மூத்த மாவோயியத் தலைவர் டில்லியில் கைது?

maomஒரு மூத்த மாவோயியத் தலைவரை பிடித்துள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறுகிறார்கள். கடந்த வாரத்தின் இறுதியில் கோபட் காந்தி எனப்படும் அந்தத் தலைவர் டில்லியில் கைது செய்யப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.

மாவோயிஸ்டுகளின் பதிப்புத் துறையின் பொறுப்பாளராக அவர் இருந்தார் என்றும், அந்த அமைப்பின் செய்திகளை நகர்புறங்களில் பரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

மாவோயிஸ்டுகளின் தாக்குதல்களுக்கு எதிராக இந்திய அரசு எடுத்த நடவடிக்கை தேவையான முடிவுகளை பெற்றுத்தருவதில் தோல்வியடைந்துவிட்டது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வாரம் ஒப்புக் கொண்ட நிலையில் இந்த கைது நடைபெற்றுள்ளது.

மாவோயியவாதிகளின் வன்முறைச் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன என்று மன்மோகன் சிங் அப்போது கூறியிருந்தார்.