முக்கோண வலைப்பினலைத் தகர்க்கும் புலிகளின் முதற் கொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பகுதி நான்கு) : ஐயர்

பகுதி மூன்றை வாசிக்க..

பகுதி இரண்டை வாசிக்க..

பகுதி ஒன்றை வாசிக்க..

1975 ஆம் ஆண்டு ஜீலை மாதம் துரையப்பா கொலை செய்யப்பட்ட நிகழ்வானது இரண்டு பிரதான கருத்தாக்கத்தின் தோற்றுவாயாக அமைந்த்து.

1. தமிழ் மக்கள் மத்தியில், சிங்கள அடக்குமுறைக்கு எதிராக எதிர்த் தாக்குதல் நடத்த எமக்கு மத்தியில் சிலர் தயாராக உள்ளனர் உணர்வு.
2. ஒரு புறத்தில் சிறிமாவோ தலைமையிலான அரசிற்குப் பெரும் சவாலாகவும் மறுபுறத்தில் சிங்கள அடிப்படை வாதிகள் மத்தியில் பய உணர்வையும் உருவாக்கியிருந்தது.

தமிழ் உணர்வாளர்களும், தேசிய வாதிகளும் இப்படுகொலையை பெரும் வெற்றியாகக் கருதினார்கள். இவ்வாறு முழுத் தேசமும் தமிழர்களின் எதிர்ப்புணர்வை ஒரு புதிய பரிணாமத்தில் அலச ஆரம்பித்திருந்தாலும், எம்மைப் பொறுத்தவரை அதற்க்குக் காரணமான பிரபாகரனோடு வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தோம். அந்தக் கொலையை நிறைவேற்றிய தம்பியுடன் இருபத்தி நான்கு மணி நேரமும் எதிர்காலத் தமிழீழக் கனவு குறித்துத் திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். தம்பி பிரபாகரன் எமக்கெல்லாம் “ஹீரோ” வாக, எமது குழுவின் கதாநாயகனாக ஆனதற்கு இதுதான் அடிப்படைக் காரணம்.

துரையப்பா கொலையின் எதிர் விளைவுகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கும் புதிய திட்டங்களை மேற்கொள்வதற்கும் எம்மிடம் போதிய அறிவும் அனுபவமும், உலகை ஆராய்வதற்கான தத்துவார்த்தப் பின்புலமும் அற்றிருந்த காலகட்டம் அது. ஒரு புறத்தில் இடதுசாரிகள் தேசிய இன ஒடுக்குமுறையைக் கருத்தில் கொள்ளவில்லை; மறு புறத்தில் பாராளுமன்றக் கட்சிகள் எம்மைப் பாவித்துக்கொண்டனர். இந்தச் சூழ்நிலையில் எமது நடவடிக்கைகளுக்குக் கிடைத்த மக்கள் ஆதரவும், சமூக அங்கீகாரமும், எம்மை மேலும் மேலும் தூய இராணுவக் குழுவாக மாற்றியிருந்தது. அதே பாணியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள மேலும் ஊக்கம் வழங்கியது.

தமிழ் பேசும் மக்கள் மீதான தேசிய இன அடக்கு முறையும், வன் முறை வடிவில் மேலும் மேலும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. ஆயுதப்படைகளின் கெடுபிடி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தமிழ் பேசும் பொலீசார் எமக்குப் பெரும் தலையிடியாகின்றனர். அவர்களை என்ன செய்வது என்று தீர்மானிப்பதற்கு முன்னமே சிலவேளைகளில் அவர்கள் எம்மை நோக்கி வந்துவிடுகின்றனர்.

21 ஓகஸ்ட் 1975 கிருபாகரனும், சில நாட்களில் 19 செப்டெம்பர் 1975 கலாபதியும் கைதுசெய்யப்பட்ட பின்னர் தான் இலங்கை அரசின் அதிகார மையத்திற்கு துரையப்பா கொலை என்பது சில இளைஞர்களின் கூட்டு நடவடிக்கை என்பது தெரிய வருகிறது. அரசு விழித்துக்கொள்கிறது. ஒரு உள்ளூர் உளவு வலையமைப்பை உருவமைக்கும் வேலையை முடுக்கிவிடுகிறது.

துரையப்பா கொலை தொடர்பாக கலாபதி கைது செய்யப்படுவதற்குக் காரணமாக அமைந்த கருணாநிதி என்ற பொலிஸ் அதிகாரி கொலைசெய்யப்பட வேண்டும் என்பதில் பிரபாகரனும் நாங்களும் ஆர்வமாக இருந்தோம். அவரின் கைதிற்கு மட்டுமல்ல, கலாபதி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த போது அவரைச் சித்திரவதை செய்வதற்கும் கருணாநிதிதான் முன்நின்றார் என்பதும், நாம் அறிந்திருந்தோம், அவரின் சித்திரவதையில் கலாபதியின் காதைப் பலமாகத் தாக்கி சேதப்படுத்தியிருந்தார் என்று தம்பி அடிக்கடி கூறுவார். கருணாநிதியின் சித்திரவதையின் கோரத்தால் கலாபதியின் ஒருபக்கக் காதின் கேட்கும் தன்மை கூடப் பாதிக்கப்பட்டிருந்து.

14 பெப்ரிவரி 1977 இல் காங்கேசந்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கருணாநிதி என்ற பொலிஸ் அதிகாரி மாவிட்டபுரத்தில் வைத்துக் கொலைசெய்யப்படுதல் என்பது தான் தமிழ் ஈழம் கோரும் போராட்டத்தில் முதல் நடைபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவரின் கொலைச்சம்பவம்.

பல நீண்ட நாட்கள் வேவு பார்ப்பதிலும், நபர்களின் நகர்வுகள் குறித்தும் நீண்ட அவதானமான திட்டமிடலின் பின்னர் பேபி சுப்பிரமணியமும், பிரபாகரனும் இந்தக் கொலைத் தாக்குதலை மேற்கொள்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது. மாவிட்டபுரம் நோக்கி பிரபாகரனும் பேபி சுப்பிரமணியமும் செல்ல நாம் முடிவிற்காகக் காத்திருக்கிறோம். இறுதியில் பிரபாகரன் குறிபார்த்துச் சுட்டதில் கருணாநிதி அந்த இடத்திலேயே மரணமாகிறார்.

அப்போது தமிழர் கூட்டமைப்பின் உணர்ச்சிப் பேச்சுக்களும், இடதுசாரிகள் தேசியப் பிரச்சனையை தமது நிகழ்ச்சி நிரலிலிருந்து அப்புறப்படுத்தி இருந்தமையும் எமது போராட்டதை உணர்ச்சிகரமான ஒன்றாக மாற்றியிருந்தது. கருணாநிதி இறந்து நிலத்தில் வீழ்ந்த பின்னர் உணர்ச்சிவயப்பட்ட பிரபாகரன் அவரின் அருகே சென்று அவருடைய காதினுள் மறுபடி துப்பாக்கியால் சுட்டதாக எம்மிடம் கூறினார். கலாபதியின் காதைச் சேதப்படுத்தியற்கான பழிவாங்கல்தான் அது. பழிக்குப் பழிதீர்க்கும் மனோபாவம் நிறைந்த, உணர்ச்சி வயப்பட்ட தாக்குதலின் கோரம் அங்கே வெளிப்பட்டு மனிதத்தை நோக்கி வினாவெழுப்பியது.

பிரபாகரனைப் பொறுத்தவரை தனது பாதுகாப்பிலும், இயக்கம் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் பாதுகாப்புக் குறித்தும் மிகுந்த அவதானமாக இருப்பவர். யாழ்ப்பாணத்திலிருந்து பயிற்சி முகாமிற்கோ, பண்ணைக்கோ வரும் போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று பஸ் தரிப்பிடங்களின் முன்னதாக வண்டியை விட்டு இறங்கி நடந்தே வருவார். அடிக்கடி யாராவது பின் தொடர்கிறார்களா என்று பார்த்துக்கொள்வது வழமை. தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பற்ற உலகம் இருப்பதாகவே எப்போதும் உணர்வது போன்ற தோற்றப்பாட்டையே அவர் உருவாக்குவார். ஒன்றாக உறங்கும் வேளையிலும் சிறிய சலசலப்புகளுக்கே விழித்துக்கொள்வார். துப்பாக்கி இல்லாமல் எங்கும் வெளியே செல்வதில்லை. தனியேயாகவோ அல்லது கூட்டாகவோ சென்றாலும் தனது இடுப்பில் கைத்துப்பாக்கியைச் செருகி வைத்துக்கொள்வார். இவரோரு கூடச் செல்பவர்களையும் துப்பாக்கி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துவது வழமை. நான் கூட பிரபாகரனுடன் செல்லும் போது துப்பாக்கியின்றி வெளியே செல்வதில்லை.

இதே வேளை எமது எதிர்ப்புப் போராட்டங்கள் ஒருவகையான மக்கள் சாராத தனிமனிதப் படுகொலைகள்  என்ற வடிவத்தைக் கொண்டதாக அமைகிறது. பொலிஸ் அதிகாரிகளும், அரச ஆதரவாளர்களும், உளவாளிகளும் என்ற முக்கோண வலைப்பின்னலை உடைத்து, இலங்கை அரச இயந்திரத்தை மக்கள் தொடர்பிலிருந்து பலவீனப்படுத்தலே எமது வரையறுக்கப்படாத, ஆனால் செயல்ரீதியான நோக்கமாக அமைந்திருந்தது.

இவ்வேளையில் துரையப்பா கொலைவழக்கில் தீவிரமாகத் தேடப்பட்டு இந்தியா சென்றிருந்த பற்குணம் இலங்கை திரும்புகிறார்.

பற்குணம் இலங்கைக்கு வந்த நிகழ்வானது எமக்குப் புதிய உற்சாகத்தை வழங்குகிறது. தலைமறைவாக வாழ்ந்த எங்களை மிகுந்த பிரயத்தனத்தின் பின்னர் அவர் சந்திக்கிறார். சில காலங்களின் பின்னர், அவர் எமது மத்திய குழு உறுப்பினராக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இணைத்துக்கொள்ளப்படுகிறார்.

இந்தச் சூழலில் சண்முகநாதன் என்ற பொலிஸ் அதிகாரி எமக்கு எதிரான உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிகிறோம். இவரைப் “போட்டுத் தள்ள வேண்டும்” என்பதைப் பிரபாகரன் எம்மிடம் கூறுகிறார். கருணாநிதி கொலை தந்த உற்சாகமும் உத்வேகமும் சண்முகநாதனைக் கொலைசெய்ய வேண்டும் என்ற உறுதியை வழங்குகிறது.

அவரை நாமெல்லாம் தேடிக்கொண்டிருக்கும் வேளையில், தம்பி பிரபாகரனும், உரும்பிராய் பாலாவும் சண்முகநாதனை, இணுவிலில் உள்ள தேனீர்க் கடையின் முன்னால் காண்கின்றனர். தற்செயலாக அங்கு அவரைக் கண்ட இருவரும் உடனடியாகவே அவரைக் கொலைசெய்யத் திட்டமிடுகின்றனர்.

காங்கேசந்துறைப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சண்முகநாதன் இன்னுமொரு பொலீஸ் அதிகாரியுடன் சாவகாசமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். மற்றவர் யாரென்பதையும் பிரபாகரனும் பாலாவும் அடையாளம் கண்டுகொள்கின்றனர். மற்றைய பொலிசின் பெயரும் சண்முகநாதன் தான். அவர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் வேலை பார்ப்பவர். கூடவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளர் என்பதையும் பாலாவும் பிரபாகரனும் தெரிந்து வைத்திருந்தனர். கொல்லப்படவேண்டிய காங்கேசந்துறை சண்முகநாதனை பிரபாகரன் குறிவைக்கை அவர் பிரபாகரனை நோக்கி ஓடிவந்து அவரை கட்டிக்கொண்டு தரையில் விழுத்த முயற்சிக்கும் வேளையில், கைத்துப்பாக்கியை வைத்திருந்த பாலா அவரை சுட்டுக்கொலைசெய்து விடுகிறார்.

அதேவேளை அங்கு நின்றிருந்த மற்றைய சண்முகநாதனை நோக்கி, தப்பி ஓடிவிடுமாறு பாலா சத்தமிடுகிறார். அதை அவர் மறுத்து, தனது சக பொலீசைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட அவரைப் பிரபாகரன் தனது துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்துவிடுகிறார். 18ம் திகதி மே மாதம் 1977 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த இரட்டைக் கொலை வடபகுதி எங்கும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. மக்கள் மத்தியில், திருப்பித் தாக்குவதற்கு இளைஞர்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வு ஏற்படுகிறது.

இன்னும் இரண்டே மாதங்களில் நடைபெறவிருந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி தீவிரமாக ஈடுபட்டிருந்தது. வட கிழக்கெங்கும் மேடைகளும், உணர்ச்சிக் கோசங்களும், தமிழுணர்வுப் பாடல்களும், உதய சூரியன் கொடியுமாகக் களைகட்டியிருந்தது. சந்திகளும், சாலைத் திருப்பங்களும், மக்கள் கூட்டம் கூட்டமாய்ப் பேசிக்கொள்வதை நாமும் கேட்கிறோம். எங்கும் “தமிழ் உணர்ச்சியின்” அலைகள் இந்துமா கடலையும் தாண்டி ஒலித்தது. தமிழ் தேசியத் தணலின் வெம்மை முழு இலங்கையையும் எரித்துக் கொண்டிருந்தது.

56 thoughts on “முக்கோண வலைப்பினலைத் தகர்க்கும் புலிகளின் முதற் கொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பகுதி நான்கு) : ஐயர்”

 1. தமிழ் ஈழ தேசியத் தலவரைப்பற்ரிய உங்கழது பதிவுகழ்…..தலைவர் அவெர்கள் ஆரம்ப காலத்தில் போரட்டத்தை வழர்க்க எவ்வழவு கஸ்டப்பட்டர்,சிரமப்பட்டார் என்பதை……இன்று காக்கைவன்னியனின் எச்சங்களாக இறுஇந்து கொண்டு…வைக்கல் பட்டறை நாய்கள் ஆக குலைத்துக்கொண்டும்..தங்களை மாற்றுக்கருத்துளோர் எண்டு சொல்லிக்கொண்டு..தமிழர் தலயில் மண்ணை அள்ளி போடும் மானம் கெட்டதுகள் என்றுமே உணர மாட்டார்கள் ஜ்யரே…. தங்கள் பணீ தொடர என் வாழ்த்துகழ்……..கருணா (நிதி)……………கருணாக்கள் …….அன்றைக்கே தொடங்கிவிட்டார்கள் ஜ்யரே எமது போராட்டத்தை அழிக்க……………..ஒரு சமூகத்தில்……கொலை காரர்கள்…….கொள்ளை அடிப்பவர்கள்……..காட்டிக்கொடுப்பவர்கள்…….இப்படி சமூகத்தை சீறழிப்பவர்கள் எல்லா சமூகத்திலும் இருப்பார்ள் ஜ்யரே….என்ன எங்கள் சமூகத்தில் சற்று அதிகம்….

  1. நண்பர் thotta ஆரம்பகால தலைவரின் நடவடிக்கை 100வீதம் திறம். ஆனால் காலங்கள் போக போக புலிகள் என்ற தலைவர் எமது மக்கலை என்ன செய்தார் என்பதெய் ஜயர் வரும் கட்டுரைகளில் எலுதும் வரை பொறுமையாக இருப்பது நல்லது நண்பரெ. ஆகவே இப்போ கண்டபடி எலுதாமல் இருந்தால் நல்லம்..புலிகலை நம்பி ஏமாந்த எம் போன்ற மக்கள்[வெளிநாட்டில் இருந்து]புலிகளின் உண்மை பித்தலாட்டம் என்ன என்பதெய் அறிய உள்ளோம். வ்ரும்….வரும் கட்டுரைகளில்[ஜயர் எலுதும்] தான் தெரிய வரும்..நன்றி.

   1. இதை எழுதுவவர் என்ன முள்ளிவாய்க்கால் வரை தலைவரோடு இருந்தவரா? நாங்களும் பொறுத்துக்கொண்டுதான் இருக்கிறோம், எது உண்மை எது பிரச்சாரம் என அறிய!

 2. ஐயரே!

  உங்களிடம் இருந்தது பருமட்டான திட்டம்.அதைத் தவிர கொள்கை,அமைப்பு முறை,நிறைவேற்று அதிகாரம் என்ன,எவ்வாறு இயங்கினோம் என்பது பற்றி சொல்லுங்கள்.முக்கோண வலைப் பின்னல் எனக் கருத்தாழம் பண்ணியபடி,பழி வாங்கலாகத்தான் கருணாநிதி கொலை நடந்ததாக, மனித நேயம் பார்க்கிறீர்கள்.புதிய நாயகர்களை உள்படுத்தும் போது,யாரவர்கள் என்பது சொல்லப்படுவதில்லாமல் போகிறது.அவர் சொன்னார்,செய்தார் என்றபடி விமர்சனங்களை இப்போது அவிழ்த்துப் போடுகிறீர்கள்.அப்போது உங்கள் நிலை என்ன என்பதையும் தெரியப்படுத்துங்கள்.நசியாமல் கீரோவை ஷீரோவாக்குவதுதான் முயற்சியெனின், உண்மைகளும்,நியாயங்களும் முதற் கட்டுரையிலிருந்து அடிபட்டுப் போகும் அபாயம் இருக்கிறது.முழு நேரத்தை எழுவதில் ஈடுபட்டுள்ளிர்களெனின்,கருத்தாடல்காரர்களுக்கு பதில் தாருங்கள்.அது உங்களை நெறிப்படுத்தும்.

 3. என் தந்தை திரு.கருணாநிதி கொலை,கொள்ளை,கடத்தல்,கற்பளிப்புக்காரருக்கு துணைபோகாத மக்களைப்பாதுகாக்கிற காவல் அதிகாரியாக இருந்து நாட்டுக்காக தன்னுயிரை அற்பணித்தவர். எனது தந்தையை இரக்கமற்ற சமூகத்துரோகிகள் கொடூரமாக தெருவில் கொல்லும் போது நான் கைக்குழந்தை இதற்குமேல் நான் எதுவும் சொல்லவில்லை. ஒன்று மட்டும் …. எனது தந்தை அவர் பணியைத்தான் செய்தார். நன்றி.

  1. >>[ எனது தந்தை , திரு.கருணாநிதி …………….காவல் அதிகாரியாக இருந்து… நாட்டுக்காக..தன்னுயிரை அற்பணித்தவர்..] சிறி..நான் கேக்கிறேன்..உமது தந்தை..எந்த நாட்டுக்காக உயிரை அற்பணித்தவர்… நாங்கள் எல்லாம் தமிழரின் விடுதலைக்காக உயிரை அர்ப்பணித்தவர்களைப் பற்றி பேசும் போது . நீர் சிங்கள தேசத்துக்காக உயிரை விட்ட உமது அப்பாவை பற்றி பேசுறீர்…………………………… நாளைக்கே… ..காக்கைவன்னியனின்…கொள்ளுப்பேரனும் வந்து..எனது தந்தை… இரக்கமற்ற…சமூகத்துரோகி…..பண்டாரவன்னியனை …காட்டிக்கொடுத்ததில்… நான் பெருமை அடைகிறேன் எண்டு வந்து சொல்லுவான்………….ஏன்……எட்டப்பனின் கொள்ளுவழிப்பேரனும்….சமூகத்துரோகி…கட்டப்பொம்மனை……காட்டிக்கொடுத்ததுக்காக எனது கொள்ளுப்பூட்டனாம் எட்டபபனை வரலாறு…துரோகி என்று சொல்வது நாயமா எண்டு கேட்பான்… நாங்கள் எல்லாம் இங்க என்ன தலயில துண்டாயா போட்டு உக்காந்து இருக்கிறோம்…

   1. தோட்டா அண்ணா! நீங்கள் எந்த லோகத்தில் இருக்கிறீர்கள்? வடக்கிலும்,,கிழக்கிலும் போய் நமது உற வுகளைக் கேளுஙகள் சமூகத்துரோகி யார் என்பது புலப்படும். வன்னிக்கு மட்டும் போகவேண்டாம்……………………………….

    1. தோட்டா இன்னும் காக்கை வன்னியன் காலத்திலேயே உள்ளார். குடும்பி கட்டி காச்சட்டை போட்ட ரமிலன்!

    2. ஏன் சிறி மாவீரர்களாகிப் போன முப்பதினாயிரத்துக்கு மேற்பட்ட வீரர்கள் எல்லாம் ,என்ன வன்னியிலிருந்து மட்டுமா வந்தவை ! வடக்கு கிழக்கு எண்டு எல்லா இடத்திலும் இருந்துதான்.யாழ் மண்ணும்,மட்டு-அம்பாறையும் தான் இதில முதல் இடம். முதல்லெ இதை தெரிந்து பேசும். வடக்கு-.கிழக்கு -வன்னி மட்டும் இல்ல உலகம் முழுதும் உள்ள தமிழர் ஆதரவு புலிகழிற்கு அன்றும்,இன்றும்,என்றுமே இருக்கும், மழைக்கு முளைத்த காளான் நீங்கள் தான் கானாமல் போவீர்கள்

     1. இன்னும் சிறிது காலம் பொறுங்கள்.வட்டுக்கோட்டைத் தீர்மானமும் நாடு கடந்த தமிழ் ஈழமும் இன்னும்
      சிறிது நாட் களுக்கு தான் தாக்குப் பிடிக்கும். அப்புறம் புலிகளின் பெயரை பழைய பத்திரிகைகளில் தான் பார்க்க முடியும். தலைவனுக்கு இறுதி மரியாதை செய்ய முடியாத நீங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு புலிகளின் பெயரைக் காப்பாற்றப் போகின்றீர்கள்.

    3. உண்மைதான், வடக்கிலும் கிழக்கிலும் தமிழரை கலாச்சார அழிவிற்குள் வெற்றிகரமாக கொண்டுபோயாச்சு. வன்னியில் இனித்தானே ஆரம்பம். அதுவரையும் வன்னி மக்கள் எல்லோரும் புலிகள்தானே. ஆனால் கனவு காணாதீர்கள், வடக்கோ கிழக்கோ தமிழனைச் சுதந்திரமாக பேசவிட்டால் உண்மையை பயப்படாமல் சொல்வார்கள். அண்மையில் வன்னி சென்ற மார்டின் லூதர் கிங் அவர்களின் மகன் சொன்னார், மக்கள் கதைக்கப் பயப்படுகிறார்களாம். எவனையும் நம்ப முடியாதபடி சித்திரவதைப்பட்டு சீரழிந்து போயுள்ளார்கள்.

   2. சரித்திரத்தில் சிஙகள அரசர்களிற்காக தமிழ் போராளிகழும், தமிழ்
    அரசர்களிற்காக் சிங்கள போராளிகழும் போராடியிருக்கின்றார்கள்.
    அன்று ஒரு துரையப்பாவை துரோகியாக்கி கொலைசெய்து இன்று கண்டதென்ன? தமிழரைக் கொன்றொழித சரத்திற்கு வோட்டுப்
    போடும் தமிழர்கள் அனைவரும் துரோகிகளா? பிரபா இருந்தால்
    எல்லோருக்குமே மரண தண்டனைதான் கொடுப்பாரா?

    துரை

    1. துரை மாத்தையா, பிரபா இருந்தா ! ஏன் நாங்கள் சரத்துக்கு வோட்டு போடுறோம் . மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தைகள் தமிழர்கள் இன்று

     1. புலியின் பின் சென்றவர்கள் அன்றும் இன்றும் ஆட்டு மந்தைகள் தான்.

      துரை

  2. சிறி, பிராபாகரனும் தனது கடமயைத் தான் சய்தார் ராசா. விடுதலைக்காக உழைப்பவர்களையும்…தமிழ் ஈழ தேசத்தைக் காட்டிக் கொடுப்பவர்களையும் போட்டுத்தள்ளினார்.சிறி உமது அப்பா விட்ட பிழையை.. நீர் விடமாட்டீர் என்று நாம் நம்புறோம். விடுதலைப் பயணத்தில் நீரும் எம்மோடு பயணிக்க உம்மை இரு கரம் கொண்டு வரவேற்கிறோம். தமிழறின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்

   1. சிரிராம்,

    //தமிழ் ஈழ தேசத்தைக் காட்டிக் கொடுப்பவர்களையும் போட்டுத்தள்ளினார்//
    கடைசியில் வன்னி மக்களையும் போராளிகளையும் போட்டுத் தள்ளினார்.
    பின்னர் அவரே போய்விட்டார்.
    நிங்கள் எப்போ திருந்தப் போகிறீங்கள்?

    1. தாஸ்.. திருந்தவேண்டியது நாங்கள் இல்ல. நீங்கள் தான்.கண்ணில குறை இருந்தா பாக்கிறதில குறை இருக்கதான் செய்யும். உங்களைப் போல ஆட் கள் திருந்தினாலே பாதி ஈழம் கிடைச்சதுக்கு சமன் தான்.எல்லத்திலும் குற்றம் பாக்கும் நீர் முதல்லெ உம்மில் சுற்றம் பாரும். நாய் வாலை நிமித்தமுடியா எண்டதுக்கு நீங்கள் எல்லாம் நல்ல உதாரணம். சிங்கள அரசர்களின் வேட்டிக்குள் ஒழிந்துகொண்டு அழுக்கு அரசியல்நடத்தும் டக்கிளஸ் & கோ விட தமிழரின் வீர மரபின்படி இறுதிவரை போரிட்டு வன்னிமண்ணில் கோவணத்துடன்(35 வருசமாய் அவென் சேமித்த சொத்து அதுதான்) உயிர் துறப்பது எவ்வளவோ மேல்

     1. அப்ப சொத்துச் சேர்க்காம போட்டுத் தள்ளினாத் தான் வீர மரபு. சிறப்பான தத்துவம்!!!

   2. உழைத்த பணத்தை உலக்மெல்லாம் விடுதலைக்கென
    பறித்து உல்லாச வீடுகழும் , உல்லாச விடுதிகழும் புலிகள்
    புலமெங்கும் கட்டி விட்டார்கள்.

    ஈழத்தமிழர் கண்டதோ கல்லறைகழும் , பிணக்குவியலும்,
    அகதிமுகாங்கழுமே. இதுவே தலவன் காட்டிய வ்ழி.

    துரை

   3. விடுதலைக்காக போராடியவர்கள் பலரையும் தனது மனநோய் காரணமாக பிரபாகரன் கும்பல் கொலை செய்தது. இறுதியில் பிரபாகரன் கும்பல் உதவி கோரிய போது முழு உலகமுமே அவர்களின் அழிவைப் பார்த்து சிரித்தது.இறுதியில் முள்ளிவாய்க்காலில் சிறிசுகளுக்கு சயனைற் கொடுத்துவிட்டு தலையும் பரிவாரங்களும் வெள்ளைக் கொடியுடன் கை உயர்த்திக் கொண்டு சென்றார்கள். ஆனால் கடவுள் அவர்களை நரலோகம் அனுப்பி விட்டார்.

    1. சாந்தன் தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு. 

   4. புலிகளின் அழிவின் பின்னர் நீங்கள் வருமானம் இல்லாமல் தவிப்பதைக் காண்கின்றோம். புது வருமானத்திற்காக ஒவ்வொருவராக இரக்க வெளிக்கிட்டு விட்டீர்கள். இனி எந்த பகுத்தறிவான மனிதனும் உங்களின் பின்னால் வரமாட்டான். பகல் கனவு காணாமல் ஒரு வேலையைத் தேடி கெளரவமாக தொழில் செய்து உழைத்து வாழப் பாருங்கோ. இல்லாது விட்டாம் பட்டிணி கிடந்து சாகப் போகின்றீர்கள்.

 4. வெள்ளைவேட்டிக்கள்ளனைவிட காக்கிச்சட்டைக்காவலன் மேல்

  1. தம்பி அளவெட்டிசிறி எங்களை நாயிலும் கேவலமாக நடாத்திய காக்கிச்சட்டை ஏவல்களை நியாயப்படுத்தமுடியாது. தந்தை எண்ற முறையில் உங்களின் மனநிலைக்காக நாமும் கவலைகொள்கிறேம்.

   1. யூனிபோம் போட்ட புலிகளும் அதைத்தான் செய்தார்கள். அதனால் தான் அவர்களது கதையும் முடிந்து விட்டதா?இந்திரன் அவர்களே.

    1. பிரபாகரன் மாசு மருவற்ற தலைவர். தமிழன் அத்தனை பேருக்கும் பெருமை தேடித் தந்து “கொண்டிருப்பவர்”. ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். த்தல த்தலதான். பல்லாண்டு காலம் தலைவர் வாழ வேண்டும்.

 5. I would like to offer my deep condolences to the people of Tamil Eelam for their immense losses in recent months.

  As a Kurd, I have followed the liberation struggle of Tamils in Sri Lanka-along with my own people’s fight for an independent state-since mid-1980s, when I first saw the pictures of uniformed female cadres of the LTTE in Jaffna and fell in love with them. The LTTE, in my view, is the gold-standard for all national liberation struggles despite its defeat. And what a glorious defeat it was! My people suffered many defeats too; in 1925, 1938, 1946, 1975, 1988, 1991 and 1999. None could match the glory of LTTE’s fight to the death. This was a struggle against overwhelming odds that ended in martyrdom for your leaders, but their memories and their struggle will live in songs and stories of all Tamil people for a thousand years to come.

  That the LTTE managed to keep its leader and senior cadres alive right down to the last day and the last fire-fight before they too succumbed to the vastly superior man and fire power of the SLA is a testament to the intelligence, strength, discipline and dedication of the organisation. V. Prabhakaran and his senior commanders could have ordered the rank and file LTTE personnel to lay down their arms, before fleeing the island for a third country. The fact that they -as well as their families-did not flee the conflict zone nor surrendered, but chose to fight to the death like tens of thousands of other LTTE cadres that preceded them is a lesson to all leaders who ask others to sacrifice their lives for a cause. I doubt many insurgent leaders, Kurds included, would show as much courage and offer as much personal sacrifice in similar circumstances.

  Compared to armed Kurdish movements, the LTTE had many strengths and weaknesses. Its strengths were too numerous to count. Its weaknesses and mistakes were few but deadly in the long run. In my view, there are two generalised, structural weaknesses of the LTTE, followed by a few specific mistakes they made.

  Firstly, the LTTE was extremely inflexible in its political expectations. In the absence of international support for an independent homeland, an autonomy agreement for a federal Tamil state in Sri Lanka was the most realistic outcome for the LTTE. It was the responsibility of a new generation of Tamils to take the struggle to its next stage, if Sri Lankan state continued to be ill-disposed towards Tamil people. By then, of course, the federal Tamil state would have gained some international recognition for the status quo and thus would have been far less isolated as a ‘terrorist’ outfit. That V. Prabakharan instructed his bodyguards to shoot him if he deviated from the demand for independence is a clear sign of the inflexibility of the LTTE leadership.

  Secondly, the LTTE put unnecessary emphasis on revenge and retaliation. As Clausewitz famously said, “war is politics by other means”. In politics,-as in war-revenge and retaliation is always secondary to the main objective. Every political act must be judged by its consequences; that is, whether it helps bring the main objective closer to reality, not whether it satisfies primitive urges for some injustice done in the past. The assassination of Rajiv Gandhi and many attacks on Sinhala leadership, some of whom were useful and could have been of further use to Tamil struggle in time, are cases in point.

  In more specific mistakes, the LTTE should have pushed on to re-capture Jaffna at all costs after liberating the Elephant Pass in 1999, even if this meant losing ground elsewhere. The cost could have been very high with tens of thousands of SLA soldiers still occupying the peninsula but the SL political and military forces were in complete disarray. Unfortunately, the window of opportunity was lost and the LTTE eventually found itself fighting on more than one front.

  The ceasefire agreement of 2002, following the 9/11 events, was correct; perhaps inevitable. However, the Indian Ocean Tsunami of late 2004 and its devastating effect on Tamil territory should have humbled Prabakharan and the LTTE into seeking a genuine half-way compromise with the SL government. It should be noted that the Tsunami and its effects ended the Aceh independence movement and it should have played a role in LTTE’s political calculation as well.

  Another grave error was the boycotting of elections in 2005 that brought hardliners to government in Sri Lanka. As a general rule, people should never ever be asked to refrain from voting in an election under any circumstances. The benefits of election boycotts, such as refreshing community spirit and as gestures of dissatisfaction, are small and ephemeral. They are far outweighed by the dangers as well as the real and lasting costs of handing the power to a less amenable adversary.

  Karuna’s rebellion should also have been foreseen and dealt with quite early and sincerely. As a faraway, non-Tamil observer, nothing disappointed me in LTTE as much as the Tiger vs Tiger violence. I can imagine its demoralising effect on all Tamils. As a Kurd, I am not unfamiliar with infighting among our people and between many of our political parties, but never has a single, Kurdish military outfit turned its guns on to itself. Perhaps, Karuna was also motivated by Prabhakaran’s inflexibility, the effects of the Tsunami and the result of election boycott of 2005.

  If, as was charged, Prabhakaran committed the grave error of ‘narrow regionalism’ in LTTE, then Karuna could have only compounded the error with his rebellion. (’Narrow regionalism’, that is, giving preferential treatment to people of certain regions, is considered a great sin among Kurdish movements. Still, it’s inevitable and widespread) But more likely, being the supremo of the Eastern Tamils must have gotten to Karuna’s head, and he must have considered himself a better leader for the entire LTTE than Prabhakaran.

  History will never forgive Karuna for betraying his commitment and turning his guns on his leader and comrades no matter what the real reasons for his defection might be. The best and most honourable action for Karuna, as well as for his movement and for his people, was to either resign altogether from all his functions and duties within the LTTE -after voicing his grievances in private, even if it meant death for him-or seek a less active role in the movement.

  He did neither, preferring to be an active turncoat. Beloved, respected and trusted neither by Tamils nor Sinhalese, Karuna will surely meet a violent end, with each side crediting the other for it, and with very few people shedding tears for his demise.

  People of Tamil Eelam are smart, talented and resourceful. You shall rise again from your ashes. By ballots or bullets, Tamil Eelam shall become a reality so long as you keep up your hopes and dreams alive. – Shexmus

  1. No wonder the PKK messed it up.
   The Kurdish nationalists (not all, but the mainstream movements) are now compromising with US imperialism in a short sighted manner.
   I hope that they correct their erroneous line before meeting with tragedy.

 6. தமிழ் சமூகத்தை குரை சொல்வதை தவிர்த்து விடவும் தம்பி தொட்டா.தமிழ் பெயர் வைக்க மாட்டிர்கலொ.தமிழால் உயர்ந்து இனமாய்நிமிர்வொம்.

  1. வணக்கம் முகில்வண்ணன்…தமிழ் சமூகத்தை..குறை சொல்வதாக குறை சொல்லுறீங்கள்….தமிழ் சமூகம் எண்டு நீங்கள் யாரை சொல்லுறிங்கள்…..எமது விடுதலையை உள்ளேயும்..வெளியேயும் இருந்து காட்டிக்கொடுத்த..காட்டிக்கொடுக்கின்ற….கருணா..டக்கிளஸ்…..பிள்ளயான்,,சிறிதர்…..போன்றவர்களையா..? …அர்ஜ்ஜுனா……மரக்கிளையில் உள்ள… கிளி தெரிகிறதா….? இல்லை….கிளியின் வால் ,தலை ஏதும் தெரிகிறதா…?இல்லை………அப்பொ உனக்கு என்னதான் தெரிகிறது…..? கிளியின் கழுத்து மட்டும் தெரிகிறது..அப்படியானால் இப்பொளுதே அம்பை எய்துவிடு……எனக்கும் தமிழறின்….விடுதலை மட்டும் தான் கண்ணுக்கு தெரிகிறது…..தமிழறின் விடுதலைப் போராட்டத்தையும்..புலிகளையும் அழிக்க…எந்த பிசாசுடனும் நான் கூட்டுச் சேரத் தயார் எண்டு சொன்ன ஜெயவர்த்தனா என்ன மறந்து போனீர்களா…விடுதலை மட்டும் கண்ணுக்குத் தெரியவில்லை உங்கள்.. எல்லாருக்கும்.. நீங்கள் எல்லாரரும்..ஈரப்..பேன்..ஆக்கி..பேனைப்..பெருச்சாழி ஆக்குகின்றீர்கள்…ம் நாங்கழும் பாக்கத்தானே போறோம்.புலிகழை..அளித்து விட்டு என்ன தீர்வை எமக்கு தரப் போறிங்க எண்டு…டக்கிளஸ்…டெலிபோன்,இன்ரனெற் குடுக்கிறாராம்.றோட்டு திருத்திறாரம்…கோயில் கும்பாவிசேசத்துக்கு…காசு வேன்டித் தாறாராம்…ஓ..இதுதான்நீங்கள்…எல்லாரும்..எமக்கு வேன்டித் தந்த..விடுதலை போல…

   1. கூட்டணியினர் கேட்டதும் போராடியதும் அரசியல் உருமைக்காக. தமிழ் மொழிக்கோ, தமிழ் இனத்தின் விடுதலையோ அல்ல.
    இவர்கள் ஆங்கிலக் கல்வியை மறுக்கவுமில்லை, சமூக விடுதலைப்
    போராட்டங்களை நடத்தவுமில்லை. தமது பதவிகளிற்காக தமிழ் மொழி பற்ரிப் தேர்தல் காலங்களில் பேசினார்கள்.
    தமிழ் இளம் சந்ததியினரிற்கு கல்வி,தொழில் வாய்பு அற்ர நிலமை
    தோன்றி கூட்டணியினர் பின் திரண்டனர். சரியான அரசியல்
    வழிகாட்டலின்றி ஆயுதமேந்தியதாலேயெ இன்று தமிழரிற்கு இந்த
    நிலை.
    துரை

 7. ஒன்று மட்டும் புரிகின்றது. ஐயர் கடைசியில் கொண்டு போய் ககவுக்கப்போகின்றார் என்று எனவே புலி நண்பர்களே கண்டபடி ஐயருக்கு வக்காளத்து வாங்குவதை நிறுத்துங்கள். எனினும் ஐய்ர உண்மையை சொல்லி வருகின்றார்

  1. Sariya sonninka Naren, They are wel planed. innum poka poka koncham konchama thankada real face ai kadduvaar Aiyar. http://www.inioru.com la varumpothe unkalukku vilanka villaya unkalukku ?

 8. பக்கம் யாரும் கவுக்க முடியாது.கரம்பொன் கந்தசாமி கோயில் பக்கம் வந்து பாருங்கோ எங்கலை தெரியும்.புலியும் தெரியும்,தோழரும் தெரியும்

 9. சண்முகநாதனை  சுடவென  பிரபாகரன் உம்  பாலாவும்  போகவில்லை. இந்த  நிகழ்வு   எதிர்பாராமல்  நிகழ்ந்தது.  சண்முகநாதன்   என்ற  பொலிஸ்  சிஜடி   சிவில்  உடையில்   மஞ்சல்  திரு  நீற்றுப்பையுடன்   உலாவுவதாக   பிரபாகரன்  குழுவுக்கு  ஒரு  தகவல்  கிடைத்திருந்தது.  இந்த  சம்பவம்  நடந்த போது     இணுவிலில்   மஞ்சல்  சீலை  பையுடன்   போன   ஒருவரை    கண்ட  பாலாவும்  பிரபாவும்     இவர்   சண்முக  னாதனாக    இருப்பாரோ  என    நினைத்து      ,  பிரபாகரன்    கலோ   சண்முகநாதன்   என  பின்னால்   இருந்து   கூப்பிடவும்   சண்முகநாதன்   திரும்பி  பார்க்கையில்      உடனடியாகவே  சுதாகரித்துக்கொண்ட    பிரபாகரன்   தன்னிடமிருந்த  ரிவோல்வரால்  சண்முகநாதனை  நோக்கி  சுட்டார்.

  1. அண்ணான் புரபெசர்,
   இவ்வளவு வரலாறை தெரின்ந்து வைத்துக்கொண்டு என்ன சமையலுக்கா வைத்திருக்கிறீங்க? எழுதித் தொலைக்க வேண்டியது தானே?

  2. வணக்கம் பேராசிரியரே?
   ஐயரின் கட்டுரையிலிருந்து உங்கள் தகவல் வேறுபடுகின்றதே?

 10. முக்கோண வலைப்பின்னலை தகர்க்க வெளிக்கிட்டு சர்வதேச வலைப்பின்னலில் மண்கவ்விய அரசியலற்ற பிரபாகரன் வரலாற்றில் பரிதாபத்திற்குரியவரே. புலிகளின் துரோகங்களை ஏற்றுக் கொள்ளாதவரை தமிழ் சமூகத்திற்கு சரியான அரசியல் நகர்வு இனி இல்லை.

  1. ஆமாம்….அப்படியே….காக்கைவன்னியன்…..எட்டப்பன்…..டக்கிளஸ்…கருணா….இவர்கள்….தமிழ் சமூகத்துக்கு செய்த…. நன்றியயையும்…. நினைக்காதவரை….. தமிழ சமூகத்திற்கு விடிவு இல்லை …இதை ஏன் சொல்ல மறந்தீர்.. நண்பரே……இதயம்……..உமக்கு ..இதயம் எண்டு அப்படி எதவது..இருக்கா,,,,,?

   1. இப்படியே சொல்லிக்கொனண்டே இருங்கண்ணா… .. விளங்கிடும்

  2. என்னடா துரோகம் செய்தனாங்கள்……..

  3. ஓம் ஓம் நாங்கள் புலிகலிண்ட துரோகத்தை ஏற்றுகொண்டுட்டம், அரசியல் நகர்வை எப்படி தொடங்குவம் ? டக்ளஸ் உடன் சேர்ந்தா அல்லது கருணாவுடன் சேர்ந்த்தா ?

   1. ஓம் என்ற் ஓங்கார நாமம் உச்சரிக்கப்படும் போதெல்லாம் உள்ளதில் அமைதி தோன்றூமே? கருணா டக்ளஸ் என்ற வைரசுகளீடம் போய் வியாதிக்கு மருந்தா? பிரின்ஸ் சம்பந்தர் அய்யா இருக்கும் போது வேறூ பிசாசுகள் எதற்கு? வயதில் மூத்தவர் அரசியல் அறீந்தவர், அவருக்குத் தெரியாததா.நீங்கள் மண்டயை,மண்டயை ஆட்டிக் கொண்டிராமல் ஆக்கமாய் ,அறீவாய் சிந்தியுங்கள்.

   2. அரோகரா.
    சம்பந்தர் நம் காதில் பூச் சுற்றப் பார்த்துத் தோற்றுப் போனார்.
    இப்போது றோ புதிய பகடைக் காய்களைத் தேடித் திரிகிறது.
    அதற்குள் இவர் வேறே!

 11. பரம்பரை பரம்பரையாய் ஒரு யுத்தம் நமக்குள்நடந்து கொண்டெ இருந்தது .

 12. “இடதுசாரிகள் தேசிய இன ஒடுக்குமுறையைக் கருத்தில் கொள்ளவில்லை. ”

  இது வழக்கமான தமிழரசுக் கட்சிப் பிரசாரமே. இடதுசாரிகள் எதைச் சொன்னாலும் அதைத் திரிப்பதும் துரோகிப் பட்டம் கட்டுகிறதுமான மரபில் நேர்மையான இடதுசாரிகளை ஓரங்கட்டுவது தான் நடந்தது.
  பாரளுமன்ற இடதுசாரிகளின் சந்தர்ப்பவாதத்தை எல்லா இடதுசாரிகளதும் என்று காட்டும் மரபு போராளிகளிடையிலும் தொடர்ந்தது. தொடர்கிறது.
  இடதுசாரிக் கோஷங்களை முன்வைத்த NLFT போல இயக்கங்களால் ஏன் வலிமை பெற முடியவில்லை?
  தமிழ்ச் சமூகத்தில் ஊறிப் போன பழமைவாதத்தின் பஙகென்ன?

  “துரையப்பா கொலையின் எதிர் விளைவுகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கும் புதிய திட்டங்களை மேற்கொள்வதற்கும் எம்மிடம் போதிய அறிவும் அனுபவமும், உலகை ஆராய்வதற்கான தத்துவார்த்தப் பின்புலமும் அற்றிருந்த காலகட்டம் அது.”

  கொலையைச் செய்ததற்கான தத்துவார்த்தப் பின்புலம் எது?
  இன்றுங் கூட அக் கொலையை நியாயப்படுத்துகிற போக்கையே காண முடிகிறது.
  இது தமிழரின் சாபக்கேடு.

 13. /பிரபாகரனைப் பொறுத்தவரை தனது பாதுகாப்பிலும், இயக்கம் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் பாதுகாப்புக் குறித்தும் மிகுந்த அவதானமாக இருப்பவர்./

  அப்போ எப்படி முள்ளிவாய்க்காலில் முடிவைத்தேடிக்கொண்டதாகக்கொள்ளமுடியும்.அப்போ ஆள் எஸ்கேப் என்பது நிஜம் தானா?

 14. அமைப்புகளில் பலமுள்ள அமைப்பு இதே அமைப்பைத்தான் கட்டியிருக்கும். அப்போது இருந்த அனைத்து சகசவாத அமைப்புகளும் கொண்டிருந்த வர்க்க சிந்தனை ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது. இடதுசாரிகள் அமைப்பு ஒரு கனவுவாதமாகவே பரவலாக கருதப்பட்டிருக்கிறது. இப்பொழுது உலகநாடுகளில் பரவிவரும் இடதுசாரிகளின் போராட்டங்களால் அதனுடைய உண்மை மக்களுக்கு பரவலாக புரிய ஆரம்பித்துள்ளன.
  எங்கள் தலைவன் என்கிற மனநிலையில் இருந்து கட்டுரையை படிக்காமல் எங்கள் நாட்டு பிரச்சனைக்கு எதிர்காலத்தில் எந்தமாதிரியான அமைப்பைக் கட்டப்போகிறோம் அதில் பிரபாகரன் அவர்கள் தலைமையில் நடந்த நன்மைகள் என்ன? தவறுகள் என்ன? என்று அலசி ஆராய்வதற்கு இந்த கட்டுரை பயன்படவேண்டும். பிரபாகரனுடைய போராட்ட வரலாறு வளரும் தலைமுறையினருக்கு போராட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கு ஒரு நல்ல பாடமாகும். அதுவே அவருடைய வரலாறை மதிப்பதாகவும் அமையும். உலக நாடுகளில் நடக்கும் போராட்ட அமைப்புகளையும் அதன் கொள்கைகள் சித்தாந்தங்கள் போன்ற வரலாறுகளை உள்வாங்கும் சூழலையும் ஈழத்தமிழர்கள் பெற்றுள்ளார்கள்.
  வரலாற்றில் நடக்கும் தவறான நிகழ்வுகளை தெரிந்து கொள்ளாமல் முன்னோக்கி செல்வவோமானல் அதெ தவறுகளை செய்து வரலாறை முன்னோக்கி செல்ல அனுமதிக்காத குற்றத்தை செய்தவர்களாவோம்.

 15. தமிழிழப்போராட்டத்தின் வரலாறு என்பது விடுதலைப்புலிகள் அமைப்பை விடுத்து வராலாறு இருக்கப்போவதில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பு பலவினமாக இருந்திருந்தால் அப்போது அங்கிருந்த மற்ற அமைப்புகளில் பலமுள்ள அமைப்பு இதே அமைப்பைத்தான் கட்டியிருக்கும். அப்போது இருந்த அனைத்து சகசவாத அமைப்புகளும் கொண்டிருந்த வர்க்க சிந்தனை ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது. இடதுசாரிகள் அமைப்பு ஒரு கனவுவாதமாகவே பரவலாக கருதப்பட்டிருக்கிறது. இப்பொழுது உலகநாடுகளில் பரவிவரும் இடதுசாரிகளின் போராட்டங்களால் அதனுடைய உண்மை மக்களுக்கு பரவலாக புரிய ஆரம்பித்துள்ளன.
  எங்கள் தலைவன் என்கிற மனநிலையில் இருந்து கட்டுரையை படிக்காமல் எங்கள் நாட்டு பிரச்சனைக்கு எதிர்காலத்தில் எந்தமாதிரியான அமைப்பைக் கட்டப்போகிறோம் அதில் பிரபாகரன் அவர்கள் தலைமையில் நடந்த நன்மைகள் என்ன? தவறுகள் என்ன? என்று அலசி ஆராய்வதற்கு இந்த கட்டுரை பயன்படவேண்டும். பிரபாகரனுடைய போராட்ட வரலாறு வளரும் தலைமுறையினருக்கு போராட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கு ஒரு நல்ல பாடமாகும். அதுவே அவருடைய வரலாறை மதிப்பதாகவும் அமையும். உலக நாடுகளில் நடக்கும் போராட்ட அமைப்புகளையும் அதன் கொள்கைகள் சித்தாந்தங்கள் போன்ற வரலாறுகளை உள்வாங்கும் சூழலையும் ஈழத்தமிழர்கள் பெற்றுள்ளார்கள்.
  வரலாற்றில் நடக்கும் தவறான நிகழ்வுகளை தெரிந்து கொள்ளாமல் முன்னோக்கி செல்வவோமானல் அதெ தவறுகளை செய்து வரலாறை முன்னோக்கி செல்ல அனுமதிக்காத குற்றத்தை செய்தவர்களாவோம்.

  1. “உலக நாடுகளில் நடக்கும் போராட்ட அமைப்புகளையும் அதன் கொள்கைகள் சித்தாந்தங்கள் போன்ற வரலாறுகளை உள்வாங்கும் சூழலையும் ஈழத்தமிழர்கள் பெற்றுள்ளார்கள்.”

   மெய்யாகத்தான் சொல்லுகிறீர்களா? வாசிக்கிற பின்னூட்டங்கள் அந்த எண்ணத்தைத் தரவில்லையே!

 16. ஒவ்வொரும் தங்களின் கருத்து மட்டுமே சரியெனும் போது வரலாறில் இருந்து எதை எப்படி கற்றுகொள்ளப்பொகின்றோம்,மீண்டும் கற்று-கொல்ல போகின்றோம்

 17. நாம; தமிழர;கள;.நம;மிடமும; தவறுகள; இருக;கு.போராட;டத;தில; நிறையவே அநியாயங;கள; நிகழ;தே இருக;கின;றது.ஏனெனில; பல இயங;கங;கள; போராட;டத;தில; குதித;தன.தவறிழைத;தன.இப;போது அவ;வியங;கள; தாம செய;த தவறுகளை புலிகள; மீது இலேசாக போட;டுவிட;டு தப;ப முனைகின;றார;கள;.இங;கு கடந;த காலங;களை விமர;சிப;பது நிச;சமாக போராட;டத;தை கொச;சப;படுத;தவும; அதன; நியாயத;தை திசைதிருப;பவுமே உதவும;.ஒருவர; தாம; செய;த பிழைக;காக மன;னிப;புகேட;டால; வாயளவில; மன;னித;துவிடுவோம;. மனதால; மன;னித;துவிடுவதேயில;லை. அப;படி மனித மனம; திடமானது. பண;பட;ட மனதை பெரும;பாண;மையாக கொண;ட சமூகமாக பேசிக;கொள;ளலாம; ஆனால; உண;மை வேறு…..நமது வீட;டில; குப;பைகூளங;கள; அசிங;கங;கள ஆயிரமிருக;கும; பிறரைக; கூட;டிச;சென;று மச;சான; இங;கே பாருடா நான; ஊத;தை என; வீடு மிக அசிங;கம; என விமர;சிப;பதில;லை.சமூகமும; அப;படித;தான; அதன; இயல;புகளை விமர;சிப;பதால; மாற;றிவிடவே முடியாது.நம;மில; பலரும; அறிவுக;கண; திறந;துவிட;டதாக கூறி நம;மைதாமே தாழ;த;திக; கொள;கின;றோம;…

 18. உங்கள் கட்டுரையில் உமாமகேஸ்வரனைக் காணவில்லை. மற்றது பிரபாகரன் கொலைவெறி பிடித்த மனநோயாளி.உங்கள் காலத்தில் நானும் களத்தில் இருந்தவன் தான். காதலிப்பதில்லை என்று சத்தியப் பிரமாணம் செய்த பிரபாகரன் தான் பின்னர் மதிவதனியைக் கடத்திச் சென்று வயிற்றில் பிள்ளையைக் கொடுத்து விட்டு பின்னர் கல்யாணம் செய்தார்.

 19. இந்தச் சூழ்நிலையில் எமது நடவடிக்கைகளுக்குக் கிடைத்த மக்கள் ஆதரவும், சமூக அங்கீகாரமும், எம்மை மேலும் மேலும் தூய இராணுவக் குழுவாக மாற்றியிருந்தது. அதே பாணியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள மேலும் ஊக்கம் வழங்கியது.

  THIS IS ONE KEY POINT.

Comments are closed.