மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 30 வீதமான சிறுவர்களுக்கு போஷøணக் குறைபாடு – யுனிசெப் அதிகாரி

நீண்டகால உள்நாட்டு மோதல்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள 5 வயதிற்கு குறைவான சிறுவர்களில் 30 வீதமானோர் போஷøணக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் பாதுகாப்பு நிதியமான யுனிசெப் தெரிவித்துள்ளது. போஷøண தொடர்பான பிரச்சினைக்கு உரிய கவனம் செலுத்தப்படவேண்டும் என தெரிவித்துள்ள யுனிசெப், இவ்விடயத்தில் அரசாங்கத்துக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள யுனிசெப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பிலிப்பு டுமாலி, சிறந்த கல்வி, சுகாதார முறைமைகள், சிறுவர் போஷாக்கின் தரம் என்பன ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியமானவையாகும். இலங்கையில் மூன்றில் ஒரு பங்கு சிறுவர்கள் குறைநிறையுடையவர்களாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஐந்து வயதிற்கு குறைவான சிறுவர்களில் 14 வீதமானோர் போஷனை குறைபாட்டு பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர்.

அதேவேளை நீண்டகால உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 26 தொடக்கம் 30 வீதமான சிறுவர்கள் போஷனைக்குறைபாட்டு பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன