மாவோயிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் சுட்டுக் கொலை.

தண்டகாரண்யாவில் இந்திய இராணுவத்திற்கும் பழங்குடி மக்களுக்குமிடையிலான போர் தீவீரமடைந்து வருகிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிராக இராணுவத்தைப் பயன்படுத்தத் துவங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகிவரும் நிலையில் மகாராஷ்டிரத்திலிருந்து மாவோயிஸ்ட்டுகள் ஆந்திரத்துக்கு ஊடுருவுவதாக அம் மாநில போலீஸôருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வாங்கிடி வனப் பகுதியில் போலீஸôர் பதுங்கியிருந்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலை தீவிரவாதிகளை எதிர்கொண்ட போலீஸôர், அவர்களை சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே சுமார் 3 மணி நேரம் சண்டை நீடித்தது. இதில், மாவோயிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் ராஜ்குமார் என்ற ஆசாத் உள்பட இரு தீவிரவாதிகள் இறந்தனர். எம்.டெக். பொறியியல் முதுநிலை பட்டதாரியான ஆசாத், 1970-ல் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்து அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார் என போலீஸôர் தெரிவித்தனர். சண்டையின்போது, மாவோயிஸ்டுகளில் சிலர் சரண் அடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

One thought on “மாவோயிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் சுட்டுக் கொலை.”

  1. Indian police have shot dead wanted Maoist leader Cherukuri Rajkumar during a gunfight with rebels in the country’s southern state of Andhra Pradesh.

    Rajkumar, also known as Azad, was an important member of the Maoist central committee and a spokesman for the rebels. He had been involved in the Maoist movement for 35 years.

    Azad carried a reward of INR 1.2 million (USD 25,000) on his head.

    He was shot dead by police on Friday as he was passing through a densely forested region in Andhra Pradesh into the neighboring state of Maharashtra,he was shot dead by recently bought high quality snipers, AFP reported.

Comments are closed.