மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உத்தபுரம் தலித் மக்கள்.

உத்தபுரத்தில் தலித் மக்களை தீண்டாமையால் பிரித்து வைக்கும் படியான நீண்ட மதிற்சுவர் ஒன்றை எழுப்பியிருந்தனர். கொடிக்கால் பிள்ளைமார்கள். மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் தலையீட்டின் பெயரில் வேறு வழியில்லாமல் உத்தபுரத்தில் ஒரு பகுதி சுவர் இடிக்கப்பட்டது. ஆனால் திமுக, அதிமுக, உள்ளிட்டா எல்லா ஆதிக்க சாதி கட்சிகளுமே வெள்ளார்களை ஆதரிப்பதால் மாவட்ட நிர்வாகமும் தலித் விரோதப் போக்குடன் நடந்து கொள்கிறது. இந்நிலையில் உத்தபுரத்தில் 

 

சர்சைக்குரிய தீண்டாமை சுவற்றை அப்புறப்படுத்திய பின்னர், அப்பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றித் தரப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியிர் உறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரை குடிநீர், பேருந்து நிறுத்தம் போன்ற வசதிகள் செய்து தரப்படவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவுடன் உத்தரபுரம் தலித் மக்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகதை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.