மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஐவர் சுட்டுக்கொலை.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை முதல் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குறைந்தது ஐந்து செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்டவர்களே, அங்குள்ள லால்கர் பகுதியில் நடைபெற்ற கொலைகளின் பின்னணியில் இருந்தவர்கள் என்றும், அவர்கள், அந்தப் பகுதியில் தங்களை பலப்படுத்திவர முயற்சித்தார்கள் என்றும் போலீசார் கூறுகிறார்கள்.

இந்தச் செயற்பாட்டாளர்கள் தங்களது வீடுகளில் இருந்து இழுத்துவரப்பட்டு வெட்டியோ அல்லது சுட்டோ கொல்லப்பட்டுள்ளனர் என்று ஒரு போலீஸ் அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

லால்கர் பகுதியை விடுவித்துவிட்டதாக மாவோயிஸ்டுகள் அறிவித்த நிலையில் அந்தப் பகுதியின் கட்டுப்பாட்டை மீட்க மேற்கு வங்க அரசாங்கம் முயன்று வருகிறது.