மாலத்தீவு அமைச்சரவை கூட்டம் :கடலக்கடியில் கூடுகிறது!

maleமாலத்தீவு அமைச்சரவை கூட்டம் வரும் சனிக்கிழமையன்று (அக்.17) கடலக்கடியில் கூடுகிறது. ஜனாதிபதி முகமது நஷீத் இக்கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறார்.

தட்பவெப்ப மாற்றத்தின் தீவிரத்தன்மையை உலகின் கவனத்துக்கு கொண்டு வருவதற்காக அமைச்சரவைக் கூட்டம் கடல் நீருக்குள் நடக்கிறது. கடலுக்கடி யில் செல்லும் நபர்கள் பயன்படுத்தும் ஸ்கியூபா உடைகளையும் சாதனங்க ளையும் அமைச்சர்களும் ஜனாதிபதியும் அணிந்து கொள்வார்கள். இவர்கள் தகவல் பரிமாறிக் கொள்ள சைகைகளையும் சிலேட்டுகளையும் பயன்படுத்து வார்கள்.

டிசம்பரில் நடைபெறவுள்ள ஐ.நா. தட்பவெப்ப மாநாட்டுக்கு முன்னதாகவே அனைத்து நாடுகளும் கரிவாயு வெளியேற்றங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்ற அறிக்கையில் அமைச்சர்கள் கையொப்பமிடுவார்கள். கியோட்டோ தட்பவெப்ப சாசனம் 2012 டிசம்பரில் காலாவதியாகிறது. அதன் வாரிசு ஒப் பந்தத்தை டிசம்பரில் கோபன் ஹேகனில் நடைபெறும் ஐ.நா. மாநாடு இறுதிப் படுத்தும்.

மாலத்தீவு நாடு 1192 பவளத்தீவுகள் கொண்டதாகும். கடல் மட்டத்தை விட 1.5 மீட்டர் (சுமார் 4.83 அடி கள்) உயரத்தில் இந்நாடு அமைந்துள்ளது. தட்ப வெப்ப மாற்றத்தின் விளைவாக இரு துருவங்களிலும் உருகும் பனிக்கட்டிகளால் அதிகரிக்கும் கடல் மட்டம் இத்தீவுகளை விழுங்கி விடும் அபாயம் உள்ளது.

பூமி வெப்பமடையும் அபாயம் தவிர்க்கப்பட வேண்டுமென்றால் காற்றில் கலந்திருக்கும் கரியமில வாயுவின் அளவு 10 லட்சத்துக்கு 350 நுண் தூசுகள் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். தற்போது இந்த அளவு 385 ஆக உள்ளது.

கடலடி அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின் ஜனாதிபதி நஷீத் செய்தி யாளர்களுக்கு பேட்டியளிக்கவுள்ளார். அக்கூட்டத் தில் 350 இலக்கை மற்ற நாடுகள் எட்ட வேண்டுமென்று அவர் கோரிக்கை வைப்பார்.

கடலடி கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு ஆயுள் காப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.