மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய சிறை : அரசாங்கத்தின் சூழ்ச்சி வெளியானது!

  
 
  
   கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய, புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இராணுவ மற்றும் அரச உயர்மட்டத்தினரின் சூழ்ச்சிகள் இருப்பதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேக்காவுக்கு பின்னர் இராணுவத் தளபதி பதவியை ஏற்கும் சகல தகுதிகளையும் பராக்கிரம பன்னிப்பிட்டியவே கொண்டிருந்தார். புதிய இராணுவத் தளபதி பதவியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்~வுக்கு நெருக்கமான ஜகத் ஜயசூரிய நியமிக்கப்படும் வரை, பராக்கிரம   பன்னிப்பிட்டியவை விளக்கமறியில் வைப்பதற்கு அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் செயலாற்றியுள்ளார்.

புதிய இராணுவத் தளபதி பதவியேற்ற சில நாட்கள் கடந்த நிலையில், பராக்கிரம பன்னிப்பிட்டிய கடந்த 20ம் திகதி எவ்வித குற்றச்சாட்டும் இன்றி நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார். சட்டமா அதிபரின் தீர்மானமொன்றின்படி பன்னிப்பிட்டியவை நீதிமன்றம் விடுதலை செய்தது. பன்னிப்பிட்டியவுடன் கைதுசெய்யப்பட்ட வர்த்தகர்களான அத்துல வீரசேகர, கியான் துமிந்த ஆகியோரும் விடுவிக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக பராக்கிரம பன்னிப்பிட்டிய கடமையாற்றியபோது, கொழும்பில் தனக்கு உத்தியோபூர்வ இல்லம் வழங்கப்பட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

இந்த கோரிக்கையை சரத் பொன்சேகா நிறைவேற்றத் தவறியதால், இவ்விருவருக்குமிடையே முரண்பாடுகள் நிலவியதாக அரசாங்கத்தின் உயர்மட்டத்தை சேர்ந்த ஒருவர் பிரசாரம் மேற்கொண்டதாகவும், இந்தச் சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக்கிக் கொண்டதாகவும் இராணுவத்தின் சிரே~;;ட அதிகாரியொருவர் தகவலளித்தார்.