பெற்ற தாயை கூட்டி கொடுக்கும் கூட்டம் சிங்கள்வனுடைய மலம்தின்னும் கூட்டம் காடையன் மகிந்தனுக்கு ஜே ஜே என்று கத்திக்கொன்டுதிரிந்த காட்ச்சியை காணவில்லையா ?? தெருபொறுக்கி சிங்கள நாய்களுடன் மானத்துக்கு பிறந்த தமிழன் மீன்டு சேர்ந்து வாழ்வான் என்பதை மறந்துவிடு, தமிழ் மக்களை கொலை செய்த காடையன் தான் அதற்க்கு பரிகாரம் காணவேன்டும், அல்லது சிங்கள காடையர்கள் வெளியேறட்டும் எங்கள் மண்ணை விட்டு தமிழ் மக்கள் உதவி செய்வார்கள் அந்த மக்களுக்கு.

  1. வீதியில் வந்தால் குரைக்கும் நாய்கள், வேதாந்தம் பேசும் பிச்சைக்காரன்,மக்கள் உதவி செய்வார்கள் என மேடையில் பேசிக் கொண்டிருக்கும் அரசியல்வாதி.முள்ளீவேலிகள் மத்தியில் வாழ்க்கையை இழந்து நிற்கும் மக்கள்.நமக்கு விடிவைதைப் போல தமிழ் மக்களூக்கும் விடிய பிரார்த்திக்கும் குழந்தை……………………………………………………………………………………………………………………………………

 3. இன்று நாடு கடந்த தமிழ் ஈழம் என்றும் பிரபாகரன் வந்து மீட்டுத் தருவார் என்றும் இந்திய தீர்க்கும் என்றும் மகிந்தர் தீர்ப்பார் என்றும் மாறி மாறிச் சொல்லுகிற தமிழ்த் தேசியவாதிகள், ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விதமாகத் தமிழரை ஏய்த்து வருகிறார்கள்.
  இவர்களுக்குப் பொதுவான ஒரு பண்பு: வன்னியில் அந்தரித்த்க் கிடக்கும் மக்கள் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை.
  போருக்கு அள்ளி அள்ளிக் கொடுக்த தமிழ் மக்கள் அப் போரின் பயனகத் தவித்து நிற்கும் மக்களைப் பற்றி அக்கறை இல்லாமல் இருப்பது ஏன்?
  இது தானா அவர்களது தமிழ் இன உணர்வு?

 4. பிசைக்காரனுக்கு புண் இருப்பதுபோல், சவப்பெட்டிகடைக்காரனுக்கு இழவு வீடு தேவைபோல், சிற்சில அலுக்கோசுகளும் வந்து தங்களை ஒரு மேதாவிபோல் காட்டிக்கொள்வார்கள், போருக்கு அள்ளிக்கொடுத்த மக்கள இப்பவும் கொடுக்கத்தயார், சிங்கள காடையர் கூட்டத்தை எங்கள் மண்ணை விட்டு வெளியேறச்சொல்லுங்கள், தமிழ்மக்களை புலிகளிடம் இருந்து காப்பாற்றுகின்றேன் என்று சொல்லி யுத்தம் செய்த சிங்கள் தெருப்பொறுக்கி காடையன் மகிந்தனால் ஏன் உதவி செய்யவில்லை யென்று கேளுங்கள் அல்லது தெருப்பொறுக்கிகு செருப்பால் அடியுங்கள் அப்பொளுது உங்களை ஓரளவுக்காவது தமிழ் மக்கள் ஏற்றுக்கொளவார்கள் ..

 5. இப்போது தமிழர் செய்ய வேண்டியதெல்லாம், பாதுகாப்பாக எங்கேயோ போயிருந்து கொண்டு “சிங்கள காடையர் கூட்டத்தை ‘எங்கள் மண்ணை’ விட்டு வெளியேறச்” சொல்லுவது தான்.
  “கடைசிக் காடையன்” வெளியேறியதும் எங்கள் கருணாமூர்த்திகள் கொண்டு வந்து கொட்டுகிற காசு, வன்னியில், கூரையை (இல்லை கூடாரத் துணியைப்) பிளந்து கொன்டு கொட்டும்.
  அதற்குள் இன்னொரு 40,000 பேர் பசியாலும், பிணியாலும் இறந்தாலென்ன? சுய உழைப்பில் வாழ இயலாமல் சீரழிந்து போனாலென்ன?

  எங்கள் அரசியல் பிச்சைக்காரர்களுக்குத் தான் “நாடு கடந்த தமிழீழம்” “பிரபாகரன் வருகை” “இந்தியக் குறுக்கிடு” போல எத்தனை புண்கள் எத்தனை உள்ளன. சொரிந்து கொடுக்க ஆள் இருந்தால் இத்தகைய புண்கள் இன்னமும் வரும்.

  40,000 இழவுகள் நடந்தன. அதை வைத்துத் தானே தமிழீழச் சவப்பெட்டிக் கடைக்காரர்களின் பிழைப்பே இருந்து வந்தது. இன்னும் எத்தனை இழவுகள் நட்ந்தாலும் ஈழம் கிடைக்க உதவும் என்று நினைக்கிற நன்நெஞ்சங்களல்லவா நம்மிடை உள்ளன.

 6. வீதிகள் எல்லாம் திருத்தப்பட்டு பழையபடி நாடு வழமைக்குத் திரும்பியதாய் காட்சி தந்தாலும் இருட்டினால் வருகிறபயம் இன்னும் இருக்கிறது.ஊருக்கு வந்த லண்டன் காரருக்கு உயிர்க் கோழி அடித்துச் சாப்பாடு ஆனால் அவரோ லண்டன்ல பியர் அடித்துச் சாப்பிடுற மாதிரி இல்லை என குறப்படுகிறார்.இன்னொரு இங்கிலாந்துக்காரர் சிங்கிள் மோல்ட் தேடுகிறார்.இதுகளால் பெரும் அவதி.காசைக் கண்ணீல காட்டாமல் ஓசிச் சாப்பாட்டிற்கு வந்த சுவிஸ்காரர் இந்தக் காடையன் கள் போனால்தான் ஊருக்கு அமைது என் கிறார்.நாய் சாப்பிட்டுப் போகாமல் நரி வேல செய்யுதோ எனும் பயம் விருந்து கொடுப்பவருக்கு.பாவம் மக்கள்.

 7. எங்களுடை மேதாவி சொன்னது கேட்டுதா உங்களுக்கு, அந்த மண்ணிலே இருந்து எழுதுகின்ற வீரத்தமிழன், பாவம் தன்னுடைய தாய் தந்தையரை சிங்கள் காடையன் மகிந்தனிடம் பறி கொடுத்தும், வன்னியில் உள்ள மக்களுக்கு செய்கின்ற சேவையை ஒவ்வொரு தமிழனும் மறக்கமாட்டான், ஏன் எங்களது டக்கு புக்கு அமைச்சரின் பொற்கரங்களால் பாராட்டு பத்திரம் வாங்கிய முதல் தமிழ்மகன் இவர்தான், 40000, மக்களை கொலை செய்த கொலைகாரனைப்பற்றி கதைஇல்லையாம் , இன்னுமக்களை பறி கொடுக்கவேண்டுமோ என்று கேள்வி எழுப்புகின்றார்??? இனியும் அந்தமக்களை கொலை செய்போகின்ற காடையன் யார்?? சிங்கள் காடையனும் அவனுடன் சேர்ந்து இயங்கும் எலும்பு சூப்பிகளும் தான், அப்பாவிக்கு வெளி நாடு என்றால் என்னவென்றே தெரியாதம் ?? ஜயோ பாவம், பாதுகாப்பு இல்லாமல் சிங்கள கொலைகார நாட்டில் இருந்து ( உரல்) கொடுக்கும் இவரை எல்லோரும் ஒருமுறை கைதட்டி பாராட்டிவிடுங்கோ.

 8. உங்கள் நிந்தனைச் சொற்கள் உங்களைப் பற்றிப் போதியளவு சொல்லுகின்றன. எனவே, எதையும் எழுதி, நீங்களே உங்களை மேலும் நிந்திக்க வைக்க நான் விரும்பவில்லை.

  உங்கள் ஆலோசனைகளை, முடிந்தால், நீங்களே வந்து இங்கே நடைமுறைப் படுத்த என் நல் வாழ்த்துக்கள்.
  உங்கள் போன்றோரூடு “இணையத் தமிழ்ப் பண்பாட்டை” வளர்க்கும் இனியொருவுக்கும் என் நல் வாழ்த்துக்கள்.

 9. ஆங்கில மண்ணில் இருப்பவரைப் போய் பிரபாகரனின் ஆவி பிடித்து ஆட்டுகிறதோ? மண்- மண் என்று புலம்பி கொலைவெறியில் கத்துகிறார். துவக்கும் பிளேனும் கிடைத்தால் பறந்து வந்து மகிந்தவைச் சுட்டுவிட்டுப் போவார். சிங்கள நாய்கள் என்று சொல்கிறீரே… தெற்கில் இருக்கிற தமிழர்கள் உமது சொந்தக் காரர்கள்தானே அவர்களை சிங்கள மண்ணை விட்டு வெளியேற்ச் சொல்லும் தைரியம் உமக்கு இருக்கிறதா?            

   மறத் தமிழர்களே!  எங்கள் போராட்டத்தை இந்தியா பயன்படுத்த அனுமதித்தது உங்கள் உணர்ச்சி. பின்னர் சர்வதேச நாடுகளும் எங்கள் உணர்ச்சியில் எண்ணெய் ஊற்றி வன்னியில் எரியவிட்டு குளிரகாய்ந்து கொண்ருக்கிறார்கள்.  நீங்களும் பாதுகாப்பாக இருந்துகொண்டு எங்களை அடிமைத்தனத்திற்குள் தலைவரை அமிழ்த்திவிட்டு> எங்கள் தலையில் ஏறிநின்று ஆனந்தநடனம் ஆடப்போகிறீர்களா?

 10. மகிந்தனின் எலும்புத்துன்டு பிடித்து ஆட்டுகின்றது போல் தெரிகின்றது, எனக்கு துவக்கும் பிளேனும் வேன்டாம், சிங்களவன் சூப்பிய எலும்புத்துன்டு தந்தால் போதும்,?? உண்ணுவதற்க்கு உணவும் உறங்குவதற்க்கு இடமும் கிடைத்தால் போதும் என்று வாழுகின்ற கூட்டத்துக்கு சில விடயம் புரியவில்லை??, சிங்கள நாட்டில் வாழ்கின்ற தமிழர்கள் சிங்கள நாட்டை ஆக்கிரமித்து இருக்கவில்லையே?? தமிழ்ழீழத்தை சிங்கள் காடையர்கள் ஆக்கிரமித்து தானே இருக்கின்றார்கள்?? அந்த காடையரைகளைத்தான் வெளியேறச்சொல்கின்றோம், ???? கிளிநொச்சியில் இறுதி யுத்தம் வரை பெளத்த மதகுரு இருந்தாரே அவரை ஏன் எந்தவொரு தமிழர்களும் அடித்து விரட்டவில்லை??? ஏன்??? எனக்கு காட்டும் வீரவசனங்களை கொலை கார காடையன் மகிந்தனுக்கு எதிராககாட்டும்??,

  1. ஆக்கிரமிப்பு தமிழனிடம் இருந்துதான் சிங்களவனிடம் தொற்றீயது,தமிழனே ஆக்கிரமிப்பின் கர்த்தா.ஆரம்ப புள்ளீயே தமிழந்தான்.மலேசியாவில் சென்றூ கேளூங்கள் ஆளூம் குணம் கொண்டவன் ஈழத்தமிழ்ன் என்பதற்கு ஆதாரம் தருவார்கள்.பம்பலபிட்டி,வெள்ளவத்தை,கொள்ளூப்பிட்டி என தமிழன் ஆக்கிரமிப்பை பார்த்துமா ஏழைச் சிங்களவன் மீது பாய்கிறீர்கள்?அறம் பேசும் நாம் அறவழி நடக்க வேண்டாமா?

 11. பபிலோனில் உருவாகிய தமிழ் இனம் இன்று இலங்கை வரை ஆக்கிரமித்துள்ளார்கள். இந்த அநியாயச் செயலுக்கு கடைசியும் முதலுமாக ஒரு முற்றுப்புள்ளீ போட சிங்கள ராஜனாம் இராசபக்செ மீட்பராக எளுந்தருளியுள்ளார். இவரைநாம் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவோம். இலங்கையில் இனி ஒரு இனம்தான். அது எதுவென்று என்னிடம் கேளாதீர்!

  1. பரலோகத்தில் இருக்கிற பிதாவே எங்கட பாவங்கள மன்னியும்.

   1. நீங்கள் செய்யும் பாவங்கள் சில மன்னிக்கவே முடியாதவையாக இருக்கிறதே?

 12. சீனரா? அமெரிக்கரா? வட இந்தியரா? மலையாளிகளா? தெலுங்கரா? வேடரா?
  தயவு செய்து சொல்லுங்கள்.
  சொல்லாவிட்டால் என் தலை மட்டுமல்ல இன்னும் எத்தனையோ பேரின் தலைகளும் வெடித்துப் போய் அந்தப் பாவம் உங்களையும் சேரக்கூடாதல்லவா!

  1. இதற்குப் பதில் சொல்ல நான் என்ன விக்ரமாதித்தனா? இலங்கையில் இனி ஒரு இனம்தான், எதுவென்று இராசா மகிந்த தான் சொல்லவேண்டும்.

  2. Soorya
   நான் முருக்க மரத்து வேதாளமாகி,அவரிடம் கேட்கப் போய்ச், சரியான பதில் தெரிந்திருந்தும் அவர் சொல்லாது அவரது தலை வெடித்துச் சுக்குநூறாய்…………………………….
   ஐயோ ,அந்தப் பாவம் எனக்கு வேண்டாம்!
   வேறு வழி சொல்லுங்கள்.

   1. ஐயோ வேறு வழியே இல்லை. நீங்கள்தான் அந்தக் கேள்வியைக் கேட்கவேண்டும். ஆயிரக்கணக்கான தமிழ் குழந்தைகளினதும் பெண்களினதும் ஆண்களினதும் மண்டையை சிதறி வெடிக்க செய்த இந்த “மகா ராசனின்” தலை சுக்கு நூறாக வெடிக்கட்டும். இல்லையென்றால்….

    1. இந்தப் பாடலை யூ ட்யூப்பில் சென்றூ கேட்டுப் பாருங்கள் wavin flag by knaan- when i get older i will be stronger-

   2. எனக்கு ஆரையும் சாக்காட்டிப் பழக்கமில்லையே! உங்களுக்கு வேறை ஆரையும் தெரியாதா?

 13. சூரியா, ஒரு ஐடியா! What about Thamilmaran? அவர் தான் இங்கே எல்லாவற்றையும் நன்றாக அறுக்கிறாரே!

  1. தமிழ்மாறன் தமிழைக் கொலைசெய்கிறார் என்பதற்காக அவர் மிருகங்களையும் கொல்வாரா? அவர் சுத்த சைவம் ஆச்சே.

  2. கண்ணை மூடிக்கொண்டு அறுக்கிறாரே! அது போதாதா?
   நான் கேட்டால் மறுப்பார்– நீங்கள் தான் கேட்டு உதவ வேண்டும்!

   1. தமிழ்மாறனுக்குத் தெரியாது நானும் அவரின் ஊர் என்பது. ஊரான் என்ற அடிப்படையில் சிலவேளை அவர் உங்களின் சற்றும் அயராத முயற்சிக்கு உதவலாம். தள்ளாடும் சிலரை தாங்கிப்பிடித்தால் அது அவர்களுக்கு ஒரு இழுக்கென மறுத்துவிடுவார்கள். கால் தடுமாறினாலும் யோசனையில் தடுமாற்றம் இல்லாவிட்டால் நல்லது.

    1. எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு சாலையில் புத்தகக் கடைகளீல் நாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம் ஆனால் கலோ சொல்லி வேற்றூக்கிரக வாசிகள் போல் பிரிந்து விடுகிறோம்.தமிழுக்காக தமிழர் கூடும் இட்மெல்லாம் நின்றூ ஒருவரை ஒருவர் தெரியாதவர்களாக வில்கிச் செல்கிறோம்.நாம் நம்மை தமிழராய் உணராது ,தமிழராய் மாறாது தமிழனுக்கு விடிவை தர முடியுமா?

     1. கலோ என்று சொன்னால்கூடப் பரவாயில்லை, தமிழனைக் கண்ட்டால் பேயைக் கண்டதுபோல் ஓடும் தமிழர்தான் அதிகம். நின்று கதைத்தால் பூராயம் கேட்டு பெட்டிசன் எழுதிவிடுவார்கள் என்ற பயம்.தமிழனுக்கு தமிழன் புலத்தில் ஒத்தாசையாக இருப்பது என்பது மிக அபூர்வம்.
      சரியாகததான் சொல்லியுள்ளீர்கள்.

     2. ஐயா! சைவமாறன் மன்னிக்கவும், தமிழ்மாறன் தமிழராய் எம்மை உணர முதல் மனிதராய் உணர்தல் அவசியம். எங்கட ஆக்கள் என்ற சொல்லை தமிழர்கள் என்பதனை குறிக்க நாம் பயன்படுத்துவதில்லையே ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் சாதியை சேர்ந்தவர்களை குறிப்பிடவே பயன்படுத்துகின்றனர். வதிவிடவுரிமை கிடைத்தவுடன் ஊருக்குச்சென்று தங்கள் சாதியை சேர்ந்தபெண்களையே திருமணம் செய்கின்றனர். ஊர்சங்கங்கள் அமைத்து சாதியத்தையும், பிரதேச வேறுபாடுகளையும் வளர்த்து வருகின்றனர். பழங்குடி தன்மையில் இருந்து வெளிவரமுடியாதவர்களாக உலகத்தை திட்டிக்கொண்டிருக்கிறோம் என்பதற்கு உங்களது பின்னூட்டங்களெ சிறந்த உதாரணம்.

 14. பம்பரம் விடுவது,மூக்கைத் தொடுகிறாயா எனச் சவால் விடுவது,எதற்கெடுத்தாலும் விசாரணக் கமிசன் வைப்பது என்பதில் விடாப்பிடியாகவே இருக்கிறார் நண்பர் ரஜாகரன் அவரை எப்படிச் சொல்வீர்கள்?கூடப்பிறக்காத புறப்பு இப்படிக் பிறாண்டிக் கொண்டிருக்கிறதே/ இப்போதும் எதாவது வரலாறூ எழுத அப்பவே யோசித்து வைத்து இருந்திருப்பாரோ? தமிழ் ஊடகவியலாளர் அருள் எழிலன் மீது எச்சில் துப்பிக் கொண்டிருப்போர் மட்டும்தான் அறீவாளர்களா?தலையில் மிளகாய் அரைப்போரெல்லாம் அறீவாளீயாகி தமிழ் இனத்தின் சுதந்திரக் குரலாய் ஒலிக்கும் தமிழ்மாறன் அறூக்கிறாரா?தள்ளாடும் வயசிலும் தமிழாய் ஒலிக்கும் அவரை அழ வைக்காதீர்கள்.அறூவைகள் அறீவாளீ நினைப்போடு அலைபவர்கள்.

  1. கருணாநிதியும் தமிழ் இனத்தின் சுதந்திரக் குரல்தான்! அப்படியென்ன தமிழ்மாறன் தள்ளாடுகிறார்?

   1. தொப்பிக்காரன் அடித்தால் நோவெண்ணேய்யும்,தமிழன் அடித்தால் நாலு பேரும் பொல்லுத்தடி என்றூம் வீரம் காட்டும் தமிழனை எல்லோரும் கோமாளீயாகப் பார்ப்பதே வேதனை தருகிறது.

 15. திரு ராமுவுக்கு புரட்சி லேபிள் ஒட்டி ஊரைப் பேய்க்காட்டுவதை விட உண்மையாய் இருத்தல் உள்ளத்திற்கு நல்லது.செங்கொடி தூக்குவது தேசியக் கொடி தூக்குவது அவரவர் விருப்பம் இந்த எல்லையில் குறூக்கிட யாருக்கும் உரிமை இல்லை.மாடுகள் வைக்கோல் மட்டுமா தின்னுது அதனிடமும் தேடுதல் உண்டு,மனிதர் நாம் தேட வேண்டாமா? எங்கோ இருந்து ஏதாவது முனையில் அறீவு சார்ந்த கேள்வி எழும் எனும் எண்ணத்தோடு நம் கேள்விகள் எழ வேண்டும்.நான் ராணீ, தேவி மட்டும் படிப்பதில்லை குமுதமும் படிக்கிறேன்.ஜோர்ஜ் ஓவலின் அனிமல் பாமும் படிக்கிறேன்.என் தேடல் தொடர்கிறது.

Comments are closed.