யாருடனும் எந்த உடன்பாடும் இல்லை : சம்பந்தன்

பிரதான வேட்பாளர்களுடன் ஒப்பந்தம் எதுவும் கைச்சாத்திடப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுடனோ அல்லது ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுடனோ தமது கட்சி ஒப்பந்தம் கைச்சாத்திடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறையில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் எவ்வித ஒப்பந்ததமும் கைச்சாதிடவில்லை என சம்பந்தன் சிங்கள மொழியில் குழுமியிருந்தவர்களுக்கு பதிலளித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியை விடவும், ஜெனரல் சரத் பொன்சேகா சாதகமான பதிலை அளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.