யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம்

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் துணைத் தூதரகம் ஒன்று விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டில்லியில் நேற்று முன்தினம் இடம்பெற்று முடிந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, எஸ்.எம்.கிருஷ்ணா, சீடு.ராசா உட்பட மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டில் துணைத் தூதரகத்திற்கான அவசியம் என்ன என்பது குறித்து பலர் கேள்வியெழுப்பியுள்ளனர். வன்னிப் படுகொலைகளில் பிரதான பாத்திரம் வகித்த இந்திய அரசின் துணைத்தூதரகம் தமிழ் மக்கள் சந்தேகக் கண்ணோடே அணுக வேண்டும்.