மேர்வின் சில்வாவைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு

பேலியகொட மேம்பாலத் திறப்பு விழாவின் போது சிரச தொலைக்காட்சி ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மேர்வின் சில்வாவுடன் மேலும் ஆறு பேரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சிரச தொலைக்காட்சி ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போத இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29ம் திகதி இந்த மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களைக் கைது செய்றுமாறு நீதிமன்றம் பேலியகொட பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்த போதிலும் அந்த உத்தரவு இதுவரையில் அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.