மரண அச்சுறுத்தல்:ஊடகவியலாளர் போத்தல ஜயந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்!

Poddala_Jayantha தொலைபேசி மூலம் தொடர்ந்தும் விடுக்கப்பட்டு வந்த மரண அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்புத் தேடி , இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய தலைவரும் திறனாய்வு ஊடகவியலாளருமான போத்தல ஜெயந்த தனது மனைவி மற்றும் மகளுடன் கடந்த 2ம் திகதி வெளிநாடு சென்றுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி கடத்தப்பட்டு தாக்கப்பட்ட போத்தல் ஜெயந்த படுகாயமடைந்த நிலையில் சிசிக்கைப் பெற்று வீடுத் திரும்பியிருந்தார். எனினும் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், ‘தாம் கூறியவாறு வாயை அடக்கிக் கொள்ளவில்லை எனில் கொலை செய்யப்படுவாய்” என அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்துள்ளன. இந்த தொலைபேசி அழைப்புகள் பற்றி காவற்துறையில் முறையிட்டால் குடும்பத்துடன் கொலை செய்யப்படுவீர்கள் என மிரட்ப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கையில் வசிப்பது போத்தல ஜெயந்தவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆபத்தானது என தீர்மானித்த கொழும்பில் உள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகள் சிலர், அவரை 36 மணித்தியாலங்களுக்கு நாட்டில் இருந்து வெளியேற தயாராகுமாறு அறிவித்ததுடன் விமானத்தில் ஏறும் வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளதாகவும்

இந்த நடவடிக்கையானது இலங்கையில் அரசியல் ஸ்திரதன்மை இல்லை என்பதை வெளிநாட்டு ராஜதந்திரிகள் ஏற்றுக்கொண்டதாகும் எனவும் பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கையின் மனித உரிமை சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துளளார்.