முன்னரைப்போல ஆயுதக்குழுக்களுடன் இணைந்து போட்டியிட மாட்டேன்!:ஆனந்தசங்கரி தெரிவிப்பு.

 எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்புடனோ அல்லது ஆயுதக் குழுக்களுடனேயோ இணையாமல் தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்தே போட்டியிடும் என அதன் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
 
கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் தனியார் வானொலி ஒன்றிற்கு இன்றையதினம் பேட்டியளித்த ஆனந்தசங்கரி தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு தமிழ்க் கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்தனர். தமிழ் மக்களை புலிகள் பலிகொடுத்தபோது மௌனமாக இருந்த தமிழ்க் கூட்டமைப்பினருடன் ஒருசில ஆசனங்களுக்காக நான் இணையமாட்டேன். அதேபோல முன்னரைப்போல ஆயுதக்குழுக்களுடனும் இணைந்து போட்டியிட மாட்டேன். இவ்வாறு ஆனந்தசங்கரி அப்பேட்டியில் தெரிவித்தார்.

5 thoughts on “முன்னரைப்போல ஆயுதக்குழுக்களுடன் இணைந்து போட்டியிட மாட்டேன்!:ஆனந்தசங்கரி தெரிவிப்பு.”

 1. நாம் சார்ந்த மக்களின் விடியலிற்காக தம் கட்சிகளின் தனித்துவத்தைப் பேணிக்கொண்டு ஓர் பொது இணக்கப்பாட்டிற்கு வரமாடார்களா?

  இதுவரை காலமும் தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கும் மட்டும், “தமிழீழ விடுதலை புலிகள் தான் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள்” என்று சென்ற இடமெலாம் உரைத்து திரிந்த கூத்தமைப்பு (TNA) சம்பந்தர், கடந்த ஜனாதிபதி தேர்தலில் எமது தமிழ் மக்களை இரம்டாம்தரப் பிரஜைகள் என்று மட்டும் சொன்னதல்லாமல் அவரின் ஏகபிரதிநிதிகளின் தலைமையை மட்டுமல்லாமல் அவர்களால் பிடித்துச் செல்லப்பட்டு கட்டாயப் பயிற்சி கொடுக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுடன் சேர்த்து கொல்லப்பட்ட 20,000 இற்கு மேற்ப்பட்ட அப்பாவி பொது மக்களின் மரணத்திற்கு தலைமை வகித்த முன்னாள் இராணுவ தளபதிக்கு சார்பாக வாக்கு கேட்கும் பொது தமிழர் விடுதலைக் கூட்டணியின் (TULF) தலைவர் ஆனந்தசங்கரி அவர்கள் சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மிதவாதத் தலைவர் என்று தெரியாத நிலையில் தமிழ் தேசியக் கூத்தமைப்பில் (TNA) அங்கம் வகித்த பல பேருக்கு கல்தா கொடுக்கும் மர்மம் தெரியவருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) நியமிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆனவர்களுக்கு இம்முறை ஆசனம் வழங்குவதில்லை என லண்டனில் இடம்பெற்ற சந்திப்பில் கூத்தமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்ததாக தெரியவருகின்றது. உறவினர் ஒருவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்த சம்பந்தனை தமிழர் விடுதலைக் கூட்டணியின் (TULF) லண்டன் கிளையினர் பெப்ரவரி 8ல் சந்தித்து உரையாடி உள்ளனர். தமிழ் தேசியக் கூத்தமைப்பிற்கும் (TNA) தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் (TULF) இடையே உடன்பாடு ஒன்றை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சியிலேயே சில செய்திகளை ஆர் சம்பந்தன் கசியவிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூத்தமைப்பிற்கும் (TNA) தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் (TULF) இடையே உடன்பாடு எட்டப்பட முடியாத இடைவெளி இருப்பதை உணர்ந்த நிலையில் சந்திப்பு நிறைவுபெற்றதாக அறியப்படுகிறது.

  தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் (TULF ) தமிழ் தேசியக் கூத்தமைப்பை (TNA) இணைத்து உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க தமிழர் விடுதலைக் கூட்டணியின் (TULF ) லண்டன் கிளையில் இருந்த சிலர் விரும்பியிருந்தனர். அதையொட்டியே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தததாகவும், இச்சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையின் தலைவர் நிக்லஸ்பிள்ளை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலம்சென்ற தளபதி அ.அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையற்கரசி அமிர்தலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் எஸ் அரவிந்தன் உட்பட இன்னும் சிலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியிலேயே போட்டியிடும் என்றும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி பேசுவதிலே அர்த்தமில்லை என சம்பந்தன் இச்சந்திப்பில் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.

  தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி அவர்கள் சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மிதவாதத் தலைவர் என்று குறிப்பிட்ட சம்பந்தன் ஆனந்தசங்கரிக்கு தமிழ் தேசியக் கூத்தமைப்பில் ஒரு ஆசனத்தை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளதாகவும், தாங்கள் ஆனந்தசங்கரியுடன் உடன்பட்டு செயற்படுவதற்கு முன்நிபந்தனையாக ஆனந்தசங்கரி தமிழ் தேசியக் கூத்தமைப்பு மீதான கடுமையான விமர்சனங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளதாகவும், குறிப்பாக தமிழ் தேசியக் கூத்தமைப்பு ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தது தொடர்பாக தேர்தல் முடிவுவரை மௌனமாக இருந்த ஆனந்தசங்கரி தேர்தல் முடிவுக்குப் பின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததை சம்பந்தன் சுட்டிக்காட்டி இருந்ததாகவும் அறியப்படுகிறது.

  இச்சந்திப்பின் போது அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் கூத்தமைப்பில் போட்டியிட யாருக்கு ஆசனங்கள் வழங்குவது என்பது பற்றியும் சில அபிப்பிராயங்களை சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளதாகவும், குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூத்தமைப்பின் முடிவுக்கு எதிராக சுயேட்சையாகப் போட்டியிட்ட எம் கெ சிவாஜிலிங்கம், அவருக்கு ஆதரவாக நின்ற என் சிறிகாந்தா ஆகியோருக்கு கூத்தமைப்பில் (TNA) இல் ஆசனம் இல்லை என்றும் அவர்கள் கூத்தமைப்பு உறுப்பினர்கள் இல்லை என்றும் சம்பந்தன் அங்கு கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

  மற்றுமொரு கேள்விக்குப் பதிலளித்த சம்பந்தன் தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE ) கூத்தமைப்பில் (TNA) இல் தேர்தலில் நிறுத்தப்பட்டவர்களுக்கு இம்முறை ஆசனங்கள் வழங்க முடியாது என்ற வகையில் கருத்துத் தெரிவித்து இருந்தார். கூத்தமைப்பில் (TNA) ஆசனங்களுக்கு தகுதி அடிப்படையைக் கொண்டு வருவதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE ) நியமிக்கப்பட்டவர்களை ஓரம்கட்டலாம் என்ற வகையிலும் அவருடைய கருத்துக்கள் அமைந்திருந்தது. குறிப்பாக சட்டத்தரணிகள், பொறுப்பான தொழில் தகுதியைக் கொண்டவர்கள், ஊர் மக்கள் மத்தியில் செல்வாக்கானவர்கள் என்ற அடிப்படையில் ஆசனங்கள் வழங்கப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE ) நியமிக்கப்பட்டவர்கள் ஓரம்கட்டப்படுவர் என்ற வகையிலேயே ஆர் சம்பந்தனின் கருத்துக்கள் இருந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றது.

  மேலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் தெரிவு செய்யப்பட்ட தொகுதிகளில் வாழ்ந்த காலத்திலும் பார்க்க அதற்கு வெளியே குறிப்பாக புலம்பெயர் நாடுகளிலேயே புலிகளின் பிரச்சாரத்துடன் கூடுதலாக வாழ்ந்துள்ள நிலையில் அந்நாடுகளிலேயே பெரும்பாலும் இவர்கள் அறியப்பட்டும் உள்ள நிலையில் இவர்களுக்கு என்று ஒரு அரசியல் அடையாளம் இருந்திருக்கவில்லை என்பதும் உண்மை.

  அதனால் இவர்களில் பெரும்பாலானவர்களை ஓரம்கட்டுவதில் சம்பந்தனுக்கு பெரும் சவால்கள் இருக்கப் போவதில்லை. ஆனால் சிவாஜிலிங்கம், சிறிகாந்தா போன்றவர்கள் சம்பந்தனுக்கு தலையிடியாகலாம். தங்கள் தொகுதிகளில் சுயேட்சையாகப் போட்டியிடவும் வாய்ப்புகள் உள்ளது. அத்துடன் தங்களைக் கட்சியில் இருந்து நீக்க முடியாது என சிவாஜிலிங்கம் தனிப்பட்ட முறையில் தெரிவித்து வருகின்றார். தங்களுக்கும் கூத்தமைப்க்கும் இடையே எழுத்து மூலமான உடன்பாடுகள் எதுவும் இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் தங்களை கூத்தமைப்ல் இருந்து நீக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பி வருகின்றார். இவ்வாறான சர்ச்சைகள் கூத்தமைப்யை நீதிமன்றத்திற்கு அலைக்கழித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனத் தெரியவருகிறது.

  தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE ) தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஆசனங்களை வழங்காது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின் புதிய நபர்கள் அவ்விடங்களை நிரப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில் புலத்தில் உள்ள சிலர் அது தொடர்பாக பேசி வருவதாகவும் தெரியவருகின்றது. TNA இல் மட்டுமல்ல ஏனைய EPDP போன்ற மாற்று தமிழ் கட்சிகளிலும் புலம்பெயர் இறக்குமதிகள் சில போட்டியிடுவதற்கான வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகிறது.

  மற்றக் கட்சிகளை எடுக்குமிடத்து தமிழ் தேசியக் கூத்தமைப்பு (TNA) ஏற்கனவே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உடன் உடன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் அரச ஆதரவான கட்சிகளான ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகியனவும் ஒரு உடன்பாட்டை எட்ட முயற்சிக்கின்ற நிலையில் கடந்த முறை வவுனியா நகரசபையை புளொட் கோட்டைவிட்டு ஒரு பாடத்தைக் கற்றுள்ளது மட்டுமல்லாமல் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர்களின் வேண்டுகோளை அவர்கள் சார்பான மக்களே நிராகரித்ததைக் காணக்கூடியதாக இருந்ஹது.

  அத்துடன் முன்னர் புளொட், ஈபிஆர்எல்எப் கூட்டணியில் இருந்த ஆனந்தசங்கரி அவர்களும் தற்போது தனிமைப்பட்டுள்ளார். சிவநேசதுரை சந்திரகாந்தனின் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளும் (TMVP) தனித்துப் போட்டியிடயுள்ள நிலையில் இவர்களை விடவும் தேசியக் கட்சிகளும் உள்ளுர் பிரமுகர்களை தேர்தல் களத்தில் இறக்க உள்ளன. உள்ளுர் வர்த்தகப் புள்ளிகள் சிலரும் தேசியக் கட்சிகளில் போட்டியிடயுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள 23 தமிழ் ஆசனங்களுக்கான போட்டியில் TNAஇக்கு இருந்த ஏகபோகம் இல்லாமல் போய்விடும் நிலையிலும் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்ட கட்சியாக TNA தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளதாகத் தெரியவருகிறது.

  இதே நேரம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு (TULF) அழைப்பு விடுப்பதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் (TNA) இணைந்துகொண்டால் அது வரவேற்கக்கத்தக்கது எனவும் கட்சியின் எம்.பி சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ள நிலையில் எவ்வாறெனினும், தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக ஆனந்தசங்கரி கூறியுள்ளார். யுத்தகாலத்தில் அப்பாவி தமிழ் பொதுமக்கள் அழிவுகளை எதிர்நோக்கியமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பொறுப்பாளிகளாவர். புலிகள் மனிதக் கேடயமாக பொதுமக்களை பயன்படுத்திய போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை தட்டிக் கேட்கத் தவறியது. வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தனித்து போட்டியிடவுள்ளோம் என்றும் ஆனந்தசங்கரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் (PLOTE) பேச்சுவார்த்தையில் ஈட்படிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) நடைபெறவுள்ள பொது தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மாணித்துள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்டணசிங்கம் தெரிவித்துள்ளதாக அறியப்படும் வேளையில் இரவூப் ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் யானைச்சின்னத்தில் போட்டியிடுவது குறித்து கட்சியின் தலைவர் இரவூப் ஹக்கீம் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார் என்று தெரியவருகிறது.

  முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர்பீடம் இன்று அல்லது நாளை கூடவுள்ள நிலையில் கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரியவருகிறது.

  இதில் இன்று புலிகளும் இல்லாத நிலையில் தமிழ் தேசியக் கூத்தமைப்பை (TNA) தமிழ் மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ அரச மற்றும் அரச சார்புக் குழுக்களின் அரசியல் அராஜகங்களுக்கு எதிரான எதிர்ப்பு… மாற்று வாக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு செல்வதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ள நிலையில் தமிழ்த் தலைமைகள் இக் கடைசி நேரத்திலாவது நாம் சார்ந்த மக்களின் விடியலிற்காக தம் கட்சிகளின் தனித்துவத்தைப் பேணிக்கொண்டு ஓர் பொது இணக்கப்பாட்டிற்கு வரமாடார்களா?

  எல்லாவற்றிற்கும் மனிதாபிமானம்; மனித நேயம் வேண்டும்!

  நன்றி!
  – அலெக்ஸ் இரவி

 2. கடைசியாக கிடைக்கும் செய்திகளின்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் துரைராஜா ரவிஹரன் போட்டியிடும் வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து திருகோணமலையில் இடம்பெயர்ந்து வாழ்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இதுதொடர்பாக கட்சியின் தலைவர் இரா சம்பந்தரை திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மகஜர் ஒன்றினையும் இவர்கள் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ரவிஹரன் 1993 ஆம் ஆண்டிலிருந்து 2000 ஆம் ஆண்டுவரை முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாஜ தலைவராக பணியாற்றியவர் எனவும் இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும்,ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மக்கள் பிரிவு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் யானை சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகின போதிலும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தான் யானை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து இதுவரை தீர்மானிக்கபடவில்லை எனத் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.
  எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் பின்னரே தமது முடிவினை அறிவிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  அதே நேரம், வடக்கு,கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுவது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணி ஆலோசித்துவருகிறது என மனோ கணேசன் அளித்த பேட்டி ஒன்றின் போது தெரிவித்துள்ளார்.

  தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவது தொடர்பாக வினவியபொழுதே தாங்களும் வடக்கு,கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துவதற்குரிய ஆயத்தங்களில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் தாம் குறித்து அறிவுறுத்தியுள்ளதாகவும், மேலும் அவர் கட்சியின் சின்னம் எப்போதுமே ஒரு பிரச்சினையல்ல.எனினும்,ஆசன ஒதுக்கீடுகளின்போது முரண்பாடுகள் எழக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

  இருந்தபோதிலும்,தமது ஜனநாயக மக்கள் முன்னணி ஐக்கிய தேசியக்கட்சியின் மீது நம்பிக்கை கொன்டுள்ளது என்றும் மனோ கணேசன் தெரிவித்தார்.

  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தேசிய காங்கிரஸ் கட்சி எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனித்துப்போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றது.

  இறுதி முடிவெடுப்பதற்கான அரசியல் உயர் பீடக்கூட்டம் அமைச்சர் அதாவுல்லா தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றது.

  கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் தேசிய காங்கிரஸ் போட்டியிடத்தீர்மானித்துள்ளது.
  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான சுதந்திரக்கட்சியுடன் தமது கட்சியின் ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பாக தேசிய காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

  அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதன்மூலம் தமது பிரதிநிதித்துவ எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தால் தமது கட்சியின் குதிரை சின்னத்தில் போட்டியிட தேசிய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

  இதேவேளை,தேசிய காங்கிரஸுக்கு அக்கரைபற்று பிரதேசத்தை தவிர ஏனைய பகுதிகளில் ஆதரவு இல்லை என்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துக் காணப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

  இப்படியாக தேர்தல் கூட்டு நிலைகள் இருக்குமிடத்தில், ஆயுதப் போராட்டத்திலிருந்து ஜனநாயகப் பாதைக்கு வந்து, ……புலிகளின் (LTE)கட்டுப்பாட்டிலிருந்து முன்னர் யாழில், பின் வன்னியிலிருந்து வந்தோர், தீவுப் பகுதியிலிருந்து EPDP கட்டுப்பாட்டிலிருந்து வந்தோருக்கு வவுனியாவில் பாதுகாப்பு கொடுத்து வவுனியா நகர சபையை நாட்டின் முதன்மை நகர சபையாக்கினவர்கள் மக்களின் நலன் சார்ந்து ஒற்றுமைக்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கும் வேளை ஊர் இரண்டானால் கோமாளிக்கு கொண்டாட்டம் என்பதற்கு இணங்க, EPDP அமைப்பினர் தமது இணையதளத்தில் “எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்புடனோ அல்லது ஆயுதக் குழுக்களுடனேயோ இணையாமல் தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்தே போட்டியிடும் என அதன் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்,” “ஒருசில ஆசனங்களுக்காக நான் இணையமாட்டேன். அதேபோல முன்னரைப்போல ஆயுதக்குழுக்களுடனும் இணைந்து போட்டியிட மாட்டேன்” என்று தெரிவித்துள்ளதுடன், “சிறிகாந்தா தானும் சிவாஜிலிங்கமும் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் இணைக்கப்படவில்லை. ஆயினும் அதனைக்குறித்து தான் அலட்டிக்கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள சிறிகாந்தா தற்சமயம் தமிழ்க் கூட்டமைப்பில் இருந்து கொண்டு அதனை இயக்குவோர் அதனை உள்ளிருந்து அழிக்கும் நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இதேவேளை தமிழ்க்கூட்டமைப்புக்கு மாற்றுத்தலைமை தேவைப்படுவதாக ஸ்ரீகாந்தா மேலும் தெரிவித்துள்ளார்.” என்று போட்டுள்ளார்கள்.

  இப்படி ஒரு பக்கம் ஒற்றுமைக்கு குரல் கொடுக்குமிடத்து, மறுபக்கத்தில் வாக்குகள் சிதறுவதையும் சிலர் விரும்புகிறார்கள்.

  மக்கள் தான்……

  எல்லாவற்றிற்கும் மனிதாபிமானம்; மனித நேயம் வேண்டும்!

  நன்றி!
  – அலெக்ஸ் இரவி

 3. முத்தையா முரளிதரனும் அரசியலில் குதிக்கின்றார்.

  இலங்கை கிரிக்கட் சபையின் உபதலைரும் சுழல் பந்துவீச்சில் உலகப்புகழ் பெற்றவருமான முத்தையா முரளிதரன் அரசியலினுள் பிரவேசிக்கின்றார். இவர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்வதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நுவரேலிய மாவட்டத்திற்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

  உலக மட்டத்தில் அதிகளவு விக்கட்டுக்களைக் கைப்பற்றியுள்ளவராக சாதனை படைத்துள்ளவராக திகழும் இவர் எதிர்வரும் பொது தேர்தலில் நுவரேலிய மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகின்றது.

  * எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி யானைச் சின்னத்தை கைவிடுவதில்லை என்ற முடிவை அடுத்து ஜேவிபி மற்றும் ஜெனரல் பொன்சேகா தரப்பினர் ஜனநாயக தேசிய முன்னணி எனும் அமைப்பின் கீழ் வெற்றிச்கிண்ணச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இக்கட்சியின் தலைவராக ஜெனரல் பொன்சேகாவும் , செயலாளராக ஜேவிபியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத்தும் செயற்படுகின்றனர்.

  எதிர்கட்சிகளின் கூட்டாக அன்னப்பறவைச் சின்னத்தில் போட்டியிட வருமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்கவிற்கு ஜெனரல் பொன்சேகாவினால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அக்கடிதத்திற்கு சாதகமான பதிலொன்று கிடைக்காததையிட்டு ஜெனரல் தரப்பினரும் ஜேவிபி யும் தனிக் கூட்டணி அமைத்துள்ளது. அக்கூட்டில் அர்ஜூனா ரணதுங்கவும் இடம்பெறுவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

  * ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.நௌஷாத் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துகொண்டார்

  * தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவி பேரியல் அஷ்ரப் தனது 250 ஆதரவாளர்களுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார். இது தொடர்பாக இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அவர் அலரி மாளிகையில் சந்தித்தார்.

  இதன்போது மேலும் பல அமைச்சர்களும் அங்கு சமூகமளித்திருந்தனர்.

 4. Latest news:

  • The United National Front (UNF) will contest the General Election under the Elephant symbol and UNP leader Ranil Wickremasighe will contest from the Colombo District, UNP General Secretary Tissa Attanayaka told Daily Mirror online.

  The Deputy Leader of the United National Party Karu Jayasuriya is to run for the general election from the Gampaha District, he said. Mr. Attanayaka added that talks regarding the elections were underway with other parties of the UNF such as the SLFP (M)- wing and Sri Lanka Muslim congress.

  இன்று அரசாங்கம் அமைத்துள்ளவர்கட்ட்க்கு போட்டியாக UNP யும் பலமாக இல்லாத நிலையில் வடகிழக்கு, மலையகத்தை சேர்ந்த தமிழ்,முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகள் ஓரணயில் திரண்டு மக்கள் முன் சென்றால் வரப்போகும் பாராளுமன்றத்தில் பலமானதொரு எதிர்க் கட்சியை அமைக்கலாம். அதுமட்டுமல்ல ஓர் பலமான கூட்டணியாக எமது ஜனநாயக, மனித உரிமைகளை நியாயமான முறையில் கேட்டுப் பெறலாம். ஆனால், இங்கோ மக்களின் அபிலாஷைகளை விடுத்து தம்மிடையே புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு இல்லாமல் கட்சிகள் பிளவு பட்டுக்கொண்டே போகின்றன… வாக்குகளும் சிதறுகின்றன….

 5. முதலில், மக்களின் அபிலாட்சைகள் என்னவென்று தமிழ் தேசியவாத அரசியல்வாதிகட்குத் தெரியுமா?

  பாராளுமன்றப் பேரப் பேச்சுக்களால் எதையும் வெல்ல முடியும் எனநினைக்கிறீர்களா?
  பழைய கூட்டமும் அதன் பழைய அரசியலும் அவர்கள் ஒன்றுபட்டிருந்த போது கூடநம்மை எங்கு கொண்டு சென்றன?

  இத் தேர்தலை ஒரு மாற்றுச் சிந்தனைக்கும் மாற்று வழிக்குமான ஒரு திருப்புமுனையாகப் பயன்படுத்துவது பற்றி யோசிப்போமா?

  கொள்கையே இல்லாத தலைவர்கள். ஒன்று சேர்வது எதற்காக?

  இந்தப் பேய்க் கூட்டத்தை விரட்ட இத் தேர்தலைப் பயன்படுத்த இயலாதா?

Comments are closed.