மாவோயிஸ்டுகளை ஒடுக்க புதிய படை.

மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடுகளில் உள்ள கனிம வளங்களை கொள்ளையடித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கத் திட்டமிடும் மத்திய அரசுக்கு எதிராக பழங்குடி மக்கள் போராடி வருகிறார்கள். காடுகளில் இருந்து அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு ஆதரவாக களத்தில் நின்று போராடுகிறார்கள் மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள். எல்லையோர காவல்படை, இந்தோ, திபெத் காவல்படை, சி.ஆர்.பி.எப்ஃ, உள்ளூர் போலீஸ் என இத்தனை படைகளோடு கூடவே சட்டவிரோத சல்வார்ஜுடும் என்னும் படைகளையும் களமிரக்கி பழங்குடி மக்களையும் அவர்களின் வளங்களையும் வேட்டையாடி வருகிறது மத்திய அரசு. இந்நிலையில் நேரடியாக விமானப்படையைப் பயன்படுத்தி மாவோயிஸ்டுகளை ஒழித்துக் கட்டும் திட்டத்தோடு களமிரங்கியிருக்கிறது இந்திய அரசு. நேற்று தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நக்ஸல் பாதிப்பு அதிகம் உள்ள 7 மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிகார், சத்தீஸ்கர், ஒரிசா, மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேச முதல்வர்கள் பங்கேற்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுவதால் மாநில ஆளுநர் பங்கேற்றார். மேற்கு வங்கம் சார்பில் மூத்த அமைச்சர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் . சிதம்பரம் கூறியது: ” சத்தீஸ்கர், ஒரிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட நான்கு மாநில அரசுகள் ஒரு தனி படையை உருவாக்க வேண்டும். இந்த படை மாநில தலைமைச் செயலர் கட்டுப்பாட்டில் செயல்படுவதாக இருக்க வேண்டும். நக்ஸல்களை ஒழிக்க மத்திய அரசு கூடுதலாக ஹெலிகாப்டர்களை அளிக்கத் தயாராக உள்ளது. இதன் மூலம் படையினரை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எளிதாக முன்னேற்றிச் செல்லலாம். 400 காவல் நிலையங்கள்: நக்ஸலைட் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் 400 காவல் நிலையங்களை அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியில் 80 சதவீதத்தை மத்திய அரசு அளிக்கும். எஞ்சிய 20 சதவீதத்தை மாநில அரசு ஏற்க வேண்டும். ஒவ்வொன்றும் ரூ. 2 கோடி செலவில் நவீன வசதிகளைக் கொண்டதாக இந்த காவல் நிலையங்கள் கட்டப்படவுள்ளன. நக்ஸலைட்டுகளை ஒடுக்க ஐஜி அந்தஸ்தில் உள்ள காவல்துறை அதிகாரியை நியமிக்குமாறு ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒரிசா மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுஇந்த அதிகாரிகள் மற்ற மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நக்ஸலைட்டுகளுக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வர். என்று பேசினார்.

3 thoughts on “மாவோயிஸ்டுகளை ஒடுக்க புதிய படை.”

  1. சிதம்பரமும் சிங்கும் சமையல் செய்யப் புறப்பட்ட வித்துவான் கள் போல உதாரணத்திற்கு இங்கிலாந்தின் பந்து விளயாட்டுக்காரர் போல விளயாடும் வரைக்கும் வேர்ல்ட் கப் வின்னர்.சமையல் கட்டில் ஓடும் எலியை போஸ் குடுத்தெல்லாம் அழிக்கமுடியாது.

  2. சிதம்பரத்தை பாருங்கள் !மிகவும் நாகரீமானவர் .படித்தவர்.மென்மையாக பேசுபவர். அவர் ஒரு போதும் வன்முறையை விரும்பாதவர்.படித்தவர்கள் இந்த மாதிரியான காரியங்கள் செய்ய மாட்டார்கள்.
    அவர் ரொம்ப நல்லவர்.!!
    தயவு செய்து நம்புங்கள்.

  3. மென்மையை பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.சிதம்பரம் அந்த சிதம்பரத்திற்கே அல்வா கொடுப்பார்.

Comments are closed.