முகாம்களிலும் பெருந்தொகையான மக்களை கொன்று குவித்திருக்கிறது இலங்கை அரசு?

மே மாதம் போர் முடிவுற்ற பின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து எத்தனையாயிரம் மக்கள் வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்தார்கள் என்பதை இலங்கை அரசு ரகசியமாகவே வைத்திருந்தது. இறுதிப் போரின் போது முப்பதாயிரம் மக்களே அங்கிருப்பதாகச் சொன்னது இலங்கை அரசு.

இந்தியாவும் இதையேச் சொன்னது.

 ஆனால் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகத் தெரிந்தது. இந்நிலையில் வட பகுதியில் அமைப்பட்ட பல் வேறு முகாம்களுக்குள்ளும் மூன்று லட்சட்த்திற்கும் அதிகமான மக்கள் முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டதாக செய்திகள் கசிந்தன.

ஆனால் முகாம்களுக்குள் இத்தனையாயிரம் மக்கள் தான் இருக்கிறார்கள் என்பதையோ அவர்களின் அரசியல் கைதிகள் இவ்வளவு பேர் என்பதையோ இலங்கை அரசு எவர் ஒருவரிடமும் தெரிவிக்கவில்லை.

ஐநா சபை உள்ளிட்ட உலக நாடுகள் இது குறித்து கேள்வி எழுப்பவும் இல்லை. இந்நிலையில் முகாம்களில் இருந்து சில பத்தயிரம் பேரை விடுவித்ததாக இலங்கை அரசு அறிவித்தது. அதிலும் முறையான எண்ணிகை இல்லை.

சமீபத்தில் இலங்கை சென்ற இந்தியத் தூதர் நிருபமா ராவிடம் இப்போது முகாம்களில் எழுபதாயிரம் பேர் மட்டுமே இருப்பதாக இலங்கை அரசு அறிவித்தது.

மீண்டும் சில நாட்கள் கழித்து இப்போது ’’ வவுனியாமாவட்டத்தில் உள்ள 6 இடங்களில் 61,898 பேரும் யாழ். மாவட்டத்தில் உள்ள இரு இடங்களில் 1,147 பேரும் வைத்தியசாலைகளில் 1,604 பேருமாக இன்னும் முகாம்களில் வாழ்கிறார்கள். 28,974 பேர் நலன்புரி நிலையங்களுக்கு வெளியே வாழ்கிறார்கள். வடக்கில் உள்ள 8 இடங்களிலும் வைத்தியசாலைகளிலுமாக 64,849 பேர் மட்டுமே இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இன்னமும் தங்கி உள்ளனர் என அவர் தெரிவித்தார்.

 4,942 பேர் திரும்பி வருவதாகச் சொன்ன திகதிக்குள் முகாம்களுக்குள் திரும்பவில்லை என்றும் கூறினார். மகிந்த சமரசிங்கே. நிருபமா ராவிடம் சொன்ன எழுபதாயிரம் கணக்கில் இருந்து கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் முகாம்களில் இருந்து சென்றவர்கள் திரும்பிவரவில்லை என்று காணாமல் போன ஐந்தாயிரம் பேருக்குக் கணக்குச் சொல்கிறது இலங்கை.

இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிய்மா நாகசாகியில் நடந்த மனிதப் பேரழிவிற்குப் பின்னர் மாபெரும் மனித இனக்கொலை ஒன்று யுத்தத்தின் போதும் யுத்தத்தின் பின்னரும் இலங்கையில் நடந்துள்ளது.

போர்ப்பகுதியில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை மட்டும் ஐம்பதாயிரத்தை தாண்டும் என்கிற நிலையில், முகாம்களுக்குள் பல்லாயிரம் மக்களை பாசிச பௌத்த பேரினவாத இலங்கை அரசு கொன்றொழித்திருக்க வேண்டும். புலி ஆதரவாளார்களும், ஈழ ஆதரவாளர்களும், முற்போக்கு இடது சாரிகளும் இக்கொலைகளுக்காவும் இம்மக்களுக்காகவும் என்ன செய்யப் போகிறார்கள். என்பதே நம் முன் உள்ள கேள்வி.

9 thoughts on “முகாம்களிலும் பெருந்தொகையான மக்களை கொன்று குவித்திருக்கிறது இலங்கை அரசு?”

 1. புலி ஆதரவாளர்களூம், ஈழ ஆதரவாளர்களூம் தானா மனிதர்கள் மற்றவர்கள் என்ன மந்தைக்கூட்டங்களா?

  1. நல்ல   கேள்வி!  புலி எதிர்ப்பாளர்கள்  புலியை எதிர்க்க மட்டுந்தான்.அவர்கள் மக்களைப் பற்றி கவலைப்படத்தேவையில்லை?

 2. “மே மாதம் போர் முடிவுற்ற பின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து எத்தனையாயிரம் மக்கள் வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்தார்கள் என்பதை இலங்கை அரசு ரகசியமாகவே வைத்திருந்தது.”
  – ஏன் இப்ப தன்னும் சரியான தரவு வெளியிடீனமோ? இந்தியாதன்னும் கேட்கிதோ? அதுதானே வெளிநாடோ, ஐக்கியநாடோ தலையிட வேண்டாமேன்னினம்.

  “இறுதிப் போரின் போது முப்பதாயிரம் மக்களே அங்கிருப்பதாகச் சொன்னது இலங்கை அரசு.”
  – சங்கரியார் அது பிழையான தரவு எண்டு ஆரம்பத்திலேயே இருந்து சொன்னாரே. அது ஏன் அப்படி சொன்னவைஎன்டால் அப்ப ஏரிச்சவை தாட்டவையை கணக்கு காட்டதேவையில்லையில்லோ.

  “இந்தியாவும் இதையேச் சொன்னது.”
  – இந்தியாவும் அதைதானே சொல்லவேண்டும். கஷ்மீரில எவ்வளவு சனம் சாகுது, தினமும் இந்தியாவுல, பட்டினியில, மருந்து இல்லாம, விபத்து, அநியாய அரசியல் கொலைகள், போலிஸ் கொலைகலேண்டு எவ்வளவு சனம் சாகுது. இதுல வேற எங்கடை தமிலர்ல அப்பை என்ன அக்கறை வரப்போகுது. என்ன தமிழ்நாடில வோட்டு வேணும், அமெரிக்கா, சீன, பாகிஸ்தான் இலங்கேக்கை நிக்ககூடாது. மற்றது ராஜிவை கொண்டவங்களை எப்படியும் சிங்கலவனைக்கொண்டே பழிவாங்கவேண்டும்.

  “ஆனால் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகத் தெரிந்தது.”
  – ஆனா எத்தனை பேரை தாட்டு, எரிச்சது எண்டு இன்னும் கணக்கு இல்லை. வன்னியில இருந்த ஒவ்வொரு குடும்பத்தையும் கேட்டா, ஒவ்வொருத்தரை எண்டாலும் இழந்து இருக்கினம். இதை திரும்பி மகிந்த ஜனதிபதிய வரவேண்டுமெண்டு ஒரே மேடையில நிண்டு அடம்பிடிச்ச தேவானந்தாவோ, சித்தரோ, ஸ்ரீதரோ இதுவரையிலோ அரசாங்கத்தை கேட்டிச்சினமோ?
  இல்லாடி சூரியத் தலைவரை சூரிய வெளிச்சத்தில அடையாளம் காட்டினவர்தன்னும் கேட்டாரோ?
  இப்ப அடுத்த இலக்க்சனுக்கு அடம்பிடிச்சு நிக்கிற கூட்டமைப்பு காரர்ல தன்னும் எந்த பிரிவோ, இல்லாட்டி u.n.p யில நிக்கிற மகேஸ்வரன் பெஞ்சாதிதன்னுமோ கேக்கினமோ?
  இல்லாட்டி வவுனியா சிற்றரசர், சனத்திட்டை கப்பம் வாங்கி கட்சி நடத்திறவை (கடந்த ஆறுமாதம் மட்டும் எண்டு சொல்லினம்) இப்ப தேவாந்தாவை போல இனக்க அரசியல் நடத்த போறவை தன்னும் இதுவரயில அரசாங்கத்தை கேட்டிச்சனமோ?

  “இந்நிலையில் வட பகுதியில் அமைப்பட்ட பல் வேறு முகாம்களுக்குள்ளும் மூன்று லட்சட்த்திற்கும் அதிகமான மக்கள் முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டதாக செய்திகள் கசிந்தன.”
  – அடைச்சு வைக்காமல் தாட்டது, எரிச்சது எத்தனை?

  “ஆனால் முகாம்களுக்குள் இத்தனையாயிரம் மக்கள் தான் இருக்கிறார்கள் என்பதையோ அவர்களின் அரசியல் கைதிகள் இவ்வளவு பேர் என்பதையோ இலங்கை அரசு எவர் ஒருவரிடமும் தெரிவிக்கவில்லை.”
  – அதுதானே ஐக்கிய நாடு தலையிடவேண்டாமேண்டு அடம்பிடிக்கினம். ஆனா க.ப.ச சலுகைக்கு நாக்கை தொங்க போடினம்.

  “ஐநா சபை உள்ளிட்ட உலக நாடுகள் இது குறித்து கேள்வி எழுப்பவும் இல்லை. இந்நிலையில் முகாம்களில் இருந்து சில பத்தயிரம் பேரை விடுவித்ததாக இலங்கை அரசு அறிவித்தது. அதிலும் முறையான எண்ணிகை இல்லை.”
  – ஐக்கிய நாடு கேட்டதுதானே, இந்தியாதான் ஒண்டும் கேட்கேலை. ஆயுதம் கொடுத்த சீனாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ, ரஷ்யாவுக்கோ, உதவி செய்யிற ஈரானுக்கோ, லிபியாவுக்கோ என்ன அக்கறை?

  “சமீபத்தில் இலங்கை சென்ற இந்தியத் தூதர் நிருபமா ராவிடம் இப்போது முகாம்களில் எழுபதாயிரம் பேர் மட்டுமே இருப்பதாக இலங்கை அரசு அறிவித்தது.”
  – இது அறிவிச்சாலென்ன அறிவிக்கட்டலென்ன எல்லாம் ஒண்டுதான்.

  மீண்டும் சில நாட்கள் கழித்து இப்போது ’’ வவுனியாமாவட்டத்தில் உள்ள 6 இடங்களில் 61,898 பேரும் யாழ். மாவட்டத்தில் உள்ள இரு இடங்களில் 1,147 பேரும் வைத்தியசாலைகளில் 1,604 பேருமாக இன்னும் முகாம்களில் வாழ்கிறார்கள். 28,974 பேர் நலன்புரி நிலையங்களுக்கு வெளியே வாழ்கிறார்கள். வடக்கில் உள்ள 8 இடங்களிலும் வைத்தியசாலைகளிலுமாக 64,849 பேர் மட்டுமே இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இன்னமும் தங்கி உள்ளனர் என அவர் தெரிவித்தார்.

  “4,942 பேர் திரும்பி வருவதாகச் சொன்ன திகதிக்குள் முகாம்களுக்குள் திரும்பவில்லை என்றும் கூறினார். மகிந்த சமரசிங்கே. நிருபமா ராவிடம் சொன்ன எழுபதாயிரம் கணக்கில் இருந்து கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் முகாம்களில் இருந்து சென்றவர்கள் திரும்பிவரவில்லை என்று காணாமல் போன ஐந்தாயிரம் பேருக்குக் கணக்குச் சொல்கிறது இலங்கை.”
  – வெளியில போட்டு திரும்பி வாருங்கோ எண்டு சொல்லேக்கை எல்லாருக்கும் விளங்கி இருக்க வேண்டும். அரசாங்கத்தை கேள்வி கேட்டகிர எதிரணி காரர் கூட அப்ப ரொம்ப சந்தொசப்பட்டவை, ஏதொ அரசாங்கம் திறந்து விட்டுது எண்டு. இப்ப தெரியுது இல்லே?
  கொன்ஷபேர் தப்பி இருப்புனம், மிச்சம் உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, தேவாந்தாவுக்கும், சித்தருக்கும், கருணாவுக்கும், கோத்தபாயாவுக்கும் தான் தெரியும்.

  “இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிய்மா நாகசாகியில் நடந்த மனிதப் பேரழிவிற்குப் பின்னர் மாபெரும் மனித இனக்கொலை ஒன்று யுத்தத்தின் போதும் யுத்தத்தின் பின்னரும் இலங்கையில் நடந்துள்ளது.”
  – இதை நிங்களும், நாங்களும் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியதுதான். அங்கை மக்கள் பிரதிநிதிகள் நாங்கள் தானெண்டு போட்டிபோட்டு இலக்கசன்ல நிக்கிற யாரும் சொல்லினமோ?

  “போர்ப்பகுதியில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை மட்டும் ஐம்பதாயிரத்தை தாண்டும் என்கிற நிலையில், முகாம்களுக்குள் பல்லாயிரம் மக்களை பாசிச பௌத்த பேரினவாத இலங்கை அரசு கொன்றொழித்திருக்க வேண்டும்.”
  -இது தெரிஞ்சதுதானே. இது ஒண்டும் புது கண்டுபிட்டிப்பு இல்லை. இதுக்கு நீலன் திருச்செல்வம் போல ஹவாடுக்கு பொய் படிக்கவும் தேவையில்லை, காந்தியை போல கேம்ப்ரிட்சுக்கும் போகத்தேவையில்லை (அதுதானே இரண்டு பேரையும் துவக்காலை போட்டவங்கள். காந்தியை அவருடைய ஒரு இந்து, நீலனை அவருடைய ஒரு தமிழன்).
  – ஏன் இனியும் திரும்ப திரும்ப “பாசிச பௌத்த பேரினவாத இலங்கை அரசு” எண்டு? அவையளோட போட்டிபோட்டு நிக்கிற எங்கடை ஆக்களை ஏனெண்டு சொல்றது? “வெள்ளை வெட்டி (சித்தரும் கருணாவும் ரவுசர், கருணா கொட்டு சூட்டும்) இந்து பேரியஆசைகாரர்” எண்டு சொல்றதோ?

  “புலி ஆதரவாளார்களும், ஈழ ஆதரவாளர்களும், முற்போக்கு இடது சாரிகளும் இக்கொலைகளுக்காவும் இம்மக்களுக்காகவும் என்ன செய்யப் போகிறார்கள். என்பதே நம் முன் உள்ள கேள்வி.”
  – புலி ஆதரவாளர் என்ன செய்ய போகினம்? அவையளால தானே இவ்வளவு பிரச்சனையும். அவை போனவருசம் ஒழுங்காய் போராட்டம் நடத்தியிருந்தால் ஏன் இந்த நிலைக்கு வந்திருக்கும்? அவைஎன்னேண்டா புலிக்கொடியை பிடிச்சு கொண்டு ஆம்பிளையள் தங்கடை கோவணத்தை மறைக்க தலைவற்றை படத்தையும், பெண்டுகள் தங்கடை மார்ப்பை மறைக்க தலைவற்றை படத்தையும் பிடித்தா எந்த நாடு எங்களுக்காக, எங்கடை வண்டவாளத்தில எங்களுக்காக குரல் கொடுக்கும்? சிங்களவனுக்கும் இந்தியாவுக்கும் எல்லாம் சாதகமாய் போட்டுது. இப்ப அழிஞ்சது எங்கட இனம் தான். இப்ப கேட்பாரரற்ற இனமாய்.
  – ஈழ ஆதரவாளர் எண்டு இப்ப எங்கை இருக்கினம். உண்மையான ஈழ ஆதரவாளரையும் போட கூடியவையை துரோகி, மாற்று கருத்தாளர் எண்டு புலி போட்டுட்டினம், மிச்சம் பேர்ல ஒதுன்கினவை, இணக்க அரசியல் செய்ய எண்டு புறப்பட்டவை, இப்ப புரிந்துணர்வுடன் நாம் செயற்படுவோம் எண்டு இருக்கிறவை, மிகுதி மிஞ்சி இருக்கிறவைய பாத்தா அவைக்கை ஒற்றுமையில்லை. இப்ப இருக்கிற வலையமைப்புகளை பாத்தாலே தெரியுது. ஆளையாள எங்கை ரன்டவுன் பண்றதேண்டு.
  – இப்ப ஐயர் எழுதிற பதிவில வார ஜான் மாஸ்டர் என்கிற ரகுமான் ஆரம்பத்தில புளியிலையும் இருந்து பிறகு பிரிஞ்ச புலோட்டிளையும் இருந்து இரண்டு பேருட்டையும், இலங்கை அரசாங்கதிடையும் இருந்து தப்பினவர் எல்லாச் சரிபிளையையும் பாத்தவர், பாத்து கொண்டிருகிறவர் “இது முடிவல்ல; தொடக்கம்” எண்டு சொல்றார். என்னெண்டுதான் பாப்போமே. இல்லாட்டி இவரோடை இவற்றை கொள்கையை ஒத்தவை ஒண்டாய் சேந்து புது பரிமாணத்தில தொடன்கினமோ பாப்போம், ஆனா இப்ப உலகம் இருக்கிற நிலையில முந்தி சேகுவாரா காலம் மாதிரியோ, சுபாச் சந்திரபோஸ் மாதிரியோ ஏலாது. எல்லாத்தியும் எட்டப்பன் வேலை பாக்க தானே எங்கடை தமிழர் போட்டி போட்டி இருக்கினம். ஏன் சிங்களவனை குறை சொல்லுவான்? எங்களுக்கை ஒற்றுமை இருந்தால் அவன் ஏனெண்டு உள்ளுக்கை வருவான். உங்கை டொராண்டோவில “மே 18” காரர் நடத்தின கூட்டத்துக்கு முன்னால் போராளிஎண்டு ஸ்ரீலங்கா தூதுவரத்திண்ட உளவாளி செண்டதிண்டும் கேள்வி.
  – முற்போக்கு இடது சாரிகளும் இக்கொலைகளுக்காவும் இம்மக்களுக்காகவும் என்ன செய்ய போகினம்? அவையளும் யார் ஒழுங்க இருக்கினம்? எல்லாரும் வாய் பேச்சுதான்.
  இப்ப புதிய ஜனநாயக கட்சிஎண்டு இறங்கி இருக்கினம் பாப்போம்.

  “யுத்தத்தைக் கடந்த வருட மே மாதம் வெற்றிகொண்ட இலங்கை தற்போது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கெதிரான சொற்போரில் இராஜதந்திர வெற்றியை ஈட்டியுள்ளது.

  இலங்கையின் இராணுவம் மனித உரிமை மீறல்களையும் யுத்தக் குற்றச் செயல்களையும் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் யுத்தத்தின் பின்னரான இலங்கையின் பொறுப்பு சொல்லும் தன்மை குறித்து தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எடுத்த தீர்மானத்தை மிகப்பெரும் தனி அரசியல் கூட்டமைப்பான அணிசேரா நாடுகள் இயக்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.”
  – இப்படியும் சோரம் போன எங்கட தமிழ் வலையமைப்பில வந்திருக்கு. இப்படி எல்லாம் நாங்கள் புலிக்கு எதிர் எண்டு சொல்லிக்கொண்டு கண்ணைமூடிக்கொண்டு போடி போட்டு நக்கேக்கை சிங்களவனை குறை சொல்லி என்ன பயன்? சிங்கள பாசிசம் புலி பாசிசம் முடிய இப்ப திரும்ப சிங்கள பாசிசம் மாற்று தமிழ் பாசிசம் எண்டு.

  – சரி நாங்களும் அடுத்த கிழமை நேரம் இருந்தா பாப்போம். வணக்கம் எல்லாருக்கும்.

 3. சொல்ல மறந்து போனான். அரசியல் கதைச்சு உட்கொலயளுக்கு எதிர்ப்பு தெரிவிச்சதாலதன இந்த ஜான் மாஸ்டரையும் போட திரிஞ்சவை, போட த்ரிஞ்சவையும் அதே டொராண்டோவிலைதான் இருக்கினமாம். இப்ப எல்லாரும் அகதி. இவையள் ஜான் மாஸ்டரை நேருக்கு நேர் கண்டால் என்ன செய்வினமோ தெரியாது. ஜான் மாஸ்டர் இப்பவும் வெளியில நிண்டு கருத்தரங்கு நடத்திறார். இவன்கலேலாம் இப்ப என்ன ஈனம் கெட்ட பிழைப்போ நடத்திரான்களோ தெரியாது. விபரம் தெரிஞ்சவை விபரமா எழுதுங்கோ.

 4. Where is Pottu?

  இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த உச்சக் கட்ட சண்டையில் சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

  அப்போது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனையும், சுட்டுக் கொன்று விட்டதாக அறிவித்த சிங்களராணுவம் பிரபாகரன் தோற்றத்தில் இருந்த ஒரு உடலையும் காட்டியது.

  ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக விடுதலைப்புலிகள் இயக்கம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. இதனால் பிரபாகரன் விஷயத்தில் சர்ச்சை நீடிக்கிறது.

  விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் பொட்டு அம்மான். இவர் தப்பிச்சென்று விட்ட தாக தகவல்கள் வெளியானது. சிங்கள ராணுவ அதிகாரிகளும், பொட்டு அம்மான் உடல் கிடைக்காததால் அவர் உயிர் தப்பி இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தனர்.

  பொட்டு அம்மான் இலங்கையில் ரகசிய இடத்தில் பதுங்கி உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று மற்றொருதகவல் வெளியானது. ஆனால் பிரபாகரன் பற்றி அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட விடுதலைப்புலிகள் பொட்டு அம்மான் பற்றி எதுவும் தகவல் வெளியிடவில்லை.

  இந்த நிலையில் கடந்தடிசம்பர் மாதம் முதல் பொட்டு அம்மானையும் அவரது உதவியாளர்கள் 2 பேரையும் சர்வதேச போலீசார் தேடத் தொடங்கினார் ள். இது தொடர்பாக சர்வதேச போலீசார் இணையத் தளங்களிலும் அறிவிப்பு வெளியிட்டனர். இது இலங்கை சிங்கள அரசுக்கு நெருக்கடியை கொடுத்தது.

  பிரபாகரனின் மரணச்சான்றிதழை தயாரித்து கொடுத்து விட்ட சிங்கள அரசுக்கு பொட்டு அம்மான் விஷயத்தில் என்ன முடிவு எடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பொட்டு அம்மான் இறந்து விட்டார் என்று சான்றிதழ் கொடுப்பது என்று சிங்கள அதிகாரிகள் திணறினார்கள். இதற்கிடையே ராஜீவ்கொலையில் முக்கிய குற்ற வாளியாக கருதப்படும் பொட்டு அம்மானின் மரணச் சான்றிதழை இந்தியா கேட்டு வலியுறுத்தியது.

  சர்வதேச அளவில் நெருக்கடிகள் அதிகரித்ததால் தற்போது இலங்கை அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இறுதியுத்தம் நடந்த போது பொட்டு அம்மான் தன் உடம்பில் கட்டி இருந்த குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர் மனைவியும் அது போல தற்கொலை தாக்குதல் மூலம் தன்னைத் தானே அழித்துக் கொண்டதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

  பொட்டு அம்மான், உடலை மீட்க முடியவில்லை என்றும் இலங்கை அரசு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இதன் காரண மாகத் தான் பொட்டு அம்மானின் மரணச்சான்றிதழைக் கொடுக்க இயலவில்லை என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.

  இதற்கிடையே பொட்டு அம்மான் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக இந்தியா உளவு அமைப்பான ரா சந்தேகம் தெரிவித்துள்ளது. கேட்டுக் கொண்டதால் சர்வதேச போலீசார் பொட்டு அம்மானை தேடி வருவதாக தெரிய வந்துள்ளது.

  இதன் மூலம் பொட்டு அம்மான் உயிருடன் இருக்க அதிகவாய்ப்புகள் உள்ளதாக உலகம் முழுக்க வாழும் ஈழத்தமிழர்கள் நம்புகிறார்கள். சிங்கள அரசுக்கு இது கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

  நன்றி! மாற்று இணையம்

  1. இது எந்த இணயத்தளம் பாருஙோ? சொன்னா அதிர்வு கோவிக்க மாட்டார்கள்.

 5. போர் முடிந்து ஒரு வருடமாகும் நிலையில், இறந்த இராணுவ வீரர்கட்கு அவசம், அவசரமாக நினைவு தூபி கட்டி அதை விழாவெடுத்து திறந்து…. வன்னியில் இடம்பெற்ற போரின்பொழுது மக்களால் கைவிடப்பட்ட பொருட்ளை மக்களிடம் வழங்குவதற்கு தற்போதுதான் நடவடிக்கை எடுக்கப் படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ள நிலையில், போரின் உச்சத்தில் விமான குண்டுமழையினாலும், பல் எறிகணை, டாங்கித் தாக்குதல்களாலும் முக்கியமாக கொக்குதொடுவாய், கொக்குளாய் தொடக்கம் அலம்பில், முல்லைத்தீவு, , புதுக்குடியிருப்பு, தேவிபுரம், சுதந்திரபுரம் போன்ற இடங்களில் பல தென்னை மரங்கள் அழிந்த நிலையில், கிளிநொச்சி, முல்லைத்தீவு, அலம்பில் மற்றும் பளை ஆகிய இடங்களில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக வரும் செய்திகள் முக்கியமாக தமிழ் மாற்று இணையதளங்கிலேயே வந்திருக்கிறது.

  மேலும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு இதற்காக 30மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும், அரச – தனியார் துறையினரின் பங்களிப்புடன் இத்திட்டம் செயல் உருப்பெறுவதாக அமைச்சர் டீ.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளதாகவும், தேசிய தெங்கு அபிவிருத்தி அதிகார சபை இது தொடர்பான திட்டத்தை மேற்கொள்ளும் என்றும், 10 பாரிய அளவிலான எண்ணெய் உற்பத்தி தொகுதிகள் அமைக்கப்படும் என்றும், 20 மெட்ரிக்தொன் தேங்காய் எண்ணெய் நாளாந்தம் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும், இத்திட்டத்தின் மூலம் 30,000 குடும்பங்கள் நேரடியாகவும், மறை முகமாகவும் தொழில் வாய்ப்புக்களையும் பெறுவர் என்றும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

  அத்துடன் தென்னத் தோட்டங்கள் இருக்கும் முல்லைத்தீவு, அலம்பில், செம்மலை, கொக்கிளாய், கொக்குதுடுவாய் போன்ற இடங்களில் மக்கள் இன்னும் மீள்குடிஎறாத நிலையிலும், அங்கு வசித்த மக்களின் மோட்டார் சைக்கிள் உழவுஇயந்திரம் தண்ணீர் இறைக்கும் இயந்திரம் வீட்டுத்தளபாடங்கள் என்று பலபொருட்கள் பாதுகாப்பு வலயத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக தெரிவித்த ஆளுநர் அவற்றை அடையாளப் படுத்தும் பட்சத்தில் அவற்றை உரியமக்களிடம் கையளிக்கப்படும் என்று கூறும் நிலையிலும், ஒன்று தெட்டத் தெளிவாகத் தெரிகிறது, பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் பல இடங்கள் வளைக்கப்பட்டுள்ளது. அவ்விடத்து மக்கள் திரும்ப அவ்விடங்களுக்கு செல்லும் நிலையிலேயே உண்மை தெரியும்.

  ஆதலினால் தென்னைகள் அழிந்துள்ள இடத்தில் எப்படி 10 பாரிய அளவிலான எண்ணெய் உற்பத்தி தொகுதிகள் அமைக்கப்பட்டு, 20 மெட்ரிக்தொன் தேங்காய் எண்ணெய் நாளாந்தம் உற்பத்தி செய்யப்படும்? மேலும் இத்திட்டத்தின் மூலம் 30,000 குடும்பங்கள் நேரடியாகவும், மறை முகமாகவும் தொழில் வாய்ப்புக்களையும் எப்படி பெறுவர்?

  தற்போதும் அப்பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்து உள்ளவர்களிடம் பேசினேன், அவர்கள் தங்களை எப்போ திரும்ப தம் சொந்த இடங்களிற்கு செல்ல விடுவார்கள் என்று தெரியாத நிலையிலேயே உள்ளனர். அத்துடன் தற்போதும் முகாமிலேயே வசிக்கின்றனர் (செம்மலை), சிலர் யாழ்ப்பாணத்தில் தம் உறவினருடன் சென்று இருக்கின்றனர்(தேவிபுரம், சுதந்திரபுரம்). அத்துடன் இவர்களில் சிலர் கடைசிப் போரில் தம் உறவினர்களையும் இழந்துள்ளனர். மேலும் தங்கள் வீடுகள் அழித்துவிட்டதாகவும் சொல்ல்கிறார்கள். இனி இவர்கட்கு இம் இம் என்று கொடுத்து பின் கூரைத்தகடும் கொடுத்ததாக அரசாங்கம் அறிக்கை விட, அதை தாம் சொல்லித்தான் அரசாங்கம் செய்ததாக எம் மாற்று தமிழ் தலைமைகள் முந்தியடிச்சு அறிக்கை விட….. மக்கள் தான்.

  அத்துடன் புலிகளின் கட்டுப்பாட்டில் முல்லைத்தீவு கடல் சார்ந்த பிரதேசம் வருமுன் முல்லைதீவு, நாயாறு, கொக்குதொடுவாய் போன்ற இடங்களில் இராணுவ முகாம்கள் அமைந்து உள்ளது மட்டுமல்லாமல். நாயாறில் தொடக்கி கொக்குதொடுவாய் மட்டும் சிங்கள மீனவர்கள் வாடி அமைத்து இருந்தது மட்டுமல்லாமல் ஒவ்வொருவருடமும் திரும்பி வரும் போது முல்லைத்தீவை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தனர். தற்போது இவர்கள் “பாதுகாப்பு வலயம்” என்று வேறு சொல்கிற நிலையில் எப்பகுதிகளை பாதுகாப்பு வலயம் என்ற என்ற வரறைக்குள் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடியதாகவுள்ளது.

  இந்நிலையில் தற்போது இப்பகுதிகளை பிரதிநிதிப் படுத்துவதற்கு போட்டிபோடும் அரசியல் கட்சிகள் காலம் காலமாக இவ்விடங்களில் வசித்துது வந்த மக்களிற்கும், இவ்விடங்களில் வசித்து பின் புலியால் வெளியேற்றப்பட்ட மக்களிற்கும் என்ன சொல்லப்போகிறார்கள், என்ன செய்யப்போகிறார்கள்? இணக்க அரசியலா? புரிந்துணர்வு அரசியலா? அல்லது மகிந்த தலைமையிலான அரசாங்கம் “ஒரேநாடு; ஒரே நாட்டு மக்கள்” என்பதற்கு அமைய நாட்டின் மக்களின் சுபீட்சம், வளர்ச்சி கருதி ஒவ்வொரு திட்டங்களையும் அமுலாக்க தங்களின் “இணக்க” வேண்டுகோளிற்கு “இணங்கி” தான் அரசு செய்தது என்று ஒருவரும், தங்களின் “புரிந்துணர்வு” வேண்டுகோளை “புரிந்து” தான் அரசு செய்தது என்று மற்றையவரும் அறிக்கை விட சம்பந்தர், சுரேஷ் கூத்தமைப்பினர் “மக்களின் தொடரும் அவலம்” என்று வெளிநாடுகளுக்கு சென்று அறிக்கைகள் விட இப்படியே போகப்போகிறதா?

  எல்லாவற்றிற்கும் மனிதாபிமானமும், மனித நேயமும் வேண்டும்!

  – அலெக்ஸ் இரவி

 6. பொட்டு அம்மான் இந்தியநிறுவனம் ஒன்றன் பொறுப்பிலேயே இருக்கும் சாத்தியப்பாட்டைப் பற்றி அலெக்ஸ் என்ன நினைக்கிறர்?

  1. No comments on this………you know, I know….all are part of the on going game over the Eelam Tamils lives.

Comments are closed.