மாவோயிஸ்ட்கள் வன்முறையைக் கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார்:அமைச்சர் சிதம்பரம்!

sitham  மாவோயிஸ்ட்கள் வன்முறையைக் கைவிட்டால் அவர்களுடன் மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

  இந்திய-திபெத் எல்லைக் காவல்படை உருவான 48-வது ஆண்டு தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

  மாவோயிஸ்ட்டுகள் வன்முறையைக் கைவிடவேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களுடன் அந்தந்த மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு உதவும்.

  மாநில அரசுகளுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம் ஆனால் அதற்கு முன் மாவோயிஸ்ட்கள் வன்முறையைக் கைவிட வேண்டும் என்றார்.

 தீவிரவாதிகளுக்கு நிதியுதவி கிடைப்பது குறித்த கேள்விக்குப் பதில் அளிக்கையில், தீவிரவாதிகளுக்கு நிதியளிக்கும் நிறுவனங்களைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம். இதுவரை 4 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

  மும்பைத் தாக்குதல் சம்பவ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிபதி அதிலிருந்து விலகியது குறித்த கேள்விக்குப் பதில் அளிக்கையில், இது ஒரு பெரிய விஷயம் அல்ல என்றார் அமைச்சர் ப.சிதம்பரம் .

 

 

2 thoughts on “மாவோயிஸ்ட்கள் வன்முறையைக் கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார்:அமைச்சர் சிதம்பரம்!”

 1. This is veryunfortunate.Avast country with various task forces could n’t control maosits .On the other hand they are dictating terms to the Govt.People are the sufferer.Home Ministry should speed up this important issue.
  k.Ragavan.

 2. The problem is not Maoist violece but state oppression and state terror.
  If the Maoists are only a band of terrorists they could have been wiped out like Veerappan and his gang, despite support from some local communities.
  The Maoists have a mass base although weakneses in their political work has been criticised by other Naxalites. That base is mostly among people oppressed by caste, ethnicity and class.

  The Indian state was ruthless in putting down the Telengana struggle shortly after independence. The same ruthlessness was evident in Punjab in the 1970s and 80s, in Nagaland, Manipur and Kashmir. Its conduct in Sri Lanka in 1987-89 and recently tell us what the Indian state is all about.
  The notorious Emergency regime of Indira is not to be forgotten

  If Chithamparam is serious about law and order let him bring the saffron brigadeunder control. They are the terrorists who are killing innocenr Muslims and Christians and provoking communal vilence.

Comments are closed.