மீள் குடியேற்றம் கவலை தருகிறது : ஹோல்ம்ஸ்

jhவன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழர்கள் எவ்வாறு தங்கள் வாழ்விடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் என்பது கவலையளிக்கக் கூடியதாக உள்ளது என்று ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்கள் ஆணையர் ஜான் ஹோல்ம்ஸ் கூறியுள்ளார்.

இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு நியூ யார்க்கிலுள்ள ஐ.நா.வின் தலைமையகத்திற்கு திரும்பியுள்ள ஜான் ஹோல்ம்ஸ், முகாம்களில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னர், அவர்கள் வாழ்ந்த வந்த இடங்களைச் சென்று பார்த்துவிட்டு திரும்பியப் பிறகு முகாம்களில் இருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றும், ஐ.நா.வின் மீள் குடியமர்த்தம் தொடர்பான வழிகாட்டுதல் விதிமுறைகளின்படி, தாங்கள் வாழ்ந்த இடங்களில் மீண்டும் சென்று வாழ்வைத் தொடங்கும் சாத்தியம் உள்ளதா என்பதை அவர்களோடு சிறிலங்க மறுவாழ்வுத் துறை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.