மீள் குடியேற்றம் தாமதாவதற்கு உங்கள் பிரபாகரனே காரணம்

அரசு மீள்குடியேற்றம் பெருமளவுக்கு முடிவுக்கு வந்துவிட்டது என தெரிவித்தது வரும் நிலையில் பல தரப்பிலிருந்தும் மீள்குடியறம்  தொடர்பாக பல கண்டனங்கள் எழுப்பப்பட்டுள்ளன. 

மீள் குடியேற்ற வங்கிக் கடன் என்ற போர்வையில் அனாதரவான மக்களின் குடியிருப்புக்களைக் குண்டு போட்டுத் தகர்த்துவிட்டு அவர்களைக் கடனாளிகளாக்கும் இலங்கை அரசு,  மீள் குடியேற்றம் குறித்துப் பெருமை கொள்கிறது.   போரினால் கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியவர்களை சிறுகச் சிறுக அழித்தொழிக்கும் இலங்கை அரைன் இனச் சுத்திகரிப்பை எதிர்த்து பாசிச சூழலில் மக்களே போராட ஆரம்பித்து விட்டனர்.

 

 2008 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம் பெயர்ந்த முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் குறித்து பல கண்டனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 2008 ஆம் ஆண்டின் பின்னர் இடம் பெயர்ந்த மக்களே இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம் பெயர்ந்த தமிழ் மக்களை நாம் கருணையுடன் நோக்க வேண்டியுளாக உள்ளோம் என மீள்குடியற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்திருக்கிறார்.

கடந்த வாரம் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் கூட்டமொன்றில், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒப்பந்தம் ஒன்றில் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ கைச்சாத்திட்டதன் காரணமாகவே 2008 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம் பெயர்ந்த மக்களுக்கான நிவாரணங்கள் இன்று வழங்கப்படுவதில்லை. இதனால் முஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்திருந்தமை தொடர்பாகவே இவ்வாறு அமைச்சர் கருத்துக் கூறியிருக்கிறார்.

 இடம் பெயர்ந்துள்ள முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் அவர்கள் திருப்தியாக வாழ்கிறார்கள். இதனை மறுக்க முடியாது எனவும் அமைச்சர் றிஷாத்தின் குற்றச்சாட்டினை நான் முற்றாக நிராகரிக்கிறேன். அமைச்சர் றிஷாத் தான் சார்ந்த முஸ்லிம் சமூகத்துக்காகவே இவ்வாறு பேசுகிறார்.

அவ்வாறானதொரு நோக்கத்திற்காக நான் குறிப்பிட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை. இந்த ஓப்பந்தத்தில் நான் கையொப்பமிட மறுத்திருந்தால் ஒருவருக்குமே நிவாரணம் கிடைத்திருக்காது எனவும் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் பத்திரிகையாளர் ஒருவருக்கு, மீள் குடியேற்றம் தாமதாவதற்கு உங்கள் பிரபாகரனே காரணம் மீள்குடியேற்றப்படவுள்ள பிரதேசங்களில் கண்ணி வெடிகள் மட்டுமல்ல ஆயுதங்களும் வெடி பொருட்களும் நிறையவே மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் பிரபாகரன் மறைத்து வைத்தவற்றை எமது படையினர் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்திருக்கிறார்.

அரசாங்கம் அடுத்த மாத இறுதிக்குள் மீள்குடியேற்றம் முழுமை பெற்றுவிடும் எனத் தெரிவித்து வந்த நிலையிலேயே மில்ரோய் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

இதே வேளை இந்தியக் கண்ணி வெடியகற்றும் நிறுவனமான சர்வத்ரா நிறுவனம் முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய்ப் பிரதேசத்தில் ஒன்பது கண்ணி வெடி வரிசைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது. சில கண்ணி வெடி வரிசைகள் 100 மீற்றர் தூரம் கொண்டவையாகுவும் சில ஒரு கிலோ மீற்றர் தூரம் கொண்டவையாகவும் காணப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது. இவை விவசாய நிலங்களில் விதைகள் விதைக்கப்பட்டது போல காடசியளிக்கிறது என அந்நிறுவனம் தெரிவித்தள்ளது.