மூன்றாவது பாலினத்தவர்களுக்காக திருமண தகவல் இணையதளம்.

தமிழகத்தில் உள்ள திருநங்கைகள் என்று அழைக்கப்படும் மூன்றாவது பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்காகப் பயன்படும் ஒரு திருமண தகவல் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

தற்போது பிரபலமாக உள்ள திருணத் தகவல் இணையதளங்கள் திருநங்கைகளைப் பற்றிய விபரங்களை வெளியிட முன்வராததன் காரணமாகவே தான் இந்த முயற்சியை எடுத்தாக இந்த இணையதளத்தை துவக்கியுள்ள திருநங்கைகளின் பொருளாதார சமூக மேம்பாட்டு அமைப்பான சகோதரியின் இயக்குனர் கல்கி அவர்கள் தெரிவித்தார்.

திருநங்கை.நெட் என்ற இந்த இணைய தளத்தில் ஏற்கனவே சில திருநங்கைகளின் பெயர் விபரங்கள் உள்ளன.