மீள் குடியேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

bfenceவன்னியில் சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் அனைவரையும் விடுவித்து, அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்துமாறுக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை பூங்கா நகரில் உள்ள மெமோரியல் அரங்கம் முன்னால் இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணியளவில் தமிழினப் பாதுகாப்புப் போராட்டக் குழுச் சார்பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்குகிறார்.

வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் விடுவிக்கப்பட்டு அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தப்படுகிறார்கள் என்ற பிரச்சாரத்தை முறியடித்து உண்மை நிலையை தமிழக மக்களுக்கு எடுத்துக் கூற இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் தோழர் தியாகு, வழக்கறிஞர் சு. குமாரதேவன், இதழாளர் கா.அய்யநாதன், அன்பு தனசேகர், எ.கேசவன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.