மாவோயிஸ்ட்டுகளின் நிபந்தனைகளை ஏற்க முடியாது : சிதம்பரம்

 மாவோயிஸ்டுகள் அரசுக்கு நிபந்தனைகளை விதிப்பதை ஏற்க முடியாது என்றும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் அவர்கள் வன்முறையை கைவிட வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

தங்களுக்கு எதிரான நடவடிக்கையை 72 நாட்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தாக்குதலை நிறுத்துவதாக மாவோயிஸ்டுகள் நேற்று அறிவித்தனர்.

இந்நிலையில், ப.சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பேச்சுவார்த்தைக்கு முன்னதாக மாவோயிஸ்டுகள் வன்முறையை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், மாவோயிஸ்டுகள் நிபந்தனைகளை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வன்முறையை கைவிடுவதாகவும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் மாவோயிஸ்டு தலைவர்கள் தெளிவாக அறிவித்த பின்னரே, பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் ஆலோசித்து தான் உரிய பதிலை அளிக்க முடியும் என்றும் ப.சிதம்பரம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

4 thoughts on “மாவோயிஸ்ட்டுகளின் நிபந்தனைகளை ஏற்க முடியாது : சிதம்பரம்”

 1. பிரச்சனைகலை பேசித் தீருங்கள். ஆயுதங்கள் பயமுறூத்தவே அன்றீ பலி எடுக்க அல்ல.

 2. தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் பலியானார்.

  வடக்கு காஷ்மீரில் உள்ள சிபோரே மாவட்டம் சிங்கிபுரா மலைப்பகுதியில் ஒரு வீட்டில் தீவிரவாதிகள் 5 பேர் மறைந்திருப்பதாக இராணுவத்தினருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து இராணுவ வீரர்கள் அங்கு சென்று முற்றுகையிட்டனர்.

  அப்போது இராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சமரில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தியத் தரப்பில், இராணுவ அதிகாரி ஒருவரும், 2 இராணுவவீரர்களும் உயிரிழந்தனர்.

  இதில் உயிரிழந்த இராணுவ வீரர்களில் ஒருவரான செல்வக்குமார் தஞ்சையை அடுத்த விளார் அருகே உள்ள நடுவூரைச் சேர்ந்தவர்.

  செல்வக்குமார் இராணுவத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்தார். பெங்களூரில் பணிபுரிந்து வந்த அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் சென்றார்.

  தீவிரவாதிகளுடனான சமரில் பலியான செல்வக்குமாரின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டு பின்னர் இன்று (வியாழக்கிழமை) காலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

  1. சும்மா பெயருக்குப் போன் பண்ணீ அதைக் குறீப்பெடுத்து சட்டம் தம்மை ஒன்றூம் செய்யாதபடி பார்த்துக் கொள்ளூம் கொம்பனிகள் போல் பெயருக்குப் போய் நின்றூ கன்னைக் காட்டாமல் கண்ணயே காட்டிய மரணீத்த வீரனே உன் க்கு காஸ்மீர் ரோஜாவின் முத்தங்கள்.

 3. பங்குரா(மேற்கு வங்கம்), பிப்.25: மேற்கு வங்கத்தில் பாதுகாப்புப்படையினருக்கும், நக்ஸல்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் போலீஸ் அதிகாரி மற்றும் மாவோயிஸ்ட் ஒருவர் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர்.

  முன்னதாக பங்குரா மாவட்டம் சரேனிகா அருகே உள்ளுர் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் தலைவர் தரசங்கர் பாத்ரா மீது ஆயுதமேந்திய மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தினர். புதன்கிழமை இரவு நடைபெற்ற இச்சம்பவத்தில் தரசங்கர் பாத்ரா காயமடைந்தார்.

  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸôர் மற்றும் கூட்டுப்படையினர் அங்கிருந்த மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர். இச்சண்டையில் சரேனிகா போலீஸ் நிலைய அதிகாரி ரபிலோசன் மித்ரா உயிரிழந்தார். மேலும் மாவோயிஸ்ட் இயக்கத்தினைச் சேர்ந்த ஒருவரும் இச்சண்டையில் கொல்லப்பட்டார், மற்றொருவர் காயமடைந்தார். இத்தகவலை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Comments are closed.