யார்தான் சொன்னாலும்,இப்போதைக்கு உடனடியாக மீள் குடியேற்றம் சரிவராது!:கெஹலிய ரம்புக்வெல

kakalவன்னி அகதிகளை உடனடியாக அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றும்படி பல்வேறு தரப்பினரும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். ஆனால் இப்போதைக்கு  உடனடியாக  மீள் குடியேற்றம் சரிவராது. யார்தான் சொன்னாலும்  எந்தத் தரப்பினரின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவும்  அது சாத்தியப்படாது.

இவ்வாறு உறுதிபடத் தெரிவித்தி ருக்கிறார் அமைச்சரும் பாதுகாப்புப் பேச் சாளருமான கெஹலிய ரம்புக்வெல கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடக வியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு கூறியவை வருமாறு:
இடம் பெயர்ந்தவர்களை பலவந்த மாக விருப்பமின்றி முகாம்களில் வைத்துக்கொண்டு செலவு செய்ய வேண்டிய அவ சியம் அரசுக்கு இல்லை.

முப்பந்தைந்து வருட சிரமத்துக்கு மத்தியில் நாட்டு மக்கள் மற்றும் இராணுவத்தினர் உயிரிழந்து பெற்ற இந்த வெற்றியை ஒவ்வொருவரும் கூறுவதைப்போன்று  அவர்களின் நிகழ்ச்சி நிரலின் படி  செயற்படுத்த ஜனாதிபதியும் பாதுகாப்புப் பிரிவினரும், நாட்டு மக்களும் தயாரில்லை  என்றும் அமைச்சர் சொல்கிறார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் ஒருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு பணித்துள்ளோம். அவரை நாட்டுக்குள் தங்க அவகாசம் வழங்கும் படி பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் கேட்டுள்ளார். ஆனால் அதுபற்றி அரசு இன்னமும் முடிவு செய்யவில்லை   என்றும் அமைச்சர் கூறினார்.