மீனவர்கள் கரை திரும்பவில்லை : இலங்கைக் கடற்படைக்குப் பலி?

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள், 5 நாட்களாகியும் கரை திரும்பாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரே நாளில் அவர்கள் கரை திரும்பி விடுவர். ஆனால், மீன்பிடிக்க சென்ற 4 பேரும் இதுவரை கரை திரும்பாதது, மற்ற மீனவர்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களிடம் இருந்து எந்த தகவல் தொடர்பும் கிடையாது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிவண்ணனின் தாய் தேசம், மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் ஜெய்சிங் வழக்குப் பதிவு செய்து, மீனவர்களை தேடுவதற்காக கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. ஏற்கனவே, கடந்த மே மாதம் காசிமேடு பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பாமல் உள்ளனர்.

ஐந்து மாதங்களாகியும் அவர்களின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தார்களா அல்லது கடலில் மூழ்கினார்களா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.