முகாம் மக்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் : இந்திய வெளிவிவகார அமைச்சர்.

s_m_krish200இலங்கை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 2.5 லட்சம் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் உடனடியாகக் குடியேறச் செய்யமுடியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடை பெற்ற செய்தியாளர் மாநõடடொன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகள்தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கவேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கோரியுள்ளார் .இலங்கைத் தமிழர்கள் இரண்டரை இலட்சம் பேர் அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மறு வாழ்வு வழங்கும் படி இலங்கை அரசை வலியுறுத்தி கேட்டுள்ளோம். இலங்கையும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இதனை உடனடியாக செயற்படுத்த முடியாது..

இலங்கைத்தமிழர் வாழும் பகுதிகளில் பருவ மழை பெய்து வருகின்றது.மேலும் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளும் நடை பெற்று வருகின்றன. இந்த பகுதிகளில் மீண்டும் குடி யேறலாம் என்று திருப்தி தெரிவிக்கும் பட்சத்திலேயே அவர்களின் குடியேற்றம் சாத்தியமாகும் என்றும் அவர் சொன்னார்