முட்டாள்கள் மடிந்துபோகட்டும் : ரே

 

 

 

 

உங்களுக்கு வாய் எதற்கு?
வாய்களை மூடித் தைத்துவிடுங்கள்
அரைத்த சத்துணவை உட்செலுத்தும்
அறிவியல் திட்டத்துக்கு
அள்ளிக் கொடுப்பார்கள்
அந்நியரை வெறுத்து அயல்தேசம் போன
அருமந்த எம் அடங்காத் தமிழர்கள்
மூச்சுப் போய்வர மூக்கு மட்டும் போதும்
முடிந்தவரை மூக்கை வைத்து உயிர்வாழுங்கள்
அல்லது
முட்டாள்களாக மடிந்து போங்கள்
அராஜகத்தின் விளக்கவுரையை
வியந்துகேட்டு மெய் சிலிர்க்க
உங்கள் காதுகள் இருக்கட்டும்
தலைநிமிர்ந்து ஒரு தமிழன்
தன் உரிமைபற்றிப் பேசிவிட்டால்
அவன் பேச்சு நிறுத்தப்படும் அவர்களது வீரத்தை
கண்டு களிக்க
உங்கள் கண்கள் இருக்கட்டும்
மனித இனத்தின் மகத்துவமே பேசும் சிந்தனை
அதை இழந்த நீங்கள்
முட்டாள்களாக மடிந்து போங்கள்
முனகல்கூட இல்லாமல்
முழுமையான பாசிசத்தின் துணையுடன்
முட்டாள்களாக மடிந்துபோங்கள்

One thought on “முட்டாள்கள் மடிந்துபோகட்டும் : ரே”

  1. உண்மை பேசுவது போன்றோரு உலகம் அதனால் நேர்மையாளனை சந்தேகிக்கும் உண்மை பேசினாலும் பொய் பேசுவதாகச் சொல்லும்.எப்போதும் நடித்துக் கொண்டிருப்பதால் நல்லவர் எல்லாம் நடிகர் இங்கே.

Comments are closed.