யாழ் குடாநாட்டில் தொடரும் மர்மக் கொலைகள்

யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இந்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? ஏன்பது குறித்த தகவல்கள் வெளியாக வில்லை. இதேவேளை யாழ்ப்பாணத்தில் நேற்றிரவும் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் அச்சுவேலி புத்தூர் மேற்கு, ஆவரங்காலைச் சேர்ந்த 35 வயதான  கணபதிப்பிள்ளை ஜசீந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்றவர்களே இவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இனம்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொலைக்கான காரணங்கள் அறியப்படவில்லை