முஸ்லிம்கள் பொலிஸாரினால் சுட்டுக்கொலை:கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

 

இலங்கையின் தலைநகர் கொழும்பில் மாளிகாவத்தை பகுதியில் பல முஸ்லிம்களை இலங்கைப் பொலிஸார் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றதாகக் கூறி அப்பகுதி முஸ்லிம்கள் நேற்று (04.09.2009)  ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

பல முஸ்லிம்கள் இவ்வாறு பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அல்லது காணாமல் போயுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

ஆனால், அந்தப் பகுதியில் திட்டமிட்டு நடத்தப்படுகின்ற குற்றச்செயல்களை அடக்குவதற்கான நடவடிக்கைகளையே தாம் மேற்கொண்டதாக பொலிஸார் கூறுகிறார்கள்.

 நேற்று வெள்ளிக்கிழமை மதியம் பள்ளிவாசலில் தொழுகை முடிந்ததை அடுத்து மாளிகாவத்தை பகுதியில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்களும், பெண்களுமாக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டார்கள்.

போராட்டத்தின் போது,

“நாட்டில் சட்டம் என்ற ஒன்றில்லை என்பதை அரசாங்கத்துக்கும் முழு உலகுக்கும் எடுத்துக் காட்டுவதே எமது நோக்கம்” என உள்ளூர் மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த எம்.என். அபூபக்கர் தெரிவித்தார்