மாவோயிஸ்ட் பந்த் ஒரே நாளில் பல இடங்களில் தாக்குதல் இருவர் சாவு.

மாவோயிஸ்டு இயக்கத்தின் மத்தியக்குழு உறுப்பினரும் முக்கியத் தலைவரருமான ஆசாத் ராஜ்குமாரையும் இன்னொரு ஊடகவியளாரையும் ஆந்திர போலீஸார் கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனர். அரசியல் பணி செய்த இருவரையும் சுட்டுக் கொன்று விட்டு இருவரையுமே திவீரவாதிகள் என்று சொன்னது இந்தியா. இநிலையில் இக்கொலைக்ளைக் கண்டித்து வியாழக்கிழமை நடத்திய இரண்டாவது நாள் பந்த்தின்போது ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் எட்டு இடங்களில் தாக்குதலில் ஈடுபட்டனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு ரயில் நிலையத்தை குண்டுவைத்து தகர்த்தனர். சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைவர் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். ஜூலை 7-ம் தேதி முதல் 48 மணி நேர நாடு தழுவிய முழு அடைப்புக்கு மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்தனர். இதனால் மாவோயிஸ்டுகள் செல்வாக்கு அதிகமுள்ள ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பிகார், மேற்கு வங்கம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. ஒரிசாவில் மரங்களை வெட்டி சாலைகள் முடக்கம்: மாவோயிஸ்டுகளின் பந்த்தால் ஒரிசாவில் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அங்கு மாவோயிஸ்ட் ஆதிக்கம் மிகுந்த மால்கங்கிரி, கோராபுத், கஜபதி, ராயகதா ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. சில இடங்களில் ரயில்களும் நிறுத்திவைக்கப்பட்டன. பல இடங்களில் மாவோயிஸ்டுகள் மரங்களை வெட்டி சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். இம்மாவட்டங்களின் கிராமப்புறங்களில் மாவோயிஸ்டுகளுக்கு பயந்து வியாபாரிகள் கடந்த இருநாள்களாக கடைகளைத் திறக்கவில்லை. இதனிடையே மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் போலீஸ் சப்இன்ஸ்பெக்டரை தேடும் பணியிலும் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். புதன்கிழமை இரவு காவல் நிலையத்தைத் தாக்கி விட்டு அவரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். ஜார்க்கண்ட்டில் ரயில் நிலையம் தகர்ப்பு: ஜார்க்கண்ட்டின் லத்திஹர் மாவட்டம் ஹெகேகதா ரயில் நிலையத்தின் ஒருபகுதியை மாவோயிஸ்டுகள் வெடிகுண்டுகள் வைத்துத் தகர்த்தனர். 100-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஆயுதங்களுடன் வந்து, 3 அறைகளை வெடிகுண்டுகள் மூலம் தரைமட்டமாக்கினர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தன்பாத் அருகே வியாழக்கிழமை அதிகாலையில் தண்டவாளம் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. லின்சித்பூர் பகுதி தண்டவாளத்திலும் குண்டுகள் வெடித்தன. இதனையடுத்து அந்தத் தடத்தில் செல்லும் ராஜ்தானி உள்பட பல ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த தாக்குதல்கள் குறித்து தகவல் கிடைத்ததும் பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்து, மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். ஆனால் சண்டையில் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனரா? என்பது குறித்த விவரம் உடனடியாகத் தெரியவரவில்லை. சத்தீஸ்கரில்சத்தீஸ்கரில் வியாழக்கிழமை, காங்கிரஸ் தலைவர் ஒருவர் வீட்டின் மீதும், காவல் நிலையத்தின் மீதும் மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். தந்தேவாடா மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர் கெüதமின் வீட்டின் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில் அவரது உறவினர்கள் இருவர் கொல்லப்பட்டனர்; அவரது மகனும், பாதுகாப்புக்கு இருந்த வீரர் ஒருவரும் படுகாயமடைந்தனர். புதன்கிழமை நள்ளிரவில் இதே மாவட்டத்தின் கெüகண்டா காவல் நிலையத்தை மாவோயிஸ்டுகள் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தினர். அப்போது 7 காவலர்கள் பணியில் இருந்தனர். அவர்கள் சுதாரித்துக் கொண்டு தகுந்த பதிலடி கொடுத்தனர். இதையடுத்து மாவோயிஸ்டுகள் தப்பியோடிவிட்டனர். இதில் 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.