யாழ்.முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட 20 ஆவது வருடத்தை நினைவு கூரும் நிகழ்வு

1990 ஆம் ஆண்டு புலிகள் அமைப்பினரால் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட 20 ஆவது வருட நினைவு தின நிகழ்வுகள் யாழ. ஒஸ்மானியா கல்லூரியில் நடைபெற்றது. ’20 ஆண்டுகளின் பின் மீண்டும் துளிர்ப்போம்” என்ற நினைவு கூரல் நிகழ்வு யாழ.முஸ்லிம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், யாழ்.மாநகர சபையின் பிரதி மேயர் எம்.ஆர்.எம்.ரமீஸ் தலைமையில் நடைபெற்றது.