முகாம்களிலிருந்து விடுதலை செய்யப்படவிலை : சென்னையில் ரனில்

ranil_fonsekaஇலங்கை ஜனாதிபதித் தேர்தல் குறித்துப் பேச ரனில் விக்கிரமசிங்க இன்று புது டெல்கி வந்தடைந்தார். டெல்கி செல்லும் வழியில் இன்று (13.12.2009)  சென்னையில் ஊடகங்களிடம் பேசிய ரனில், சரத் பொன்சேகா ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால் நிறைவேற்றதிகாரம் உடைய ஜனாதிபதி முறை நீக்கப்படும் என்றார்.
இலங்கைத் ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 26ம் திகதி நடைபெவுள்ள நிலையில், ஒரு மாதத்திற்கு உள்ளாக இரண்டாவது தடவையாக ரனில் புதுடெல்கி செல்கிறார்.
இதே வேளை முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டோர் சிறிய முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனரே தவிர முகாம்களிலிருந்து முற்றாக விடுதலை செய்யப்படவிலை என்றார்.
சரத் பொன்சேகா வெற்றிபெற்றால் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்று மேலும் தெரிவித்தார்.