முன்னோடிக் கலைஞர் சார்லி சாப்பிளினின் அரிய திரைப்படச் சுருள் கிடைத்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள அதிகார வர்க்கங்களின் திமிரையும் மேட்டுக்குடிகளின் சுரண்டல் நலனையும் தனது திரைப்படங்களின் மூலம் எள்ளல் செய்து உலக ரசிகர்களிடையே தனக்கென தனித்த இடத்தை உருவாக்கியவர் சார்லி சாப்ளின் அவர் நடித்து ஆப்ஃ தி கேப்சர் என்றொரு 1914-ஆம் ஆண்டு வெளியானது ஆனால் அது சில நாட்களில் காணாமல் போனது. இந்நிலையில் பழம் பொருள்களை சேகரிக்கும் ஒருவரிடம் ஆஃப் தி கேப்சர் படத்தின் படச்சுருள் கிடைத்துள்ளது. சாப்ளின் தொடர்பான ஆய்வுகளுக்கு இத்திரைப்படம் மிக முக்கிய பங்காற்றும் என்பதில் அய்யமில்லை.