யாழ்ப்பாணத்தில் மாணவி காணமல் போயுள்ளதாக முறைப்பாடு.

யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. கொக்குவில் இந்து கல்லூரியில் கல்வி பயின்ற மாணவியே காணாமல் போயுள்ளார்.

அவர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் மேலதிக வகுப்புக்காக சென்றதன் பின்னர், அவர் வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.

காணாமல் போனவர் லங்கேஸ்வரன் குணதீபா என பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.