மாவீரர் தினம் – சொல்லப்பட்ட செய்தி : சபா நாவலன்

மே மாதம் 18ம் திகதி புலிகளின் தலைமையும் அதன் கட்டமைப்பும் முற்றாக அழிக்கப்பட்ட பின்னரான புதிய அரசியல் சூழல் 27ம் திகதி நவம்பர் மாதம் நிகழத்தப்படும் மாவீரர் தின நிகழ்வுகளின் பின்னர் இன்னொரு புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது. புலிகளின் அனைத்துக் கூறுகளும், அதன் எச்ச சொச்சங்களும் கூட துடைத்தொழிக்கப்பட்டு விட்டன என்ற செய்தி 2009ம் ஆண்டு மாவீரர் தினத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாகப் புலம் பெயர் herosdayதமிழர்கள் மத்தியில் பிரபாகரன் அல்லது குறைந்த பட்சம் பொட்டு அம்மானாவது மாவீரர் தினத்தில் உரையாற்றலாம் என்ற எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தகர்ந்து போயின.

பெருந்தேசிய ஒடுக்குமுறாக்கெதிரான தமிழ் பேசும் மக்களின் 60 ஆண்டுகள் நீண்ட வரலாற்றைக் கொண்ட போராட்டம் புலம்ம்பெயர் நாடுகளைப் பொறுத்தவரை இன்னும் புலிகளின் சிந்தனை முறையின் வரம்புகளுக்குள் தான் தேங்கியிருக்கின்றது என்பதை மாவீரர் நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. அதிர்ச்சியளிக்கும் பெரும் பணச்செலவும், பணச் சேகரிப்பும்,  உணர்ச்சி அரசியலும் புலிகளின் புலம் பெயர் ஆதரவுத் தலைமை இன்னமும் மக்களின் உணர்வுகளை தமது சுயலாப நோக்கங்களிற்காகப் பயன்படுத்துகின்ற அவல நிலையே காணப்படுவதை உணர்த்தி நிற்கிறது.

சரியான திசை நோக்கித் திட்டமிடப்படாத நியாயமான போராட்டம் ஆயிரக் கணக்கான உணர்வுமிக்க போராளிகளை மண்ணோடு மண்ணாக்கியிருக்கிறது; ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கை அரச பயங்கர வாதத்திற்குப் பலியாகியிருக்கிறார்கள்; ஊனமுற்ற, அங்கவீனர்களின் சமூகம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது; வன்னியில் சிறைவைக்கப்பட்ட மக்கள் போக அனைத்துத் தமிழ் பேசும் சிறுபான்மையினரும் இலங்கை எங்கும் ஆயுத முனையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சரத் பொன்சேகா என்ற கொடிய போர்க் குற்றவாளியும், 50 ஆயிரம் மக்களை தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொன்றொழித்த மகிந்த ராஜபக்ச அரசும் இன்னும் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் குறித்துப் கொண்டிருக்க உலகமெல்லாம் மௌனமாய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

இத்தனைக்கும் புலிகளின் புலம்பெயர் தலைமைக்கு எந்தத் தார்மீகப் பொறுப்பும், குற்றவுணர்வும் இல்லாதது போல் கம்பீரமாய் மேடை போட்டுப் பாட்டுப்பாடி இன்னொரு தீபாவழி போல் மாவீரர் தினம் கொண்டாடி முடிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் நிறுவன மயப்பட்ட சிங்களப் பெருந்தேசிய வாதம் என்பது அதன் உச்சநிலை அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அதற்கெல்லாம் துணை போகின்ற அரச துணைக் குழுக்கள், அதன் புலம் பெயர் அங்கங்கள், அவற்றின் சித்தந்தக் கூறுகள், அரச சார் தன்னார்வ நிறுவனங்கள், இந்திய மேலாத்திக்க அடக்குமுறை அனைத்துமே இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தின் தேவையையும் அதற்கான புதிய சிந்தனை முறையினதும், வழிமுறையினதும் தேவையும் இன்று என்றுமிலாதவாறு உணர்த்தி நிற்கிறது.

புலிகளின் தோல்வியிலிருந்தும், போராட்டங்களின் தோல்வியிலிருந்தும் அனுபவங்களைப் பெற்றுக்கொண்ட ஆயிரமாயிரம் தமிழ்பேசும் மக்கள் இலங்கையிலும் உலகம் முழுவதும் பரந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டில் தமிழர்கள் அதிகார வர்க்கத்தின் அரசியல் நலன்களுக்கும் மக்கள் நலன்களுக்கும் இடையேயான வேறுபாட்டை இனம் காண ஆரம்பித்துள்ளார்கள்.

ஈழப் போராட்டத்தின் தோல்வி என்பது இலங்கையின் தேசிய இனப்பிரச்சனைக்கு மட்டுமல்ல உலகத்தின் பல்வேறு பிரச்சனைகளின் புதிய நிலைகளிற்கும் உரைகல்.

ஒடுக்கப்படுகின்ற தேசிய இனங்களின் பக்கத்திலும், ஒடுக்கப்படுகின்ற மக்கள் கூட்டங்களின் சார்பிலும் தான் அதிக வலிமையும் பலமும் அமைந்திருக்கிறது. இலங்கையில் மட்டுமல்ல, மொத்த உலகத்திலும் அவர்கள் தான் பெரும்பான்மை. இந்தப் பெரும்பான்மைக்கு எதிரான ஒடுக்கும் அரச பயங்கரவாதம் ஒவ்வொரு நிமிடமும் அடக்குமுறைக்கான வியூகங்களை வகுத்துக்கொண்டிருக்கிறது.

உலகில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் அபிலாசைகளோடும், போராட்டங்களோடும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு மாறாக ஒடுக்கும் அரசுகளோடும், அதன் விரிவாக்க அங்கங்களோடும் தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட புலிகளின் தலமை, போராட்டத்தை மிக நீண்டகாலத்திற்குப் பிந்தள்ளியுள்ளது.

அரசியல் அதிகாரதைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வழிமுறைகலில் புலிகளுக்கும் அரசிற்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு எப்போதும் இருந்ததில்லை. புலிகளின் அரசியல் முறைமைக்குள் எந்த மக்கள் பற்றுள்ள முற்போக்கு இயக்கங்களும், அரச அதிகாரத்திற்கு எதிரான அமைப்புக்களும், அடங்கியதில்லை.

இன்று கூட மாவீரர் தினத்தில் கேணல் ராம் என்பவரின் உரை வெளியான போது பலருக்கு அவர் அரசின் பிடிக்குள் இருந்துதான் மக்களைக் குழப்பும் நோக்கில் அதனைப் பதிவுசெய்தாரா என்ற பரவலான சந்தேகம் எழுப்பப் படுகிறது. புலிகளுக்கு பரந்துபபட்ட அதிகாரத்திற்கு எதிரான போராட்ட அமைப்புக்களோடு தொடர்பிருந்திருக்குமானால் இவ்வாறான சந்தேகங்களுக்கே இடமிருந்திருக்காது. பல சந்தேகங்கள் சர்ச்சைகள் எல்லாம் புலிகளின் அரசியல் வழிமுறையின் இன்றைய தொடர்ச்சியாகவே அமைகிறது.

புலம் பெயர் தமிழர்கள், அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிற இனத்தின் அடையாளக் குரலாக ஒலிக்கும் அனைத்து வாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்ள முடியும்; ஆனல் அடக்குமுறையாளர்களோடு கைகோர்த்துக்கொண்டல்ல!

ஒடுக்குமுறைக்கெதிராக நிகழ்கின்ற அனைத்துப் போராட்டங்களோடும் எம்மை இணைத்துக்கொள்வதனூடாக மட்டுமே எமக்கான ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்திக் கொள்ள இயலும்.

புலிகளின் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்கின்ற முதலாவது சிந்தனை மாற்றம் இதுவாக அமையுமானால் நாம் புதியவற்றைத் தேடுவதற்கான முதல்படியாக அமையும்.

மாவீரர் களியாட்டங்களை நிகழ்த்தும் புலம்பெயர் புலிகளின் உணர்ச்சி அரசியலும் அரச பயங்கரவாதங்களோடு அவர்களின் அடையாளப்படுத்தலும் தகர்க்கப்படுவதற்கான வழிமுறை கூட இங்கிருந்துதான் ஆரம்பிக்கும்.

இந்தியாவிலும் இலங்கையிலும், உலகம் முழுவதிலும் மக்கள் பற்றோடு , சமுக உணர்வோடு போராடுகின்ற சக்திகளோடு எம்மை இணைத்துக்கொள்வதும், தன்னார்வ நிறுவனங்களும், புலி சார் சந்தர்ப்ப வாதிகளும், பண முதலைகளும், வியாபாரிகளும், அரச துணைக் குழுக்களும் ஒன்றிணைகின்ற அரசியல் தளத்தைத் தயவின்றி எதிர்த்து ஒடுக்குமுறைக்கு எதிரான விட்டுக்கொடுப்புக்களற்றுப் போராடுதல் என்பது மாவீரர் தினத்தின் பின்னான எமது அரசியலின் ஆரம்பமாகும் என நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

16 thoughts on “மாவீரர் தினம் – சொல்லப்பட்ட செய்தி : சபா நாவலன்”

 1. //புலி சார் சந்தர்ப்ப வாதிகளும், பண முதலைகளும், வியாபாரிகளும், அரச துணைக் குழுக்களும் ஒன்றிணைகின்ற அரசியல் தளத்தைத் தயவின்றி எதிர்த்து ஒடுக்குமுறைக்கு எதிரான விட்டுக்கொடுப்புக்களற்றுப் போராடுதல் என்பது மாவீரர் தினத்தின் பின்னான எமது அரசியலின் ஆரம்பமாகும் என நம்பிக்கையுடன் காத்திருப்போம்.//-சபா நாவலன்

  நீங்கள் காத்திருப்பவர் ஆனால் புலிகள் போராடுபவர்கள். இதுதான் வித்தியாசம். புலிகளுக்கும் உங்களுக்க்ம் என்ன வித்தியாசம் என்று நீங்கள் எழுதியவைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
  அழகான வார்த்தைகள் எப்போதும் போராட்டத்தை பெற்று தராது.

  1. சூரியன்: “நீங்கள் காத்திருப்பவர் ஆனால் புலிகள் போராடுபவர்கள். ”

   இனி எந்தப் புலிகள் எங்கே போராடுவது? யாருக்காகப் போராடுவது? யாருக்கு எதிராகப் போராடுவது?
   இவ்வளவு அழிவையும் பற்றி ஒரு கவலையோ பொறுப்போ இல்லாமல் நம்மால் எப்படி இவ்வளவு வாய்வீரம் பேச முடிகிறது?

   மக்கள் போராடுவார்கள்.
   ஆனால் முன்பு போல புலிகளின் பின்னாலோ தலைமைகளிடம் கேள்விகள் இல்லாமலோ அல்ல.

 2. I think you are confusing more in the current situation, i could understanding your feelings. But you should not forget or discourage the LTTEs. The LTTEs have been the spreadhead for the tamils for the long time and because of them the tamilians could run the freedom fighting for atleast 30 years and so on.
  Don’t let your confidence down and this opinion will afftect more peoples like me. We believe that the LTTE will come back strongly and give solution to the srilankan problem.

 3. I could not type in tamil. Kaalam bathil sollum. enakku kadavul, mooda nambikkai ellam illai. Ulaga varalatril entha oru inamum kolochiyathillai. Aagavae tamilargal oru naal lemuriya gandathil vallarasaaga irunthargal, aanal inroa migavum thuyarathil ullargal. Intha thuyaram oru naal marum, pazhaya porkalam thirumbum.

  1. Some of these comments sound like utterances by Jehovah’s Witnesses.
   The differences are about who they claim will return and for whose salvation.

   Let us get real, look at the reality and think afresh.

 4. தவருகலையும் அழிவையும் கொன்டிருன்ந்தபோதும் புலிகல் போராலிகலே.னீங்கல் போராலிகல் அல்ல.இந்த தன்னடக்கம் உங்கலிடம் வேன்டும். உஙகல் கருத்துக்கலில் தவரு இருப்பதில்லை.யேனெனில் அத்ர்க்கு செயல் இல்லை.வரலாரை வரலாட்ருப் பொருல்முதல்வாதகன்னோட்டத்தில் பாருஙகல்.உங்கல் விருப்பவியல் கன்னோட்டத்தில் தயவு செய்து பார்க்காதீர்கல்.

  1. அருமையான பதில். உண்மையான பதில். ஈழத்தில் அனைத்து அமைப்புகளையும் விலை பேசி உளவு ரா அமைப்பு வாங்கியபோது அதற்கு விலை போகாத மனிதர்கள் யார் தெரியுமா? புலிகள்தான். அதுதான் அவர்கள் பலம். அதுதான் அவர்களின் துருதிரிஷ்டம். மற்றபடி வாயளப்பவர்கள் யாரும் அங்கு போராடவில்லை. அவர்கள் மற்றவர்களை அனுமதிக்கவில்லை என்று சொல்லும் நபர்களுக்கு ஒரு பதில். ஏன் அவர்கள் இல்லாத பகுதியில் நீங்கள் அமைப்பு கட்டி சிங்கள இனவாதத்திற்கு எதிராக போராடி மக்களை நம்பிக்கைப் பெற்று பலம்பெற்றிருக்கலாமே. போராடுபவர்களை விமர்சனம் செய்யலாம். அதை அங்கீகரித்து அதில் உள்ள குறைகளை விமர்சனம் செய்யலாம். அதை விடுத்து ஏற்கெனவே போராடுபவர்களை அங்கீகரிக்கவில்லை என்றால், நீங்கள் எந்த ஒரு சதுரடியிலும் ஏதோ ஒரு மூளையிலும் சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்து போராடவில்லை என்றால் உங்களை ஏன் அவர்கள் நம்பவேண்டும். மக்கள் ஏன் நம்பவேண்டும். நீங்கள் செய்யும் விமர்சனம் சரியாக இருந்தாலும் ஏதோ உங்களுக்கு கெட்ட உள்நோக்கம் இருப்பதாகத்தான் அவர்கள் சந்தேகப்பட முடியும். ஆகையால் அதை ஏற்க முடியாமலும் கூட இருக்கலாம். அவர்கள் மார்க்சியவாதியாக வளரவில்லை. ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையில் வளர்ந்தவர்கள். ஈழத்தில், இலங்கையில் மார்க்சியம் பேசியவர்கள் எவரும் இன முரண்பாட்டின் பிரதான தன்மையை பார்க்க மறுத்தார்கள். அதை மறுத்துவிட்டு வாய்ஜாலம் வேண்டாம். அவர்கள் தனியாக இருந்தது பலம் மற்றும் பலவீணமாகும். மாற்றுக்கருத்து செயலோடு இருக்கும்போதுதான் அதை மக்கள் கூட ஏற்பார்கள். தேன் என்று சொல்வதாலே இனித்துவிடாது. புலிகள் தவறானவர்களாக இருந்ததாக நினைத்தால் புலிகளை எதிர்த்து உங்களால் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று அமைப்பு கட்ட முடியவில்லை என்றால், நீங்கள் சிங்களப் பேரினவாத வெறியர்களை எதிர்த்து இராணுவத்தை எதிர்த்து எப்படி இனவிடுதலைக்கான அமைப்பு கட்டுவீர்கள். எப்படி எதிரியை எதிர்த்தப் போராட்டத்தை நடத்துவீர்கள். முதலில் தேசிய விடுதலை போராட்டத்தை அங்கீகரித்து அதன் பிறகுதான் உங்கள் தத்துவம் மற்றும் செயல் மூலம் உங்கள் கருத்தாக மாற்றியமைக்க முடியும்.

  2. எவ்வளவு கவனமாக இலங்கையின் மார்க்சிய லெனினியவாதிகளதும் (ட்ரொட்ஸ்கியவாதிகளதுங் கூட) நிலைப்பாடுகளை “மக்கள் கருத்து” அறிந்திருக்கிறார் என்பதற்கு “இலங்கையில் மார்க்சியம் பேசியவர்கள் எவரும் இன முரண்பாட்டின் பிரதான தன்மையை பார்க்க மறுத்தார்கள்” என்ற கூற்றே போதிய சான்று.
   மற்ற விடயங்களைப் பற்றிப் பேசுவது வீண் கால விரயம்.

   பிரபா:
   இப்போது வன்னியில் உள்ள மக்களிடம் கேட்டால் புலிகள் எப்படியாக்கொத்த போராளிகள் என்பதற்கான நல்ல விளக்கத்தைச் சொல்லுவார்கள் .
   சும்மா போராடுவது போதாது நண்பரே. மக்களுக்காக மக்களுடன் சேர்ந்து மக்கள் போராட்டம் நடக்காவிட்டால் புலிகளின் அழிவு போலத் தான் முடியும்.
   அது புலிகளுக்கு விளங்கியதே சொற்பம். மூர்க்கத்தனமான ஆதரவாளர்கட்கு விளங்குவது அதிலும் சொற்பம்.

   இலங்கையின் நேர்மையான இடதுசாரிகள் புலிகளை விமர்சித்தாலும் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தர்கள். போராட்டத்தின் தவறான செல் நெறியைப் பற்றி எச்சரித்தார்கள். காதில் விழுந்ததா? விழத் தான் விட்டதா சூழ இருந்த பிற்போக்குக் கும்பல்?

   பிரபாகர்: உங்களது பொறுப்பான நிதானமான மதிப்பீட்டுடன் உடன்படுகிறேன்.

   1. புலிகல் போராலிகலில்லை. ஆனால் அவர்கல்நடத்திய போராட்டம் மட்டும் விடுதலைப் போராட்டம். முரன்பாடு இதில் இல்லையா?விமர்சிப்பது தவரல்ல. புலிகலை எதிர்ப்பதுதான் தவரு.செயலட்ரவன் செயலை விமர்சிக்க தகுதியட்ரவன்.

   2. “புலிகல் போராளிகலில்லை” என்று யார் சென்னது? அவர்கள் தவறான முறையில் வழிநடத்தப்பட்டார்கள் என்பது தான் செல்லப்பட்து.

    “ஆனால் அவர்கல் நடத்திய போராட்டம் மட்டும் விடுதலைப் போராட்டம்” என்பது தவறான புரிதல்.
    புலிகள் நடத்தியது விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. அவர்களது தவறான நடத்தை தான் பலராலும் விமர்சிக்கப்பட்டு வந்தது.

    “செயலட்ரவன் செயலை விமர்சிக்க தகுதியட்ரவன்.” பாசிச ஜேர்மனியையுமா?
    விமர்சனம் என்பது ஆதரவையும் உள்ளடக்கும்.
    எனவே இந்தத் தொப்பியைப் பொருந்துகிற தலைக்குப் போட்டுக்கொள்ளலாம்.

    1. செயலுக்குபோகாத கருத்துக்கலிலேயே காலம் தல்லுவதை விட செயலுக்கு விமர்சன ஆதரவு தருவது உயர்ந்தது நன்பரே.

 5. இத்தனை அழிவுகளுக்குப் பிறகும் பாடம் கற்றுக் கொள்ளாமல் விவேகமாய் செயல்படாமல் வாரும் வெட்டுவோம் குத்துவோம் என்ரெல்லாம் பேசாதீர். மீண்டு வரும் போராட்டம் இவற்றறிருந்து பாடம் கொண்டு நல்லதொரு பயன் கிட்ட முயல வெண்டுமே ஒழிய யாரையும் பழி வாங்கும் என்னமோ வஞ்சம் தீர்க்கும் எண்ணமோ வேண்டாம். நமது மக்கலளின் நலன் நல்வாழ்வு நமது முதல் நோக்கம் மற்றவை அல்லது அடுத்த முன்னெடுப்பாகட்டும். எதிர் கருத்துக்கல் வரவெற்கப்படுகிறது. யாரும் யாரையும் குறை கூற வேனண்டாம். வாருங்கள் இனியொரு வலிமையான தமிழ் சமூகத்தை கட்டியமைப்போம்.

 6. இத்தனை அழிவுகளுக்குப் பிறகும் பாடம் கற்றுக் கொள்ளாமல் விவேகமாய் செயல்படாமல் வாரும் வெட்டுவோம் குத்துவோம் என்ரெல்லாம் பேசாதீர். மீண்டு வரும் போராட்டம் இவற்றறிருந்து பாடம் கொண்டு நல்லதொரு பயன் கிட்ட முயல வெண்டுமே ஒழிய யாரையும் பழி வாங்கும் என்னமோ வஞ்சம் தீர்க்கும் எண்ணமோ வேண்டாம். நமது மக்கலளின் நலன் நல்வாழ்வு நமது முதல் நோக்கம் மற்றவை அல்லது அடுத்த முன்னெடுப்பாகட்டும். எதிர் கருத்துக்கள் வரவெற்கப்படுகிறது. யாரும் யாரையும் குறை கூற வேனண்டாம். வாருங்கள் இனியொரு வலிமையான தமிழ் சமூகத்தை கட்டியமைப்போம்.

  1. திரு.ச.பிரபாகர் கூறுவது போல் இனியொரு யுத்தம் தொடங்கும் ஆனால் அது நமது இனத்தை அழிக்கின்ற யுத்தமாக இருக்கக்கூடாது தமது இனத்தை அழிவிலிருந்து மீட்டெடுக்கின்ற, அதிகாரத்தை வழங்குகின்ற யுத்தமாக அது இருக்க வேண்டும். கத்தியின்றி, ரத்தமின்றி தொடங்கும் யுத்தமே நம் இனவிடுதலைக்கு வித்தாகும்.

 7. மடத் தனமான பதிவு . சிரிலன்கா பொராட்ட வரலாற்றை இடையில் இருந்து தெரிந்து கொண்டவர்களால் மட்டுமெ இப்படி வெறுவாயை மெல்ல முடிய்ம்

Comments are closed.