யாழ்ப்பாண,வவுனியா தேர்தல் முடிவுகள்!!!

 

யாழ்ப்பாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. 10602 வாக்குகளைப் பெற்று போனஸ் ஆசனங்கள் உட்பட 13 ஆசனங்களைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு யாழ் மாநகர சபையினைக் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8802 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களைப் பெற்றுள்ளது. சுபியான் தலைமையிலான சுயேட்சைக் குழுவினர் 1125 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும், ஆனந்தசங்கரி தலமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி 1007 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.

வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4229 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைப் பெற்றுள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் 4132 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது. முஸலீம் காங்கிரஸ் 577 ஆசனங்களைப் பெற்று 1 ஆசனத்தைப் பெற்றுள்ளது. ஆளும் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3045 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் தேர்தல் முடிவுகள்

ஐக்கியமக்கள சுதந்திர முன்னணி 10062, (13 ஆசனம்)- 
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு    8008 (8ஆசனம்)
சுயேச்சைக்குழு 1175,    (1ஆசனம்)
தமிழர் விடுதலைக்கூட்டணி 1007, (1ஆசனம்)
யுஎன்பி.      83வாக்குகள்

 

வவுனியா தேர்தல் முடிவுகள்

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு    4279 (5ஆசனம்)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்:) 4136 (3ஆசனம்)
ஐக்கியமக்கள சுதந்திர முன்னணி 3045, (2 ஆசனம்)- 
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்    547  (1ஆசனம்)