முகாம்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டு இரணுவக் குடும்பங்களுடன் மீள் குடியேற்றம்?

camps286 குடும்பங்களைத் தவிர ஏனையயோரை டிசம்பர் மாதத்திற்கு முன்னர் முகாம்களில்  இருந்து  விடுதலை செய்வதாக இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமரிக்க அரசின் அழுத்தங்கள் அதிகரிப்பதனால் போர்க்குற்றங்களிலிருந்து  தப்பித்துக் கொள்வதற்காக  இந்த முடிவை இலங்கை அரசு அமுல்படுத்தலாம் என இனியொருவிற்குத் தெரிவித்த ஊடகவியலாளர்,  மக்கள் மீள் குடியேறும் இடங்களில் போரில் ஈடுபட்ட இராணுவத்தினரின் குடும்பங்களையும் குடியேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு விட்டதாகவும், குடியேறும் ஒவ்வொரு இராணுவக் குடும்பங்களுக்கும் ஐந்து லட்சம் ரூபா நிவாரணப் பணக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத் இத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்றார்.