முத்தையா முரளிதரனின் சாதனையின் போர்வையில் மறக்கடிப்பட்ட ஆதித் தீ : எம்.ரிஷான் ஷெரீப்

காலத்தின் தேவைக்கான மறுபதிவு

Published on: Aug 2, 2010 @ 17:59

கடந்த ஜூலை 22 இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுக்களை வீழ்த்தி மிகப் பெரும் சாதனையை நிலை நாட்டினார். பேரானந்தத்தில் வெறிபிடித்தவர்கள் போல மைதானத்துக்குள் குதித்த ரசிகர்கள், சிங்கக் கொடியை அசைத்தபடி முரளியின் பின்னால் ஓடினர். சிங்கக் கொடியின் பிண்ணனியில் சக விளையாட்டு வீரர்களின் தோள்களில் பயணிக்கும் முரளியின் புகைப்படங்கள் தேசத்தின் எல்லாப் பத்திரிகைகளையும் பூரணப்படுத்தின.

தனது திறமைக்குக் களம் தந்த விளையாட்டினை, வெற்றிகரமான ஒரு சாதனையோடு முடித்துக்கொண்ட முரளி, முழு இலங்கைக்குமே பெருமையைத் தேடித் தந்த ஒருவரென பத்திரிகைகள் எழுதி எழுதி மகிழ்ந்தன.

எனினும், சிங்கக் கொடியசைந்த அந்த வெற்றிக் கணத்தில் மகிழ்ந்து, எழுத மறந்த கதையொன்றும் உள்ளது. முத்தையா முரளிதரனின் இவ் வெற்றிக் களிப்புக்கு முற்றிலும் நேர்மாறாக மரண பயமும், கண்ணீரும், இழப்பும் மட்டுமே அவருக்கென எஞ்சியிருந்த நாட்களும் இதே போன்றதொரு ஜூலை மாதத்திலேயே வந்தன.

சரியாக இருபத்தேழு வருடங்களுக்கு முன்பு ஓர் நாள், சிங்கக் கொடியை அசைத்தபடி கூக்குரலிட்ட ஒரு கும்பல், கண்டி, நத்தரம்பொத, குண்டசாலையில் அமைந்திருக்கும் முத்தையா முரளிதரனின் வீட்டைச் சூழ்ந்தது.

முரளியின் தந்தைக்குச் சொந்தமான தொழிற்சாலை அக் கும்பல் வைத்த தீயில் எரிகையில், மரண பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த பதினொரு வயதான முரளிதரனின் உயிர் தெய்வாதீனமாகக் காப்பாற்றப்பட்டது. அன்று சிங்கக் கொடியை அசைத்து வந்த மரணம் குறித்து, இன்று சிங்கக் கொடிகளின் மத்தியில் சிங்களவர்களின் தோள்களில் பயணிக்கும்போது முரளி என்ன நினைத்துப் பார்த்திருப்பார்?

இறுதியாக முத்தையா முரளிதரன் சாதனையை நிலைநாட்டியது 2010, ஜூலை 22. அன்று முரளிதரனின் இருப்பிடங்களைச் சேதப்படுத்திய நெருப்பெரிந்தது 1983, ஜூலை 23. எரித்துக் கருக்கியபடி தொடர்ந்து சென்ற அந்த ஊழித் தீ எத்தனை முரளிதரன்களைப் பழி கொண்டிருக்குமென்று அறிந்துகொள்ளும் வழி கூட எப்பொழுதுமே எமக்குக் கிடைத்ததில்லை. 1983 கறுப்பு ஜூலைக்கு இப்பொழுது வயது இருபத்தேழு.

இரத்தக் கறை படிந்த ஆதி வரலாற்றின் பக்கங்களை இன்று மீளப்புரட்டுவது எதனாலென உங்களில் சிலர் சிலவேளை எண்ணக் கூடும். ஆனாலும், இலகுவாக மூடி மறைத்து வைக்கப்பட்டுள்ள பக்கங்களுக்கிடையில் சிக்கியிருக்கும் இருள் சூழ்ந்த வரலாற்றின் நினைவுகளை இதுபோல இலகுவாக ஒளித்துவைக்க ஒருபோதும் முடியாது. கறுப்பு ஜூலை – காலத்தால் அழிக்கப்பட முடியாத, இருள் சூழ்ந்த வரலாற்றில் தேங்கியிருக்கும் நினைவுகளிலொன்று.

அந்தத் தீயிலிருந்து தப்பி இன்று உயிர்வாழ்ந்துகொண்டிருக்கும் உள்ளங்களிலும், அந்த இருள் சூழ்ந்த நாட்களில் நெருப்பில் மறைந்துபோனவர்கள் குறித்து கைவிட முடியாத துக்கத்தைச் சுமந்தலையும் உள்ளங்களிலும் மட்டுமே அது நினைவுகளாகத் தேங்கியிருக்கிறது .

அறிவும், தொடர்ந்து வந்த சகோதரத்துவமும் குறித்த எங்கள் தேசத்துப் பாரம்பரியக் கீதங்கள் இருபத்தேழு வருடங்களுக்கு முன்பு இருளாய் வந்த கறுப்பு ஜூலைக்குள் மறைந்தே போயின. அப்பாவிகளைக் கொன்றொழித்த அந்த மிலேச்சத்தனமான செயல்களைக் கூட வெற்றிக் களிப்போடு செய்த நாட்களவை. தென்னிலங்கையின் வீதிகளில் வீடுகள், கடைகள், வாகனங்கள், சொத்துக்கள் எல்லாவற்றோடும் ஆயிரக்கணக்கில் எரிந்து மாண்டுபோன உயிர்கள், தமது குடியுரிமையின் மீது நிகழ்த்தப்பட்ட கோரமான வன்முறையின் சாட்சிகள்.

அது ‘அறிவீனர்கள் சிலரால்’ நிகழ்த்தப்பட்ட வன்முறையொன்றெனச் சொல்வதற்கு வளரும் சந்ததி இன்று பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இதைக் கேட்டு வளரும் சந்ததியின் இதயங்களில் கேள்வியொன்று உள்ளது. அன்றைய நாட்களில் அறிவீனர்கள் சிலரால் இவ் வன்முறை நிகழ்த்தப்பட்ட போது, நாட்டில் மீதமிருந்த மற்ற எல்லோரும் அதாவது அறிவாளிகள் பலரும் இக் கொடூர நிகழ்வுகளின் போது என்ன செய்துகொண்டிருந்தனர்? நாட்டில் பிரசித்தமாக இக் கேள்வியைக் கேட்கமுடியாத போதும் இப்பொழுதும் கூட தட்டிக் கழித்துவிட முடியாத கேள்வியொன்று இது. இருபத்தேழு வருடங்களுக்கு முன்னர் படிந்த இரத்தக் கறை இன்றும் கூட முழுதாக நீங்கியிருக்கிறதா என்ன?

இன்று கொட்டாஞ்சேனை சாந்த லூசியா தேவாலயத்திலோ, வெள்ளவத்தை இந்துக் கல்லூரி சரஸ்வதி மண்டபத்திலோ, கொள்ளுப்பிட்டிய மெதடிஸ்த தேவாலயத்திலோ கறுப்பு ஜூலைத் தீக்கு தங்கள் உடைமைகளை எரியக் கொடுத்துத் தப்பி வந்து தஞ்சமடைந்தவர்கள் எவரும் இல்லை.

அண்மைய வருடங்களைப் போல வடக்கு வீதிகளில், ஒழுங்கைகளில் பிணங்களெரியும் வாடைகளை முகர்ந்தபடி தப்பித்து விரையும் எவரையும் இன்று காண்பதற்கில்லை. எனினும் இச் சரணாலய முகாம்களும் மயான வாசமும் வேறு நிலங்களில் எழுப்பப்பட்டுள்ளன இன்று.

தவறிழைத்தவர்கள் பகிரங்கமாக எல்லா சௌபாக்கியங்களுடனும் வாழ, அன்று தொட்டு இன்று வரை தமிழ் பேசும் இனங்கள் மட்டும் இனவாத வன்முறையின் சிலுவையை கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தங்கள் தோள்களில் சுமந்தவாறு ஒழுங்கான இருப்பிடமற்று அச்சத்தோடு அலைய விதிக்கப்பட்டிருக்கிறது.

இருபத்தேழு வருடங்களுக்கு முன்னர் உயிர் தப்பிய முத்தையா முரளிதரன் கூட இன்று தேசாபிமானத்தின் ஒரு குறியீடு. எனினும், அவரைப் போல உயிர் தப்பிய இலட்சக்கணக்கான மக்களால் இன்றும் கூட மறந்துவிட முடியாத இந்த ஜூலை மாதத்தில், அந்தத் தேசாபிமானத்துக்கும் குடியுரிமைக்குமான இடைவெளி, மற்ற மாதங்களை விடவும் அதிகமாகத்தான் இருக்கிறது.

(சுமுது திவங்க கமகேயின் கருத்தினை வைத்து எழுதியது)

53 thoughts on “முத்தையா முரளிதரனின் சாதனையின் போர்வையில் மறக்கடிப்பட்ட ஆதித் தீ : எம்.ரிஷான் ஷெரீப்”

 1. முரளீதரன் மீது எனக்கு ஒரு மரியாதை இருந்தது. 2000 ஆம் ஆண்டில் உலகக் கோப்பைக்கான போட்டியில் எந்த உதைபந்தாட்ட அணியை ஆதரிக்கிறீர்கள் என்று கிரிகட் இடைவேளையில் பீபீசி ஊடகம் கேட்டது. அதற்கு தான் ஏதாவது ஆபிரிக்க நாடு வெல்ல வேண்டும் என்று விரும்புவதாகச் சொன்னார். தனக்கு நடந்த கொடூரத்தையே பணத்துக்காக மறைக்கும் முரளீ போன்ற எத்தனை பேர் நம் மத்தியில்?

  1. அவர் மறைப்பதாக யார் இங்கே சொன்னார்கள், புரியவில்லயே தம்பி.

   1. Didn’t you listen or read to the comments Throw baller did when Cameron at Jaffna

  1. Mr. Sri Kanth, I would like more elaboration about this Mr. Rishan Sherif. People should not forget the Saffron and Green bars in the Lion flag. They are each five fifth in dimension. They are for Tamils and Muslims. Sri Lankan Tamils have also pumped a lot of bullets into others. 

 2. கொட்டான்சேனை சாந்த லூசியா தேவாலயத்தில் பாதர் மரியநாயகத்தின் பாதுகாப்பில் இருந்தது நினைவுக்கு வருகிறது.அதன் பிரமாண்ட்மும் அதனால் எற்பட்ட பிரமிப்பும் இன்னும் என் நினைவுகளீல் வாழ்கிற்து.காலங்கள் கடந்து இப்போது முரளீ பற்றீய கட்டுரையில் சாந்த லூசியா.முரளீ எனும் சைவ்த் தமிழன் வ்ரலாறூ ச்ரித்திரம்.அர்ஜுன ரண்துங்க இல்லை எனில் முரளீ இன்றூ இல்லை அவனை இலங்கை சனாதிபதி வணங்கி இருப்பது தமிழ்னின் தன்மானத்திற்கான மரியாதை.உலகு எங்கும் ஒலிக்கப்படும் என் இனத்து வீரன் முரளீ என்னை பெருமைப் படுத்துகிறான் அவனால் நான் பெருமையடைகிறேண்.வாழ்க் முரளீ, வளர்க் அவன் பெருமை.

 3. பிரபாகரன் எனக்கு உணர்வு கொடுத்தான்.
  கே.பி எனக்கு வாழ்வு தந்தான்.
  மகிந்த எனக்கு வணக்கம் சொன்னான்.
  முரளீ என்னைப் பெருமைப்படுத்தினான்.
  டக்ளஸ் என்னை அபிவிருத்தினான்
  நான் ஒரு பன்னாடை.

  1. முரளீ இலங்கையின் தேசிய சொத்து.அவன் தமிழனாய் இருப்பதுதான் சிலருக்கு சங்கடமாக இருக்கிறது.கிரிக்கெட் ரசிகர்கள் அவனை ஏற்றூக் கொள்ளூம்போது அவனைப் பாராட்டும்போது அதில் பெருமையடையாது குற சொல்வது சரியா?

   1. What is Cricket, just the game not a life. How many people killed and lost their life this guy just a player and he finished his carrier. Go to stay India with his family and stop talking nonsenses like politicians.

    We know our pains.

 4. Hi Friends. You could see the 11 years old Murali who escaped from the riots. But you are writing about world class cricketer Murali who was made by Sinahlese people not by Tamils. And also we already spent more than 30 years in western countries, We still could not produce even a single player in any of those western country You see, all these cricketers are born just after 1983 riots and they are become number one world class players.And also they already won one world cup .. You remember when Murali broke the 50 over wicket record,(Murali took the England captain Coolinwood’s wicket) the Buddhist monks all climbed to the top of the buildings and gave their support to Murali. The England paper reporter said,” I cannot believe it the way the Sinhalese Bhuddist monks gave their support for Murali’s vicotry.Murali is not a tamil but he is a sportsman. He is not a Hindu but cricket is his religion.The players are more than his own brothers. Some of you may not know too much about cricket , if you know and if you watched some of their game, then you must have noticed the way the other players and their captain supported for him to become a record breaker. Without their real support Murali cannot become as the world class cricketer.Nowadays, we are getting new , new writers. Hello Rizan Sherif, I know you were not in Colombo in 1977 riots.If you were in Colombo in 1977 riots. what will you write? I was on the road day and night to help some of my friends. Then I saw so many things with my own eyes.There were riots in 1977,1981 &1983 but today,all the properties belonged to the tamils are in the hands of Muslim. From Ford upto Marahama, all our businesses and properties are captuered by Muslim. So. Sherif now tell me who were behind the riots is it Sinhalese or Muslims? Dematagoda Pickpocket Muslims, Krilaponea (Estate guys) Rajan’s group and Pettah’s fish-market laboures were those who looted and killed the Tamils in all the riots. The educated Sinhalese and high class Sinhalese cannot stop these hooligans because even those high class , rich, & educated Sihnalese also were scared to these hooligans. So now the things are changed and you don’t want to bring those stories and mixed with Murali. Now Murlai is their property. He belongs to SriLanka, not to the Tamils or hindu religions.He is an international players. He is an extra asset of the country. Don’t damage his image by writing like this. He never mentioned such an incident anywher in his interview or occation.so, relax and leave it to him because he is rich , popular, having good life.it is a gift ,given when he was born. May God bless him not because of he is tamil but he is an asset of a country. Do you know when Kumar Anandan set up the world record in dancing for seven days, J.R.Jeyawardana came in the middle of the night to wish him and when one of the army guy did try to do it ,he didn’t come to wish him. There was lot of protests against J.R for not coming to wish the Army guys. So, the Sinhalese like sports and they don’t care who is it but when they see some doing good they wish them. The same way, Rajapaksa came to the ground and wished Mulali too. So, Don’t get jealous or don’t hate any one and learn to appreciate like others.

  1. None hates Murali but it is moronic of him to comment on race issues. He did not gt married to a Singhalese, Muslim or a SL Tamil from the estate but picked a rich girl from TN. Good for him but don’t try to preach unity and friendship when your loyalty is questionable. 

  2. Hello thanks for the comment of the Throw Baller in South Asia. “SOUTH ASIA Bully ” after spending 1000 overs from one side (Shane Warne Commented). Can he ball on a straight arm no way. Why do we get Jealous and why do you create problem between Tamils and Muslim. Keep your loyalty to yourselves and don’t come and preach. He is ridiculed by all cricket world. Furthermore we did not produce and they produced in last 30 years. Do we have a state? don’t you know they played for more than 100 years of cricket and until 1992 they were a minnow. 88 all out under west indies. Tell me a good average holder outside subcontinent other than sanka in last 30 years. even sanka’s average boosted by Bankaladesh. We don’t give a damn about Murali tell him to stay away in Tamils life and not use Tamils for his brother’s murder.

 5. Muralitharan expressed support for Mahinda Rajapakse at the presidential election. That was used in the campaign.

 6. *கறுப்பு ஜுலை 83 – ஒரு அனுபவப் பகிர்வு*

  ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால்
  காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி
  ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும்,
  அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில
  அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும்,
  தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக்
  கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில்
  அமுல்படுத்தப்பட்ட ‘தரப்படுத்தல்” என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும்
  செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது.

  தரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்து விலகி
  ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியது. அரச பயங்கரவாதச் சுரண்டல்களுக்குப்
  பரிகாரம் ஆயுதப் போராட்டமே என்ற எண்ணம் பல இளைஞருள்ளும் எழுந்தது. ஆனால்
  துணிவாக முன்வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினரே. அதுவும் அவர்களால்
  வெளிப்படையாக தம்மை இனங்காட்ட முடியவில்லை. ஏனெனில் அந்த இளைஞர்களின் செய்கைகளை
  அங்கீகரிக்கும் மனப்பக்குவம் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை.

  இந்த நிலையில்தான் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு
  இருபத்திமூன்றாம் திகதி திருநெல்வேலி மண் ஈழத் தமிழினத்தின்
  போராட்டத்தைப்பற்றிச் சிந்திக்காத மனப்பான்மைக்கு அதிர்ச்சி வைத்தியம்
  அளித்தது.திருநெல்வேலியில் பதின்மூன்று சிங்கள இராணுவத்தினர் அழிக்கப்பட்ட
  செய்தி கேட்ட தூங்கிக் கிடந்த ஈழத் தமிழினம் சோம்பல் முறித்துக்கொண்டது. அரச
  படை இயந்திரங்களை எதிர்த்துப் போரிட முடியுமா என்ற கேள்வியே ஈழத் தமிழினத்தால்,
  குறிப்பாக தமிழின அரசியல் மேடைப்பேச்சுத் தலைவர்களால் நினைத்துப்பாராததொன்றாக
  இருந்தவேளையில், திருநெல்வேலித் தாக்குதல் ஒரு விடிவெள்ளியாகியது. (Cont)

  1. India did not extradite the assasin Velupillai . Prabhaharan as requested. Eleven soldiers lost their lives in an ambush for the first time in the Sri Lankan history. They deserve a state Funeral. People have all kinds of fears and suspicions. Now the country is desensitized beyond recognition.

 7. ஈழத்தமிழனின்
  கல்வியில் திணிக்கப்பட்ட தரப்படுத்தலானது இளைஞர்களை ஆயுதங்கள் பக்கமாகச்
  சிந்திக்கத் தூண்டியதென்றால், திருநெல்வேலி தாக்குதலும் அதைத் தொடர்ந்து எழுந்த
  அரச பயங்கரவாத ஆதரவுடன் இடம்பெற்ற இனக்கலவரமும் போராட்ட அமைப்புகளின் தீடீர்
  வளர்ச்சிக்…கு அல்லது திடீர் வீக்கத்துக்கு வழிவகுத்தது.
  ஆயித்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு யூலைக் கலவரமானது பெரும்பாலான
  ஈழத் தமிழர்களுக்கு ஒவ்வொருவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும். அந்தவகையில்
  எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே இரைமீட்க விரும்புகிறேன்.
  அப்போது நான் கொழும்பில் தெமட்டகொட என்ற இடத்தில் ஒரு சிங்கள வீட்டு
  அறையொன்றில் வாடகைக்கு குடியிருந்தேன். மருதானையில் அமைந்துள்ள ‘தில்லீஸ்
  குறூப்” என்ற நிறுவனத்தின் கணக்குப் பகுதியில் கடமையாற்றிக்கொண்டிருந்தேன்.

  ‘தில்லீஸ் குறூப்”பின் கீழே பல வியாபார ஸ்தாபனங்கள் இயங்கின. அவற்றில் ஒன்று
  கல்கிசை என்னும் இடத்தில் கடற்கரையை அண்மித்திருந்த ‘தில்லீஸ் பீச் ஹோட்டல்”
  என்ற வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் தங்கும் நட்சத்திர ஹோட்டலாகும். அன்று
  1983 யூலை 23ம் திகதி என்று நினைக்கிறேன். அதாவது இனக்கலவரத்துக்கு முதல்நாள்.
  சில கணக்குச் சம்பந்தமான அலுவல்களுக்காக அங்கே சென்றுவிட்டு வீடு திரும்ப இரவு
  எட்டு மணியாகிவிட்டது. கல்கிசையில் இருந்து தெமட்டகொட வரவேண்டுமானால் 154 இலக்க
  வஸ் எடுக்கவேண்டும். அந்த வஸ் பொரளை என்ற இடத்தினூடாக தெமட்டகொடவுக்கு
  செல்லும். வஸ் பொரளையை அண்மித்தபோது அதன் வேகம் குறைந்தது. அது பொரளையில்
  கனத்தை மயானம் அமைந்துள்ள பகுதி. அங்கே பெருந்திரளான மக்களும் பொலீசாரும்
  திரண்டிருந்தார்கள். வாகனங்கள் அதற்கப்பால் செல்ல இயலாதவாறு ஒரே சன நெரிசல்.
  திருநெல்வேலியில் பலியான இராணுவச் சடலங்கள் கனத்தை மயானத்தில் அடக்கம்
  செய்யப்பட இருந்ததால்தான் அந்தச் சனத்திரள் என்பதை மறுநாள்தான் என்னால்
  அறியமுடிந்தது. பஸ் வண்டி வேறொரு பாதை வழியாக தெமட்டகொடவை அடைய, வீடு
  செல்லக்கூடியதாக இருந்தது. (cont)

 8. மறுநாள் காலை ஏழு
  மணியிருக்கும். வீட்டு உரிமையாளர் அவசரமாக அறைக்கதவைத் தட்டும் சத்தம்கேட்டு
  எழுந்தேன். அந்த சிங்களவர் தலையில் கையை வைத்தவாறு, ‘தெமட்டகொட சந்தியிலுள்ள
  தமிழ்க் கடைகள் யாவும் அடித்து நொறுக்கப்படுகிறதென்றும், பெரிய பிரச்சினை ஒன்று
  கொழும்பில் ஆரம்பமாகிவிட்டது” என்றும் கூறி, என்னை வெளியே போகாமல் பாதுகாப்பாக
  இருக்குமாறு சொல்லிவிட்டு சென்றார்.
  ஒரு மணித்தியாலம் கழிந்திருக்கும். வெளியே சென்ற வீட்டு உரிமையாளர் வியர்த்து
  விறுவிறுக்க வந்தார்.
  ‘தமிழர்களை வைத்திருக்கிற சிங்களவர்களுடைய வீடுகளையும் எரிக்கிறார்களாம்.
  அதனால் நீ இங்கிருப்பது எங்களுக்கு பயமாக இருக்கிறது” என்றார்.
  மாதக் கடைசி. கையில் பணமில்லை.

  வேலைத்தலத்தில் பணம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மருதானையை நோக்கி
  விரைந்தேன். அனேகமாக வேலைக்கு ஒரு குறுக்குப் பாதை வழியாக நடந்துதான் போவேன்.
  அந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஓட்டோ ஒன்று விக்கித்து
  நின்றது.
  அதிலிருந்து வியர்த்து விறுவிறுத்தவாறு இரண்டு சிங்களவர்கள் இறங்கி என்னை
  கூப்பிட்டு, தங்களுடன் சேர்ந்து அந்த ‘ஓட்டோ”வை தள்ளிவிடுமாறு கூறினார்கள்.
  கைகளில் கத்தி பொல்லுகளுடன் விழிகள் சிவப்பைக் கக்க, விகாரமான முகங்களுடன்
  நின்றிருந்தவர்களுக்கு நான் தமிழன் என்று அடையாளம் தெரியவில்லை.
  தெரிந்திருந்தால் அந்த நேரம் என்னிலையை நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது.

  மனதில் பயம் தோன்றினாலும், அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு என்னை இனங்காட்டக்
  கூடாதென்ற நிலமையில் அவர்களுடன் ஒருவனாக அந்த ‘ஓட்டோ”வைத் தள்ள ஆரம்பித்தேன்.
  அந்த ‘ஓட்டோ”வினுள் இரண்டு மூன்று பெரிய ‘சூட்கேஸ்கள் அரைகுறையாக
  திறந்தநிலையில் உடுபுடவைகளும் நகைகளுமாக வெளியே தெரிந்தன. அந்த ‘சூட்கேஸின்”
  வெளிப்பகுதி எங்கும் ஈரம் காயாத இரத்தக்கறைகள் வியாபித்திருந்து, எங்கோ ஒரு
  வீட்டில் தமிழுயிர்கள் அந்த இரு காடையரினால் கொடூர அவலத்துக்குள்ளாகி, தமது
  சொத்துக்களையும் பறிகொடுத்ததை எடுத்தியம்பின. சிலசமயம் அந்த உயிர்களும்
  பறிபோயிருக்கலாம்.
  எனினும் என்ன பயன்? (cont)

 9. எனது உயிர்ப் பாதுகாப்புக்காக அந்த ‘ஓட்டோ” தொடர்ந்து முன்னே செல்ல,
  கைகொடுத்துவிட்டு, கையாலாகாத்தனத்துடன் எனது வேலைத்தலத்தை நோக்கி விரையலானேன்.
  அது திறக்கப்படவில்லை.
  மீண்டும் வீட்டை அடைந்தேன். எனது நிலையைப் புரிந்துகொண்ட அந்த வீட்டு
  உரிமையாளர், கைச்செலவுக்கு சிறிதளவு பணத்தை கேட்காமலேயே தந்தார்.
  எங்கே போவது? எவரிடம் உதவி கேட்பது?
  யோசித்து முடிவெடுக்க முடியவில்லை.
  வீதியால் செல்லும் வஸ் வண்டிகளிலிருந்து ‘ஜயவேவா, ஜயவேவா” என்ற பலநு}று
  குரலொலிகள் எழுந்து சூழ்நிலையின் பயங்கரத்தை உணர்த்திக்கொண்டிருந்தன.
  வேலைக்கென வந்து மக்கள் வீதியெங்கும் கும்பல் கும்பலாக தமிழனின் அவலத்தை
  வேடிக்கை பார்த்தவாறு மெல்லமெல்ல நகர்ந்துகொண்டிருந்தார்கள்.

  அப்போது ஒரேயொரு வழிதான் தென்பட்டது.
  கல்கிசையில் அமைந்திருந்த ‘தில்லீஸ் பீச் ஹோட்ட”லுக்குச் செல்வது என்பதுதான்.
  அது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கான ‘ஹோட்டல்” என்பதால், அதுவே
  பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்தேன்.
  தெமட்டகொடவிலிருந்து கல்கிசைக்குச் செல்லவேண்டும்.

  பொரளையூடாகவும் போகலாம். மருதானை ஊடாகவும் செல்லலாம். கலவரம் ஆரம்பமான இடம்
  பொரளை என்பதால், மருதானை ஊடாகச் செல்ல ஆரம்பித்தேன். நடந்து செல்வதே
  பாதுகாப்பானதாகத் தோன்றியது. (cont)

 10. மருதானை, நகரமண்டபம் எல்லாவற்றையும் கடந்து கொள்ளுப்பிட்டியை அடைந்தபோது, சில
  நு}று மீற்றர் முன்னால் காடையர் கூட்டமொன்று பல தமிழர் வர்த்தக ஸ்தாபனங்களைக்
  கொள்ளையிட்டு, அவற்றை எரித்தவாறு சென்றுகொண்டிருந்தது.
  அவர்களின்
  பின்னால் ‘ஜயவேவா” என்ற கோசங்களுடன் ஒரு கூட்டம். அவர்களில் பெரும்பாலானவர்கள்
  வேலைக்கு வந்து, அலுவலகங்கள் திறக்காததால் திரும்பிச் செல்பவர்கள்.
  தமிழரின்மீது நடாத்தப்படும் அராஜகங்களைப் பார்த்து வேதனைப்படும் சிங்கள
  மக்களும் அந்தக் கூட்டத்தில் இல்லாமலில்லை.
  இராணுவத்தினர் ‘ட்ரக்”குகளில் பெற்றோலைக் கொண்டுவந்து அந்தக் காடையர்களுக்கு
  விநியோகிப்பதையும், ‘ஜயவேவா” என்று கத்தி உற்சாகமூட்டுவதையும் காணக்கூடியதாக
  இருந்தது.
  பல சரக்குக் கடைகளைச் சூறையாடி அதிலிருந்த இனிப்பு, குமிழ்முனைப் பேனா
  போன்றவைகளை அந்தக் காடையர்கள் சனங்களை நோக்கி வீசுவதையும் அவற்றை அந்தச்
  சனங்கள் முண்டியடித்தவாறு பொறுக்கி எடுத்து ஆனந்தம் அடைவதையும் பார்த்தவாறு
  மெல்லமெல்ல அவர்களோடு ஒருவனாக நகர்ந்துகொண்டிருந்தேன்.
  பம்பலப்பிட்டி என்ற பகுதியை அண்மித்தபோது காடையாரின் தொகையும், தாக்குதல்களும்
  மிகவும் அதிகரித்துவிட்டது. சுற்றிநிற்கும் கூட்டத்திலே எவராவது தமிழர்கள்
  உள்ளார்களா என நோட்டமிட ஆரம்பித்துவிட்டார்கள். சுற்றிநிற்கும் மக்களின்
  ஆதரவும், இராணுவத்தினரின் பெற்றோல் விநியோக உதவியும் காடையரின் உற்சாகத்தைக்
  கூட்ட, அவர்களின் வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருந்தது.
  பம்பலப்பிட்டி சரஸ்வதி லொட்ஜ் என்ற தோசைக்குப் பெயர்பெற்ற அந்தச் சைவக் கடையின்
  பலகைக் கதவுகளை நொறுக்கித் திறந்து, உள்ளேயிருந்து வேட்டியணிந்த ஒரு பெரியவரை
  வெளியே இழுத்து வந்து ஏதோ செய்யுமாறு கட்டளையிட்டார்கள். பாவம் அந்தப் பெரியவர்
  அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி தலையில் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு, தேகம்
  நடுங்க அந்தக் காலி வீதியில் மண்டியிட்டு இருகரம் கூப்பி அந்தக் காடையர்களைக்
  கும்பிடலானார். அருகில் உடைந்து சிதறியிருந்த அந்தக் கடைக் கதவுப் பலகையொன்றால்
  அவரின் முகத்தில் ஓங்கி அறைந்தான் அந்தக் காடையர்களில் ஒருவன். இரத்தம்
  குபீரெனப் பாய்ந்தது. (cont)

 11. கண் முன்னால் ஒரு கொலையொன்று நிகழப்போகிறதோ என்ற பீதியுடன் உடல் உறைய
  நின்றிருந்தேன்.
  அப்போது சில சிங்களப் பெண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
  கூட்டத்திலிருந்து பாய்ந்து வந்து அந்த முதியவருக்கும் காடையருக்கும் இடையே ஒரு
  பாதுகாப்புக் கவசமாக நின்றுகொண்டு, அந்தக் காடையரைப் பார்த்து ஏசிக்
  கத்தினார்கள்.
  அங்கே அந்தத் தமிழ் முதியவரது உயிர் பிழைத்துக் கொண்டது.
  அந்தச் சிங்களப் பெண்களின் தாய்மை உள்ளத்துக்கு மனதாரத் தலை வணங்கியவாறு,
  மேலும் அந்த வழியால் தொடர்ந்து செல்வது புத்திசாலித்தனமல்ல என்ற முடிவுடன்
  கடற்கரைவழியாகக் கல்கிசையை அடையலாம் என்ற முடிவில், கடற்கரையில் அமைந்துள்ள
  தண்டவாளத்தின் வழியாக கல்கிசையை நோக்கி நடக்கலானேன்.
  வெள்ளவத்தையில் காலிவீதியிலிருந்து கடற்கரை நோக்கி குறுக்காக அமைந்த
  வீதியெங்கும் ஒரே புகைமயமாகவும், மக்களின் அபயக் குரல்களாகவும் அந்த கடல்
  காற்றிலே கலந்துகொண்டிருந்தது.

  நான் ராஜசிங்க வீதியை அண்மித்தபோது பின்னால் ஏதோ சலசலப்புக் கேட்டு திரும்பிப்
  பார்த்தேன்.
  சில காடையர்களும், ஒரு புத்த பிக்குவும் கையில் கத்தி பொல்லுகளுடன்
  வந்துகொண்டிருந்தார்கள்.
  ஆபத்து பின்னால் நெருங்குவதை உணர முடிந்தது.
  ஓடினால் ‘தமிழன்” என்று இனங்கண்டு துரத்திப் பிடித்துவிடுவார்கள்.
  நடையின் வேகத்தை அதிகரித்தேன்.
  எனினும் கல்கிசைக்கு இன்னும் து}ரமிருந்தது. அப்போது வெள்ளவத்தையில்
  போய்க்கொண்டிருந்தேன். கல்கிசையை அடைய தெகிவளை என்னும் இடத்தையும்
  தாண்டியாகவேண்டும். (Cont)

 12. கல்கிசையை சென்றடைவேன் என்ற நம்பிக்கை பின்னால் வந்தவர்களின் தொடர்தலால்
  மெல்லமெல்ல அகன்று கொண்டிருந்தது.
  வீதி எங்கும்
  சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவுடன் அரங்கேறிக்கொண்டிருந்த ஈழத்தழிழர்மீதான
  அட்டூழியங்களையும், அடாவடித்தனங்களையும் நேரடியாகவே பார்த்தவாறு வந்ததால், அந்த
  புத்த பிக்குவுடன் பின்தொடரும் காடையர்களால் எனக்கு என்ன நேருமோ என்ற எண்ணம்
  என் பதட்டத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.
  அப்போது இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை அண்மித்துக் கொண்டிருந்தேன். அதனுள் பல
  தமிழர்கள் அடைக்கலமாகியிருப்பது மண்டபக் கண்ணாடிச் சுவர்களினுாடே தெரிந்தது.

  அப்போது யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பிரயாணசேவையை நடாத்திக்
  கொண்டிருந்த பிள்ளையார் ஸ்ரோர்ஸ் சொகுசு வஸ் ஒன்று அரைகுறையாக எரிந்து புகைய,
  மண்டப முன் கண்ணாடிகள் நொறுங்கிப் போயிருந்தன.
  அவசர அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டேன். அந்தக் காடையர்களும் உள்ளே
  நுழைந்தார்கள். அவர்களைக் கண்டு மண்டபத்தினுள்ளே இருந்த பெண்களும் குழந்தைகளும்
  கூச்சலிட ஆரம்பித்தார்கள். அப்போது அந்த மிஷன் சுவாமிகள் காவியுடையுடன்
  முகத்தில் அமைதி தவழ, அபயக் குரலெடுத்து அலறும் அந்த அப்பாவி தமிழர்களை
  விலத்தியவாறு, புத்த பிக்குவின் முன்னால் வந்து நின்றுகொண்டார்.
  என்னை அழித்துவிட்டு, அப்பால் சென்று உங்களின் வெறியைத் தீர்த்துக் கொள்ளுங்கள்
  என்னும் போக்கில் ஒரு காவியுடை தரித்த துறவி.
  தமிழர்களை அழித்தே தீருவேன் என்னும் நோக்கில் இனவெறி கண்களில் தெறிக்கக்
  காடையருடன் இன்னொரு காவியுடை தரித்த புத்த துறவி.
  இரண்டு வேறுபட்ட குணாம்சம் பொருந்திய துறவிகள் நேரடியாகச் சந்தித்தார்கள்.
  அந்த புத்த துறவிக்கு அங்கே குற்றத்தை உணரும் மனப்பக்குவம் ஏற்பட்டதோ, என்னவோ,
  அவர் காடையர்களை அழைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டார். (cont)

 13. சிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் யாபேருக்கும் சுடச்சுடத்
  தேனீர் பரிமாறப்பட்டது.
  பாலைவனத்தில் ஒரு துளி நீர் கிடைத்ததுபோன்ற உணர்வெழுந்தது.

  சுற்றிலும் ஒரே புகைமயமாக இருந்தது. பல தமிழர்களின் உடமைகள் சூறையாடப்பட்டும்
  எரியூட்டப்பட்டும் மக்கள் அநாதரவாக இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி வந்து
  கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டிருந்தது.
  குழந்தைகள் பசியால் கதற ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரையுமே பசி வாட்டி
  வதைத்தது.
  இனிமேல் என்ன நடக்கப் போகிறது, என்ன செய்யப் போகிறேன் என்பதைக் குறித்து
  என்னால் சிந்திக்க முடியாமல் இருந்தது.
  இரவு எட்டு மணியிருக்கும்.
  முன்னே பொலீஸ் ஜீப் வண்டி வர, பின்னால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க லொறிகள்
  மூன்று வந்தன.அவற்றில் ஏற்றப்பட்டோம். அவை பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாரியைச்
  சென்றடைந்தன.

  லொறிகளிலிருந்து பரபரப்பாக இறங்கிய அனேகர் முண்டியடித்தக்கொண்டு உள்ளே
  ஓடினார்கள். ஏதாவது உணவு வழங்குகிறார்களோ என்று நோட்டமிட்டேன். அப்படியெல்லாம்
  எதுவுமில்லை. ஒவ்வொரு வகுப்பறைகளாகத் தமக்கு இடம் ஒதுக்குவதில்
  ஈடுபட்டிருந்தார்கள்.
  உடமைகளையும் கட்டிக்காத்த செல்வங்களையும் இழந்து அகதிகளாக அவலங்களுடன்
  எதிர்காலமே சூனியமாகிவிட்ட நிலையில், ஒரு வகுப்பறையின் வெறும்தரையில் கையோடு
  எடுத்துவந்த சில சில்லறைப் பொருட்களை வைத்து இடம் பிடிப்பதில் போட்டிபோட்டுக்
  கொண்டிருந்தார்கள்.இந்தப் போட்டியானது அப்போதிருந்து அகதி முகாமான
  பம்பலப்பிட்டி இந்துக் கல்லு}ரியில், ஒவ்வொரு சிறுசிறு விசயங்களுக்குமாய்
  சங்கிலிக் கோவையாய் பின்னிப்பிணைந்து வளர்ந்துகொண்டே சென்றது.
  உறங்குவதில் இடம்தேடப் போட்டி. உணவு பெறுவதில் போட்டி. மலசல கூடம் செல்வதில்
  போட்டி. முகம் கழுவத் தண்ணீர் பிடிப்பதில் போட்டி. யாழ்ப்பாணம் செல்ல
  கப்பலுக்குப் பதிவு செய்வதில் போட்டி. (cont)

 14. இத்தனைக்கும் மேலாக இலங்கைத் தமிழன், இந்தியத் தமிழன் என்று போட்டி. இத்தனை
  போட்டிகளும்அதனால் நிமிடத்துக்கு நிமிடம் உருவாகும் புதுப்புதுப்
  பிரச்சினைகளுமாக அகதிமுகாம் வாழ்வு வித்தியாசமான, அதேநேரத்தில் தமிழினம்
  எப்போது ஒற்றுமைப்படும் என்ற ஏக்கத்தையும் தந்ததென்றால் மிகையாகாது.
  அழிவுகளும் அவலங்களும் ஈழத் தமிழினத்தின் சுயநல, சுகபோக தேடலை ஒருபுறமாகத்
  தள்ளி, விட்டுக்கொடுப்புக்களோடுகூடிய ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுக்குமா என்ற
  வினாவுக்கு ஒரு சாதகமான பதில் வெகுதொலைவிலேயே காத்திருப்பதான உணர்வு
  ஏற்பட்டது.ஒரு சம்பவம்…
  ஒரு யாழ்ப்பாணக் குடும்பம். பல வருடங்களாக கொழும்பு வாழ்க்கை என்பதை அவர்களது
  செயற்பாடுகள் எடுத்தியம்பின. அவர்களுடன் ஒரு வீட்டுப் பணிப்பெண். அப்போது அங்கே
  எல்லோரும் அகதித் தமிழர்கள் என்றாலும், அவர்களைப் பொறுத்தளவில் அந்த இளம்பெண்
  பணிப் பெண்ணாகவே நடாத்தப்பட்டாள்.

  பெரியதொரு கம்பளத்தை விரித்து அதிலே உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண்
  அவர்களுக்காக வரிசைகளில் நின்று தண்ணீர் என்றும் உணவென்றும், அவர்களின்
  உடுபிடவைகளைத் தோய்ப்பதென்றும் உழைத்துக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் அவள்
  உணவருந்தினாளா, உறங்கினாளா என்பதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அவள்
  என்னதான் பணிவிடை செய்தாலும், அவள்மீது வசைபாடுவதிலேயே கவனமாக இருந்தார்கள்.
  அவளுக்கு அந்த முகாம் வதைமுகாமானது. அதிலிருந்து விடுபட அவளுக்கு தெரிந்த வழி
  அவளது வாழ்க்கையையே மாற்றியது. ஆம். அவள் அந்த முகாமில் ஒரு இளைஞனை திருமணம்
  செய்தாள். அந்தத் திருமணம் அங்கு கடமையிலிருந்த பொலிசாரின் முன்னிலையில்
  நிகழ்ந்தது.
  அந்த யாழ்ப்பாணக் குடும்பத்தின் அதிகாரத்துக்கு அவள் தனது திருமணத்தின் மூலம்
  கடிவாளமிட்டாள் என்பதுதான் யதார்த்தம். (cont)

 15. இந்த ஆடிக்கலவரத்தை கறுப்பு யூலை என்கிறார்களே. இந்தக் கறுப்பு
  யூலையானது
  சிங்களப் பேரினவாதத்தால் தமிழினத்தின்மீது வாரியிறைக்கப்பட்ட கறுப்பா? அல்லது
  தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா?
  யாழ்ப்பாணத்துக்கு சரக்குக் கப்பலில் செல்லவென கொழும்புத் துறைமுகத்தில் நானும்
  சில நண்பர்களும் நின்றிருந்தோம்.
  பசித்தது.

  துறைமுகத்தில் சாப்பாட்டுப் ‘பார்சல்”களை சிலர் மலிவு விலையில் விற்பதுண்டு.
  அங்கு கடமையிலிருந்த இரு சிங்கள இளைஞர்களிடம் விசாரித்தோம்.
  அவர்கள் உடனே விரைந்து சென்று சில சாப்பாட்டு பார்சல்களை எடுத்துவந்து
  தந்தார்கள்.
  பணத்தைக் கொடுத்தபோது வாங்க மறுத்தார்கள்.
  ‘இது நாங்கள் சாப்பிட வைத்திருந்தவை. இந்தக் கலவரத்துக்காக நாங்கள்
  கவலைப்படுகிறோம். இங்கு எல்லா மக்களும் சமமாக வாழவேண்டும் என விரும்புகிறோம்.
  நீங்கள் மீண்டும் கொழும்புக்கு வரவேண்டும். அதுதான் எங்களுடைய விருப்பம்.”
  அவர்கள் கூறிக்கொண்டே போனார்கள்.
  நாங்கள் அவர்களிடம் விடைபெற்று கப்பலில் ஏறினோம்.
  கப்பல் காங்கேசன்துறையை நோக்கி நகர ஆரம்பித்தது.

  யாழ்.கொம் இணைத்தளத்தில் யூலை 7, 2003 ஆம் ஆண்டு சோழியன் என்ற பாதிக்கப்பட்ட
  அன்பரால் வழங்கப்பட்ட அனுபவப்பகிர்வு இது.
  யாழ் தளத்திற்கும் சோழியனுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்

  1. Brother there was no auto rikshaw in sri Lanka in 1983, it was introdused in 1988

   1. யாராவது இந்தத் தகவலை உறுதிப்படுத்தக் கூடாதா?

    “……. வேகமாக வந்த ஓட்டோ ஒன்று விக்கித்து
    நின்றது.

    “Brother there was no auto rikshaw in sri Lanka in 1983………”

    1. ஆட்டோக்கள் 80களின் ஆரம்பத்திலேயே வந்துவிட்டன.

 16. >>>எழுத மறந்த கதையொன்றும் உள்ளது. முத்தையா முரளிதரனின் இவ் வெற்றிக்
  களிப்புக்கு முற்றிலும் நேர்மாறாக மரண பயமும், கண்ணீரும், இழப்பும் மட்டுமே
  அவருக்கென எஞ்சியிருந்த நாட்களும் இதே போன்றதொரு ஜூலை மாதத்திலேயே வந்தன.
  சரியாக இருபத்தேழு வருடங்களுக்கு முன்பு ஓர் நாள், சிங்கக் கொடியை அசைத்தபடி
  கூக்குரலிட்ட ஒரு கும்பல், கண்டி, நத்தரம்பொத, குண்டசாலையில் அமைந்திருக்கும்
  முத்தையா முரளிதரனின் வீட்டைச் சூழ்ந்தது. முரளியின் தந்தைக்குச் சொந்தமான
  தொழிற்சாலை அக் கும்பல் வைத்த தீயில் எரிகையில், மரண பயத்தில் நடுங்கிக்
  கொண்டிருந்த பதினொரு வயதான முரளிதரனின் உயிர் தெய்வாதீனமாகக்
  காப்பாற்றப்பட்டது. அன்று சிங்கக் கொடியை அசைத்து வந்த மரணம் குறித்து, இன்று
  சிங்கக் கொடிகளின் மத்தியில் சிங்களவர்களின் தோள்களில் பயணிக்கும்போது முரளி
  என்ன நினைத்துப் பார்த்திருப்பார்?

  இறுதியாக முத்தையா முரளிதரன் சாதனையை நிலைநாட்டியது 2010, ஜூலை 22.
  அன்று முரளிதரனின் இருப்பிடங்களைச் சேதப்படுத்திய நெருப்பெரிந்தது 1983, ஜூலை
  23.<<<

  ரிஷான், நல்ல கட்டுரை.
  நினைவுபடுத்தவேண்டிய ஒன்றினை சரியான சமயத்தில் நினைவு படுத்தியே ஆகவேண்டும்.
  எனக்கு மிக மிக நெருக்கமான குடும்பப் பெண்மணி, (தமிழராய்ப் பிறந்த
  குற்றத்துக்காக) அங்கு அதே ஜூலை 83 இல் கொல்லப்பட்டதும் நினைவுக்கு் வருகிறது.

  காலம் எத்தனை வேகமாகப் பறந்தாலும் செய்த குற்றம் குற்றமே.. அது யார்
  செய்தாலும்..

  – திவாகர்

  1. முள்ளீவாய்க்கால் 18 உம் ஒரு யூலை 23 தான்.இங் கேயும் பதின்மூன்றூ வயதுப் பாலகன் பாலச்சந்திரன் கடைசி நிமிடங்களீல் அந்தச் சிறூவனும் மரணம் வருவ்தைக் கண்டு கலங்கியே நின்றீருந்திருப்பான்.மதிவதனி துவாராகாவுடன் துடித்துப் போயிருப்பார்.இன்னும் எத்தனையோ பெயர் அறீயாத தமிழர் சாவிலிருந்து வாழ்வு வருமா என ஏங்கியே இறந்திருப்பர்.சிங்களத்தின் இன்னொரு வெறீயாட்டம் இது.

   1. துவாரகா பாலச்சந்திரன் என பெயர்களை அழுத்திக் கூறவேண்டியதில்லை. மரணத்தை எதிர்நோக்கிய சிறுவா;களில் இவா;களும் அடங்கும். மதிவதனியை வீரத் தாயாக உருவாக்கி ஏனைய தாய்களை சிறுமைப் படுத்த முடியாது. தயவு செய்து கடவுள் வணக்கத்தை இனிமேலாவது நிறுத்துவோம்.

 17. Thank you Soliyan. You are a real gentleman because you given a true story to our readers. At the same time, I also lived almost more than 10 years in Maradana, so I think certainly I could have met you without any doubt. KAPIYAWATHA PILLAIAR KOVIL, DAWALAKIRI HOTEL, AMBAL HOTEL, OR THEATERS, these the places , we mostly meet our people. I didn’t get caught in 1983 but I had a good experence in 1977 riots. My life belogns to those who saved my life in more than three incidents in 77 riots.

  1. As a kid I have visted my grandma living down Dean’s Rd many times and remember Captain’s Garden Temple, Ambal Cafe and Dawalagiri, the smelly fish market etc. Everytime I left Colombo by the mail train I always looked at the green color neon light saying Om an top of the temple and paryed within myself.

   1. Vow same with me, the same green neon light and the same prayer. Walking to the temple in the morning for Thiruvembavai. My relatives lived down Forbes Rd ( now Devanambiyatissa Mw ). Remember the smelly fish market down deans road.

 18. Yes you are Raj The unforgetable evergreen life of the Tamils. Big , big houses in the Colombo city owned by our people. The entire Pettah market controlled by Tamils. There were about hundred and fifty lawers were in all the high courts. Out of all, more than 90 per cent were Tamils Lawyers. In every departments , the top level officers were tamils. We had our people in each and every departments. Whereever we go , there we will have our friends to do our job without delay. Now the time has come again. We have to work hard to build up our community again. We can do it. It is very easy but only thing is , we need unity, if we have it we will have everything.

 19. எனக்கும் ரிஷான் ஷெரீப் கருத்துக்களுடன் உடன்பாடு. முரளீதரன் போன்ற
  புகழ்பெற்றவர்கள், சிங்களவர்களாலும் கொண்டாடப்படுபவர்கள், அவர் சாதனைகளைத்
  தங்களதாக சிங்களவர்களால் கொண்டாடப்படும் நிலையில் உள்ள முரளீதரன், அந்த
  தருணத்தில் மாத்திரமல்ல என்றுமே சமயம் நேரும்போதெல்லாம் சிங்களவர்களுக்கு
  அவர்கள் தமிழ்ர்களுக்கு உரியதைக் கொடுக்க மறுப்பதை, அதற்காக போரிடுவதைச்
  சுட்டிக்கட்ட வேண்டும். இல்லையெனில், முரளீதரனும், பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில்
  இங்கு ஜஸ்டீஸ் பார்ட்டியும், திராவிட கழகமும் நடந்து கொண்ட கேவலத்தை
  முரளீதரனும் செய்வதாகும். பேசவேண்டும். மௌனம் சுய லாபத்தின், தன்
  சௌகரியங்களுக்காக் தமிழ்னத்தைக் காட்டிக் கொடுத்ததாகும்.

 20. முரளிதரனை அரசியல்வாதிகளுடன் ஒப்பிடுவது தவறு. காலங்காலமாக கட்சி மாறி சிங்கள அரசுகளுடன் கூட்டுச் சேர்ந்தோர் அதிகம். கருணா -டக்ளஸ்-கே.பி வரிசையில் முரளியை நிறுத்த முடியாது கட்டுரையில் மறைந்து நிற்பது முரளியின் மேல் உள்ள துவேசம். முரளியை வைத்து பயன்படுத்தியவர்களின் சுய லாப நோக்கை விமர்சிக்காமல் முரளியை விமர்சிப்பது தவறு. அர்ஜீனா வுக்கு முரளியின் மீது கரிசனையல்ல. போர் உச்சக் கட்டத்தில் இருந்தபோது முரளியின் மீதான அனுதாபம் கொலைகளை மறுபக்கம் திருப்பும் ஒரு அரசியல் லாபமே. மகிந்த மைதானத்தில் வந்து வாழ்த்திய போது தமிழ் பா.உக்களும் அமைச்சரகளும் வராதது ஏன்? மைதானம் எங்கும் கட்அவுட் வைக்க வேண்டும் என்று முரளியா கூறினார்?

  1. முரளிதரன் அரசியல்வாதியல்ல.
   ஆனால் அவர் சனாதிபதித் தேர்தலில் ராஜபக்சவை அTகரித்து ஊடகங்களில் பேசியதற்கு விளக்கம் தேவைப்படுகிறது.
   அதைத் தட்டிக் கழிக்க இயலாது.

  2. கட்டுரையில் மறனது நிற்பது முரளீயின் மீதுள்ள துவேசம் இதைத்தான் இந்த வார்த்தைதான் உண்மையானது.

 21. முதலில் மேற்கிந்திய தொடர்களி.ன் பின்னர் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் திடீரென காலியில் முதலாவது டெஸ்ட்டுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த முடிவுக்கு கடந்த சில மாதங்களாக இவரால் முன்னர் போல் பந்து வீச முடியவில்லை என்பது காரணமாக இருக்கலாம். அதை விட சிங்கள கட்டுப்பாட்டுக் குழுவின் அழுத்தமே காரணம். ஜெயசூரியா மிகவும் மோசமாக விளையாடிய போதும் அவரை அணியில் வைத்திருந்தது. முரளிக்கு இந்த அழுத்தம் தமிழர் என்பதலாயே. ஏன் முரளிக்கு அணித் தலைவர் பதவி கிடைக்கவில்லை.? மத்திய மாகாண அணிக்கு தலைமை வகித்தவர். முன்னால் தலைவர்கள் எல்லாம் இவரிடம் ஆலோசனை கேடபார்கள். அணியில் நீண்ட காலம் இருப்பவர். தகுதி என்பது மொழியிலேயே உள்ளது.

 22. 1983 யூலை இனக் கலவரத்தில் பருத்தித்துறை காட்லிக் கல்லூரியின் முன்னால் மாணவன் முரளியைப் போன்ற சுழற் பந்து வீச்சாளன் ராஜன் கதிரவேல் கொல்லப்பட்மை இங்கு நினைவு கூறவேண’டியுள்ளது.

 23. Hi Friends

  For me , it looks like Rishan Sherif”s crocodile tears because I think Rishan Sherif is trying to create a new problem for Murali. As I said, ” Murali is not a politician but sportsman and also today he is treated as a national asset of the country” Apart from that , you cannot expect anything from Murali. Let him be as Murali, don’t try to paint him a Tamil murali and don’t damage his image. First, we have to learn to let others to live in peace. And then we have to see how we also live in peace.When Barak Obama was elected as the president of America , local black thought it is their victory and they celebrated as their victory. In reality , it not the victory or the local poor black but it is the decision of the white super power. When Abdul Kalam was elected as the president of India, the Banladesh poor muslims all celebrated that their muslim man became the president of India. No, it was the decision of the people of Inida who made him as the president and the same way, you guys bothering too much about Murali becasue he was born in a tamil family but in reality, he educated and brought up and became a world class player , was the decision of the Sinhalese people. Not tamils because tamils don’t have much intrest in sports like Sihanlese. Here we have to learn the difference between the sports and politics. The sprotsmen, actors, religious gurus, business men are not belonged to any particular communities. For example, you see the muslim actors in bollywood , acting like hindus but in reality they hate hindusim and hindus. You see blacks are playing in the soccer world cup against their own Africans countries too. Then you cannot say they are all anti black. You see Swamiji coming from India, they have millions of English devotees but still they are christians but they follow the hindus swamijis, so you cannot say those english people are anti-christians or you cannot say those swamijis are anti-hindus. Our businessmen are still doing with sinhalese , so you cannot say that they are all anti-tamils or those Sinhalese who dealing with out Tamils businessmen are anti-Sinhalese , the same way , Murali is also a sportsman. He is playing his game. Here you don’t want write about Murali all these unwanted articles and comments.Even after 83, specially even during the time war, I have seen tamil boys and sinhales girls are fallen in love and they have got married too. And they are very happy and leading a good life. So what you are going to say ? Are they anti-sinhalese or anti-tamils? For my little knowledge , this article doesn’t need to be published in this website. Because it has no purpose or sentimental issue for our people. In the moren world, we have to learn to how to organize our next generation and how to rebuild our community, how to educate a standard peaceful living for people. We lost only two things ,one is our people and other things is our assets. both have to be regained. It is not our issue whether Murali is tamil or sinhalese or Karuna is good or bad or anyother things. Writing comments and reading this kind of articles may good for some kind of passing time in front of the computer. But it will not do anything for our community.

 24. இனியொரு வாசகர்களில் யாராவது கீழ்வரும் செய்தியின் உண்மை நிலையை தயவு செய்து வெளிக் கொணர்வீர்களா?

  “Brother there was no auto rikshaw in sri Lanka in 1983….”

  velu
  Posted on 08/04/2010 at 10:48 am

 25. இதே முரளிதரன் தான் ரூபவாஹினிக்கு கொடுத்த பேட்டியில் 30 வருசமா இலங்கையை
  ஆட்டிப்படைத்த பிரச்சினையை முறியடித்த ஜனாதிபதியை நினைத்து பெருமைப்படுவதாக
  குறிப்பிட்டிருக்கிறார், அதற்கு எலும்புதுண்ட்டாக ராசபக்சே ஒரு விளையாட்டு
  மைதானத்துக்கு முரளியின் பெயரால் இனி அழைக்கப்படும் என்று
  சொல்லியிருக்கிறாராம்..

  மேலும் விரிவான செய்தி இதோ:

  இலங்கையர் என்று சொல்லிக் கொள்வதில் அதிகம் பெருமை அடைவதாக நட்சத்திர
  சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.

  இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனத்தினால் நடத்தப்பட்ட விசேட கௌரவிப்பு நிகழ்வு
  ஒன்றில் கலந்து கொண்ட போது முரளீதரன் இதன…ைக் குறிப்பிட்டுள்ளார்.

  டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் ஓய்வு பெற்றதன் பின்னர் முத்தையா முரளீதரன் முதல்
  தடவையாக தொலைக்காட்சி ஊடகமொன்றில் தோன்றி ரசிகர்களுடன் நேரடியாக உரையாடினார்.

  30 ஆண்டு காலமாக நாட்டில் நீடித்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த
  ஜனாதிபதிக்கு தமது விசேட நன்றியை தெரிவிப்பதாக முரளீதரன் தெரிவித்துள்ளார்.

  தமிழர், முஸ்லிம் மற்றும் சிங்களவர் என பிரிவினை பாராட்ட வேண்டிய அவசியம்
  கிடையாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

  18 ஆண்டுகள் இலங்கை அணிக்காக கிரிக்கட் விளையாடிய தமக்கு எந்த நேரத்திலும்
  தமிழர் என்பதனால் எவ்வித தடையும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

  சில குறுகிய லாபங்களை அடைய எத்தனிக்கும் ஒரு சக்திகள் தமிழர், சிங்களவர் அல்லது
  முஸ்லிம் என்பதனை வெளிப்படுத்த முனைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  பேதங்களை மறந்து இலங்கையர் என வாழ்வது மிகவும் பயனுடையதென அவர்
  குறிப்பிட்டுள்ளார்.

  கல்லூரி விடுதியில் தங்கி படித்த தமக்கு தமிழர், சிங்களவர் அல்லது முஸ்லிம் என
  பேதம் பாராட்டத் தெரியாதென அவர் தெரிவித்துள்ளார்.

  முரளீதரனின் இந்த நேரடி செவ்வியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஊடக அமைச்சர்
  கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் நேரடியாக தொலைபேசி மூலம் இணைந்து தமது
  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

  கிரிக்கட் விளையாட்டின் மூலம் தாம் அதிக நண்பர்களை ஈட்டிக் கொண்டதாக முரளீதரன்
  குறிப்பிட்டுள்ளார்.

  முத்தையா முரளீதரனினால் கிரிக்கட் துறைக்கு ஆற்றப்பட்ட சேவையை கௌரவிக்கும்
  நோக்கில் பல்லேகலே சர்வதேச விளையாட்டு அரங்கு நேற்று முதல் முத்தையா முரளீதரன்
  சர்வதேச கிரிக்கட் மைதானமாக அழைக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி உத்தரவு
  பிறப்பித்துள்ளார்..

 26. I was working in Colombo in 1981 till 1984 and I use Auto to travel after going to Savoy bar. I think my pals who worked with me will confirm this.

 27. நாட்டில் நடந்த எல்லா இன வன்முறைகளின் போதும் மக்கள் பட்ட துன்பங்கள் பற்றி அறிகையில் மனம் அடைகின்ற வேதனையை எதனால் அளக்க இயலும்?ஆயினும் மக்கள் எப்போதும் தோற்பது இல்லை என்கின்ற சரித்திர உண்மை இலங்கையில் மாத்திரம் பொய்த்துவிடுமா என்ன? மக்கள் விரோதிகள் தோற்பார்கள்.மக்களை ஏமாற்றி தம்மை வாழ்வித்துக் கொள்கின்ற இந்த அரசு இயந்திரம் மக்களால் என்றோ ஓர் நாள் வீழ்த்தப்படும்.

 28. the world should learn racism from Sri Lanka. No Racism,no politics,creating history,changing to sinhala names and thereating.

 29. Slowly but surely the truth is coming out why Murali was wagging the tail for MR & Co. It is not your greatness in sports that defines you, its your selfishness when it comes to the crunch you see. “…. மனைவி, பிள்ளைகள் குடுபத்துடன் வாழ்வதா? அல்லது நாமல் ராஜபக்‌ஷவிற்கு ”சரி” எனக் கூறி சகோதரனைக் காப்பற்றிக் கொள்வதா? என்ற பெரும் குழப்பத்தில் முரளிதரன் உள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன? ” – Tamilwin

Comments are closed.