மீனவர்களைத் தாக்குவதை இலங்கை நிறுத்தி விட்டதாம்- சொல்கிறார் எஸ்,எம்.கிருஷ்ணா.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுவது தொடர்கதையான ஒன்று இதுவரை சுமார் 300 மீனவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தமிழகம் குற்றம் சுமத்துகிற நிலையில் மத்திய மாநில அரசுகள் இதுவரை கொல்லப்படும் மீனவர்களுக்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததில்லை. இந்நிலையில் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது: ‘’கடந்த சில ஆண்டுகளில் இலங்கை ராணுவம் தமிழக மீனவர்கள் மீது அடிக்கடி நடத்திய தாக்குதலில் 7 மீனவர்கள் கொல்லப்பட்டதாகவும், 20 மீனவர்கள் தாக்கப்பட்டதாகவும் கிடைத்த தகவலையடுத்து இந்திய அரசு இலங்கை ராணுவத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு போடப்பட்ட கடலோர எல்லை குறித்த ஒப்பந்தத்தின்படியே தமிழக மீனவர்கள் செயல்படுவதாகவும், அப்படிப்பட்ட சூழலிலும் அவர்கள் தாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளோம். அவர்களும் மீனவர்களைத் தாக்குவதை நிறுத்திக் கொண்டார்கள்.” என்றார் எஸ். எம் கிருஷ்ணா.

One thought on “மீனவர்களைத் தாக்குவதை இலங்கை நிறுத்தி விட்டதாம்- சொல்கிறார் எஸ்,எம்.கிருஷ்ணா.”

  1. //இந்திய அரசு இலங்கை ராணுவத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு போடப்பட்ட கடலோர எல்லை குறித்த ஒப்பந்தத்தின்படியே தமிழக மீனவர்கள் செயல்படுவதாகவும், அப்படிப்பட்ட சூழலிலும் அவர்கள் தாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளோம். அவர்களும் மீனவர்களைத் தாக்குவதை நிறுத்திக் கொண்டார்கள்.” என்றார் எஸ். எம் கிட்டணா.///// கலோ,,கிட்டுணு, மவனே இனியும் மீனவன் செத்தனு வைச்சுக்க இருக்கிடி ஆப்பு ஒனக்கு, அப்பொறம் தலையுலை டோப்பா இருக்காது , கழட்டியிட்டுத்தான் வருவாய் மவனே,

Comments are closed.