மார்க்சியம் மற்றும் தேசியம் தொடர்பான அரசியல் உரையாடல்களும் யதார்த்தமும் : யதீந்திரா

– ‘வியூகம்’ – சஞ்சிகையை முன்னிறுத்தி சில குறிப்புக்கள்-

1

‘வியூகம்’ – இந்த சஞ்சிகை குறித்து சில விடயங்களை பதிவு செய்ய வேண்டுமென்று எண்ணம் சில நாட்களாகவே இருந்தது. இவ்வாறான முயற்சிகள் குறித்து ஈடுபாடுள்ள நன்பர் ஒருவரும் இது குறித்து நீங்கள் சில விடங்களை பகிர்ந்து கொள்ளலாமே என்றும் கேட்டிருந்தார், எனினும் இப்போதுதான் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இவ்வாறான கருத்தியல் விவாதங்களில் எல்லாம் ஒரு வகையான காதல் நீடித்த காலமொன்று இருந்தது உண்மைதான் ஆனால் இப்போதெல்லாம் இதில் பெரியளவு ஈடுபாடு காட்டுமளவிற்கு மனம் ஒப்புவதில்லை. இவ்வாறு கோட்பாடு, புரட்சிகர அரசியல் என்றெல்லாம் சொற்கள் வழி நம்மை அடையாளப்படுத்த முற்படுவது ஒரு வகையில் நமது ஆத்மதிருப்தி தொடர்பான விடயங்களோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

எனினும் இந்த குழுவினரின் கடந்தகாலம் தொடர்பாக என்னிடம் ஓரளவு அவதானம் இருந்ததும், இவர்களின் மார்க்சியம் குறித்த புரிதலில் உடன்பாடு இருப்பதாலும் இந்த சஞ்சிகை அடியொற்றிய எனது சில அபிப்பிராயங்களை பதிவு செய்ய விழைகின்றேன். புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் சமூக அக்கறையும் ஈடுபாடும் உள்ளவர்கள் மத்தியில் எழுந்திருக்கும் கேள்வி, அடுத்து என்ன என்பதாகும்.

புலிகளின் அரசியல் தமிழ் மக்களை இவ்வாறானதொரு வெறுமையில் கொண்டுவந்து விடும் என்று இவர்கள் எவருமே எண்ணியிருக்கவில்லை. அந்த வெறுமையின் சுமையை உணரும் ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த முறையில் சிந்திக்க முற்படுகின்றனர். அவ்வாறான முயற்சியில் ஒன்றுதான் இந்த மே-18 உம் அதன் வெளியீடான வியூகமும்.

உண்மையில் கடந்த முப்பது வருடங்களாக தமிழ்த் தேசிய அரசியலுக்கு தலைமைதாங்கிய புலிகளின் அதிர்சிகரமான அழிவுக்கு பின்னர் ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் என்ன என்ற கேள்விக்கு எவரிடமுமே ஒழுங்கான பதில் இல்லை. புலிகளின் தலைமை தமிழ் மக்களை எங்கு கொண்டுவந்து விட்டிருக்கின்றது என்பதிலும் நம்மிடம் ஒரு தெளிவான பதில் இல்லை. எனது நன்பர் ஒருவர் புலிகள் எங்களை எங்கு கொண்டுபோய் விட்டிருக்கின்றனர் என்பதனை என்னால் சரியாக விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கின்றது, 49 இல் விட்டிருக்கின்றனரா அல்லது 15 அல்லலு 16 ஆம் நூற்றாண்டிற்கு கொண்டு போயிருக்கின்றனரா? சொல்லத் தெரியவில்லை என்றார்.

அந்தளவிற்கு எல்லோர் மத்தியிலும் வெறுமை குடிகொண்டிருக்கின்றது. எனவே இவ்வாறானதொரு சூழலில் ஒவ்வொருவரும் தமக்கு தெரிந்த ஏதோவொன்றை பேச முயல்கின்றனர். இவ்வாறு அவர்கள் சிந்திக்க முற்படுவதை எவரும் பிழை என்றோ அதற்கு அவர்களுக்கு உரிமையில்லை என்றோ வாதிட முடியாது. நூறு பூக்கள் (கருத்துக்கள்) பூக்கட்டுமே என்ற உயர்ந்த அரசியல் பண்பின் வழியாகவே இதனை நாம் நோக்க வேண்டும். பல முரண்பட்ட நிலைப்பாடுகள் தோன்றினாலும் இறுதியில் நிலைக்கக் கூடியது எதுவோ அது மட்டுமே நிலைக்கும். அதுவே இயங்கியல் விதி. வியூகம் – இது, தேசியவாதம் குறித்து, சூறையாடப்படும் தமிழீழ வளங்கள், தேசிய விடுதலைப் போராட்டமும் புலிகளும் மற்றும் பெண்ணியம் ஆகிய தலைப்புகளை பேசு பொருளாக்கியிருக்கின்றது.

ஆனால் இந்த சஞ்சிகை அடிப்படையில் இவர்கள் முன்னர் வெளியிட்ட ‘உயிர்ப்பு’ கோட்பாட்டு இதழின் நீட்சியாகவே தெரிகிறது. ஒரு நோக்குடன் இயங்கியவர்கள் என்ற வகையில் இது இலகுவில் தவிர்க்கக் கூடிய ஒன்றல்ல என்பது விளங்கிக் கொள்ளக் கூடிய ஒன்றே! இந்த சஞ்சிகையில் இடம்பெற்றுள்ள ‘தேசியவாதம் குறித்து’ , ‘தேசிய விடுதலைப் போராட்டமும் புலிகளும்’, ‘பெண்ணியம்’ இப்படியான தலைப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் ஏலவே உயிர்ப்பில் விவாதிக்கப்பட்ட விடயங்களை அடியொற்றியதாகவே இருக்கின்றது அந்தவகையில் இதில் ஏதும் புதிய பார்வைகள் இருப்பதாகக் கொள்ள முடியவில்லை. ஏதோ பேச வேண்டும் என்னும் மனவேதனையின்பால் உந்தப்பட்டு எழுதப்பட்டவைகள் போல்தான் இதில் உள்ள ஆக்கங்கள் இருக்கின்றன.

2

இவர்கள் குறித்து சில அடிப்படையான கேள்விகளை எழுப்புவதற்கு முன்னர் இவர்களது மார்க்சிய புரிதல் குறிப்பாக, இப்போது மே18, முன்னர் தமீழீழ மக்கள் கட்சி அதற்கு முன்னர் தீப்பொறி என இவர்களின் படிமுறைசார் இயங்குதளங்களின் போதான கோட்பாட்டுசார் பங்களிப்புக்கள் மற்றும் மார்க்சிய ஒளியில் தேசியவாதத்தை புரிந்து கொள்வதற்கான கோட்பாட்டுசார் பங்களிப்புக்கள் குறித்து சிறிது பார்த்துக் கொள்ளுவது அவசியம் என்றே கருதுகிறேன்.

எனது அவதானத்தில் மார்க்சியத்தை புதிய போக்குகளுக்கு ஏற்ப சிந்திக்கும் முறையை ஈழத்து தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவர்களையே சாரும். மரபுவழியான மார்க்சிய பார்வையே முடிந்த முடிபு என்னும் வகையான வரட்டு பார்வைகள் மேலோங்கியிருந்த சூழலில் புதிய உலக ஒழுங்கிற்கு ஏற்ப மார்க்சியத்தை புரிந்து கொள்ள முயலும் விவாதங்களை முன்னிறுத்தியவர்கள் இவர்கள் என்றால் அது மிகையல்ல.

குறிப்பாக மார்க்சியத்திற்கும் தேசியத்துக்குமான உறவை லத்தீன் அமெரிக்க பின்புலத்தில் விளங்கிக் கொள்ளும் வகையில் அந்தக் காலத்தில் பல கட்டுரைகளை இவர்கள் வெளியிட்டிருக்கின்றனர். அத்துடன் தமிழ்த் தேசிய அரசியலை மார்க்சிய பின்புலத்தில் விளங்கிக் கொள்வதற்கான இவர்களது ஆய்வுசார் பங்களிப்புக்கள் மிகவும் கனதியானவை.

இவ்வாறான கருத்தியல் விவாதங்கள் ஈழத்து தமிழ்ச் சூழலில் மேலோங்கியிருந்த குறும் மார்க்சியப் போக்கை கேள்விக்குள்ளாக்குவதில் கணிசமான பங்களிப்புக்களை வழங்கியிருக்கின்றது. ஆனால் இதில் உள்ள துரதிஸ்டவசமான நிலைமை என்னவென்றால் இன்றும் ஈழத்து தமிழ்ச் சூழலில் மேற்படி குறும் மார்க்சியப் போக்கே மார்க்சியம் என்னும் பேரில் வலம்வருவதுதான். இவ்வாறான வரட்டு மார்க்சியத் தரப்பினர் தமது தேசியம் தொடர்பான விவாதங்களில் குறுந் தேசியவாதம் என்னும் கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்திருக்கின்றனர் அவர்களது அடை மொழியையே இங்கு அவர்களது மார்க்சிய புரிதலுக்கு நான் பயன்படுத்தியிருக்கின்றேன்.

எனது மிகச் சொற்பளவான அறிவின் பிரகாரம், மார்க்ஸ் புதிய பைபிளையோ அல்லது குர்-ஆணை ஒத்த வேறு ஏதும் மதம்சார் ஒழுக்க நூல்களையோ எழுதவில்லை என்றே நம்புகிறேன். எனது துனிபு சரியாயின் மார்க்ஸ் நம்மை சுற்றி நிகழும் விடயங்களை புரிந் கொள்ளுவதற்கும். இடைவிடாத இயக்கதின் மூலம் மாற்றங்களை நோக்கிச் செல்லுவதற்குமான சிந்தனை முறைமை ஒன்றையே வழங்கியிருக்கின்றார். மார்க்சின் காலத்தில் இருந்தது போன்று இன்று மார்க்சியத்தை நாம் பார்க்க முடியாது. மார்க்சியம் புதிய சூழலில் பிரயோகிக்கப்படும் போது அது அந்த சூழலுக்கு ஏற்ப புதுவகை பொலிவைப் பெற முடியும் என்று நம்புவர்களில் நானும் ஒருவன். இதற்கு சிறந்த உதாரணங்களாக ரஸ்ய, சீன அனுபவங்களைக் கொள்ள முடியும்.

மார்க்சின் வாதம் லெனினால் செயற்பாட்டுத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, அது சோவியத் அனுபவங்களின் வழியாக, லெனினிசமாக வெளிப்பட்டது. அதுவே மவோவால் கையாளப்பட்ட போது சீன அனுபவங்களின் வழியாக மவோயிசமாக அடையாளம் கானப்பட்டது. இப்படியே லத்தீன் அமெரிக்காவிலும் ஆபிரிக்காவிலும் அந்தந்த சூழலின் தாக்கங்களுக்கு ஏற்ப தேசியவாத அரசியல் அனுபவங்களுடன் மார்க்சியம் நிலைபெற்றது. இதில் பிரஞ்சு மார்க்சியரான ரெஜி ரெப்கேயின் வாதம் முக்கியமானது.

லத்தீன் அமெரிக்க விடுதலை அரசியல் அனுபவங்களை உள்வாங்கிச் சிந்தித்த ரெப்கே தேசியத்துடன் இணையாத சோசலிசம் இனி உயிர்வாழ முடியாது அதே போன்று சோசலிச உள்ளடக்கத்தை கொண்டிருக்காத தேசியத்தாலும் பயனில்லை என்றார். ஆனால் நமது சூழலில் நடந்ததோ வேறு. நமது ஆரம்பகால மார்க்சியர்கள் மற்றும் இன்றுவரை அவர்கள் வழி சிந்திக்கும் கனவான்கள் எவருமே ஈழத்து தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மார்க்சியத்தை புரிந்து கொள்ள முயலவில்லை மாறாக தாங்கள் மார்க்சியவாதிகளாக இருக்க வேண்டும் என்னும் உணர்வுநிலை சார்ந்தே மார்க்சியத்தை புரிந்து கொள்ள முயன்றனர்.

ஒருவகையில் இவர்கள் தமது அடையாளத்துவ அரசியலுக்காகவே மார்க்சியம் பேசியவர்கள்;. இந்த சிக்கலின் வெளிப்பாடுதான் சாதியத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டம் தொடங்கிய இவர்களால், இன்றுவரை அதனை பெருமையாகப் பேசிக் கொள்ளும் இவர்களால் வளர்ந்துவந்த தமிழர்களின் கொதிப்பான, முதன்மையான தேசிய அரசியலை புரிந்து கொள்ள முடியாமல் போனது.

இதனை மேலும் விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் மார்க்சியம் குறித்து மெத்தப் படித்தவரும் சீனசார்பு கம்யூனிஸ்ட கட்சியின் தலைவருமான தோழர் சண்முகதாசன் ஈழத் தமிழ் மக்களின் தேசியத்துவ தகுதி பற்றி கூறியிருக்கும் விடயங்களை கவனியுங்கள். ‘இலங்கைத் தமிழர்கள் ஏற்கனவே ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ளார்களா என்ற கேள்விக்கு இல்லை என்றுதான் பதலளிக்க முடியும். ஏனென்றால் ஒரு இன மக்களை ஒரு தேசிய இனம் என்று அழைப்பதற்கு இருக்கவேண்டிய நிபந்தனைகள் பற்றிய ஸ்டாலின் புகழ்பெற்ற வரையறைகளில் உள்ள ஒரு நிபந்தனை இலங்கைத் தமிழர்களுக்கு கிடையாது. அவர்கள் ஒரு பொதுவான பொருளாதாரத்தைக் கொண்டிருக்கவில்லை. இது மெத்தப் படித்த கம்யூனிஸ்ட் சண்முகதாசனின் புரிதல். (பார்க்க – மார்க்சிய பார்வையில் இலங்கைச் சரித்திரம்- பம்.76).

முள்ளந்தண்டை போல்ஷவிக்குகளிடமும். செஞ்சேனையிடமும் அடகு வைத்திருந்த இவர்களால் இறுதிவரை அதனை தாண்டி நமது சூழலுக்கு ஏற்ப சிந்திக்க முடிந்திருக்கவில்லை. இதன் சிறந்த குறியீடுதான் இவர்கள் தங்களை சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சி என்று பெருமையாக அழைத்துக் கொண்டமையாகும். இன்னொரு நாட்டின் பெயரில் எவ்வாறு இலங்கையில் தொழிற்பட முடியும், ஈழத்தில் செயலாற்ற முடியும் என்று இவர்கள் சிறிதளவு கூட சிந்தித்திருக்கவில்லை அந்தளவிற்கு முள்ளந்தண்டு இல்லாதவர்களாக இருந்திருக்கிறார்கள். உண்மையில் இங்கு நிகழ்ந்திருக்க வேண்டியது என்னவென்றால் மார்க்சிய, லெனினிச மற்றும் மாவோயிச அனுபவங்களானது நமது சூழலுக்கு ஏற்ப, அது சன்முகதாசனிசமாக நிலைபெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழ முடியாதளவிற்கு சுயசிந்தனை அற்றவர்களாக இவர்கள் இருந்திருக்கின்றனர்.

இதன் விழைவுதான் ஸ்டாலின் கூறியவற்றுள் ஒன்று இல்லை என்பதால் ஈழத் தமிழர்கள் தேசிய இனம் இல்லை என்னும் சிறுபிள்ளைத்தனமான வாதத்திற்கு சண்முகதாசனால் செல்ல முடிந்தது. என்னளவில் சொல்வேன், மார்க்சிய சிந்தனைகள் புதிய தலைமுறையினர் மத்தியில் பரவுவதை தடுத்து, அதனை இருட்டடிப்புச் செய்த பெருமை இவ்வாறானவர்களையே சாரும். அடிப்படையில் இவர்கள் மார்க்சிய விரோதிகள். சண்முகதாசன் வழி வந்த இவ்வாறான மார்க்சியர்கள், மார்க்சியம் குறித்த பிற்கால விவாதங்கள் எதனையுமே கருத்தில் கொள்ளவில்லை. விவாதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மதவாதமாகவே மார்க்சியத்தை சுருக்கினர். பிற்கால மார்க்சிய விவாதங்களில் செல்வாக்குச் செலுத்திய கிராம்சிய, அல்தூசரிய சிந்தனைகளை இவ்வாறானவர்கள் இன்றுவரை விளங்கிக் கொண்டதேயில்லை. (‘அமைப்பியல் வெளிச்சத்தில் தேசியவாத்தை விளங்கிக் கொள்ளல்’ என்னும் தலைப்பில் உயிர்ப்பு -4 இல் மிகச் சிறந்ததொரு கட்டுரை அப்போது வெளியாகியிருந்தது.) தேசியவாதத்தை வெறுமனே குட்டி முதலாளித்துவ வாதமாக விளக்க முற்பட்ட இந்த வகை குறும் மார்க்சியர்கள் லத்தீன் அமெரிக்க அனுபவங்களை ஆரம்பத்தில் கருத்தில் எடுத்திருக்கவில்லை.

ஆனால் இவர்களால் பிரஸ்தாபிக்கப்பட்ட மரபுவழி மார்க்சியம் காலாதிவதியாகிவிட்ட பின்னர், இன்று போக்கிடமற்று கியுபா குறித்து விவாதிக்க முற்பட்டிருக்கின்றனர். இந்த இடத்தில் மீண்டும் சண்முகதாசனின் கருத்தொன்றை நினைவு கொள்ளலாம். ஜே.வி.பி குறித்த தனது விமர்சனத்தில் சண் சேகுவேரா குறித்து இவ்வாறு கூறுகின்றார். ‘இலங்கையில் வளரும் மாஓசேதுங் சிந்தனையின் செல்வாக்கை எதிர்க்க இந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை.

ட்ரொட்ஸ்கியின் தத்துவங்களும், சமாதான சகவாழ்வு, பாராளுமன்றம் மூலம் சமாதான மாற்றம் ஆகிய திரிபுவாதத் தத்துவங்களும் மென்மேலும் அவமானத்தைச் சந்தித்துள்ள படியால், இளைஞர்களை மாஓசேதுங் சிந்தனையின் புரட்சிகர உண்மைகளிலிருந்து திசை திருப்பி விடுவதற்காக பிற்போக்குவாதிகள் ‘சேகுவேரா’ என்ற நாமத்துடன் தொடர்பான போலிப் புரட்சித் தத்;துவத்தை துணைக்கு அழைக்க வேண்டியிருந்தது.

ஒப்பீட்டளவில் ஒரு சிறிய கூட்டம், ஆயுதம் தாங்கிய வீரசிகாமணிகள் அல்லது கொரில்லாக்கள் அரசு இயந்திரத்தை கைப்பற்றிவிட்டு அதன் பின்னர் மக்களை தம் பக்கம் வென்றெடுக்கலாம் என்ற சேகுவேரா தத்துவத்தை அவர்கள் பரப்பினர். இது பலமான தனிநபர் வாதமும், தொழிலாளி வர்க்கத்தின் மீது நம்பிக்கையற்ற குட்டி முதலாளித்துவ நிலைப்பாடுமாகும்.’ (பார்க்க – மார்க்சிய பார்வையில் இலங்கைச் சரித்திரம்) இந்த சண்முகதாசனின் வழித்தோன்றல்கள்தான இப்போது கியூபா குறித்து கலந்துரையாடல்களை நடாத்திவருகின்றனர். 3 இந்த வகையில் பார்த்தால் இன்று மே18 ஆக வெளிப்படும் இவர்களின் மார்க்சிய புரிதல் மிகவும் முன்னேறிய நிலையில் இருக்கின்றது என்பதில் ஜயமில்லை.

ஆனால் இவ்வாறான உரையாடல்கள் கருத்தியல் அர்த்தத்தில் சரி ஆனால் நடைமுறையில் இது மிகவும் சிக்கலானது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது நம்மை வெறும் கற்பனாவாதத்தில் திருப்தியுறச் செய்துவிடுகிறது. இவ்வாறு மார்க்சிய பின்புலத்தில் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனையை விளக்க முற்படும் குழுவினர். ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வாக எதனை முன்மொழிய விரும்புகின்றனர்? மே 18 குழுவினர் தமிழீழம் என்னும் கோட்பாட்டில் நிலைகொண்டிருப்பதாகவே தெரிகிறது. இந்த சஞ்சிகையில் அந்த சொற்பதத்தை iயாண்டிருப்பத்தில் இருந்து இவர்களிடம் புலிகளிடம் இருந்தது போன்றதொரு தமிழீழம் குறித்த கனவே எஞ்சியிருப்பதாகக் கொள்ளலாம்.

புலிகளின் அர்த்தத்தில் தமிழ் ஈழம் என்பது பிரிந்து சென்று தனியான நாடொன்றை ஸ்தாபிப்பதாகும். இறுதிவரை புலிகள் அந்த இலட்சியத்திற்காக போராடி அழிந்திருக்கிறார்கள். இதற்காக புலிகள் அமைப்பின் போராளிகள் அளப்பரிய உயிர்தியாகங்களை செய்திருக்கின்றனர். நமது மக்கள் பெரும் விலையைக் கொடுத்திருக்கின்றனர். உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளை எடுத்துக் கொண்டால் ஈழத் தமிழர் தேசத்தில் நிகழ்ந்தது போன்ற தியாகங்களை வேறு எங்கும் நாம் கானமுடியாது. அந்தளவிற்கு ஒரு சிறிய தேசிய இனம் தனது சக்திக்கு மீறி தியாங்களைச் செய்து இன்று உருக்குலைந்து போயிருக்கின்றது. ஆனால் இத்தனை தியாகங்களாலும், உழைப்பாலும் குறிக்கப்பட்ட அந்த இலக்கை நோக்கி சிறிதளவு தூரம் கூட முன்னேற முடியவில்லை. ஏன்? இதன் அரசியல் உள்ளடக்கம் என்ன? ஈழத் தமிழர்களுக்காக போராட புறப்பட்ட அனைத்து இயக்கங்களும் ஆரம்பத்தில் தனிநாடு உருவாக்கவே புறப்பட்டனர் என்பது ஒன்றும் இரகசியமல்ல. ஆனால் அதில் புலிகளைப் போன்று உறுதியாக வேறு எந்தவொரு இயக்கமும், அரசியல் கட்சியும் இருந்ததில்லை. மாற்று ஏற்பாடுகளை நோக்கிப் போகக் கூடிய பல வாய்ப்புக்கள் புலிகளுக்கு கிடைத்த போதும் அதன் தலைமை அனைத்தையும் நிராகரித்து தமிழீழம் என்னும் ஒன்றிலேயே ஒருமித்திருந்தது.

இறுதியில் புலிகளின் கனவு ஈழத் தமிழர்களை நடுவீதியில் கொண்டு நிறுத்துவதிலேயே முடிந்திருக்கிறது. எனவே புலிகளின் அழிவின் மூலம் நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால் புலிகளின் அழிவுடன் அவர்கள் மாற்றுத் தெரிவுகளற்று முன்னிறுத்திய தமிழீழம் என்னும் நிலைப்பாடும் தோல்வியடைந்துவிட்டது என்பதே. எனவே மீண்டும் அதற்கு தூசுதட்ட முற்படுவது பிறிதொரு வகையிலான அரசியல் படுகுழியாகவே அமையும். எனவே மே18 ஆக இருக்கலாம் அல்லது மார்க்சியத்தின் வழி ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனைகளை விளக்க முற்படும் ஏனையோராக இருக்கலாம் அவ்வாறானவர்கள் முதலில் இந்த விடயத்தை கருத்தில் கொள்வது கட்டாயமானது. மே18 தரப்பினரின் தமிழீழம் என்னும் நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டால் இவர்கள் மார்க்சியத்தை சமகால நிலைமைகளுக்கு ஏற்ப பிரயோகிப்பது பற்றி பேசிக் கொண்டாலும், தமிழீழம் பற்றிப் பேசும் போது ஒரு வகையான கடந்தகாலத்தில் சிறைப்பட்டு சிந்திப்பவர்களாகவே இருக்கின்றனர்.

தீப்பொறியாக இயங்கிய இவர்கள் பின்னர் தனித்து இயங்கிய ஏனைய பல இயக்க உறுப்பினர்களை உள்வாங்கி தமிழீழ மக்கள் கட்சியாக தங்களை அடையாளப்படுத்தினர். இவர்கள் தமீழம் பற்றிப் பேசிய காலம்தான் விடுதலைப்புலிகளின் காலமும். இவர்களது தமிழீழம் என்னும் நிலைப்பாட்டை ஒரு கட்டுடைப்பு விமர்சனத்திற்கு உள்ளாக்கினால், களத்தில் விடுதலைப்புலிகள் தமிழ் ஈழத்திற்காக போராடிக் கொண்டிருந்ததால் புலிகளுக்கு சமாந்தரமானவர்களாக அதே வேளை அரசியலில் அவர்களைவிட முன்னேறியவர்களாக தம்மை நிலைநிறுத்த வேண்டுமாயின் புலிகள் உயர்த்திப்பிடித்த தமிழீழம் என்னும் ஒற்றை நிலைப்பாட்டையே தாமும் பற்றிப்பிடித்திருக்க வேண்டும் என்னும் உணர்வுநிலையே இவர்களிடம் இருந்திருக்கின்றது. தெற்காசிய பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைக் தீவில் வெறுமனே போராட்டம் நடாத்துவதன் மூலம் அதிலும் பிராந்திய வல்லரசான இந்தியாவிற்கு சண்டித்தனம் காட்டிக் கொண்டு ஒரு தனிநாட்டை பெற்றுவிட முடியுமென்று இவர்களை நம்பும்படி எது தூண்டியிருக்க முடியும். நிட்சயமாக இவர்கள் மிகவும் முன்னேறிய விஞ்ஞான பூர்வமான கோட்பாடொன்றை தாம் பின்பற்றுகிறோம் என்று வாதிட முயல்வார்களாயின் இவர்களால் பிராந்திய, புவிசார் அரசியல் நிலைமைகள் குறித்து துல்லியமான அவதானம் இல்லாமல் இயங்க முடியாது. உண்மையில் அந்தக் காலத்தில் இவ்வாறானவர்களிடம் நிலவிய புலியெதிர்ப்பு நிலைப்பாடே எந்தவிதமான ஆய்வுக் கண்ணோட்டமுமில்லாமல் புலிகளைவிட தம்மை முன்னேறிய பிரிவினராக காட்ட வேண்டுமென்னும் உணர்வுநிலைச் சிக்கலுக்குள் தள்ளியது. இதன் காரணமாவே இவர்களும் புலிகள் உயர்த்திப்பிடித்த தமிழ் ஈழம் என்னும் மறுபரிசீலனையற்ற நிலைப்பாடொன்றை நோக்கிச் சிந்திக்கத் தலைப்பட்டனர். இவர்கள் முன்னர் வெளியிட்ட உயிர்ப்பு-4 (ப.ம் -12) இல் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை காகிதப் புலிகள் என்று வாணித்திருந்தனர். ஆனால் காகிதப்புலிகள் முன்னிறுத்திய அதே வழிமுறையின் முலமே தாமும் சிந்தித்தனர். மாவோவிடம் இருந்து கடன் எடுத்த ‘காகிதப்புலி’ வாதத்தை இவர்கள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு பிரயோகித்த காலத்தில் உண்மையில் அவர்கள் காகிதப் புலிகளாக இருக்கவில்லை, நிஜப் புலிகளாகவே இருந்தனர்.

ஆரம்பத்தில் அமெரிக்காவை காகிதப்புலி என்று வர்ணித்த சீனப் பெருந்தலைவர் மாவோ 1972 களில் அமெரிக்கா காகிதப்புலி அல்ல நிஜப்புலிதான் என்று உணர்ந்து நிக்சனுடன் கைகுலுக்கிக் கொண்டார். அத்துடன் மவோசியத்தின் கதையும் முடிந்தது. புலிகள் இராணுவ ரீதியில் உச்சமாக இருந்தகாலத்தில் அவர்களின் வரலாற்று வெற்றியாகக் கருதப்பட்ட ஆணையிறவு வெற்றிக்கு பின்னர், புலிகள் காகிதப்புலிகள் அல்ல நிஜப்புலிகள்தான் என்பதை உணர்ந்து இவர்களில் பலரும் விடுதலைப் புலிகளை நோக்கி வந்தனர் என்பதே உண்மை. எனவே இவர்களிடம் ஈழத் தமிழ் மக்களின் தேவை என்ன என்பது குறித்து ஒரு தீர்க்கமான நிலைப்பாடு இருக்கவில்லை. இதன் விழைவுதான் இவர்கள் இப்போதும் புலம்பெயர் சூழலில் இருந்து கொண்டு தமிழ் ஈழம் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னும்  வரும்..

49 thoughts on “மார்க்சியம் மற்றும் தேசியம் தொடர்பான அரசியல் உரையாடல்களும் யதார்த்தமும் : யதீந்திரா”

 1. சண்முகதாசனின் ஈழத்தமிழர் குறித்த வரையறை தொடர்பாக கதைத்துவிட்டு அப்படியே விட்டுவிட்டீர்கள். அவரது அந்த நிலைப்பாட்டின் காரணமாகவே கட்சியில் உடைவு ஏற்பட்டு புதிய வளர்ச்சி ஒன்று ஏற்பட்டிருந்ததை ஏன் விட்டுவிட்டீர்கள்?

  இன்றும் சண்முகதாசன் நிலைப்பாட்டிலேயே இங்கத்தைய “மார்க்சிஸ்ட்”கள் இருக்கிறார்கள் என்றவாறான ஒரு பிம்பத்தை உண்டாக்கவா?

  ஜே வீ பீ யை நியாயப்படுத்துகிறீர்களா என்ன?

  கட்டுரை இன்னும் வந்தால்தான் தொகுப்பாக பதில் சொல்ல முடியும்.

  எல்லாவகையான இயங்கியலுக்குள்ளாலையும் வந்து கடைசியா உங்கட கட்டுரை இந்தியாதான் தமிழ் மக்களுக்கு ஆகப்பெரிய எதிரி என்ற உண்மையை சனத்திட்ட சொல்லிரக்கூடாது எண்டும், சனத்திட்ட பொய் சொல்லுறதே இண்டைக்குத்தேவையா இருக்கிற “யதார்த்த” அரசியல் எண்டும் முடியாம இருக்க யெகோவாவை வேண்டிக்கொள்கிறேன்.

 2. ‘இலங்கைத் தமிழர்கள் ஏற்கனவே ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ளார்களா என்ற கேள்விக்கு இல்லை என்றுதான் பதலளிக்க முடியும். ஏனென்றால் ஒரு இன மக்களை ஒரு தேசிய இனம் என்று அழைப்பதற்கு இருக்கவேண்டிய நிபந்தனைகள் பற்றிய ஸ்டாலின் புகழ்பெற்ற வரையறைகளில் உள்ள ஒரு நிபந்தனை இலங்கைத் தமிழர்களுக்கு கிடையாது. அவர்கள் ஒரு பொதுவான பொருளாதாரத்தைக் கொண்டிருக்கவில்லை. இது மெத்தப் படித்த கம்யூனிஸ்ட் சண்முகதாசனின் புரிதல். (பார்க்க – மார்க்சிய பார்வையில் இலங்கைச் சரித்திரம்- பம்.76)……

  சண்முகதாசன் ஸ்டாலின் சொன்ன வரையறையில் ஒன்று இல்லை என்று சொன்னார் .அது அவருடைய வெளிப்படையான கருத்து .மாக்சியத்துக்கு எதிரியான நீங்கள் மாக்சியத்துக்கு வெளியே தேசிய இன பிரச்சனை குறித்து தேட வேண்டியது தானே.
  பொருளாதாரத்தை குறித்து பேசும் பொது “மணி ஓடர்” பொருளாதாரம் என்று சொன்னது ஞாபகம். 30 வருடமாக புலிகள் நடத்திய போராட்டம் அவருடைய கருத்து பொய் /பிழை என நிரூபிக்கவில்லையே ?
  மாறி மாறி வந்த சிங்கள அரசுகளிடம் பேரம் பேசுவதும் கோடி கோடியாக பணம் வாங்கிய புலிகள் சுய பொருளாதரத்தை வளர்த்தார்களா ?மக்களுக்கு சிங்கள இன வெறி அரசுதான் சாப்பாடு போட்டது.
  புலிகள் அமைப்பு என்பது ஒரு மாபியா அமைப்பு .அவர்கள் அதை தேசியம் என்ற போர்வையால் மறைத்திருந்தார்கள்.சாதாரண மாபியா கும்பலாலே ஒரு அரசையோ ,மக்களையோ அச்சுறுத்த ,வழிப்பறி ,கொலை ,கொள்ளை ,ஆள்கடத்தல் ,ஆயுதம் கடத்தல் செய்ய முடியும் .30 வருடம் நீடித்த இந்த விளையாட்டுக்கள் எல்லாம் “தேசிய போராட்டம் ” என்பதால் மறைக்க பட்டது.உலகில் எந்த ஒரு மாபியா கும்பலுக்கும் இது வாயக்கவில்லை..

  இது” மெத்த படித்த “கட்டுரையாளர் போன்றோருக்கும் புரியவில்லை.
  மாக்க்சிய வாதிகளை மறைமுகமாக நையாண்டி பண்ணுவது ,கேவலப்படுத்துவது தான் மெத்த படித்த அப்பகாத்துமார் தமிழ் மக்களுக்கு கொடுத்து சென்ற முதுசம்
  .
  “மெத்த படித்த “அப்பாகாத்துமாரில் ஒருவரான சம்பந்தன் ஐயா திருகோணமலை பகுதிகளில் நிறைய காணிகளை வளைத்து பிடித்துள்ளதாக கேள்வி.!!இங்கே உள்ள திருகோணமலை வாசிகள் பொச்சடிக்கிரார்கள்.இதையும் மாக்க்சிய ஒளியில் தான் தேட வேண்டும் . !

 3. முகமிலி

  “எல்லாவகையான இயங்கியலுக்குள்ளாலையும் வந்து கடைசியா உங்கட கட்டுரை இந்தியாதான் தமிழ் மக்களுக்கு ஆகப்பெரிய எதிரி என்ற உண்மையை சனத்திட்ட சொல்லிரக்கூடாது எண்டும், சனத்திட்ட பொய் சொல்லுறதே இண்டைக்குத்தேவையா இருக்கிற “யதார்த்த” அரசியல் எண்டும் முடியாம இருக்க யெகோவாவை வேண்டிக்கொள்கிறேன்.”

  சரியான பொயின்டை பிடித்துள்ளீர்கள்.
  ஜதீந்திரா புது புது வகையில் இதைத்தான் புலம்பி வருகிறார்.

  1. தம்பி யோகன் உமக்கு ஆக்கபூர்வமாக சந்திக்கத் தொpயாதோ அல்லது அப்படியெதுவும் உமது மண்டைக்குள் இல்லையா? முன்னர் ஒரு முறை திரு.யதீந்திரா அவர்கள் சிவராமின் கருத்தொன்றை குறிப்பிட்டிருந்தார். உம்மைப் போன்றவர்களின் பின்னூட்டங்களைப் பார்க்கும் போது தம்பி அந்தக் கருத்துத்தானடா ஞாபகத்திற்கு வருகுது. முகமிலிகள்தான் முதுகெலும்பில்லாமல் ஏதோ உளறுகிறார்கள் என்றால் ஏதோ முகம் இருப்பதாக காட்டிக் கொள்ளும் நீரும் ஏன் உளறமுயல்கிறீர். ‘உங்களுக்கு அறிவு இல்லாமல் இருக்கலாம் மூளை இருக்கிறதல்லவா அதனை தம்பி யோகன் பயன்படுத்தும். யதீந்திரா தனது சில கருத்துக்களை வெளிப்படையாக தொpவித்து வருகிறார். அது அவரது நிலைப்பாடு. அவர இந்தியாவை ஒரு தீர்க்கமான சக்தியாக குறிப்பிடுகிறாரடா தம்பி. அது அவரது நிலைப்பாடு. ” தெற்காசிய பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைக் தீவில் வெறுமனே போராட்டம் நடாத்துவதன் மூலம் அதிலும் பிராந்திய வல்லரசான இந்தியாவிற்கு சண்டித்தனம் காட்டிக் கொண்டு ஒரு தனிநாட்டை பெற்றுவிட முடியுமென்று இவர்களை நம்பும்படி எது தூண்டியிருக்க முடியும். நிட்சயமாக இவர்கள் மிகவும் முன்னேறிய விஞ்ஞான பூர்வமான கோட்பாடொன்றை தாம் பின்பற்றுகிறோம் என்று வாதிட முயல்வார்களாயின் இவர்களால் பிராந்தியஇ புவிசார் அரசியல் நிலைமைகள் குறித்து துல்லியமான அவதானம் இல்லாமல் இயங்க முடியாது.”

   இது அவரது நிலைப்பாடடா தம்பி. கடந்த கால அனுபவங்கள் நமது இன்றைய அழிவு நிலைமை இவற்றுடன் ஒப்பிட்டு நோக்கினால் யதீந்திரா கூறுவது சாpயாகத்தான் இருக்கிறது. யதீந்திரா போன்றவர்கள் போனதைவிட்டுவிட்டு இருப்பவர்கள் குறித்து சிந்திக்கின்றனர். அதுதான் இன்றைய சூழலில் இந்தியாவை நாம் சாpயாக கையாள வேண்டும் என்று கூறுகின்றார். உம்மைப் போன்றவர்கள் மற்றும் முகமிலிகள் அவர் கூறுவது பிழையெனின் உங்கள் நிலைப்பாட்டைச் சொல்லுங்கள். இன்று பாpதவித்துக் கொண்டிருக்கும் நம்மட ஈழத்து சனங்களுக்கு என்ன வழியைக் காட்டப் போகின்றீர்கள். இதனை வெளிப்படையாகச் சொல்லுகள். உங்கள் சன்முகதாசனின் ஆவி வந்து தமிழ் மக்களை காப்பாற்றும் என்றால் எப்படாப்பா வரும்? அதனையாவது சொல்லுமன் கூடவே அது வரைக்கும் ந்மமட தமிழ் மக்களுக்கு என்னதான் தீர்வு அதனையும் சொல்லுமன். அதவிட்டுப் போட்டு யதீந்திரா அப்படிச் சொல்லுறார் இப்படியென்டு உளறிக் கொண்டு இருக்கிறீர். கொஞ்சமாவது முளையை பயன்படுத்த முயலுமடா தம்பி. தேசியம் தேசியம் என்று கூவி விக்கும் ஆக்களைத்தானடா தம்பி இன்று தமிழர் போராட்டம் மிச்சமா விட்டுப்போட்டுப் போயிருக்கிறது. உம்மைப் போன்றவர்கள் அடுத்த வியாபாரத்தை தொடங்க எண்ணுகிறீர்களோ. மர்க்சிய வியாபாரம்> புரட்சி அது இதென்ன்னும் வியாபாரம். சனங்களை போலி கற்பனைக்குள் அமுக்கி வைக்கும் அரசியலை விட்டுப் போட்டு யதீந்திரா போன்றவுர்கள் சொல்லுவதைப் போல் சிந்தித்தால் உருப்படலாம் அல்லது வேறு ஏதும் இருந்தால் சொலலடா தம்பி. ஆனால் மக்கள் போராட்டம் அப்படியெண்டு கதைவிடாதீம் நீங்கள் எப்போதுமே போராட்டத்தை உங்களுக்கு வெளியில்தானடா தேடுவிங்கள் தம்பி. உங்களையும் உம்மட குடும்பத்தையம் சேர்த்து போராட்டம் பற்றி யோசியும். கொழும்பில் பிளட் வாங்கி நல்லா பிள்ளையளையும் படிப்பித்து கரை சேர்த்துவிட்டு ஓய்வு காலத்தில் பொழுபோக்குக்கு மார்க்சியம் புரட்சி என்று கொல்லாதீங்களாடா தம்பி. மக்களின் நிலையில் இருந்து கொஞசமாவது சிந்திக்கடா தம்பி. தொடர்ந்து கதைப்பம்.

   1. அண்ணை, சிவமண்ணை,

    யதீந்திரா சொல்லுற இந்தியக்கால்புடி யதார்த்தம் என்னண்ணை யதார்த்தம்.. நான் சொல்லுறன் அத விட யதார்த்தமான அரசியலை என்னெண்டு..

    பிராந்தியத்தில வேணுமெண்டால் இந்தியா “தீர்மானகரமான” சக்தியாக இருக்கலாம்.

    ஆனால் “இறைமை” யுள்ள இந்த நாட்டுக்குள்ளை ராஜபக்ச தானண்ணை தீர்மானகரமான சக்தி. அவரன்றி அணுவும் அசையாதண்ணை..

    எண்டபடியால் இந்தியாவிட காலைப்புடிச்சு நக்கிறதை விடவும், ராஜபக்சவிட காலைக்கையைப்புடிச்சு போறது மிக்ச்சிறந்த அரசியல் யதார்த்தமண்ணை.

    எனெக்கென்னமோ இந்தியாவ விட ராஜபக்ச தமிழர்களுக்கு தோழமையான ஆள்போலத்தானண்ணை கிடக்கு.

    வன்னியில இத்தினியாயிரம் சனத்தை நச்சாயுதத்தை எல்லாம் கொட்டிக்கொன்று போட்ட இந்தியாவை விட, அதுக்கு முதலும் இந்தியன் ஆமிய தன்ட நலனுக்காக மட்டுமே அனுப்பி ஈழத்தமிழர்களை மட்டுமே கொன்ற இந்தியாவை விட, இப்ப வடக்குக்கிழக்கி மண்ணையும் வளங்களையும் எல்லாம் சுரண்டிக்கொள்ளையடிச்சுக்கொண்டுபோக முடிந்த பிரயத்தனைத்தை எல்லாம் செய்து வெற்றியும் கண்டு வாற இந்தியாவ விட, ராஜபக்ச எவளவோ மேலண்ணை…

    என்னெஅ சொல்லுறியள்? இதவிட யதார்த்தமான அர்சியல் வேற ஏதாவது வச்சிருக்கிறியளோ?

    1. தங்கள் கருத்துடன் நான் நூறு வீதம் உடன்படுகின்றேன்.
     இந்தியாவின் காலை பிடிப்பதை விட ராஜபக்சவின் காலை பிடிப்பது
     எவ்வளவோ மேல்.

 4. நட்புடன் தங்களின் பின்வரும் கூற்றுக்களுடன் உடன்படுகின்றேன்..

  “எனது துனிபு சரியாயின் மார்க்ஸ் நம்மை சுற்றி நிகழும் விடயங்களை புரிந் கொள்ளுவதற்கும். இடைவிடாத இயக்கதின் மூலம் மாற்றங்களை நோக்கிச் செல்லுவதற்குமான சிந்தனை முறைமை ஒன்றையே வழங்கியிருக்கின்றார். மார்க்சின் காலத்தில் இருந்தது போன்று இன்று மார்க்சியத்தை நாம் பார்க்க முடியாது. மார்க்சியம் புதிய சூழலில் பிரயோகிக்கப்படும் போது அது அந்த சூழலுக்கு ஏற்ப புதுவகை பொலிவைப் பெற முடியும் என்று நம்புவர்களில் நானும் ஒருவன்.”

  “மார்க்சின் வாதம் லெனினால் செயற்பாட்டுத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோதுஇ அது சோவியத் அனுபவங்களின் வழியாகஇ லெனினிசமாக வெளிப்பட்டது. அதுவே மவோவால் கையாளப்பட்ட போது சீன அனுபவங்களின் வழியாக மவோயிசமாக அடையாளம் கானப்பட்டது.”

  ஆனால் பின்வரும் கூற்றுடன் உடன்பட முடியவில்லை…

  “பல முரண்பட்ட நிலைப்பாடுகள் தோன்றினாலும் இறுதியில் நிலைக்கக் கூடியது எதுவோ அது மட்டுமே நிலைக்கும். அதுவே இயங்கியல் விதி”

  ஏனனில் இது நிலைத்து நிற்பவை எல்லாம் சாpயானது என்ற மறைமுகமான பார்வையைத தருவதாக உள்ளது என உணர்கின்றேன். உதாரணமாக புலிகளை எடுங்கள் அவர்கள் நிலைத்து நின்றதற்கு காணரம் அவர்களது அதிகாரத்துவ பலம். ஆகவே அது அப்பொழுது இயங்கியல் விதியா? இன்று இலங்கை அரசு இந்திய அரசு என்பன வெற்றி;பெற்றிருப்பதால் அவர்கள் நிலைத்து நிற்பது இயங்கியல் விதியா? ஆகவே இவர்கள் எல்லாம சாpயான பாதையிலா செல்கின்றனர்….
  வரலாற்றில் இன்னும் 60 வருடங்கள் பின்நோக்கிச் சென்றால் ஹிட்லர் அன்று நிலைத்து நின்றது ஜொ;மனியின் இயங்கியல் விதியா? ஏனக் கேட்பதை தவிர்க்க முடியவில்லை….இவ்வாறு எதிர் புரட்சிகர சக்திகள் நிலைத்து நிற்பதற்கு நின்றதற்கு காரணம் புரட்சிகர சக்திகளின் உறுதியின்மை செயற்பாட்டின்மை ஒற்றுமையின்மை காணரமில்லையா? இதை மறந்து நடப்பதை இயங்கியல் விதியாக ஏற்றுக்கொள்ளவதா?

  நான் நினைக்கின்றேன்….சமூக ஓட்டத்தைப் புரிந்துகொண்டு அதன் இயங்கியல் விதியல் அது பயணிக்கும் பாதையை முன்கூட்டியே ஊகித்து சமூக மாற்றத்திற்கான செயற்பர்ட்டை முன்னெடுப்பதல்லா புரட்சிகர சக்திகளின் அடிப்படை பணியாக இருக்கவேண்டும். இவ்வாறனா ஆற்றல்கள் கொண்ட கோட்பாட்டை உருவாக்கக் கூடிய சக்திகள் நம்மிடம் இல்லாததுதான் இன்றைய தோல்விக்கு காரணம்.

  “ஈழத் தமிழ் மக்களின் தேசியத்துவ தகுதி” என்பது அவர்கள் தமிழ் பேசும் மனிதா;களாக பரந்துபட்டு அடக்கப்படுவதே போதுமானது என்பதே எனது நிலைப்பாடு. இதற்காக நாம் மார்க்ஸிய சிந்தனையாளர்களிடமோ அல்லது பிற புரட்சியாளர்களிடமோ அடைக்கலம் புகுந்து வக்காலத்துவாங்க வேண்டிய தேவையில்லை என்றே நினைக்கின்றேன்.
  நீங்கள் மேலே கூறியபடி நமது சுழல்களுக்கு ஏற்ப மார்க்ஸின் சிந்தனையை மட்டுமல்ல இன்றைய நிலையில் பெண்ணியம் மற்றும் தனிநபர் மாற்றம் அல்லது வளர்ச்சிக்கான புத்தாpன் சிந்தனைகளையும் ஒன்றினைத்தே நமது கோட்பாடுகளையும் அதற்கமைவான மூலோபாயங்களையும் செயற்பாடுகளையும உருவாக்க வேண்டும்.

  வீயூகம் சஞ்சிகைக்கு நான் எழுதிய குறிப்புகளை அல்லது கடிதங்களை இங்கு இணைக்கின்றே;ன.;…

  நன்றி

  மீராபாரதி

  வீயூகம் சஞ்சிகை: எனது குறிப்புகளும் விமர்சனங்களும்-1-2-3-4
  http://meerabharathy.wordpress.com/

  1. //“பல முரண்பட்ட நிலைப்பாடுகள் தோன்றினாலும் இறுதியில் நிலைக்கக் கூடியது எதுவோ அது மட்டுமே நிலைக்கும். அதுவே இயங்கியல் விதி”//

   இயங்கியலுக்கு நீங்களே தவறான விளக்கத்தை கொடுத்துவிட்டு, அதற்கு நீங்களே தவறான விமர்சனமும் வைக்கிறீர்கள். 

   நிலைமறுப்பின் நிலைமறுப்பு
   மாற்றம் ஒன்றே மாறாதது
   இவைதான் இயங்கியல்

   ஆனால் இவையெல்லாம் பொருளை மறுத்துவிட்டு பேசும் இயங்கியல் அல்ல. பொருள் இருப்பை அங்கீகரித்து இயங்கியலை விளக்கும். அதுதான் மார்க்சியம்.
   நீங்கள் இயங்கியலை தவறான பார்வையில் விளக்குகிறீர்கள். நிலைத்து நிற்பது இயங்கியல் என்பது தவறானது.

   உலகத்தில் கம்யூனிஸ்ட் தத்துவத்தை குறை சொல்வதற்கு, முதலில் அவர்கள் செய்யும் வேலை என்ன தெரியுமா? இவர்களுக்கு தோன்றியதை எல்லாம் பிடிக்காததை எல்லாம் முதலில் கம்யூனிஸ்ட் தத்துவமாக சொல்லுவது. பிறகு அதை மறுப்பதாக கூறி கம்யூனிசத்தை தூற்றுவது. இது சிறுபிள்ளைத் தனமான வேலை. 

   கம்யூனிஸ்ட் கட்சிகள் வேண்டுமானால் கம்யூனிசத்தின் பேராலேயே தவறுகள் செய்யலாம். ஆனால் சரியான மார்க்சிய தத்தும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். பிறகு அதிலிருந்து உங்களின் கருத்தை தெரிவியுங்கள். அதை விடுத்து நீங்கள் நினைப்பதை எல்லாம் தத்துவமாக சொல்லாதீர்கள். ஆரோக்கியமானது அல்ல.

   1. இங்கு நான் இயங்கியல் என்ற சொல் கொண்டு விளக்க முற்பட்ட அரசியல் உங்களுக்கு விளங்கவில்லை என்றே நினைக்கின்றேன். இங்கு நான் குறிப்பிட்டிருப்பது பல அமைப்புக்கள் ஒரு குறிப்பிட்ட சமூகதாயத்தை ஒரு குறிப்பிட்ட சூழலில் பிரதிபலிக்கலாம் ஆனால் சூழலை சாpயாக விளங்கிக் கொண்டு இயங்கும் அமைப்புக்களே உயிர்வாழும் மற்றவை அழியும் என்பதைத்தான் இங்கு நான் குறிப்பிட்டிருக்கின்றேன். எனது எழுத்துக்கள் சமகால ஈழத்து அரசியல் நிலைமை குறிப்பாக மக்களின் நிலைமை இவற்றைக் கருத்தில் கொண்டவையே தவிர அதிகம் தத்துவார்த்தை புலமைகள் குறித்த விவாதங்கள் தொடர்பானவைகள் அல்ல. புலிகளின் அழிவுக்கு பின்னர் பல்வேறு சக்திகள் ஈழத்தமிழர் அரசியல் அரங்கில் வெளிப்பட்டிருக்கின்றன. அவற்றுள் சில முன்னர் இயங்கி புலிகளின் காலத்தில் இயங்க முடியாமல் போனவை. சில தற்போதைய சூழலில் புதிதாக தம்மை வெளிப்படுத்தி நிற்பவை. இவற்றில் நிலைக்கப் போவது எது என்பதை இப்போது திட்டவட்டமாகச் நம்மால் குறிப்பிட முடியாது. இத்தகையதொரு நிலைமையே நான் இங்கு நிலைக்கக் கூடியவையே நிலைக்கும் என்ற அர்த்த்ததில் குறிப்பிட்டிருக்கின்றேன். ஒரு கட்டுரையின் பக்க மற்றும் பத்தி ஒழுங்கு வரையறைகளைக் கருத்தில் கொண்டே நான் எழுதுவதுண்டு. விடயங்களை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி விளங்கிக் கொள்ளக் கூடியவர்கள் விளங்கிக் கொள்ள முடியும். அது உங்களால் முடியவில்லை போலும். இதனை இன்னும் உங்களுக்கு எளிமைப்படுத்துவதாயின் – தோன்றி மறைந்து சிதைந்து மறுபடியும் மறுபடியும் புதியன தோன்றும் இந்த இயங்கியல் விதியையே நான் அமைப்புசார் இயக்கங்களுக்கு பொருத்தியிருக்கின்றேன். இங்கு நிலைத்தல் என்பதை பல்வேறு கோணங்களில் பார்க்க முடியும். அது ஒரு அமைப்பு நிலைத்து மற்றைய அமைப்புக்கள் சிதைவடையலாம் அல்லது பல்வேுறு அமைப்புக்கள் ஒன்றாக கரைந்து ஓரமைப்பாக பாpணமிக்கலாம். இப்படி பல கோணங்களில் பார்க்கலாம்.

    தவிர இங்கு நான் மே18 என்னும் அமைப்பு புலிகளின் அழிவுக்கு பின்னர் ஈழத்து தமிழ் சமூகத்திற்கான தலைமை குறித்து பேசியிருப்பதாலும்

    வர்கள் மார்க்சிய வழியான அணுகுமுறையை அடுத்த கட்ட நகர்வுக்கான ஒன்றாக விவாதிக்க முற்பட்டிருப்பதையுமே விடயமாகச் சுட்டியிருக்கிறேன். அவர்கள் குறித்து பார்த்ததன் காரணமாகவே இங்க மார்க்சியம் தேசியம் குறித்த ஒரு சில வியடங்களை பதிவு செய்திருக்கிறேன் அவர்களுடன் தொடர்படுத்தி. மற்றும்படி நான் இங்கு கம்யூனிசம் தொடர்பாக தத்துவார்த்த விவாதங்கள் செய்ய முயன்றிருக்கவில்லை மேலும் ” இவர்களுக்கு தோன்றியதை எல்லாம் பிடிக்காததை எல்லாம் முதலில் கம்யூனிஸ்ட் தத்துவமாக சொல்லுவது. பிறகு அதை மறுப்பதாக கூறி கம்யூனிசத்தை தூற்றுவது. இது சிறுபிள்ளைத் தனமான வேலை” இது சுவார்சுயமானது. நான் இங்கு எதனையும் தூற்ற முயலவில்லை தவிர தூற்றுதல் மற்றும் போற்றுதல் என்பது ஒன்று இயக்கத்தில் இருக்குபோதுதான் சாத்தியப்பட முடியும். அது வெறுமனே சுயதிருப்திக்கான ஆசையாக இருக்கும் போது அங்கு தூற்றுவதற்கு என்ன இருக்க முடியும். கம்யூனிசம் ஒரு இயங்குநிலை சக்தி என்று நான் நம்பவில்லை இன்றைய உலக நிலைமையில். மற்றும்படி உங்கள் மார்க்சியம் குறித்த பதிலளிப்புக்களில் உங்கள் புரிதல் மிகவும் வைதீகப்பட்டதாகத் தொpகிறது. மீராபாரதியின் அடிக்கட்டுமானம் குறித்த கேள்விக்கு நீங்கள் கொடுத்திருக்கும் பதில் மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. நீங்கள் ஒரு போதுமே அல்தூசரை படிக்க முற்பட்டதில்லை என்றே தொpகிறது. இது இயலாமையல்ல விருப்பமின்மை. இது பலாpடம் உண்டு. எனவே உங்கள் பார்வையில் நான் மார்க்சியம் விளங்காதவனாகவும் அதற்கு எதிரானவனாகவுமே தொpவேன். அது வியப்புக்குரிதல்ல அதே போன்று எனது பார்வையில் உங்களுடன் பேசுவது பயனற்றது என்றே எண்ணுவேன். எனவே நன்பரே அடிப்படையிலேயே நாம் விவாதிக்க முடியாது ஏனெனில் நான் சொல்லவதை நீங்கள் விளங்கிக் கொள்ள முனைய மாட்டீர்கள். அதே போன்றுதான் இங்கு மாவோவின் காகிதப் புலிக் கூற்று. மவோவை அமொpக்காவுடன் தொடர்பு கொள்ள வைத்தது எது என்பதுதான் இங்கு கேள்வியே தவிர உங்கள் மவோ மீதான காதலல்ல. இதுவும் உங்கள் சுயதிருப்தி தொடர்பானதுதான். சீனப் பெருந்தலைவருக்கு அமெரிக்கா காகிதப்புலி அல்ல நிஜப்புலிதான் என்று விளங்கிக் கொள்ள 30 வருடங்கள் எடுத்திருக்கின்றது. இங்கு ஈழத்தில் மார்க்சியர்கள் என்போர் கடந்தகாலத்தில் காதல் கொள்ளும் அளவிற்கு சமகாலத்தை விரும்புவதில்லை. ஒரு வகையில் இது ஒரு வகை தப்பித்தல் மார்க்கமாகவும் இருக்கக் கூடும். ஏனெனில் இவ்வாறு பழைய பஞ்சாங்கத்தை ஓதிக் கொண்டிருப்பது மிகவும் சுகமானது அது இயங்க வேண்டிய புதிதாக சிந்திக்க வேண்டிய பொறுப்பை தட்டிக் கழிப்பதற்கு இலகுவானது. அது ஒரு வகை லும்பன் தத்துவார்த்தம் அல்லது லும்பன் விவாதம். நான் எந்தவொரு தத்துவார்த்த லும்பன்களுடனும் இப்போது விவாதிக்கும் நிலையில் இல்லை.

   2. //நான் எந்தவொரு தத்துவார்த்த லும்பன்களுடனும் இப்போது விவாதிக்கும் நிலையில் இல்லை.//

    உங்களுக்கு எனது பதிலாக இதையே திருப்பிப் படித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் உங்களை வழிமொழியும் லும்பன்களின் இணையதளமான அதே பெயரில் இயங்கும் http://lumpini.in/ போய் சொரிந்து கொள்ளுங்கள். இல்லை இந்த இணைய முகவரிதான் ஏற்றது என்றால் இவர்களுடன் கூட கொஞ்சி குலாவுங்கள் அது உங்கள் விருப்பம். கட்டுடைத்தல் வாதிகளிடம் நானும் விவாதிக்க விருப்பமுடையவன் அல்ல. அவர்கள் எதையும் கட்டியமைப்பவர்கள் அல்ல. எல்லாவற்றையும் எந்த ஒழுங்கையுமே சரியானதோ, தவறானதோ எல்லாவற்றையுமே சிதரடித்து எதுவுமில்லாமல் செய்பவர்கள் என்று நான் நன்றாகவே அறிவேன். உங்கள் மாயவாதத்தை, மாய வித்தையை என்னால் அறியமுடியாது, ஏன் உலகத்தில் உள்ள ஒழுங்காக சிந்திக்கும் எவருமே அறியமுடியாது. ஏன் என்றால் நீங்கள் எதையுமே சொல்லப்போவதில்லை, ஆகையால் அறிவதற்கு உங்களிடம் எதுவுமில்லை, யாருக்கும். கீற்று என்கிற இணையதளத்தில் உங்களைப் போன்றே அதிமேதாவி உங்கள் குரு அ.மார்க்ஸ் அவர்களுக்கு கார்க்கி என்பவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். அவரால் இன்று வரை பதில் சொல்லத் தயாரில்லை, அதே போல்தான் மார்க்சியத்திற்கு அல்தூசர் முதற்கொண்டு கிராம்ஸ்கி வரை அனைவருக்கும் எல்லா மார்க்சிய தலைவர்களும் லெனின் முதல் மாவோ வரை பதில் கூறிவிட்டனர். இதற்கு மேல் அவர்களுக்கே உங்கள் குருக்களுக்கே பதில் சொல்லும் அளவிற்கு ஒன்றுமில்லை.

   3. நன்றி பாரதி,
    நான் கொடுப்பதற்கு முன் எனது பதிலாக நீங்கள் கொடுத்த பதில். நான் யதீந்திரா என்பவரைப் பற்றி அறியேன். ஆனால் அவர் கருத்தின் அடிப்படையிலேயே விவாதித்திருந்தேன். ஆனால் அவர் அல்தூசரை படி என்று கோடிட்ட போதுதான் என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது. இவர்கள் யார் என்பதை. யதீந்திரா உங்களுடைய பார்வையை கூறியதற்கு நன்றி, அதை வழி மொழிந்த மற்றவர்களுக்கும் குறிப்பாக மீராபாரதி அவர்களுக்கும் நன்றி. ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. இவர்களுக்கு அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம் என்று வரையறுத்தாலே கிலி பிடுங்குகிறது. கிராம்சியின் வழி வந்த இவர்களிடம் இதற்குமேல் வேறு எதையும் எதிர்ப்பார்க்கத் தேவையில்லை. எதை மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ தவறு என்று மறுத்து சரியானதை நிரூபித்து நிறுவினார்களோ, அதை மீண்டும் தூசு தட்டி எடுத்து பழைய கள் புதிய மொந்தையில் கொடுக்க முனைகிறார்கள். அதனாலே மார்க்சியத்தை மறுப்பவர்களை வைத்து கட்டுரை வெளியிடுகிறார்கள். சிலரின் முகம் காலதாமதமாக தெரிகிறது. நான்காவது சர்வதேசிய வாதிகளின் தொடர்ச்சியை குறிப்பாக இலங்கையில் அதிகம் இறக்குமதி செய்யப்பட்டது என்பதை அறிந்திருக்கிறேன், அது இப்போது வீரியத்தோடு வேலை செய்ய புறப்பட்டிருக்கிறது. விழித்துக்கொள்வோம். லெனினியத்தின் பெயராலேயே, மாவோவின் பெயராலேயே சிதைப்பதை முறியடிப்போம், மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம். இவர்களை புதைக்க நினைப்ப்வர்களை அம்பலப்படுத்துவோம். மீண்டும் பாரதிக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.

 5. ஆதிவாசி பெண்கள் நிர்வாண ஊர்வலம்”

  ஒரிசாவில் உள்ள இந்தியப் பழங்குடியினர்
  இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் ஆதிவாசிப் பெண்கள் இருவர் ஆடை களையப்பட்டு பெருந்திரளானோர் முன்னிலையில் நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்பதை பொலிசார் உறுதிசெய்துள்ளனர்.
  மாற்று ஜாதி ஆண்களுடன் நெருங்கிப் பழகியதற்காக அவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

  கடந்த வாரமும் இதேபோல வேறொரு பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

  அந்தப் பெண் நிர்வாணமாகக் கொண்டுசெல்லப்பட்டபோது சுற்றி நின்று பார்த்தவர்கள் அவரைக் கேலி செய்துப் படமெடுத்தனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

  அந்தச் சம்பவம் பற்றிய வீடியோ படம் இணையதளம் ஒன்றில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஊடகங்களிலும் இந்த சம்பவம் குறித்த செய்திகள் அதிக அளவு வெளியானதை அடுத்து இது தொடர்பாக ஒரு விசாரணைக்கு உத்திரவிடப்பட்டிருந்தது.

  இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஜாதி ரீதியான ஒடுக்குமுறைகளை தலித்துக்களும், ஆதிவாசிகளும் சந்தித்து வருகின்றனர்.

  மேற்கு வங்கத்தை இடதுசாரிகள்தான் மூன்று தசாப்தங்களாக ஆண்டு வருகின்றனர்.

  இவற்றையும் காண்க
  இந்திய எம்.பி.க்கள் சம்பளம் உயர்வு
  ஆஸ்திரேலிய தேர்தலில் அகதிகள்
  சுருங்குகிறதா நிலவு?-விஞ்ஞானிகள்
  இந்தியாவின் உதவியை பாகிஸ்தான் ஏற்றது

 6. யதீந்திரா,
  உங்கள் கட்டுரை வாசிக்கக்கிடைத்ததில் மகிழ்ச்சி.
  சிலமுக்கியமான விடயங்கள் குறித்து கலந்துரையாட விரும்புகின்றேன். நீங்கள்
  “புலிகளின் அழிவுடன் அவர்கள் மாற்றுத் தெரிவுகளற்று முன்னிறுத்திய தமிழீழம் என்னும் நிலைப்பாடும் தோல்வியடைந்துவிட்டது என்பதே. எனவே மீண்டும் அதற்கு தூசுதட்ட முற்படுவது பிறிதொரு வகையிலான அரசியல் படுகுழியாகவே அமையும்.”
  எனக்குறிப்பிட்டிருக்கிறீர்கள். இவ்விடயம் குறித்து பின்வரும் விடயங்களை குறிப்பிட விரும்புகின்றேன்.
  தமிழ் மக்களின் இனவிடுதலைக்கான போராட்டம் அல்லது தேசிய இன விடுதலைக்கான போராட்டம் தமிழ் மக்கள் சிங்களப்பேரினவாத ஒடுக்குமுறைக்கெதிரக மேற்கொண்ட போராட்டம் என்ற வகையில் அதற்கான அரசியல் தீர்வு இல்லாது அது முடிவடைந்துவிட முடியாது. புலிகளின் அழிவின்பின் கடந்துவிட்ட ஒரு வருடகால அனுபவங்கள் சிங்களப்பேரினவாதம் இன ஒடுக்குமுறையை தீவிரப்படித்தியருப்பதனைக் அவதானிக்கமுடிகிறது. அவ்வாறாயின் முன்னரை விட சிங்களப்பேரினவாத ஒடுக்குமுறைக்கெதிராக போராட வேண்டிய தேவை தமிழ்த் தேசியவாதிகளுக்கும் ஒடுக்குமுறைக்குள்ளாகும் மக்களுக்கும் இருக்கிறது. அப்படியாயின் தற்காலச் சூழலில் அதற்கான தீர்வு என்ன?
  இனப்பிரச்சினை அல்லது இனமுரண்பாடுகள் ஒரு போரட்டமாக மேலெழுந்து விட்ட நிலையில் அதற்கான அரசியல் தீர்வு போராட்ட இயக்கத்தை அழித்து விடுதலுடன் முடிவடைந்தும் விடுவதில்லை.
  இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முன்கூட்டியே தீர்மானிக்கப்படக்கூடியதொன்றல்ல எனக்கூறப்பட்டுள்ள கூற்றும் நினைவிற்கு வருகிறது. ஆயினும் இலங்கையில், தென்னிலங்கையில் ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையாளர்கள் இன்றும் இன ஒடுக்குமுறைகைளை மேலம் தீவிரப்படித்தியிருக்கிற நிலையில் இப்பிரச்சினைக்கான தீர்வு வேறு வழிகளில் அன்றி தமிழம் என்றெ அமையவேண்டியிருக்கிறது.
  உண்மையில் தமிழீழம் என்ற தீர்வு புலிகளால் தீர்மானிக்கப்பட்டதல்ல. அத்தீர்வு சமூகப்பிரச்சினைகளால் முன்னெழுந்தது. அந்தத் தீர்வு தோன்றுவதற்கான சமூகப்பின்னணிகள் மேலும் தீவிரப்பட்டுச் செல்கிறது. அத்தீர்வினை முன்வைத்த சமூகப்பிரிவினர் இன்னமும் அரசியல் உரிமைகளுக்காக போராடிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்னறனர்.
  வடகிழக்கில் புலிகளும் மக்களும் அரசியல் ரிதியில் அன்னியப்பட்டு நின்றமையினால் புலிகளின் அழிவு ஒரு பெரும் வெறுமையாக உணரப்படுகிறது போலும். பெரும் அழிவுகைளைச் சந்தித்த நிலையில், தீவிர அடக்குமுறை நிலவுகின்ற இன்றைய நிலையில் புலிகளின் தலைமையற்ற மக்கள் இனடுக்குமுறைக்கெதிராக தாம் எதிர்நோக்கும் சமூகப்பிரச்சினைகளுக்கெதிராக செயற்பட்டு வருகிறார்கள்.
  “தெற்காசிய பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைக் தீவில் வெறுமனே போராட்டம் நடாத்துவதன் மூலம் அதிலும் பிராந்திய வல்லரசான இந்தியாவிற்கு சண்டித்தனம் காட்டிக் கொண்டு ஒரு தனிநாட்டை பெற்றுவிட முடியுமென்று இவர்களை நம்பும்படி எது தூண்டியிருக்க முடியும். நிட்சயமாக இவர்கள் மிகவும் முன்னேறிய விஞ்ஞான பூர்வமான கோட்பாடொன்றை தாம் பின்பற்றுகிறோம் என்று வாதிட முயல்வார்களாயின் இவர்களால் பிராந்தியஇ புவிசார் அரசியல் நிலைமைகள் குறித்து துல்லியமான அவதானம் இல்லாமல் இயங்க முடியாது.”
  எனக்குறிப்பிட்டிருக்கறீர்கள். ஒரு பிராந்திய வல்லரசு, ஒரு மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை அங்கீகரிக்கும் என எவ்வாறு உங்களால் கருதமுடியம். அவ்வாறு கருதுவீர்களாயின் இந்தியாவில் – அல்லது தென்னாசியாவில் மக்கள் உரிமைகளுக்கான போராட்டங்கள் எவையும் வெற்றி பெற முடியாது என்றாகிவிடும். துரவ வல்லரசாக சீனாவும் இணைந்திருக்கிற நிலையில்….
  வல்லரசு இந்தியா இலங்கை இனப்பிரச்சிகை;கான தீர்வாக எதைக்கருதியது, இப்போது எதைக்கருதுகிறது என்பது குறித்து நாம் விரவாக விவாதிக்க வேண்டும். ஆனால் இது மக்கள் நலன் சார்ந்து அமையாது என்பதே நம் பட்டறிவு.
  உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து,
  விஜய்

 7. //ஒரு பிராந்திய வல்லரசு, ஒரு மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை அங்கீகரிக்கும் என எவ்வாறு உங்களால் கருதமுடியம். அவ்வாறு கருதுவீர்களாயின் இந்தியாவில் – அல்லது தென்னாசியாவில் மக்கள் உரிமைகளுக்கான போராட்டங்கள் எவையும் வெற்றி பெற முடியாது என்றாகிவிடும்//

  இது ஒரு நல்ல கருத்து.

  நன்றி.

  ஆனால், தமீழீழம் என் கிற “நாடு பிரிக்கும்” தீர்வு, ஒரு வல்லரசின் தலையீட்டால் தான் முடியும் என்கிற நிலை இன்றைய உலக ஒழுங்கில் ஏற்பட்டிருக்கிறது.

  இஸ்ரேல் பங்க்ளாதேஷ் முதல் அண்மைய மொன்டனீக்ரோ வரை வல்லரசின் தலையீடொன்றால், வல்லரசின் நலன்களுக்காகவே நாடுகள் பிரிந்துள்ளன.

  தமிழீழத் தனி நாடு பற்றிப்பேசும் போது இந்த விடயம் கவனத்திலெடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  1. உண்மைதான். சிங்களப்பேரினவாத ஒடுக்குமுறை யாளர்கள் சிறுபாண்மைத் தமிழினத்தின் சிறு அபிலாசைகளைக்கூட மதிக்காத நிலையில் கிழக்கு மாகாண சபைக்கான அதிகாரங்களைக்கூட குறைத்துக்கொள்ள முனையும் நிலையில்….. இன்ன பிறநிலைமைகள் பிரிவினைக்கோரிக்கையை வலுப்படுத்துகிறது. ஆனால் பிராந்திய வல்லரசுகளின் தலையீடு தவிர்க்கப்பட முடியாத ஒன்றுதான். இந்த நிலைமைகளில் இருந்துதான் நாம் நமக்கான அரசியல் விடுதலை பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது. விஜய்

 8. யதீந்திரா,
  உங்கள் கட்டுரை வாசிக்கக்கிடைத்ததில் மகிழ்ச்சி.
  சிலமுக்கியமான விடயங்கள் குறித்து கலந்துரையாட விரும்புகின்றேன். நீங்கள்
  “புலிகளின் அழிவுடன் அவர்கள் மாற்றுத் தெரிவுகளற்று முன்னிறுத்திய தமிழீழம் என்னும் நிலைப்பாடும் தோல்வியடைந்துவிட்டது என்பதே. எனவே மீண்டும் அதற்கு தூசுதட்ட முற்படுவது பிறிதொரு வகையிலான அரசியல் படுகுழியாகவே அமையும்.”
  எனக்குறிப்பிட்டிருக்கிறீர்கள். இவ்விடயம் குறித்து பின்வரும் விடயங்களை குறிப்பிட விரும்புகின்றேன்.
  தமிழ் மக்களின் இனவிடுதலைக்கான போராட்டம் அல்லது தேசிய இன விடுதலைக்கான போராட்டம் தமிழ் மக்கள் சிங்களப்பேரினவாத ஒடுக்குமுறைக்கெதிரக மேற்கொண்ட போராட்டம் என்ற வகையில் அதற்கான அரசியல் தீர்வு இல்லாது அது முடிவடைந்துவிட முடியாது. புலிகளின் அழிவின்பின் கடந்துவிட்ட ஒரு வருடகால அனுபவங்கள் சிங்களப்பேரினவாதம் இன ஒடுக்குமுறையை தீவிரப்படித்தியருப்பதனைக் அவதானிக்கமுடிகிறது. அவ்வாறாயின் முன்னரை விட சிங்களப்பேரினவாத ஒடுக்குமுறைக்கெதிராக போராட வேண்டிய தேவை தமிழ்த் தேசியவாதிகளுக்கும் ஒடுக்குமுறைக்குள்ளாகும் மக்களுக்கும் இருக்கிறது. அப்படியாயின் தற்காலச் சூழலில் அதற்கான தீர்வு என்ன?
  இனப்பிரச்சினை அல்லது இனமுரண்பாடுகள் ஒரு போரட்டமாக மேலெழுந்து விட்ட நிலையில் அதற்கான அரசியல் தீர்வு போராட்ட இயக்கத்தை அழித்து விடுதலுடன் முடிவடைந்தும் விடுவதில்லை.
  இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முன்கூட்டியே தீர்மானிக்கப்படக்கூடியதொன்றல்ல எனக்கூறப்பட்டுள்ள கூற்றும் நினைவிற்கு வருகிறது. ஆயினும் இலங்கையில், தென்னிலங்கையில் ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையாளர்கள் இன்றும் இன ஒடுக்குமுறைகைளை மேலம் தீவிரப்படித்தியிருக்கிற நிலையில் இப்பிரச்சினைக்கான தீர்வு வேறு வழிகளில் அன்றி தமிழம் என்றெ அமையவேண்டியிருக்கிறது.
  உண்மையில் தமிழீழம் என்ற தீர்வு புலிகளால் தீர்மானிக்கப்பட்டதல்ல. அத்தீர்வு சமூகப்பிரச்சினைகளால் முன்னெழுந்தது. அந்தத் தீர்வு தோன்றுவதற்கான சமூகப்பின்னணிகள் மேலும் தீவிரப்பட்டுச் செல்கிறது. அத்தீர்வினை முன்வைத்த சமூகப்பிரிவினர் இன்னமும் அரசியல் உரிமைகளுக்காக போராடிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்னறனர்.
  வடகிழக்கில் புலிகளும் மக்களும் அரசியல் ரிதியில் அன்னியப்பட்டு நின்றமையினால் புலிகளின் அழிவு ஒரு பெரும் வெறுமையாக உணரப்படுகிறது போலும். பெரும் அழிவுகைளைச் சந்தித்த நிலையில், தீவிர அடக்குமுறை நிலவுகின்ற இன்றைய நிலையில் புலிகளின் தலைமையற்ற மக்கள் இனடுக்குமுறைக்கெதிராக தாம் எதிர்நோக்கும் சமூகப்பிரச்சினைகளுக்கெதிராக செயற்பட்டு வருகிறார்கள்.
  “தெற்காசிய பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைக் தீவில் வெறுமனே போராட்டம் நடாத்துவதன் மூலம் அதிலும் பிராந்திய வல்லரசான இந்தியாவிற்கு சண்டித்தனம் காட்டிக் கொண்டு ஒரு தனிநாட்டை பெற்றுவிட முடியுமென்று இவர்களை நம்பும்படி எது தூண்டியிருக்க முடியும். நிட்சயமாக இவர்கள் மிகவும் முன்னேறிய விஞ்ஞான பூர்வமான கோட்பாடொன்றை தாம் பின்பற்றுகிறோம் என்று வாதிட முயல்வார்களாயின் இவர்களால் பிராந்தியஇ புவிசார் அரசியல் நிலைமைகள் குறித்து துல்லியமான அவதானம் இல்லாமல் இயங்க முடியாது.”
  எனக்குறிப்பிட்டிருக்கறீர்கள். ஒரு பிராந்திய வல்லரசு, ஒரு மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை அங்கீகரிக்கும் என எவ்வாறு உங்களால் கருதமுடியம். அவ்வாறு கருதுவீர்களாயின் இந்தியாவில் – அல்லது தென்னாசியாவில் மக்கள் உரிமைகளுக்கான போராட்டங்கள் எவையும் வெற்றி பெற முடியாது என்றாகிவிடும். துரவ வல்லரசாக சீனாவும் இணைந்திருக்கிற நிலையில்….
  வல்லரசு இந்தியா இலங்கை இனப்பிரச்சிகை;கான தீர்வாக எதைக்கருதியது, இப்போது எதைக்கருதுகிறது என்பது குறித்து நாம் விரவாக விவாதிக்க வேண்டும். ஆனால் இது மக்கள் நலன் சார்ந்து அமையாது என்பதே நம் பட்டறிவு.
  உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து,
  விஜய்

  1. இந்தக் கட்டுரையின் தொடர்ச்சி வெளியானதும் உங்கள் கருத்து குறித்து பார்ப்போம். நீங்களும் கட்டுரையை முழமையாக பார்ப்பது அவசியமாகும். அதன் பின்னர் உங்களுக்கு மேலும் சில கருத்துக்கள் தோன்றலாம் அதனையும் பதிவு செய்யுங்கள். உங்கள் கருத்திற்கு நன்றி.

   தோழமையுடன்

   யதீந்திரா

  2. //உண்மையில் தமிழீழம் என்ற தீர்வு புலிகளால் தீர்மானிக்கப்பட்டதல்ல. அத்தீர்வு சமூகப்பிரச்சினைகளால் முன்னெழுந்தது. அந்தத் தீர்வு தோன்றுவதற்கான சமூகப்பின்னணிகள் மேலும் தீவிரப்பட்டுச் செல்கிறது. அத்தீர்வினை முன்வைத்த சமூகப்பிரிவினர் இன்னமும் அரசியல் உரிமைகளுக்காக போராடிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்னறனர்.//

   உங்களின் இந்த கருத்து சரியானது என்பதையும் மற்றவர்கள் இதற்கு முழு கவனம் கொடுக்க வேண்டியது என்பதையும் இதன் மூலம் கூறுகிறேன்.

   //ஒரு பிராந்திய வல்லரசு, ஒரு மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை அங்கீகரிக்கும் என எவ்வாறு உங்களால் கருதமுடியம். அவ்வாறு கருதுவீர்களாயின் இந்தியாவில் – அல்லது தென்னாசியாவில் மக்கள் உரிமைகளுக்கான போராட்டங்கள் எவையும் வெற்றி பெற முடியாது என்றாகிவிடும். //

   இன்னும் சரியான கருத்து.

   இந்தியாவின் நலன் சார்ந்துதான் எதையும் செய்யும். இந்தியாவின் நலன் என்பது இரண்டு விசயங்களில் புரிந்துகொள்ளலாம். 

   1. முதல் காலப் பகுதியில் இந்திராகாந்தி காலத்தின் இலங்கை அரசு அமெரிக்காவின் நேரடியான கண்காணிப்பில் மாறும் சூழிநிலையில், அதனுடைய தளத்தை நிறுவும் சமயத்தில் நடந்த சம்ப்வங்கள். அப்போது இந்தியா இரஷ்யாவின் செல்வாக்கில் இருந்த ஒரு நாடு. அதனுடைய முரணின் காரணமாக இந்தியா இலங்கை ஆட்சியாளர்களை தன் வழிக்கு கொண்டுவருவதற்கு தேர்ந்தெடுத்த வடிவம் தான் அங்குள்ள ஏற்கெனவே போராடிக்கொண்டிருந்த அமைப்புகளை தன் கைப்பாவையாக மாற்றி இலங்கை அரசை தன் வழிக்கு கொண்டுவருவதற்கான வேலையாக அங்குள்ளவர்களை பயன்படுத்தியது. அப்போது அதனுடைய நலன் ஈழத்தைப் பெற்று தந்துவிடுவது அலல். ஆனால் தனது செல்வாக்கு மண்டலத்தை உருவாக்குவதுதான். அதற்கு மேல் அதன் நலன் இல்லை. ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக இருந்துக்கொண்டு தனது நலனை காத்துக்கொள்வதுதான் அதனுடைய உச்சபட்ச நலன். 

   2. இரண்டாவது காலம், இராஜிவ் காந்தி காலம். இந்த காலத்தில்தான் இலங்கை அரசு இந்திய நலனுக்கு அடிபணிந்தது. முக்கியமாக ராஜிவ்-ஜெயவர்தனே ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி இந்தியாவின் அனைத்து மூலதனமும், சுரண்டுவதற்கான அனைத்து ஒப்பந்தங்களும் இந்த ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தத்தின் மூலம் சாத்தியமாக்கியது. அப்படி இலங்கை அரசு அடிபணிந்ததால் போராடிக்கொண்டிருந்த அமைப்புகள் இலங்கை அரசை கண்காணிக்கும் ஒரு கங்காணியாக மாற்றி நிறுவ முயன்றார்கள். பல அமைப்புகளை அப்படி செய்ய முடிந்தது. அப்போது அவர்களை ஈழ கோரிக்கையை கைவிடுமாறு மிரட்டப்பட்டார்கள். அப்படி மிரட்ட முடியாதவர்களை இராணுவம் கொண்டு அடக்கப்பட்டார்கள். அப்போது எந்த அரசியல் இயக்கமும் இந்த கம்யூனிஸ்டு இயக்கமும் இலங்கையில் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து திரளவில்லை. பலம் பெறக்கூட முடியவில்லை. அதற்கு முக்கிய் காரணமாக இருந்தது ஆக்கிமிரப்பாளர்களை எதிர்த்து போராடுவதில் சமரசம் கொண்டார்கள். இனவெறியர்களை எதிர்த்து போராடுவதில் நடைமுறையில் நிற்கத் தவறினர். இன முரண்பாட்டை ஒரு முரண்பாடாகவே ஏற்க மறுத்தனர். 

 9. நடைமுறை அற்ற எந்த அனுபவமுவும் குருட்டுத்தனமானது…

  ” எனினும் இந்த குழுவினரின் கடந்தகாலம் தொடர்பாக என்னிடம் ஓரளவு அவதானம் இருந்ததும், இவர்களின் மார்க்சியம் குறித்த புரிதலில் உடன்பாடு இருப்பதாலும் இந்த சஞ்சிகை அடியொற்றிய எனது சில அபிப்பிராயங்களை பதிவு செய்ய விழைகின்றேன். புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் சமூக அக்கறையும் ஈடுபாடும் உள்ளவர்கள் மத்தியில் எழுந்திருக்கும் கேள்வி, அடுத்து என்ன என்பதாகும்.
  புலிகளின் அரசியல் தமிழ் மக்களை இவ்வாறானதொரு வெறுமையில் கொண்டுவந்து விடும் என்று இவர்கள் எவருமே எண்ணியிருக்கவில்லை. அந்த வெறுமையின் சுமையை உணரும் ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த முறையில் சிந்திக்க முற்படுகின்றனர். அவ்வாறான முயற்சியில் ஒன்றுதான் இந்த மே-18 உம் அதன் வெளியீடான வியூகமும்.
  உண்மையில் கடந்த முப்பது வருடங்களாக தமிழ்த் தேசிய அரசியலுக்கு தலைமைதாங்கிய புலிகளின் அதிர்சிகரமான அழிவுக்கு பின்னர் ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் என்ன என்ற கேள்விக்கு எவரிடமுமே ஒழுங்கான பதில் இல்லை”

  இன்னும் உங்களுக்கு உலகம் தெளிவாகப் புரியவில்லை!…

  ”எனது துனிபு சரியாயின் மார்க்ஸ் நம்மை சுற்றி நிகழும் விடயங்களை புரிந் கொள்ளுவதற்கும். இடைவிடாத இயக்கதின் மூலம் மாற்றங்களை நோக்கிச் செல்லுவதற்குமான சிந்தனை முறைமை ஒன்றையே வழங்கியிருக்கின்றார். மார்க்சின் காலத்தில் இருந்தது போன்று இன்று மார்க்சியத்தை நாம் பார்க்க முடியாது. மார்க்சியம் புதிய சூழலில் பிரயோகிக்கப்படும் போது அது அந்த சூழலுக்கு ஏற்ப புதுவகை பொலிவைப் பெற முடியும் என்று நம்புவர்களில் நானும் ஒருவன். இதற்கு சிறந்த உதாரணங்களாக ரஸ்ய, சீன அனுபவங்களைக் கொள்ள முடியும்.
  மார்க்சின் வாதம் லெனினால் செயற்பாட்டுத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, அது சோவியத் அனுபவங்களின் வழியாக, லெனினிசமாக வெளிப்பட்டது. அதுவே மவோவால் கையாளப்பட்ட போது சீன அனுபவங்களின் வழியாக மவோயிசமாக அடையாளம் கானப்பட்டது. ”

  இலங்கை அனுபவம் என்ன??

  மே’18 ஆ….

  இதற்கு முதல் இலங்கையில் என்ன நடந்தது….

  இவை மறதிக்குரிய (இனவாதச்) சம்பவங்களா…
  என்ன இலங்கையில் தமிழ் (யாழ்) இனத்துக்கு மட்டுடமா இன்றுவரை பிரச்சனை இருந்து வருகிறது….

  சிங்கள மக்களுக்கு தேசிய (இன) பிரச்சனை இல்லையா??

  இதைச் சிந்திக்காத, இதற்கான தேடலையும் நடைமுறையையும் சந்திக்காத எதுவும் (இலங்கையில்) மாச்சிசமே அல்ல.

  ஆனாலும், ‘யதீந்திரா’ வின் மடியில் இருக்கும் ”மாக்சிசமும்” இதுதான்!…

  ”ஆரம்பத்தில் அமெரிக்காவை காகிதப்புலி என்று வர்ணித்த சீனப் பெருந்தலைவர் மாவோ 1972 களில் அமெரிக்கா காகிதப்புலி அல்ல நிஜப்புலிதான் என்று உணர்ந்து நிக்சனுடன் கைகுலுக்கிக் கொண்டார். அத்துடன் மவோசியத்தின் கதையும் முடிந்தது. புலிகள் இராணுவ ரீதியில் உச்சமாக இருந்தகாலத்தில் அவர்களின் வரலாற்று வெற்றியாகக் கருதப்பட்ட
  ஆணையிறவு வெற்றிக்கு பின்னர், புலிகள் காகிதப்புலிகள் அல்ல நிஜப்புலிகள்தான் என்பதை உணர்ந்து இவர்களில் பலரும் விடுதலைப் புலிகளை நோக்கி வந்தனர் என்பதே உண்மை. எனவே இவர்களிடம் ஈழத் தமிழ் மக்களின் தேவை என்ன என்பது குறித்து ஒரு தீர்க்கமான நிலைப்பாடு இருக்கவில்லை. இதன் விழைவுதான் இவர்கள் இப்போதும் புலம்பெயர் சூழலில் இருந்து கொண்டு தமிழ் ஈழம் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.”

  ரூபன்
  220810

  1. //”ஆரம்பத்தில் அமெரிக்காவை காகிதப்புலி என்று வர்ணித்த சீனப் பெருந்தலைவர் மாவோ 1972 களில் அமெரிக்கா காகிதப்புலி அல்ல நிஜப்புலிதான் என்று உணர்ந்து நிக்சனுடன் கைகுலுக்கிக் கொண்டார். அத்துடன் மவோசியத்தின் கதையும் முடிந்தது. புலிகள் இராணுவ ரீதியில் உச்சமாக இருந்தகாலத்தில் அவர்களின் வரலாற்று வெற்றியாகக் கருதப்பட்ட//

   அவர் அனைத்து ஏகாதிபத்தியத்தையும் காகிதப் புலி என்றே கூறினார். அதில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். நீங்கள் சொல்வது போல் புரிந்துகொண்டால், அமெரிக்கா நிஜப்புலி என்றும் மற்ற ஏகாதிபத்தியங்கள் எல்லாம் காகிதப் புலியாகவே நீடித்தது என்றும் பொருளாகிவிடும். அது காகிதப் புலி என்பது என்ன பொருளில் கூறினார் என்பதற்கும் உங்கள் கருத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒரு நாட்டை தனது தேவையிலிருந்து பயன்படுத்திக் கொள்வது என்பது வேறு, அதனுடைய அடிமை நாடாக மாறிவிடுவது என்பது வேறு. ஆனால் சீனா மாவோவின் தலைமையில் சுதந்திர நாடாகவே, சோசலிசத்திற்கு மாறிச்செல்லும் நாடாகவே, நிலத்தில் அடிமை முறையை ஒழித்த நாடாகவே மாற்றினார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

   அதே போல் ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டு மக்களின் போராட்டத்தினைப் பொருத்தது. அதே போல் அந்த போராட்டம் என்பது ஒரே நேர் கோட்டில் செல்வதல்ல, பல்வேறு வீழ்ச்சி வளர்ச்சி, வெற்றி தோல்வி, மேடு பள்ளத்தைப் பொருத்தது. ஒரு நாட்டில் ஒரு ஆதிக்க வர்க்கத்தை அரசியல் ரீதியாக வீழ்த்திவிட்டால் அது நிரந்தரமாக வீழ்ந்துவிட்டதாக பொருளில்லை. அந்த வீழ்ந்த ஆதிக்க வர்க்கம் மீண்டும் தன்னை எல்லா வகையிலும் வளப்படுத்திக்கொண்டு மீண்டும் துளிர்விடவும், கைப்பற்றவும் துடிக்கும், சில நேரங்களில் மீண்டும் வெல்லவும் கூடும். அது ஒரு தொடர்ச்சியான போராட்டம். உலக அரங்கில் பெரும்பாண்மையான நாடுகளில் அந்த ஆதிக்கத்தை ஒடுக்கும் வரையில் அந்தப் போராட்டம் தொடரும். பெருவாரியான நாடுகளில் ஒரு ஜனநாயகத்தை வளர்த்தெடுத்த பிறகு, சோசலிசத்தை நிர்மாணித்தபிறகுதான் அந்த வர்க்கத்தின் பலத்தை பலவீனப் படுத்த முடியும். அதுவரையில் தொடர்ச்சியான போராட்டம் தான். மனித வளர்ச்சியில் போராட்டம் நிரந்தரமானது, அமைதி தற்காலிகமானது, எதிரிகள் மாறிகொண்டிருப்பார்கள். அதே போல் சமூகம் வளர்ந்துக்கொண்டிருக்கும். இதுதான் நியதி.

 10. பகத்,
  மார்க்சியம் குறித்த விளக்கத்தை இன்னும் இலகுபடுத்தினால் ஆரம்பப் புரிதல்களுக்கு வசதியானதாக அமையுமே?
  பொருள் என்பது சமூகத்தின் அடித்தளமாக காணப்படுகிறது என்பதையும் அதன் இயக்கம் என்பதை கணிப்பிடுதலும் மார்க்சியத்தின் ஆரம்பப் புள்ளியாக அமையும். இங்கு இன்றைய சூழல் குறித்த மார்க்சிய ஆய்வுகளை முன்வைக்கும் போது மட்டுமே முரண்களைச் சந்திக்கிறோம். சமூகத்தின் மேற்கட்டுமானமான கோட்பாடுகள், சட்ட அமைப்புக்கள் போன்றன பொருளின் இயக்கத்தை மட்டுப்படுத்தும் வகையில் அதிகார வர்க்கத்தால் உருவாக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல அது மட்டுப்படுத்தப்படும் வேளையில் பொருளில் ஏற்படும் இயங்கியல் தாக்கம் என்பது குறித்த ஆய்வு தேவையானது. ஏகாதிபத்தியப் பொருளாதாரம், சிந்தனை முறை என்பன இவ்வாறானதே. உதாரணமாக மாவோ முன்வைத்த உற்பத்தி உறவுகள் இன்று காணப்படுகின்றனவா? லெனின் கூறிய தேசிய இனங்களின் பண்பை இப்போது காணமுடியுமா? ஆக, இன்றைய சமூகப் புறச்சூழல் குறித்த மார்க்சிய ஆய்வு என்ன?

 11. பகத், ரூபன்,
  மார்க்சியம் குறித்த உரையாடல் ஒன்றை நாம் ஏன் தொடரக்கூடாது?

 12. நட்புடன் கோசலனுக்கு….
  பின்வரும் தங்களின் கூற்று தொடர்பாக மேலும் விளக்கம் தருவீர்களா?
  முதலாவது….

  பொருள் என்பது சமூகத்தின் அடித்தளமாக காணப்படுகிறது என்பதையும் அதன் இயக்கம் என்பதை கணிப்பிடுதலும் மார்க்சியத்தின் ஆரம்பப் புள்ளியாக அமையும். ”

  ஆக இன்றும் பொருள் தான் சமூகத்தின் அடித்தளம் எனகின்ற ஆரம்பகால கருத்திலா இருக்கின்றீர்கள்….
  நான் பொருளை புறக்கணிக்கவில்லை…ஆனால் பொருளுடன் அதனுள் இருக்கின்ற சக்தியும் முக்கியமல்லவா..அதற்கும் பங்கு இருக்கின்றதல்லவா?

  மேலும் நீங்கள் கூறுவதுபோல் “சமூகத்தின் மேற்கட்டுமானமான கோட்பாடுகள்இ சட்ட அமைப்புக்கள் போன்றன பொருளின் இயக்கத்தை மட்டுப்படுத்தும் வகையில் அதிகார வர்க்கத்தால் உருவாக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல அது மட்டுப்படுத்தப்படும் வேளையில் பொருளில் ஏற்படும் இயங்கியல் தாக்கம் என்பது குறித்த ஆய்வு தேவையானது. ”

  அதாவது மேலே நீங்கள் குறிப்பிட்ட இரண்டாவது கருத்தாக்கம் மிக முக்கியமானது எனக் கருதுகின்றேன்…இது கடந்தகால வரலாற்றில் தவறவிடப்பட்டதாகவே உணர்கின்றேன்…ஏனனில் இவ்வாறு பொருளில் ஏற்படும் தாக்கமானது பின் அப் பொருளின் இயக்கத்தை தீர்மானிக்கும் சுயாதினமாக சக்தியாககவும் இயங்குகின்றது..
  நான் பிழை எனின் தங்களது விளக்கததை விளக்கமாக அறித் தாருங்கள்…நன்றி…
  நட்புடன் மீராபாரதி

  1. //பொருள் என்பது சமூகத்தின் அடித்தளமாக காணப்படுகிறது //

   பொருள் முதல் வாதம் என்பது ஒரு உலக கண்ணோட்டமாகும். பொருளாதார வாழ்வு (அந்தப் பொருளில் உள்ள பொருள் = பணம், பண்டம்) எனபதுதான் அடித்தளமாகும். இங்கு நீங்கள் தமிழில் கையாளப்படும் ஒரு சொல் பல பொருள் என்ற முறையில் குழம்பிக் கொள்கிறீர்கள். இங்கு பொருள் என்பதை எதை குறிக்கிறது.  ஒரு பொருளின் இருப்பு என்பதைப் பற்றியே (object). பொருளும் அதுனுள் இருக்கும் சக்தியும் ஒன்றுதான். அதை அறிவியல் ரீதியாக ஐன்ஸ்டீனே நிருபித்துவிட்டாகிவிட்டது. அதாவது E= mc 2(அடுக்கு). இதனுடைய பொருள் என்ன வென்றால் (இங்கு பொருள் என்பது அர்த்தம்) பொருள்=சக்தி என்றுதான். 

   பொருள் முதல்வாதத்தின் அடிப்படைக் கூறுகளாக பின்வருமாறு புரிந்துகொள்ளலாம்:
   1. உலகம் எனபது அதன் இயல்பிலேயே பொருளியல் தன்மை கொண்டதெனப் பொருள்முதல்வாதம் கற்பிக்கிறது. இருப்பில் உள்ள அனைத்தும், பொருளியல் காரணங்களின் அடிப்படையில் தமது உளதாம் தன்மையையும் மாறும் தன்மையையும் உறுதிப்படுட்துகின்றன என்றும், பொருளின் இயக்க விதிகட்குட்பட்டு அவை எழுகின்றன என்றும் வளர்ச்சியுறுகின்றன என்றும் கற்பிக்கிறது.

   2. சிந்தனைக்கு வெளிபுறத்தில் அதற்குச் சுயேச்சையாகவும், புறநிலை யதார்த்தத்தில் இருக்கும் ஒன்றாகப் பொருள் இருக்கிறது எனப் பொருள்முதல்வாதம் கற்பிக்கிறது. பொருளியல் இருப்பிலிருந்து சிந்தனை தனியே இருக்கிறது எனப்தற்கு மாறாக, அனைத்து வகைச் சிந்தனை அல்லது கருத்தியல் படைப்புகள் எல்லாம் பொருளியல் இயக்கப்போக்குகளின் படைப்புகள் எனப் பொருள் முதல்வாதம் கற்பிக்கிறது.

   3. உலகமும் அதன் விதிகளும் முழுமையாக அறியப்படக் கூடியவை என்றும், இதுவரை பெரும்பகுதி அறியப்படாதவையாக இருப்பினும் இயல்பிலேயே அறியப் படக் கூடாதவை என்று எதுவுமே இல்லை எனப் பொருள்முதல்வாதம் கற்பிக்கிறது.

   இயக்கம் என்பது கருத்து ஆகா. பொருளின் இருப்பின் தன்மைதான் இயக்கம் ஆகும்.

   “இயக்கம் என்பதே பொருள் இருத்தலின் ஒரு வடிவமாக்ம். இயக்கம் என்பதில்லாமல் பொருள் என்பது எங்கினுமில்லை; அவ்வாறு இருக்கவும் இயலாது… இயக்கமற்ற பொருளையும், பொருளற்ற இயக்கத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்க இயலாது”

   அதே போல் மாற்றத்தினை பற்றிய ஒரு சரியான புரிதலையும் நாம் கொண்டிருக்க வேண்டும்.
   “மாற்றத்தின் காரணங்களை அறிய வேண்டுமெனில், நாம் மாற்றத்திற்கான வெளிப்புறக் காரணத்தை மட்டுமே காணக்கூடாது; ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, அத்தகைய இயக்கப் போக்குக்குள்ளேயும், அதன் சுய இயக்கத்திலும் பொருள்களுக்கு உள்ளேயே அடங்கியிருக்கிற வளர்ச்சிக்கான உட்புற உந்துதல்களையும், மாற்றத்துக்கான காரணங்களாகக் காணவேண்டும்.”
   அதே போல்
   “இயக்கவியல் என்பது பொருள்களின் சாரம்சத்துக்குள்ளே ஏற்பட்டுக் கொண்டு வரும் முரண்பாடுகள் பற்றிய ஆய்தல் ஆகும். வளர்ச்சி என்பதே எதிர்மறைகளுகு இடையிலான போராட்டமாகும்”

   //“சமூகத்தின் மேற்கட்டுமானமான கோட்பாடுகள்இ சட்ட அமைப்புக்கள் போன்றன பொருளின் இயக்கத்தை மட்டுப்படுத்தும் வகையில் அதிகார வர்க்கத்தால் உருவாக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல அது மட்டுப்படுத்தப்படும் வேளையில் பொருளில் ஏற்படும் இயங்கியல் தாக்கம் என்பது குறித்த ஆய்வு தேவையானது. ”//

   இதை நீங்கள் இன்னும் தவறான பொருளிலேயே (அர்த்தத்திலேயே) விவாதிக்கிறீர்கள். மேற்கட்டுமானம் என்பது சமூக அடித்தளத்திலே செல்வாக்கு மட்டுமே வகிக்கும். அதை கெட்டிப்படுத்தும். ஆனால் அடிக்கட்டுமானத்தின் பண்புநிலையை மாற்றியமைக்காது. அந்த முரணை தீர்த்து அடுத்த பண்புநிலைக்கு மாற்றாது. இவையே அடிப்படையாக உள்வாங்கிக்கொள்ள வேண்டிய அம்சம். அது தீர்மானிக்கிற அம்சம் அல்ல, செல்வாக்கு வகிப்பவையே. ஆனால் இயக்கியவியல் என்பது வேறு, மேல்கட்டுமானம் என்பது வேறு. இரண்டையும் சேர்த்துக் குழப்பிக்கொள்கிறீர்கள். “இயக்கவியலானது “வளர்ச்சியின் இயக்கப் போக்கு தாழ்நிலையிலிருந்து உயர்நிலைக்குச் செல்வதாகும்.. பொருளுக்குள்ளே உறைந்து கிடக்கும் முரண்பாடுகளை வெளிக் கொணர்தலாகும்.. இத்தகைய முரண்பாடுகளின் அடிப்படையில் இயங்கும் எதிரெதிர் நிலைகளின் போராட்டத்தை உணர்தலாகும்.” அதேபோல் “முன்னேறிய, மேல் நோக்கிய இயக்கமாகவும், பழைய தன்மை நிலையிலிருந்து புதிய தன்மை நிலையை நோக்கிச் செல்வதாகவும், தாழ்நிலையிலிருந்து கலவையான நிலைக்குச் செல்வதாகவும், தாழ்நிலையிலிருந்து உயர்நிலைக்குச் செல்வதாகவும் கருதுகிறது”

   இது கருத்துரைக்கும் பகுதி என்பதால் இதற்கு மேல் விரிவாக எழுதமுடியவில்லை. இது எனது புரிதல் மட்டுமே. இன்னும் செழுமையாக கற்பதற்கு இயக்கிவியல், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் – ஸ்டாலின். இயக்கிவியல், வரலாற்று பொருள்முதல் வாதம் – மாரிஸ்கார்ன் போர்த் ஆகிய நூலினை தொடக்க நூலாக பயிலலாம்.

 13. //லெனின் கூறிய தேசிய இனங்களின் பண்பை இப்போது காணமுடியுமா? ஆக, இன்றைய சமூகப் புறச்சூழல் குறித்த மார்க்சிய ஆய்வு என்ன?//

  கண்டிப்பாக தேசிய இனப் பிரச்சனை என்பது நிலபிரபுத்துவத்தை ஒழிக்கும்போது தீர்க்கபடும் பிரச்சனை பிரச்சனை. முதலாளித்துவக் காலக்கட்டத்திற்கான பிரச்சனை. ஏகாதிபத்தியம் தோன்றிய பிறகு ”பாட்டாளி வர்க்கப் புரட்சி என்ற பொதுப்பிரச்சனையின் ஒரு பகுதியாகவும், பாட்டாளி வர்க்க சர்வாதிகார்ம் என்ற பொதுப் பிரச்ச்சனையின் ஒரு பகுதியாகவும் அமைகிறது” அதே போல் ”தேசவிடுதலை இயகங்களில் புரட்சிகர ஆற்றல்கள் பொதிந்திருக்கிறது என்றும், பொது எதிரியான ஏகாதிபத்தியத்தை தூக்கியெறிய இந்த ஆற்றல்களைப் பயன்படுத்திக் கொள்ளும் சாத்தியம் உள்ளது என்றும் ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கிறது லெனினியம்.” இந்தப் பண்புநிலையானது ஏகாதிபத்தியம் இருக்கும் வரையில்,  பண்ணையடிமை முறையை ஒழிக்கும் வரையில் இதில் சகாப்தம் மாற்றம் என்பது இல்லை. ஏகாதிபத்தியம் என்கிற பண்பு நிலை மாற்றத்திலும் எந்த ஒரு பெருத வேறுபாடும் இல்லை. ஆனால் அளவு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. 

  அதே போல் புறச்சூழல் குறித்த மார்க்சிய ஆய்வும் தேவை . அது குறித்து விவாதம் தொடர்வோம்…

 14. நட்புன் நண்பர்களுக்கு…..

  தங்கள் எழுத்துக்களைப் பார்த்து உண்மையிலையே கவலை கொள்கின்றேன்…

  தற்சமயம் நீங்கள் நேருக்கு நேர்; இருந்து கையில் ஆயுதமும் இருக்குமாயின் ….

  நிச்சயமாக ஒருவர் கொல்லப்படலாம்….
  இல்லை என நீங்கள் மறுத்தாலும்…

  நடக்காது என கூறுவதற்கு எந்த உத்தரவாதமு
  ம் இல்லை…

  ஒருவரது கருத்து சாp பிழைக்கு அப்பால்….

  ஆதைப் பொறுமையாக கேட்கும் தன்மையும்…

  ஆதற்கு பொறுப்பா பதிலளிக்கும் தன்மையும் நம்மிடமில்லை என்பது…
  மிகவும் துரதிர்ஸ்டமானது…

  நமது பழக்கமே எதிர்கேள்வி கேட்காது…
  பெற்றேர் ஆசிரியர்…என
  சமூகத்தின் ஒவ்வொருவரும் சொல்வதை….
  ஆப்படியே கேட்டு செய்து வந்த உயர்ந்த பண்பாடு நம்முடையது…

  இதனால் தான் நண்பர்கள் மேலே உள்ளவாறு எழுதுகின்றார்கள்….

  முதலாவது நண்பர்களே…

  நாம் பலரைக் கற்பதன் மூலம் நமது பார்வையை விரிவாக்கலாம்…
  இவ்வாறு பலரையும் கற்பது என்பது அவர்களை ஏற்பவேண்டும் என்பதற்காகவல்ல….

  புல்வேறு கோணங்களிலும் சிந்திக்கவேண்டும் என்பதற்காகவே…

  சுpலர் இன்னும் 90> 80> 70> 60ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட விடயங்களைப் படித்துவிட்டு…

  ஆதை எழுதியவர்கள் மீது அபரிதமான மதிப்பையும் நம்பிக்கையையும் வைத்துவிட்டு…
  ஆப்படியே பின்பற்றுகின்றனர்…

  நிகழ் கால நிகழ்வுகளையும ;புதிய சுழல்களையும் மறந்து…

  இதற்காக முன்பு கற்றதை எல்லாம் தூக்கி ஏறிய வேண்டியதில்லை…
  ஆனால் இக் காலத்திற்கு அது எவ்வாறு பொருந்துகின்றது என பார்ப்பதே முக்கியமானது…
  இக் கால சுழலுக்கு ஏற்ப எவ்வாறு நாம் விளங்கிக் கொள்கின்றோம் என்பதே முக்கியமானது….

  இனி விடயத்திற்கு வருகின்றேன்….
  எனது புரிதலில் சில வற்றை முன்வைக்கின்றேன்…
  முதலில் கீழ் கட்டுமானம் ஒரு சமூகத்தின் அடிப்படை சமூக கட்டுமானம் ஆகும்….
  இது அச் சமூகத்தின் பொருளாதார உறவுகள் மற்றும் உற்பத்தி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது எனலாம்…
  இதில் மேற்குலகைப் பொருத்தவரை முதலாளி தொழிலாளி என்ற உறவு முறைகள் இருக்கின்றது…
  தென் ஆசிய சமூகங்களைப் பொருத்தவரை சாதிய உறவு முறைகளே இதற்கு பங்களிப்பனவாக இருக்கின்றன….
  மேலம் இந்த உறவு முறைகள் குடும்பம் வரை நீள்வதுடன்…பின் குடும்பத்திலிருந்தும் சமூக வெளிக்கும் நிள்கின்றது…
  இநதடிப்படையில் பொருளாதரா சாதிய குடும்ப சமய ஆணாதிக்க உறவுகள் மற்றும் அதன் கட்டுமானங்கள் என ஒவ்வொன்றும் சமூகத்தின் அடிக் கட்டுமானங்களாக இருக்கின்றன…
  இக் கட்டுமானங்கள் உருவாக்கும் மேலாதிக்க சிந்தனைகள் மேல் கட்டுமானமாக இருக்கின்றது….
  மறுபுறம் இந்த மேல் கட்டுமானங்கள் கீழ் கட்டுமானங்களில் தாக்கம் செலுத்துவனவாகவும் இருக்கின்றன…
  அதாவது பரஸ்பரம் இவ்ற்றுக்கிடையில் உறவுகள் மாறி மாறி நடைபெறுகின்றன….
  இந்த சமூக கீழ் மேல் கட்டுமானங்கள் என்பன தொட்டுணர முடியாத…
  ஆனால்; சமூக நிகழ்வுகள் மூலம் புரிந்துகொள்ளக் கூடியன….
  இவ்வாறு புரிந்துகொள்வதற்கு உதவிபுரிவது…..
  இந்த இரு கட்டுமானங்களுக்கும் இடையில் அகப்பட்டிருக்கின்ற மனிதா;களின் செயற்பாடுகள் சிந்தனைகள் உறவுகள் எனக் கூறலாம்…
  அதாவது மனிதா;கள் உரூவாக்கியதே இந்த சமூக கீழ் மற்றும் மேல் கட்டுமானங்கள்…
  ஆனால் இறுதியில் இந்த மனிதா;களின் தலைவிதியை தீர்மானிப்பவையாக இந்தக் கட்டுமானங்கள் தொழில் படுகின்றன…..
  அதாவது இம் மனிதா;கள்து வாழ்வு> உறவுகளை> மற்றும பொருளாதார நலன்களைத் தீர்மானி;ப்பதில் இக் கட்டுமானங்கள் குறிப்பான தாக்கத்தை செலுத்துகின்றன….
  ஆகவே இத் தாக்கங்களானது மனிதா;களது உளவியில் குறிப்பிட்டளவு தாக்கத்தைச செலுத்தியுள்ளன….
  ஆகவே சமூக மாற்றத்திற்கான செய்றபாடு என்பது ஆகக் குறைந்தது மூன்று தளங்களிலாவது நடைபெறவேண்டியது அவசியமானது…..
  சுமூகத்தின் கீழ் கட்டுமானம் – பொருளாரா கட்டமைப்புகளையும் உறவு முறைகளையும் மாற்றயமைத்தல்
  சுமூகத்தின் மேல் கட்டுமானம் – சித்தாந்த மேலாதிக்கத்தை கட்டுடைப்பு செய்து புதிய சிந்தனைக்கான கட்டுப்பாடின்றி திறந்துவிடல்….
  மனிதா;களின் சுய மாற்றம் – மனிதாpன் பிரக்ஞை நிலையை உயர்த்துவதன் மூலம் உள்மாற்றத்தை ஏற்படுத்துதல்
  இந்த மூன்றும் சமாந்தரமாக நடைபெறலாம் அல்லது சுழலைப் பொருத்து ஒன்றுக்கு பின் ஓன்றாக அதன் முக்கியத்துவத்தைப ; பொருத்து நடைபெறலாம்….
  இது சமூகம மாற்றம் தொடர்பான எனது பொதுவான பார்வை….
  இதை எவ்வாறு செயற்படுத்தபோகின்றோம் என்பது சம கால அரசியலில் எவ்வாறு நாம் தாக்கம் செலுத்தப்போகின்றோம் என்பதைப் பொருத்தது…
  தேசிய அரசியலை முதன்மைப் படுத்தப்போகின்றோமான….
  பொருளாதரா விடுதலையை முதன்மைப்படுத்தப்போகின்றோமா…
  அல்லது ஓட்டுமொத்த சமூக விடுதலையை மாற்றத்தை முதன்மைப்படுத்தப் போகின்றோமா…
  என்பதை பொருத்த நமது தந்திரோபாயங்கள் வேறுபடப் போகின்ற….
  எதை முதன்மைப்படுத்தினாலும் நமது அரசியல் அடக்கப்ட்ட ஓடுக்கப்பட்ட மனிதா;களின் நலன்களிலும் அவர்களது அரசியல் அபிலாசைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றதா என்பதைப் பொருத்து நமது அரசியல் மட்டுமல்ல ஒரு சமூகத்தின் தேசத்தின் நாட்டின் நிகழ் கால எதிர் கால் அரசியல் தீர்மானிக்கப்படுகின்றது….
  இதற்கு முதலில் நண்பர்களே…
  சுமூக அக்கறை மற்றும் அதை மாற்ற விரும்பும் நம்மிடம் பண்பு மாற்றமும் பிரக்ஞை வளர்ச்சியும் அவசியமான தேவையாக உள்ளது….
  இறுதியாக பொருள் முதல் வாதமா அல்லது கருத்து முதல் வாதமா என்ற விவாத்திற்கு நான் வரவில்லை….
  ஆனால் எனது புரிதலில்….
  ஒரு பருப்பொருளின் நிலை என்பது ஒரு கணம் ;பொருளாகவும் மறு கணம் சக்தியாகவும் இருக்கின்றது….
  அதாவது பொருள்க்குள் சக்தியும் சக்திக்குள் பொருளும் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற.ன….
  இதனால் தான் மனிதா; என்ற பொருளுக்குள் மனித சக்தி குறிப்பாக உளவியல் சக்தி எவ்வாறு பல் வேறு தளங்களில் செய்றபடுகின்றது என்பதை புரிய முடியாமலிருப்பதன் விளைவு தான் நாம் எதிர்கின்ற அதாவது எதிரிகளாக நினைக்கின்ற அல்லது புரிந்துகொள்ளமுடியாத சில மனிதா;களின் நிலை…
  ஐயரின் பகுதி 24ல் கடைசியாக எழுதிய்
  “சமூகப் புறச் சூழல் மனிதர்களை உருவாக்குகின்றது என்பது உண்மையாயினும் ஒவ்வொரு தனி மனிதனதும் பாத்திரம் வரலாற்றின் போக்கில் தற்காலிகத் திரும்பல்களை ஏற்படுத்துகின்றது.”
  என்பதை இதனடிப்படையிலையே புரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கின்றேன்….
  நட்புடன்
  மீராபாரதி

  1. உங்கள் கருத்திற்கு நன்றி நீங்கள் சொல்லுவது போன்று இவர்கள் கையில் துப்பாக்கி இருந்தால் இவர்கள் தங்களை நோக்கி கேள்வி எழுப்புவர்களை கொலை செய்திருக்கக் கூடும். ஆனால் அதனை புலிகள் செய்தால் பாசிசம் இவர்கள் செய்தால் புரட்சி. நல்ல வேளை நான் தப்பித்துக் கொண்டேன். இவர்களின் கொலை வெறியால்தான் இவர்கள் ஒரு போதுமே தங்கள் நிஜ முகத்தைக் காட்டாமல் ஒழிந்திருக்கின்றனர். ஏனெனில் ஒழிந்திருப்பதுதான் மற்றவர்களை தாக்கி அழிப்பதற்கு இலகுவானது. கோட்டால் அது சேகுசேராவின் உக்தி என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் விடைகளை தன்வசம் கொண்டிருக்கும் இவர்களால் ஏன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாமல் இருக்கின்றது.? இவர்கள் புரட்சி செய்வதற்கு யார் தடையாக இருக்கின்றனர்? நாகாரிகமற்ற முறையில் கொலை வெறியுடன் கருத்துக்களை பதிவு செய்த எவரையுமே நான் அறியேன். ஆனால் நான் நினைக்கிறேன் இவர்கள் எவருமே ஈழத்தில் இல்லையென்று. ஈழத்து சூழலிருந்து தப்பி ஓடி புலம்பெயர் தேசங்களில் கொலை வெறியோடு அலைந்து திரிகின்றனர். சமகால ஈழத்து பிரச்சனை என்றவுடன் இவர்களுக்கு கிலி பிடித்து விடுகின்றது. ஏனென்றால் இவர்கள் எவராலுமே தங்களின் சுகபோக புலம்பெயர் குடும்ப வாழ்வை தியாக செய்ய முடியாமல் அங்கிருந்து கதையளந்து கொண்டிருக்கின்றனர். தங்களது பிள்ளைகள் எல்லாவற்றையும் சர்வதேச பல்கலைகழங்களில் படிப்பித்துக் கொண்டு ஈழத்தில் இருக்கும் ஏழைகளின் பிள்ளைகளை எரியிவிட்டு அதில் குளிர் காய நினைப்பவர்கள். இவ்வாறனவர்கள் இவ்வாறு பாய்ந்து விழுவது குறித்து ஆச்சாpயப்பட ஒன்றுமில்லை. தங்களிடம் எல்லாவற்றுக்கும் பதில் இருப்பதாக கூறும் இவர்களால் தங்களது நிஜ முகத்தைக் காட்ட முடியுமா? நிஜ முகத்துடன் எங்களை எதிர்கொள்ள முடியுமா? நான் இந்த தளத்தில் எங்குமே முகத்தை காட்ட துணிவற்று விசமத்தனமான விவாதங்களில் ஈடுபடவில்லை. எனது புகைப்படத்துடன் எனது முகவாpயை பகிரங்கப்படுத்த முடியும். இவர்களால் முடியமா? இன்று ஈழத்தில் இருந்து புரட்சி பற்றி பேசிக் கொண்டிருக்கும் இவர்களின் குருநாதர்களும் சமகால அரசியல் குறித்து புனைப் பெயர்களிலேயே வெளுத்து வாங்கி வருகின்றனர். ஏன் புனைப்பேர் ஏனென்றால் தங்களை பகிரங்கப்படுத்தினால் தங்கள் குடும்ப வாழ்விற்கு சிக்கல் ஏற்பட்டுவிடும் தங்கள் பிள்ளைகளின் வாழ்வு பாதிக்கப்படும் என்ற அச்சம். பின்னர் யாரை வைத்து நீங்கள் புரட்சி பற்றியும் அடுத்த கட்ட போராட்டம் பற்றி பேசுகின்றீர்கள். அடுத்த வேளை உணவு குறித்த கேள்வியுடன் பாpதவிக்கும் அந்த ஏழை வன்னி மக்களின் மிஞ்சியிருக்கும் பிள்ளைகளையும் பலியெடுப்பதற்காகவா? நீங்கள் மனச்hட்சி குறித்து எப்போதாவது சிந்தித்ததுண்டா. இருந்தால் அல்லவா சிந்திப்பதற்கு. எனது எழுத்துக்கள் தொடரும் உங்களைப் போன்றவர்களால் என்னைப் போன்றவர்களை அசசுறுதி அடிபணிய வைக்க. எனவே நன்பர்களே உங்கள் சுகபோக வாழ்வை விட்டுவிட்டு முதலில் ஈழத்திற்கு வாருங்கள். பின்னர் அடுத்தது குறித்து பார்ப்போம் உங்களால் முடியுமானால். அதன் பின்னர் என்னைப் போன்றவர்களை தீர்த்துக் கட்டுவது குறித்து நீங்கள் யோசிக்கலாம் உங்கள் மாவோயிச பாணியில்.

   1. லெனின் புனைப்பெயர் வைத்திருந்ததோ, ஸ்டாலின், மாவோ புனைப்பெயர் வைத்திருந்ததோ உங்களுக்கு தவறானதாகவே தெரியும். இவர்கள் இருக்கும் வன்முறைக்கொண்ட சமூகத்தை, இராணுவம் போலீஸ் என்று ஒரு பெரிய ஆயுதம் கொண்ட வெறியர்களை வைத்துக்கொண்டிருந்த ஒரு அரசு இயந்திரத்தை, ஒரு பிற்போக்கான சமூகத்தை காத்துக்கொண்டிருந்த இந்த காவலர்களை தூக்கியெறிவது என்பதை ஜனநாயக ரீதியில் ஏற்றுக்கொள்ளாததை, பிரச்சாரம் செய்யக் கூட அனுமதிக்காதவர்களை எதிர்த்து ஒரு சமூகத்தையே புரட்டிபோடுபவர்களுக்கு புனைப்பெயர் அவசியமாகிறது. 
    (இதில் எதுவுமே எனக்கு அவசியமில்லை என்பது தெரிவிக்கிறேன் – நான் இதில் விமர்சகனாவே இருக்கிறேன்). 

    ஆனால் உங்கள் விசயம் அவ்வாறு இல்லைபோலும். ஏனென்றால் ஆளும் வர்க்கத்திற்கு எந்த சேதாரமும் இல்லாதபோது அவர்கள் உங்களை ஆதரிஷிக்கவே செய்வார்கள். ஆகையால் உங்களுக்கு அதன் பலனே உண்டும். எ.கா. இன்று இலங்கையில் ஒன்றுபட்ட இலங்கையில்தான் தீர்வு என்றோ, விடுதலைப்புலிகளை ஒழிப்பதே எனது வேலை என்றோ நீங்கள் அங்கு கூறுவீர்களேயானால் அது ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யவே அவர்களுக்கு பயன்படுவீர்கள். ஏனென்றால் அவர்களுக்கு இன்று சவாலானவர்கள், சவாலான கருத்தை எதிர்ப்பவர்கள் என்ற முறையில் அவர்கள் உங்களை ஆராதிக்கலாம். உங்களை ஒடுக்குவது ஒரு ஆளும் வர்க்கத்திற்கிடையிலேயே என்ன முரண்பாடோ அந்தளவுக்கே எடைபோடுவார்கள். ஆகையால் உங்களுக்கு தேவையில்லாமல் கூட போகலாம். ஆனால் எந்த ஒரு சமூக மாற்றத்திற்காக போராடும் மனிதருக்கும் அது தவிர்க்க முடியாத ஒரு விசயமாக மாறிவிட்டது.
    இன்னொரு நடைமுறை அனுபவித்தையும் கூறுகிறேன். தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியில் அரசு ஊழியர்களின் போராட்டம் நடைபெற்றது. அப்போது அதை ஒடுக்குவதற்கு கைதுகளும் தாக்குதலும் நடந்தது. அதை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தவேண்டி (மறைந்துகொள்வதை கேவலமாக கேலி பேசும் மார்க்சிஸ்டு கட்சியே) அனைத்து முன்னணி ஊழியர்களும் தலைமறைவாக இருந்து அந்தப் போராட்டத்தினை வழிக்காட்டினார்கள். இப்படி ஒரு சராசரியான வெறும் கூலி உயர்வு போராட்டத்திற்கே, இந்த நிலை என்றால், ஒட்டு மொத்த சமூக மாற்றத்திற்காக போராடுபவர்களின் உத்தி என்னவாக இருக்கவேண்டும் என்பதை நீங்கள்தான் புரிந்துகொள்ளவேண்டும். 

    ஆகையால் நான் வெளிப்படையாக இருக்கிறேன் என்று பெருமை பேசிக்கொள்ளாதீர்கள். இது சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் உங்களின் நிலை என்பதை பட்டவர்த்தனமாக காட்டிக்கொடுக்கிறது.
    (நான் கூட வெளிக்காட்டிக்கொள்ளலாம் – ஆனால் விவாதம் என்னைப் பற்றியது அல்ல).

    அதே போல் உச் கொட்டுவதால் மட்டுமே, வெறும் பரிதாபத்தை பேசுவதால் மட்டுமே சமூகம் மாறிவிடுவதில்லை. இதில் உங்கள் கையாலகாதத் தனம் மட்டுமே பளிச்சிடும். ஏனென்றால் முன்பை விட இப்போது இலங்கையில் ஈழத்தில் இன ஒடுக்குமுறை அதிகமாகியிருக்கிறது. இனியொருவில் வரும் சில தகவல்களே இதை நிரூபிக்கப் போதுமானது. எந்த வகையிலும் இன ஒடுக்குமுறை குறையவில்லை, அதிகமாகியே இருக்கிறது. சம காலத்து ஈழப் பிரச்சனை இதுவே. இந்த இன ஒடுக்குமுறையை எப்படி எதிர்த்துப் போராடப் போகிறீர்கள் என்பதுதான் சம காலத்து ஈழப் பிரச்சனை. இத்தனை பேர் செத்தார்கள் என்பது எந்தளவுக்கு தாங்கமுடியாத பிரச்சனையாக இருக்கிறதோ அதைவிட இனிமேல் இந்த இனப்படுகொலை தொடராமல் எப்படி தடுக்கப்போகிறோம் என்பதுதான் அதைவிட சவாலான பிரச்சனை. இங்கு இன பிரச்சனை தீர்ந்ததாக நீங்கள் நினைக்கவில்லை என்றே எண்ணுகிறேன். இன்னும் இதுதான் பிரதானமாக இருக்கிறது. அனைத்து உலகப் புரட்சியும் ஒரு சேர நடக்கவேண்டும் என்று டிராஸ்கியவாதிகளுக்கு நடுவிலேதான், எப்படி சரியாக லெனினிய அடிப்படையில் அந்த ஒரு நாட்டில் இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு புரட்சி அவசியம் என்பதை சிந்திக்க வேண்டியிருக்கிறது. 

    இங்கு இன்னும் தனி ஈழத்திற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகியிருக்கிறதே தவிர, குறையவில்லை. இதை கணக்கில் எடுக்காமல் வெறுமென விடுதலைப் புலிகளை தூற்றுவது வேலையில்லை. அடுத்த நிலைக்கு அவர்கள் முன்னேறாமல் போனதற்கு அவர்களிடம் உள்ள சில குறைகளே தவிர, ஒரு கால் நூற்றாண்டு நிலைத்து நின்றதற்கு அவர்களின் விடாப்பிடியான போராட்டம் என்பதை மறந்துவிட்டு பேசுவது சரியில்லை. 

    அதே போல் ஈழத்து களத்தில் நின்று தாக்குப்பிடிக்க முடியாமல் தன் வாழக்கையை தக்கவைத்துக்கொள்ள புலம்பெயர்ந்தார்கள் என்பது எந்தளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு அவர்கள் பங்களிப்பில்லாமல் ஒரு சிறிய நாட்டில் ஈழத்தில் இத்தனை நாள் ஒரு போராட்டத்தை தக்கவைத்திருக்க முடிந்திருக்காது என்பதும் அதே அளவு உண்மை. அவர்களை ஆதரவு நிலையிலிருந்து போராட்டக் களத்திற்கு கொண்டுவருவதற்கு நீங்களோ புலிகள் அல்லாத வேறு அமைப்புகளோ என்ன செய்தீர்கள் என்பதை பட்டியலிடமுடியுமா. ஏன் ஒன்றே ஒன்றையாவது சொல்லமுடியுமா. இதைத்தான் அவர்கள் தொடங்கியதிலிருந்து மற்றவர்கள் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டிய பணி. அதில் அவர்கள் குறைகளை களைந்து செல்ல வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஊன்றி நின்று போராடியவர்களை மறுத்து நீங்கள் சாதிக்கப்போவது ஒன்றிமில்லை, வெறும் வாயில் அவலைத் தவிர.

    1. “அவர்களை ஆதரவு நிலையிலிருந்து போராட்டக் களத்திற்கு கொண்டுவருவதற்கு நீங்களோ புலிகள் அல்லாத வேறு அமைப்புகளோ என்ன செய்தீர்கள் என்பதை பட்டியலிடமுடியுமா. ஏன் ஒன்றே ஒன்றையாவது சொல்லமுடியுமா.”
     இந்தக் கேள்வியை நீர் புலிக்காய்ச்சலில் திரிந்து கொண்டிருந்த புலம்பெயர் புலி எதிர்பாளர்களிடம்தான் கேட்க வேண்டும். புலிகள் ஈழத்தில் நிலைகொண்டிருந்த காலத்தில் நாங்கள் எப்படி இருந்தோம் என்பது என்னை அறிந்தவர்களுக்குத் தொpயும். நீர் கருத்துத் தொவித்துக் கொண்டிருக்கும் தளம் கூட புலிகளை பாசிசவாதிகள் என்று குறிப்பிட்ட தளம்தான். இதனை அவர்களால் ஒபபுக்கொள்ள முடியுமென்றே நம்புகிறேன். புலிகள் மீது எங்களுக்கு கோபம் இத்னை தியாகங்கள் வீணாவிட்டதே என்பதேயோழிய வேறொன்றுமில்லை. புலிகளை நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் பாசிசவாதிகள் என்று குறிப்பிட்டதில்லை. அவ்வாறு குறிப்பிடுவதில் மகிழ்சியடைந்தவர்கள் புலிகளின் அழிவுக்காக காத்திருந்தவர்கள் நீர் சொல்லும் அந்த மார்ச்சிய புரட்சியாளர்கள் என்பதை மறந்துவிட்டீர் போலும். உங்கள் ஈழத்து மார்சிய குருநாதர் ஒருவர் திரு.பிரபாகரன் அவர்களின் மறைவுக்கு பின்னர் தமிழ் நாட்டில் இருந்து வெளிவவரும் உமது நிலைபாட்டில் இருக்கும் மார்க்சிய சஞ்சிகையொன்றில் அவரை இழிவு படுத்தும் வகையில் அவரும் அமிர்தலிங்கமும் ஒன்றுதான் அவர் சரணைந்து கொல்லப்படாமல் இருந்திருந்தால் அவரும் அரசுடன் இணைந்து செய்பட்டிருப்பார் என்று மிகவும் கேவலமாக பேசியதையும் அதற்கு எதிராக நான் கீற்று இணையத்தளத்தில் ‘உடைவுறும் பிரம்மிப்புக்கள்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையையும் படித்துப்பாரும். அப்போது உமக்கு எனது கடந்த காலம் பற்றி ஓரளவு விளங்கிக் கொள்ள முடியும். தம்பி பகவத் இன்று வேறு வழியில்லாமல் புலிகளை உங்கள் வியாபாரத்திற்கு எடுக்காதிர்கள். “ஒரு கால் நூற்றாண்டு நிலைத்து நின்றதற்கு அவர்களின் விடாப்பிடியான போராட்டம் என்பதை மறந்துவிட்டு பேசுவது சரியில்லை” இதனை மறுப்பதும் நாங்கள் அல்ல தம்பி. உமது ஈழத்து வைதீக மார்க்சிய ஆசான்கள்தான் அவ்வாறு சொல்லி வருகின்றனர். புலிகள் மக்களைச் சார்ந்து இருக்கவில்லை அவர்கள் வெறுமனே மக்களை ஒருவகை அச்சுறுத்தி தக்கவைத்திருந்தனர் என்று அவர்கள்தான் கூறிவருகின்றனர். அந்த சந்தர்ப்பங்களிலும் இவ்வாறான வைதீக போக்காளர்களை எதிர்த்து செய்றபட்டவர்களும் நாங்கள்தானே ஒழிய உம்மட வகை மார்க்சியர்கள் அல்ல. இது தொpயாமல் நீர் புலிகள் பற்றி எங்களுக்கே சொல்ல வருகின்றீர். இங்கு கருத்து அலல பிரச்சனை. உங்கள் வகைப்பட்ட மார்க்சியம் பேசும் எவரையும் கொழும்பு கருத்தில் கூட எடுக்கப் போவதில்லை ஏனெனில் கொழும்பிற்கு அச்சம் புலிகள் போன்ற உறுதிவாய்ந்த அமைப்புகள் மீதே தவிர உங்களைப் போன்று லெனின் பற்றியும் மவோ பற்றியம் பேசிக் கொண்டிருப்பவர்கள் பற்றியல்ல. முதலில் இதனை விளங்கிக் கொள்ள முயற்சியும். ஆனால் தமிழர் வரலாற்றில் புலிகள் போன்றதொரு ஓர்மம் மிக்க அமைப்பு இனித் தோன்றப் போவதில்லை. அது உங்களைப் போன்ற இழப்புக்களுக்கு அஞ்சும் உங்கள் குடும்பம் குறித்து காpசனை கொள்பவர்களால் ஒரு போதுமே முடியாது. வரலாற்றின் போக்கில் நல்ல சகத்திகள் அனைத்தும் ஈழத்து மண்ணில் சந்திக்கும் போது சாpயான தலைமை வெளிவரும். அது வரைக்கும் தேவை மக்களை பாதிப்பிலிருந்து வெpள்கொனர்வது எவ்வாறு என்பதுதான். அதனன எவர் செய்ய முயல்கின்றாரோ அவர்களுடன் கைகோர்த்து நாங்கள் பணியாற்றுவோம். இதில் எதற்கு கருத்தியல் விவாதங்கள். தேவை அர்ப்பணிப்பு உணர்வு ஒன்றுதான். ஈழத்திற்கு போவோம் அங்கு பணியாற்றுவோம் என்ற ஒன்று இருந்தால் போதும் பிறகெதற்கு தேவையில்லாமல் லெனினையும் மாவோவையும் இழுத்து கொச்சைப்படுத்த முயல்கின்றீர். உமக்கு இவர்களைப் பற்றிப் பேசுவது ஒரு பொழுதுபோக்கு. மாலை நேர மகிழ்ச்சி. தயவு செய்து அவர்களை கொச்சைப்படுத்தாதீர்கள். செயல் வீரர்களின் பெயர்களை நீங்கள் உச்சாpப்பதால் மட்டுமே நீங்கள் செயல் வீரர்களாகவிட முடியாது என்பதை நிளைவில் கொள்ளுங்கள்.

    2. லெனின் ஸ்டாலினால் மிரட்டப்பட்டார் என்றூம் அவராலேயே கொல்லப்பட்டார் என்றூம் ஒரு வதந்தி உண்டு அது மட்டுமல்ல பின்னாளீல் லெனின் ரஸ்ய மக்களா லேயெ தூக்கி வீசப்பட்டார்.வயிற்றூக்கு சோறூ வேண்டும் மக்கள் சித்தாங்தங்கள சிந்திப்பதில்லை.புலிகள் அமைப்பில் இருந்தவர்களீல் அனேகமானோர் வறூமையால் இணந்ததாய்க் கூட கதைககள் உண்டு.

   2. //நீர் கருத்துத் தொவித்துக் கொண்டிருக்கும் தளம் கூட புலிகளை பாசிசவாதிகள் என்று குறிப்பிட்ட தளம்தான். //
    நீங்கள் குறிப்பிட்ட விசயத்தை நன்கு அறிந்ததால்தான் அதன் கருத்தை தாங்கி எழுதுபவராகவும் (கட்டுரையாளராக) நினைத்தேன். ஆனால் இந்த விசயத்தில் வேறுப்பட்டதில் மகிழ்ச்சி.
    //புலிகளை நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் பாசிசவாதிகள் என்று குறிப்பிட்டதில்லை. //
    அதே போல் நீங்கள் குறிப்பிடவில்லையென்றாலும் இந்த தளத்தில் எழுதும் போது இவர்களின் கருத்துக்கு வலு சேர்ப்பதாலேயே அவர்கள் உங்களை எழுத அனுமதிக்கிறார்கள் என்பதே எனது கருத்து. இருந்தும் அப்படி குறிப்பிடாமல் இருந்ததற்கும் அதை எதிர்த்து எழுதியதற்கும் நன்றி. முடிந்தால் அந்த கட்டுரையின் லிங்க்கை போடவும். நான் படிக்க ஏதுவாக இருக்கும்.

    //நீர் சொல்லும் அந்த மார்ச்சிய புரட்சியாளர்கள் என்பதை மறந்துவிட்டீர் போலும்//நான் நீங்கள் நினைக்கும் மார்க்சிய புரட்சியாளர் இல்லை. இவர்கள் எடுத்த தவறான ஈழ நிலைப்பாடும், இந்த நிலையிலும் ஈழத்திற்கு போராடுவதை ஈழத்திற்கு போராடியவர்களை வசைபாடுவதிலேயே தனது காலத்தை முடித்தவிட்டவர்கள். அவர்கள் தான் மார்க்சியவாதி என்று மட்டும் நினைத்திருந்தால் என்ன செய்ய? அதிலிருந்து மார்க்சியத்தையே கொச்சைபடுத்துவது சரியான விசயம் அல்ல. இவர்கள் இன விசயத்தில் மார்க்சியத்தை குழிதோண்டி புதைத்தவர்கள். இனத்திற்காக போராடுவது மார்க்சியவாதிகளின் வேலை இல்லை என்று சொல்லுபவர்கள். அவர்களை தவிர இன்னும் சில மார்க்சிய அமைப்புகள் இருக்கத்தான் செய்கிறது. இவை எல்லாவற்றையும் விட மார்க்சியம் இனப்பிரச்சனையில் எவ்வாறு வழிக்காட்டியது என்பதை அறிந்துகொள்ளாமல் ஏதோ ஒரு கட்சி தவறான அனுகுமுறையை எடுத்தது என்பதற்காக நீங்கள் மார்க்சியத்தை ஏற்காததை ஞாயப்படுத்தமுடியாது. 

    //‘உடைவுறும் பிரம்மிப்புக்கள்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை//உங்கள் கட்டுரையின் லிங்கை முடிந்தால் கொடுக்கவும்.
    //புலிகள் மக்களைச் சார்ந்து இருக்கவில்லை அவர்கள் வெறுமனே மக்களை ஒருவகை அச்சுறுத்தி தக்கவைத்திருந்தனர் என்று அவர்கள்தான் கூறிவருகின்றனர்.//
    அவர்களை அம்பலப்படுத்தவும், அது மார்க்சியமல்ல மார்க்சியத்தின் பெயரால் செய்யப்படும் மோசடி என்பதையும் அம்பலப்படுத்துவது அவசியமானது. அதை என்னளவில் எந்த தளத்திலிருந்தாலும் செய்வேன்.
    இறுதியாக இன்று பாதிப்பிலிருந்து ஈழ மக்களை வெளிக்கொணர்வதுதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எவ்வாறு என்பத்தான். முன்பை விட இன்னும் மூர்கமாக எஞ்சியிருக்கும் மக்களையும் இன ஒடுக்குமுறையின் உச்சமாக அழிப்பதில் இலங்கை அரசு முனைந்திருக்கிறது. அதை எதிர்த்துப் போராடுவது என்பது எந்த அடிப்படையில் மக்களை நம்பிக்கை கொள்ள வைக்கப்போகிறீர்கள் என்பதுதான்.
    //“அவர்களை ஆதரவு நிலையிலிருந்து போராட்டக் களத்திற்கு கொண்டுவருவதற்கு நீங்களோ புலிகள் அல்லாத வேறு அமைப்புகளோ //என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். புலிகள் மீதான விமர்சனமே மக்களை வெறும் ஆதரவு தளத்தில் வைத்திருந்ததுதான் என்பதே விமர்சனம். ஆனால் அவர்களை போராட்டக் களத்திற்கு கொண்டுவருவதற்கு எங்கெங்கு சாத்தியமோ அங்கெல்லாம் அரசியல் கிளர்ச்சிகளை நடத்தியிருக்க வேண்டும், என்பதே எனது கருத்து. அதுமட்டுமில்லாமல் அமைதி காலங்களில் பிரிந்து போவதா சேர்ந்து இருப்பதா என்பதற்கு கருத்துகணிப்பு வாக்கெடுப்பை நடத்த உலக நாடுகளை நிர்பந்திக்கும் வகையில் ஒரு அரசியல் போராட்ட முறையினை கையெலெடுத்திருக்க வேண்டும். இது எல்லாம் விமர்சனமாக சொல்லலாம். ஆனால் அதே போல் இன்றும் மீண்டும் எழுவதற்கு கூட அங்குள்ளவர்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டவே இப்போது சாத்தியம் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை. ஆனால் அதெ நேரத்தில் எதை நோக்கிய இந்த அரசியல் திரட்டல் அமையவேண்டும் என்பதில்தான் பார்வை வேறுவேறாக அமைகிறது. இங்குதான் அரசியல் மார்க்சிய பார்வை தேவைப்படுகிறது. அதற்கே அதனுடைய அனுபவங்கள் தேவை.
    தமிழ்மாறன் என்ற பெயரில் ஒரு கொசுரு செய்தி இருந்தது. இந்த ஆதாரமுமில்லாமல் குறுக்கு சால் ஒட்டியிருக்கிறார். எப்போதும் மக்கள் லெனினையோ ஸ்டாலினையோ தூக்கியெறிந்தது கிடையாது. இந்த ஆண்டு பாசிச எதிர்ப்பு நாளில் எல்லாவிடங்களிலும் ஸ்டாலின் பதாகையை மக்கள் தூக்கிச் சென்றனர். அரசே தடுக்க முடியாத அளவுக்கு லெனின் படத்தையும், ஸ்டாலின் படத்தினையும், எல்லா இடங்களிலும் ரஷ்யா முழுக்க மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதை தெரியாமல் பாவம் யாரோ காற்றுவாக்கில் சொன்னதையெல்லாம் தன் சந்தோசத்திற்கு இவரும் சொல்கிறார்.

    1. எந்தப் பெயரை வைத்துக் கொள்கிறீர்களோ அந்தக் குணம் வந்து விடுகிறது.லெனின் சிலைகள் உடைக்கப்பட்டபோது எங் கு இருந்தீர்கள் பகத்.ஸ்டாலின் புத்தர் போல வாழ்ந்தார் என்பது உங்கள் கருததா?கம்யூனிசம் சரி எனில் ரஸ்ய மக்கள் ஏன் சனநாயகத்திற்கு மாறீனர்?

    2. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1297:2009-11-16-20-42-04&catid=1:articles&Itemid=264 இதை கிளிக் செய்யுங்கள் திறக்காது போனால் கீற்று தளத்திற்கு சென்று யதீந்திரா என்று பதிவு செய்து தேடினாலும் பார்க்கலாம். இது புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் எழுதப்பட்டது. புலிகள் தொடர்பாக எனக்கு அதிக விமர்சனங்கள் உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. புலிகள் மீதான விமர்சனங்கள் என்பது வேறு அவர்களை கொச்சைப்படுத்துவது என்பது வேறு. தவிர நான் எங்கும் மார்க்சியம் காலாதி வதியாகி விட்டதென்றோ அது பயனுடைதல்ல என்றோ குறிப்பிட முயலவில்லை ஆனால் மார்க்சிற்கு பிற்பட்ட 170 வருட கால சிந்தனைகள் மாற்றங்கள் எதனையும் உள்வாங்காது சிந்திப்பதுதான் மார்க்சியம் என்றால் நான் மார்க்சியத்திற்கு எதிரான நபரேதான். அதில் சந்தேகமில்லை. மார்க்சியத்தை மதமாக்கும் எந்தவொரு முயற்சிக்கும் நாம் எதிரானவர்களே! மதம் ஒரு அபினி என்பார் மார்க்ஸ். எனவே மார்சியத்தையும் ஒரு அபினியாக்கி அதன் போதையில் திழைப்பதற்கு உங்களுக்கு விருப்பமெனின் அது உங்கள் சுதந்திரத்திற்கு உட்பட்டது அதில் நான் தலையிட முடியாது. அதற்கு எனக்கு உாிமையும் இல்லை. உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி. தோழமையுடன் யதீந்திரா

    3. //விமர்சனங்கள், உடைவுறும் பிரமிப்புகள் மற்றும் கொச்சைப்படுத்தலுக்கான காத்திருப்பும்//
     கட்டுரையினைப் படித்தேன். அதில் குறிப்பிட்ட நபர்கள் மீதான விமர்சனம் சரியானது, வரவேற்கபடவேண்டியது. ஆனால் அதில் எதிலும் உங்கள் விமர்சனம், கருத்து எது என்பதை பதியப்படவில்லை. ஆகையால் அது குறித்து விவாதிக்க முடியவில்லை. ஆனால் மீண்டும் கூறுகிறேன். இவர்கள் இருவருமே மார்க்சியத்தை மார்க்சியத்தின் பேராலேயே மறுத்தவர்கள். பின்னாளில் தான் சொல்வதுதான் மார்க்சியம் என்று கூறிக்கொண்டிருப்பவர்கள். சில தகவல்கள் அந்தக் கட்டுரையில் பெற்றதற்கு நன்றி.

 15. மீராபாரதி: “ஒரு பருப்பொருளின் நிலை என்பது ஒரு கணம் ;பொருளாகவும் மறு கணம் சக்தியாகவும் இருக்கின்றது….
  அதாவது பொருள்க்குள் சக்தியும் சக்திக்குள் பொருளும் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற.ன….”

  இங்கே ஐன்ஸ்டைனின் சார்பியற் கொள்கையின் மூலம் கண்டறியப்பட்ட உண்மை ஒன்று “ஆன்மிக வாதிகள்” என்போரால் வலிந்த்து கொச்சைப் படுத்தப்பட்டு வருகிறது.
  பவுதிகம் கருதும் சக்தியும் “ஆன்மிகவாதிகள்” கருதும் சக்தியும் முற்றிலும் வேறுபட்ட விடயங்கள்.
  விஞ்ஞானத்தின் முன்பாகப் பல மதச் சிந்தனைகள் தகர்ந்து போன பிறகு, மதவாதிகளும் ஆன்மிகவாதிகளும் விஞ்ஞானத்தைக் கொச்சைப் படுத்திச் சாட்சிக்கு அழைப்பது வழமையாகி விட்டது.

  1. உங்கள் பதில் சரியானது. எனது நன்றிகள். இந்த இடத்திலிருந்துதான் கட்டுரையாளரும் இவரும் வேறுபடுகிறார்கள். அதாவது எல்லாம் உளவியல்தான் தீர்மானிக்கிறது. அது பருப்பொருளின் இன்னொரு வடிவம் என்று நினைக்கிறார்கள். இதற்கான உங்கள் பதிலுக்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன்.

 16. கங்கை கரையிலும் , காவேரி கரையிலும் சொல்லப்படாததா ?அப்பப்பா !
  இவர்கள் சொன்ன தத்துவங்களின் ஓலை சுவடிகளை திருடித்தான் ரசியர்களும் ,அமெரிக்கர்களும் ,ஐரோப்பியர்களும் விஞ்ஞான கண்டு பிடிப்புகளை எல்லாம் கண்டுபிடித்தார்கள்.!!

  Shiva
  “இயக்கத்திற்கு எதிரானது உராய்வு.”ஆகவே உராய்வை சுட வேண்டும்.இது மாக்சிய சார்புள்ள விஞ்ஞான (பௌதிகவியல் )ஆசிரியர் 1985 இல் இயக்கங்களை மறைமுகமாக நக்கல் அடித்தார்.இயக்கங்களுக்கு “எதிரானவர்களை ” இயக்க காரர் கொன்றொழித்த போது சொல்லப்பட்ட நகைசுவை.

  யதீந்திரா!
  இலங்கையில் மாக்சிய இயக்கத்தை சேர்ந்தவர்கள் எங்கே உங்கள் “இயக்கத்தவர்களை “போலே சுடு பட்டார்கள். நீன்ன்கள் திரும்ப திரும்ப இந்தியாவுக்கு வால் பிடிக்க வேண்டும் என்றால் இந்த வெப் சைட்டில் எழுதுவது உங்கள் பொன்னான நேரத்தை வீனாக்குவதாகும்.
  நேரே போய் சம்பந்தன் ஐயாவோடு சேர்வது உத்தமம்.

  1. போல் கோலியோ விலிருந்து இன்றய டான் பிறவுண் வரை நமது தத்துவம்,சித்தாந்தம்,வேதாந்தங்களால் மட்டுமல்ல வேதத்தல் கவரப்பட்டவர்களே.

   1. வேதத்தால் கவரப்படுவது என்பது சமூகத்தின் அடிப்படையாக மாறிவிடுவதில்லை. எது சரியானது, சமூக மாற்றத்திற்கான வழியினை உண்டாக்குவது எது. இன்று எது சமூக மாற்றத்திற்கு தடையாக இருக்கிறது. இன்று வேதங்கள் சமூக மாற்றத்திற்கு தடையாக இருக்கிறது. ஏன் என்றால் பிற்போக்கான வேதம் சமூகத்தினை அடுத்தக் கட்டத்திற்கு மூன்னேறாமல் இருத்தி வைக்கிறது. அது ஒரு இலக்கியம் என்ற வகையில் வேண்டுமானால் கவரப்படலாம். இலக்கியத்தையும் அதன் தொன்மையையும், அதன் கற்பனையையும் வேண்ட்மானல் அனைவரும் ரசிக்கலாம். அது ஒரு வழிமுறையாக யாரும் கொண்டிருக்கவில்லை. அதை சிறப்பானது அதுதான் வாழ்க்கைக்கானது என்று கூறுபவர்கள் கூட அதை பின்பற்றமுடியாது. அப்படி இருந்தால் வேதத்தில் தலைமைப் பாத்திரம் வகித்த பார்ப்பனர்கள் வெறும் மாட்டுக் கறியும், குதிரை கறியும், குடியும் மட்டுமே சிறந்தது என்று திரிந்துக்கொண்டிருக்கவேண்டும். ஒரு தார மணம் இல்லாமல் இன்று சீரழிவாக பார்க்கப்படும் யார் யாரோடு வேண்டுமானாலும் என்ற குடும்ப முறையில் ஆதி நிலையை சிறப்பானதாக நினைக்க வேண்டும். ஆனால் அதையெல்லாம் நிராகரித்து, இன்று விரும்பியோ விரும்பாமலோ நாகரீகத்தின் அடுத்தக் கட்டத்திற்கு வந்திருக்கிறார்கள் அனைவரும். இதற்கான பங்கு அறிவியலும், வேதத்தை மறுத்த தத்துவங்களாலும்தான். ஏன் ஆன்மீகத் தத்துவமான ஆகமம் கூட வேதத்தை மறுத்து வந்ததே. அது கூட இன்று மாறி வேதாகமம் என்று ஆகியிருக்கிறது. இது கூட சமூக மாற்றத்தினை உள்வாங்கியே மாறிவந்திருக்கிறது. ஆனால் இவை எந்தக் கட்டத்திலும் சமூகத்தை உருவாக்கியதில் பங்குவகிக்கவில்லை. சமூகத்தை ஆளும் வர்க்கங்களுக்கு ஏற்றார்போல் ஒழுங்குபடுத்தவே பங்காற்றியது. இன்று அதை உடைத் தெறிந்தால்தான் தூக்கியெறிந்தால்தான் அடுத்தக்கட்ட வளர்ச்சி என்ற நிலைக்கு சமூகம் குறிப்பாக இந்திய சமூகம் தேங்கிய நிலையில் இருக்கிறது. அது ஒரு வரலாற்று ஆவணம் அவ்வளவே. அதுவே மாமருந்து அல்ல. 

 17. //தென் ஆசிய சமூகங்களைப் பொருத்தவரை சாதிய உறவு முறைகளே இதற்கு பங்களிப்பனவாக இருக்கின்றன….//
  சாதிய உறவு என்பது எதை கூறுகிறீர்கள். இங்கு ஒடுக்குமுறை இல்லை என்பதா?இங்கும் ஒடுக்குமுறைதான் பிரதான அடிப்படை. யார் யாருக்கான ஒடுக்குமுறை. உள்ளடக்கத்தில் நிலப்பிரபுத்துவ உறவினை வளப்படுத்தவே சாதி என்பது அறிந்த ஒன்று. வர்ணமுறை எப்படி அடிமை முறைக்கானதோ, சாதி என்பது பண்ணையடிமை முறைக்கானது.எப்போது பண்ணையடிமை ஒழிக்கப்பட்டு முதலாளித்துவ முறை நிலை நாட்டப் படுகிறதோ அங்கு சாதிக்கான வேர் அகற்றப்படுகிறது. ஆகவே சாதிய தத்துவம் இங்கு நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கத்திற்கே சேவை செய்கிறது. வேறுபட்ட நிலை என்பது வடிவத்தில் இருக்கிறதே தவிர அதன் சாராம்சத்தில் மாறுதல் இல்லை. இதனாலேயே இங்கு மார்க்சிய தத்துவம் பொருந்தாது என்பது ஏற்கமுடியாது.

  //இநதடிப்படையில் பொருளாதரா சாதிய குடும்ப சமய ஆணாதிக்க உறவுகள் மற்றும் அதன் கட்டுமானங்கள் என ஒவ்வொன்றும் சமூகத்தின் அடிக் கட்டுமானங்களாக இருக்கின்றன…//
  மேற்கண்ட அடிப்படையில் சாதி என்பதும், குடும்பம், மதம், என ஓவ்வொன்றையும் அடிக்கட்டுமானங்களாக வரையறுக்கிறீர்கள். இவை அனைத்துமே மேற்கட்டுமானங்களே. அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம் என்ற மார்க்சிய வரையரையை ஏற்றால் இவையெல்லாம் மேற்கட்டுமானங்களாகவே இருக்கமுடியும். 
  எவ்வளவுதான் அனைத்தையும் யார் கற்றாலும், அதில் ஏதோ ஒரு கருத்தை அவர்களுடைய கருத்தாக தன்னுணர்வோடோ அல்லது தனனியறியாமலேயோ மாற்றிக்கொண்டு ஏற்றுக்கொண்டு வருவார்கள் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். அப்படி தொடக்கத்திலேயே எந்த அடிப்படையில் ஒரு கருத்துருவாக்கத்தை தொடங்குவது என்பதில் தான் இருவேறு உலக கண்ணோட்டங்கள் உண்டு. 
  //இறுதியாக பொருள் முதல் வாதமா அல்லது கருத்து முதல் வாதமா என்ற விவாத்திற்கு நான் வரவில்லை….//
  என்று நீங்கள் சொன்னாலும், நீங்கள் விரும்பவில்லை என்றாலும் இதில் ஏதோ ஒரு கண்ணோட்டத்தை தன்னியல்பாகவோ, அறிந்தோ ஏற்க வேண்டியதிருக்கும், அல்லது அதனடிப்படையில் வெளிப்படுத்தவே செய்வீர்கள். அப்படி இல்லை என்று எவரும் மறுக்க முடியாது. ஆகையால் நீங்கள் விரும்பவில்லை என்றாலும் அதை வெளிப்படுத்தவும் செய்திருக்கிறீர்கள்.
  //இதனால் தான் மனிதா; என்ற பொருளுக்குள் மனித சக்தி குறிப்பாக உளவியல் சக்தி எவ்வாறு பல் வேறு தளங்களில் செய்றபடுகின்றது என்பதை புரிய முடியாமலிருப்பதன் விளைவு தான் நாம் எதிர்கின்ற அதாவது எதிரிகளாக நினைக்கின்ற அல்லது புரிந்துகொள்ளமுடியாத சில மனிதா;களின் நிலை…// என்று குறிப்பிட்டுள்ளதிலேயே இது உறுதியாகிறது. இங்கு பொருளும் அதன் இருப்பாக சக்தியும் இரண்டும் பருப்பொருளின் வெவ்வேறு நிலைகள். இதை கூட உளவியல் மன சக்தி என்று கூறி கருத்துமுதல்வாதத்தின் அடிப்படையிலேயே உங்கள் சிந்தனைப் போக்கு இருக்கிறது.
  இதனுடைய தொடர்ச்சியாகத்தான் //சுமூகத்தின் மேல் கட்டுமானம் – சித்தாந்த மேலாதிக்கத்தை கட்டுடைப்பு செய்து புதிய சிந்தனைக்கான கட்டுப்பாடின்றி திறந்துவிடல்….// 
  கட்டுடைப்பு செய்து கட்டுப்பாடின்றி திறந்து விடல் என்பது ஒரு மாற்றை எப்படி வடிவமைக்கப் போகிறோம் என்பது கூறாமல், தெரியாமல், உருவாக்காமல் தன் மன்ம்போன போக்கில் யார் வேண்டுமானாலும், எந்த அடிப்படையிலும் சிந்திப்பது என்பது பொருள். எப்போதுமே சமூகத்தின் எந்த மாற்றமாகட்டும் பழையது ஒழிக்கப்பட வேண்டுமென்றால் அதற்கு மாற்றான இன்னொரு தீர்வை பெறாதவரை அது ஒழிவதில்லை. எந்த சமூகமும் தன் பழைய இருப்பு நிலையை புதிய சமூகத்திற்கான சூழ்நிலை உருவாகும் வரை அழித்துக்கொள்வதில்லை.
  மார்க்சின் வார்த்தையிலேயே கூறுவதென்றால் “எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை; புதிய், யர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை”. ஆகையால் இறுதியாக எனது கருத்தாக கூறுவது என்பது வெறுமென விமர்சனம் செய்வதால் அது அழிந்து விடுவதில்லை (அது கூட சரியான இயங்கியல் பொருள்முதல்வாத புரிதலோடு விமர்சனம்). அதற்கு மாற்றாக எதை வைத்து போராடப் போகிறீர்கள். அது சாத்தியமான சமூக வளர்ச்சியின் விதியின் அடிப்படையில் அமைந்ததா என்பதை பொறுத்துத்தான் அந்த வளர்ச்சியை நீங்கள் துரிதப்படுத்துகிறவர்களாக மாறுகிறீர்கள். இல்லையென்றால் ஒன்று கற்பனா சோசலிசவாதிகளாக மாறவேண்டியது இருக்கும், இல்லை என்றால் இறுதியில் எந்த கருத்தையும், அதன் தொடர்ச்சியாக எந்த செயலையும் விதைக்காமல் வெறுமென பிரம்மை புடித்தது போல் மாயாவாதத்தில் சிக்கிகொள்ள அடிப்படையாக மாறிவிடுகிறது. 

  அறிவு என்பது புறநிலை இயக்கத்தை அதன் நிலையிலேயே எந்தளவுக்கு சரியாக புரிந்துகொள்கிறோம் என்பதே. அதனுடைய அடுத்த கட்டமாக அப்படி மாறிவரும் சமூகத்தை விரைவுபடுத்தி அதை அடுத்த கட்டத்திற்கு எப்படி மாற்றியமைக்க முடியுமோ அப்படி மாற்றிச்செல்வது. இதில்தான் தனிநபரின் பாத்திரத்தின் பங்குகூட இருக்கிறது. சமூக நிலை மாற்றத்தை விரைவுபடுத்தும் காரணிகளை ஊக்கவிக்கும் போதோ, அல்லது அதை செயல்படுத்தும்போதே அதை நாம் ஆதரிக்கவேண்டியிருக்கும், அல்லது அதனுடன் சேர்ந்து இயங்கவேண்டியது இருக்கும். இதுதான் சமூகக் கடமையாக மாறுகிறது. இதிலிருந்துதான் உங்களின் கருத்தையும் நான் அனுகுகிறேன்.

  //“சமூகப் புறச் சூழல் மனிதர்களை உருவாக்குகின்றது என்பது உண்மையாயினும் ஒவ்வொரு தனி மனிதனதும் பாத்திரம் வரலாற்றின் போக்கில் தற்காலிகத் திரும்பல்களை ஏற்படுத்துகின்றது.”//
  எந்த தனிமனிதனின் பாத்திரமும் அந்த வரலாற்று காலக்கட்டத்தின் எல்லையை மீறி, அந்த வரலாற்றுக் கட்டத்தில் உள்ள ஆகச் சிறந்த அல்லது ஆக மோசமான வர்க்க பாத்திரத்தைத்தான் ஆற்றமுடியும். அந்த திருப்பங்கள் என்பது அந்த வரலாற்று சகாப்தத்தின் உள்ளடங்கியே இருக்கும். 

  //ஆகவே சமூக மாற்றத்திற்கான செய்றபாடு என்பது ஆகக் குறைந்தது மூன்று தளங்களிலாவது நடைபெறவேண்டியது அவசியமானது…..சுமூகத்தின் கீழ் கட்டுமானம் – பொருளாரா கட்டமைப்புகளையும் உறவு முறைகளையும் மாற்றயமைத்தல்சுமூகத்தின் மேல் கட்டுமானம் – சித்தாந்த மேலாதிக்கத்தை கட்டுடைப்பு செய்து புதிய சிந்தனைக்கான கட்டுப்பாடின்றி திறந்துவிடல்….மனிதா;களின் சுய மாற்றம் – மனிதாpன் பிரக்ஞை நிலையை உயர்த்துவதன் மூலம் உள்மாற்றத்தை ஏற்படுத்துதல்//

  மனிதர்களின் சுயமாற்றம் என்பதை தனியாக வைத்தது என்பதே அபத்தமானது. சமூகத்தின், அந்த சகாப்தத்தின் வளர்ச்சியை, எல்லையை உள்ளடக்கியே அவனுடைய பிரக்ஞை இருக்கும். புதிய சிந்தனைக்கான பிறப்பிடமே அடிப்படையே சமுகப் பொருளாதார வளர்ச்சிதான். மனித குல வளர்ச்சிதான் என்பதை அறிவீர்கள். மனிதனே அடிக்கட்டுமானமாக இருக்கக் கூடிய உற்பத்திசக்தியின் ஒரு உறுப்புதான். அதை தனித்து பார்ப்பது என்பது அவனை சமுதாயத்திலிருந்து பிரித்து அந்தரத்தில் தொங்கவிடுவதே. பல்வேறு கருத்துமோதல்கள் வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் வரலாற்றை பின்னாலிருந்து கொண்டுவரவேண்டும், தீர்க்கப்பட்ட விசயங்களையே மீண்டும் மீண்டும் தீர்க்க வேண்டும் என்று பேசுவது வளர்சிக்கானது அல்ல. அறிவியலில் எத்தனையோ விசயங்கள் தீர்க்கப்பட்டிருக்கிறது. அதையெல்லாம் மீண்டும் பழைய நிலையை கற்று அதன் பிறகு அதில் நானே சுயமாக தெளிந்து இன்றைய அறிவியல் விதிகளுக்கு வருவேன் என்பது சலிப்பூட்டுவதாகவும், பயனில்லாமலும், அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தனது காலடிதட்டத்தை வைக்காதவர்களாகவும் இருப்பார்கள். தீர்க்கப்பட்ட விசயத்திலிருந்து அடுத்த நிலைக்கு வேண்டுமானால் விவாதிக்கலாம், புதியன கண்டுபிடிக்கலாம். ஆனால் அது அடுத்ததின் வளர்ச்சியாக இருக்கவேண்டுமே ஒழிய, பின்னோக்கிய பாய்ச்சலாக இருக்கக்கூடாது. அடுத்த நிலை என்பது பழைய விதிகளை மறுத்து என்பதல்ல அதை இன்னும் செழுமைப் படுத்துவது என்பது பொருள். நியூட்டனின் விதியை விட ஐன்ஸ்டீன் விதி இன்னும் செழுமையானது. ஆனால் நான் நியூட்டனின் முந்தையகாலத்துக்கு சென்று மீண்டும் விவாதித்து அடுத்தநிலை அடைவேன் என்பது அறிவாளித்தனமாகாது. ஐன்ஸ்டீன் விட்டதிலிருந்து நாம் தொடங்குவதுதான் புத்திசாலிதனமாகும். ஏனென்றால் அவர்களுடைய விதிகள் பலமுறை சோதித்து நிரூபிக்கப்பட்ட உண்மையாக உலகில் மாறிவிட்டது. கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்றளவுக்கு அது சராசரி மனிதனின் உண்மையாகிவிட்டது. ஆனால் இதே சமூகத்தின் விதிகளுக்கு வரும்போது நம் சுயநலம், நம் வர்க்க நலன் பாதிக்கப்படுமோ என்று அச்சத்தின் காரணமாக ஏற்க மனம் ஒப்பாமல் போகிறது. 

  யதீந்திரா அவர்களுக்கான பதில்
  //அதன் பின்னர் என்னைப் போன்றவர்களை தீர்த்துக் கட்டுவது குறித்து நீங்கள் யோசிக்கலாம் உங்கள் மாவோயிச பாணியில்.//
  யாரும் தீர்த்துக்கட்டுவது என்று சொல்லவில்லை. கருத்தை எதிர்க்கொள்ள திராணி இல்லாத போது அதை மறைக்க வேறு வடிவம் எடுக்கிறீர்கள். உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள். மற்றவர்களையும் ஏமாற்றுகிறீர்கள். மார்க்சியம் பேசுவது என்பதே உங்களுக்கு இரும்பு ஆயுதமாக தெரிகிறது. உடனே ஒரு முகமூடி எடுத்து முகத்தில் மூடி அவர் இவர்தான் என்று கூறுவது. 

  //எனவே உங்கள் பார்வையில் நான் மார்க்சியம் விளங்காதவனாகவும் அதற்கு எதிரானவனாகவுமே தொpவேன். //
  உண்மைதானே. அதைதானே கீழே கண்ட வாசகத்தில் தெரிவித்திருக்கிறீர்கள். கம்யூனிஸ்டின் அடிப்படை உலக கண்ணோட்டத்தையே மறுத்துவிட்டு அதாவது
  //கம்யூனிசம் ஒரு இயங்குநிலை சக்தி என்று நான் நம்பவில்லை இன்றைய உலக நிலைமையில்.// 
  என்று எழுதிவிட்டு, உங்களுக்கு அப்படித்தான் தெரிவேன் என்று கூறுவது அபத்தமாக இருக்கிறது. அதே போல் எது லும்பன் தத்துவம் என்பது கூட அறியவில்லை நீங்கள். அதை சுட்டிக் காட்டியபோது ஏன் அலுறுகிறீர்கள். எந்த இடத்திலேயும் வன்முறை தெறிக்கும் விதமாக நான் வார்த்தையை பிரயோகப் படுத்தவில்லையே. அப்படி இருக்கும் போது ஏன் அரசியல் பதிலளிக்க முடியாமல் நடிக்கிறீர்கள். நீங்கள் நினைப்பது போல் நான் ஈழத்து மனிதனல்ல. உலகின் எந்த ஒரு மூலையில் ஜனநாயகப் போராட்டம் நடந்தாலும் அதை ஆதரிக்கும் சராசரி இந்திய நாட்டின் குடிமகன். ஆகையால் உங்கள் கற்பனையை மட்டுமே விரிக்கும் இறக்கையை கொஞ்சம் மட்டக்கி வையும். ஆரோகியமாக சரியானதை கற்க முயற்சி செய்யும்.

 18. நட்புடன் பகத்>.யோகன்..> மற்றும் சிவாக்கும்……
  தங்களது பின்வரும் கூற்று தொடர்பாகவே எனது கூற்றை முன்வைக்கின்றேன்….
  “இங்கே ஐன்ஸ்டைனின் சார்பியற் கொள்கையின் மூலம் கண்டறியப்பட்ட உண்மை ஒன்று “ஆன்மிக வாதிகள்” என்போரால் வலிந்த்து கொச்சைப் படுத்தப்பட்டு வருகிறது.
  பவுதிகம் கருதும் சக்தியும் “ஆன்மிகவாதிகள்” கருதும் சக்தியும் முற்றிலும் வேறுபட்ட விடயங்கள்.

  “அதாவது எல்லாம் உளவியல்தான் தீர்மானிக்கிறது.”

  ….
  முதலாவது….நீங்கள் இருவரும் இன்னும் பழங்கால பாரம்பரி மார்க்சி அறிவையே போற்றி பேணிபாதுகாத்து வருகின்றீர்கள்….

  என்னைப் பொருத்தவரை நீங்களும் சமயவாதிகளைப் போல மாறத்ததை விரும்பாது அப்படியே ஒன்றை நம்பி பின்தொடா;கின்றவர்களாகவே இருக்கின்றீர்கள் என உணர்கின்றேன்… …
  என்னைப் பொருத்தவரை சமூக சிந்தனையின் ஆதிக்கத்தை நா;ன ஆகக் குறைந்தது இரண்டகவே பார்க்கின்றே;ன..ஒன்றுமேலைத்தேய சிந்தனை மரபு மற்றுது கீழைத்தேய சிந்தனை மரபு…இநத இரண்டு சிந்தனைகளுமே…மத சிநதனைகளுடன் ஒன்றினைந்தே வந்திருக்கின்றன…ஆனால் மேலைத்தேய சிந்தனை மரபு மத் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தன்க்கான பாதையை உருவாக்கிக்கொண்டது…இதன் தொடா;ச்சி தான் மார்க்ஸின் தத்துவம்…ஆனால் கிழைத்தேய மரபு இன்னும் மத்ப்பிடியுக்குள்ளையே இருக்கின்றது…பிளவு ஏற்ப்படவில்லை….இதனால் கிழைத்தேய சிந்தனை மரபை புறக்கணிக்முடியாது…நான் நினைக்pன்றேன் நமது பொரறுப்பு இநத ப் பிளவை உருவாக்கவேண்டியது…ஏனனில் விஞ:ஞான முறை ;என்பது இரு வழிகளில் செயற்படுகின்றது என்பது எனது பார்வை…ஒன்று உள்ளோக்கி மற்றுது வெளிநோக்கி…மேலும் விஞ:ஙானம் கண்டு பிடி;ப்பதற்கு முதலே ;பல விடயங்களை இந்த pசீன ;விஞ:ஞானங்கள் கண்டுபிடித்துள்தற்கு சான்றுகள் உள்ளன…..துரதிர்ஸ்ட வசமாக நீங்கள் இன்னும் ஆங்கில ;காலனியாதிக்கதிலிருந்து விடுபடவிலலை என்றே நினைக்கின்றேன்….இறுதியாக நான் எங்கும் கூறவில்லை ஒரு மனிதனின் ஒளவியல் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது…..ஆனால் அதுவும் முக்கியமான ஒரு கூறு என்றே 4றுகின்றேன்….கடந்தகாலங்களில் இது பற்றிய கவனமின்னையே இன்றைய பல ;தவறுகளுக்கு காரணமாயிருக்கின்றன….
  இதை நாம் புரிந்துகொள்வோமாயின் ..ஒரு: படி முன்னே கடந்தாதாகவே உணா;வேன்….இல்லது தெமாடா;ந்தும் தவறுகள் ஏற்பட வாய்ப்பள் இருக்கின்றது என்பதை ஆணித்தரமாக கூறவிரும்புகின்றேன்….
  நட்புடன்

  மீராபரதி.

  1. நீங்கள் எந்தப் பிடிக்குள் இருக்கிறீர்கள் என நான் ஆராயப் புகவில்லை.
   பதில் சொல்ல இயலாவிட்டால் இப்படி முத்திரை குத்தித் தப்பியோடாதீர்கள்.

   சீன விஞ்ஞானம் இந்திய விஞ்ஞானம் என்று புலுடா விடாதீர்கள். குன், கப்றா முதல் பலரையும் வாசித்துத் தான் சொல்லுகிறேன்.
   சீன இந்திய விஞானங்களின் விருத்திக்கு, குறிப்பாக இந்தியாவினதுக்கு, ஆன்மிகம் எவ்வளவு உதவியது என்பது மிக ஐயத்துக்குரியது.
   இன்றுள்ள “இந்து” ஆன்மிகம் பொருள்முதல்வாதத்தைக் கொன்று புதைத்துவிட்டே எழுந்தது. விஞானம் பொருள்முதல் அடிப்படையானதே ஒழியக் கருத்துமுதல் அடிப்படையானதல்ல.

 19. //முதலாவது….நீங்கள் இருவரும் இன்னும் பழங்கால பாரம்பரி மார்க்சி அறிவையே போற்றி பேணிபாதுகாத்து வருகின்றீர்கள்//
  பழங்காலத்தியது, இன்றைய மார்க்சியம் வேறுபடுத்தி தத்துவத் துறையில் சிலவற்றை குறிப்பிடமுடியுமா.
  விஞ்ஞான வளர்ச்சியில் எத்தனையோ கண்டுபிடிப்புகள் உள்ளன. அதில் சிலது ஒவ்வொரு நாட்டின் பங்களிப்பும் இருக்கிறது. ஆனால் இன்று நவீன மிக உயர்ந்த நிலைக்கு வளர்ந்திருக்க விஞ்ஞானம் எந்த நாடு முதலாளித்துவத்தை நோக்கி வளர்ந்ததோ, எந்த நாடு அதைவிட சோசலிசத்தினை நோக்கி வளர்ந்ததோ அந்த நாடு அறிவியலில் உயர்ந்த நிலைக்கு வளர்ந்தது. அதற்கு நிச்சயம் உளவியல் காரணமல்ல. அந்த சமூகம் அடுத்தடுத்த நிலைக்கு வளர்ந்ததே காரணம். மார்க்சியம் என்பது ஆங்கில ஆதிக்க காலனியாதிக்கத்தின் கருத்து கிடையாது. அது சர்வதேசிய கருத்து. பொருளாதரத்தை பிரிட்டனின் தொழிற்புரட்சியிலிருந்து கற்றார், தத்துவத்தை ஜெர்மனியின் வளர்ச்சியிலிருந்து கற்றார், அரசியலை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பிரெஞ்சுப்புரட்சியிலிருந்து கற்றார். இப்படி எந்த சமூகம் முன்னேறி சென்றதோ அந்த சமூகத்தை கற்று அடுத்த நிலைக்கு செல்லக்கூடிய அரசியல், பொருளாதரம், தத்துவம் ஆகியவற்றை வளர்த்தெடுத்தார். அப்படி வளர்த்தெடுத்தாலும் அது அனைத்து நாடுகளுக்கும் அவசியமானது, பொருந்தக்கூடியது. அதனால்தான் அதனுடைய அடிப்படையினை மாற்றாமல் மீண்டும் அழுத்திக் கூறுகிறேன் அதனுடைய அடிப்படையினை வரலாற்று இயக்கியவியல் பொருள்முதல்வாதத்தை மாற்றாமல் லெனின் வளர்த்தெடுத்தார், லெனினுடைய அடிப்படையினை மாற்றாமல் மாவோ அடுத்த நிலைக்கு வளர்த்தெடுத்தார். இதில் எவர் ஒருவரும் மற்றவரை மறுத்து புதியதை படைக்கவில்லை என்பதை மறுத்து பேசுவதற்கு வழியில்லை. இப்படி முன்னேறிய சமூகத்தின் விதியினை கற்று நம் சமூகத்தினையும் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேற்றி செல்ல முயலவேண்டும். நமக்கென்று சில சிறப்புக்கூறுகள் இருக்கலாம். ஆனால் அதனுடைய சமூகத்தின் அடிப்படை சாராம்சம் எந்தவிதத்திலும் மாற்றமில்லை. அதே போல் ஆய்ந்து அறியும் முறையும், மாற்றியமைக்கும் முறையும் மாறவில்லை. அதை எப்படி செயல்படுத்துவது என்பதுதான் மாறுபட்ட விசயமாகும். 

  இதில் பாரம்பரிய மார்க்சிய அறிவு என்கிறீர்கள். மார்க்சியத்தினை மறுத்து மீண்டும் சொல்கிறேன், மார்க்சியத்தின் அடிப்படையினை மறுத்து ஏதாவது நிரூபிக்கப்பட்டிருக்கிறதா. இதுவரையில் இதுதான் சரியானது என்பது ஒவ்வொரு சூழ்நிலையிலும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. மொத்தமே வெறும் 150 வருடங்கள் உருண்டோடியிருக்கும். நம் மனித குல வாழ்நாளில் இது ஒரு சிறிய கால அளவே. இந்த சகாப்தத்தில் மார்க்சியத்தின் எதிர்நிலையில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்பதை என்னால் அறுதியிட்டுக் கொள்கிறேன். இதில் இடைக்கட்டமாக சில புதிய விஷயங்கள் வந்திருக்காலம். அதுகூட மார்க்சியத்தின் அடிப்படையான வரலாற்று இயங்கியல் பொருள்முதல்வாதத்தை விட்டு நீங்கள் ஆய்வு செய்தால் மிஞ்சுவது ஒன்றுமில்லை. (மாயவலை). 

  ஆகையால் பழங்கால மார்க்சிய அறிவை என்று சொல்வது எது என்பது தெளிவாக ஒன்றிரண்டாவது வேறுபடுத்திக் காட்டுங்கள். குறிப்பாக அடிப்படைத் தத்துவத்தில். சமூக முரண்பாடுகளில் எத்தனையோ காரணிகள் உண்டு. ஆனால் மார்க்சியம் எது அடிப்படை காரணி, எது முதன்மைக் காரணி என்பதை வரையறுத்து ஒழுங்குபடுத்தி அதை மாற்றியமைக்கப் போராடுகிறது. மார்க்சியத்தை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். பிறகு அது பழங்காலத்தியதா இன்றும் பொருந்தக் கூடியதா என்பதைப் பார்ப்போம். இதில் மாற்றம் என்பது எதைப் பற்றியது என்பதே. உலகத்தை அறிவதில் தெளிவதில் மாற்றம் இருந்துகொண்டேதான் இருக்கிறது, ஆனால் அதன் அடிப்படையான வரலாற்று இயங்கியல் பொருள்முதல்வாதம் உலகப் பார்வையை விட சரியான பார்வையை பெற வேறு எதுவும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உறுதியாக கூறுகிறேன்.

 20. நட்புடன் நண்பர்களுக்கு….
  முதலில் ஒருவர் எந்தளவு மரபு மார்க்ஸியவாதியாக இருக்கின்றார் என்பதை அவரது கருத்துக்களிளையே அறியலாம்….
  முதலாவது அவ்வாறானவர்கள் இன்னும் லெனினின் ஸ்டாலின் மாவோ என்ற வரையறைக்கு அப்பால் எல்லைக்கு அப்பால் செல்வதற்கு தயார் இல்லை…இதற்குள் தான் சமூகத்தின் சகல பிரச்சனைகள் முரண்பாடுகளுக்கான தீர்வுகளைக் காண முயல்கின்றனர்…
  இரண்டாவது எல்லாம் பிரச்சனைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் அடிப்படையாக பொருளாதார முரண்பாடுகள் சமநிலையின்மை கொண்டுள்ளனர்…சமூகத்தைப் பண்முகத்ன்மையில் விளங்கிக் கொள்வதற்கு தவறிவிடுகின்றனர்…
  நான் மார்க்ஸை புறக்கணிக்கவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ இல்லை…ஆனால் நமது சமூகங்களை அதற்குள் இருக்கும் முரண்பாடுகளை அதன் இயக்கத்தை விளங்கிக் கொள்வதற்கான ஒரு புதிய பார்வையை பாதையைத் தந்தவர்…இதிலிருந்து நாம் இன்றைய சுழலுக்கு ஏற்பட டேவேண்டுமே ஒழிய அவர் எழுதியவற்றுக்குள் மட்டும் நின்று கொண்டு எல்லாவற்றுக்குமான தீர்வுகளைக் காண முயல்வது என்பது சுத்த சோம்பேறித்தனமே என்றால் மிகையல்ல…
  இறுதியாக நான் ஆன்மீகத்துக்கு ஒன்றும் வக்காலத்து வாங்கவில்லை….ஆனால் சமூகத்தின ;பண்முப பிரச்சனைகளில் ஒன்று தனிமனிதப் பிரச்சனை….இதை எவ்வாறு தீர்ப்பது அல்லது குணப்படுத்துவது அல்லது அடுத்த நிலைக்கு வளர்த்துச் செல்வது என்பதும் இன்று சமூக மாற்றத்தில ;அக்கறை கொண்டு செய்ற்படும் ஒவ்வொருவரது ம் அக்கறைக்கு உரிய விடயமாக இருக்கவேண்டும் எனக் கருதுகின்றேன்….இவ்வாறான ஒரு செய்பாட்டுக்கு மேலைத்தேய விஞ:ஞானத்தை விட கிழைத்தேய மெய்ஞானம் பல வழிகளில் உதவக் கூடியது என்பதே எனது பார்வை….உதாரணமாக கெளதம சித்தாத்தாpன் ஒரு மனிதாpன் மனம ;மற்றுமு; அவரது பிரக்ஞை பற்றிய புரிதலானது இன்று கூட மேலைத்தேய விஞ:ஞானத்தால் முழுமையாக புர்pந்துகொள்ளபட முடியாமலிருக்கின்ற ஒரு விடயம்…கடந்த நுhற்றாண்டு வரலாரை மட்டுமே கொண்ட மேலைத்தேய மனித உளிவியல் தொடா;பான வரலாரானது கிழைத்துதேசத்தில் 2000ம ஆண்டுகளுக்கு முன்பே உருவாhன ஒரு விடயம்…..ஆனால் அது தனிமனித அனுபவத்தினுடாக உள்நோக்கிய பாhவையினுடூக பெற்ற அறிவு…
  ஆகவே மேலைத்தேசய விஞ:ஞானம எதிர்பார்க்கின்ற பரிசோதனை மூலமான நிறுவல்கள் சான்றுகள் இவர்களிடம் இல்;லாதது அதன் போதாமையாகக் கருதப்படுகின்றது….கீழைத்தேய மெய்ஞானம் ஆனது மனித் ஊளவியல் தொடா;பாக மட்டுமின்றி நோய்களைக் குணப்படுத்தக் கூடிய அக்குபஞ்சா; மற்றுமு; காமம் தொடா;பான ஆணின் பார்வையான காமாகசூத்திரா பெண்ணின் பார்வையான தந்திரா என பலவற்றைத்தந்துள்ளது…ஆனால் இவை எல்லாம் கீழைத்தேய மத ஆதிக்கத்தினால் அவா;களது ஆன்மீகத்துக்குள் உள்வாங்கப்ட்டோ அல்லது அழிக்கப்ட்;டோ வந்திருக்கின்றது…..ஆகவே மீண்டும் கூறுகின்றென்…இநத் ஆண்மீக அதிகாரத்திற்குள் இருந்து கீழைத்தேசய அறிவை நாம ;மீட்டு எடுக்காதவரை நாம மேலைத்தேய அறிவின் வழியில் அரைகுறை பயணத்தையே தொடர்ந்தும மேற்கொள்வோ;ம்….உதாரணத்திற்க்கு ஒன்று நமது நாடுகளில் ஒருவா; மரக்காறி சாப்பிட்டடால் அவரை சைவமா எனத்தான் கேட்போம்…மாமிசம் உண்பவரை அசைவாமா எனகத்தான் கேட்போம்..இது தான் கீழைத்துதேய மதத்தின் அதன் அறிவின் ஆதிக்கம் என்பது…….ஏனனில் ஒருவார் சைவமாக இல்லாதபோது கூட மரக்கறி உண்பவராக இருக்கலாம்…..ஆனால் நமக்குள் ஊற்றப்பட்டிருக்கும் அறிவு பிரக்ஞையற்ற தன்மையும் அவரை மதத்திலிருந்து பரித்துப்பார்க்க முடிவதில்லை…..
  ஆனால் நாம் பரித்துப் பார்க்கவேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கின்றோம்….இங்கிருந்துதான் நமது புதிய பயணம ;ஆரம்பிக்கப்படவேண்டும்……
  நன்றி

  மீராபாரதி

  1. மீரா-பாரதி வழமையான முத்திரை குத்தல் விளையாட்டுக்களில் இறங்கியுள்ளாரே ஒழிய ஒரு சிந்தனை முறையின் செல்லுபடியானமை பற்றிப் பேச விரும்பவில்லை. விஞானம் பற்றிய அவரது குழறுபடியான கருத்துகளுக்கு எழுந்த விமர்சனங்களுக்கு முகம் கொடுக்காமல் மாக்சியர்களுக்குச் சொட்டை சொல்லித் தப்ப முயலுகிறார்.
   ஒரு மர்க்சியவாதி மர்க்ஸ் முதல் மாஓ வரை, அதன் பின் பிற தலைவர்கள் வரை எவரது கருத்துக்களையும் நிரந்தர உண்மைகளாகக் கொள்வதில்லை. மாக்சியத்தில் அவ்வாறான நிரந்தர உண்மைகளுக்கு இடமில்லை. ஓவ்வொன்றுமே மீள மீளக் கேள்விக்குட்பட வேண்டியது.
   எந்தப் புதிய பயணத்துக்கும்நேர்மையான சிந்தனை தேவை என்பது என் மதிப்பீடு –அது தவறாகக் கூட இருக்களாம், ஏனெனில் பயணத்தின் நோக்கம் வேறுபடலாம் அல்லவா!

   (மொழி பற்றிய அவரது குழப்பமான கருத்துக்களுக்குள் இங்கு புக நான் விரும்பவில்லை).

 21. லெனின் ஸ்டாலின் மாவோ என்று தனிநபராகத்தான் பார்க்கிறீர்களே தவிர, தத்துவமாகவே பார்க்கிறீர்கள். உங்களுக்குள் நிறைய கம்யூனிசத்தினை பற்றிய கற்பனையான கருதுகோளே வைத்திருக்கிறீர்கள். 
  //இரண்டாவது எல்லாம் பிரச்சனைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் அடிப்படையாக பொருளாதார முரண்பாடுகள் சமநிலையின்மை கொண்டுள்ளனர்…//
  இந்த வாதமே அபத்தமானது. ஏனென்றால் முரண்பாடுபடுகளின் பன்முகத்தன்மை, அனைத்தும் தழுவிய முரண்பாடு, ஒருமுகத்தன்மை, முதன்மை முரண்பாடு, முரண்பாட்டை கையாளுதல் என்ற எல்லா விசயத்தையும் தொகுத்து மாவோ முரண்பாடுகளைப் பற்றி என்று எழுதியுள்ளார். தயவு செய்து அதை படித்துவிட்டாவது வந்து விவாதிக்கவும். இல்லை மறுக்கவும். உங்கள் மனதில் கள்ளத்தனமாக எதையோ வைத்துக்கொண்டு பொத்தாம்பொதுவாக திணிக்க முயற்சிக்கிறீர்கள். ஒவ்வொரு சமூக பிரசனையாக எடுத்துக்கொண்டு பேசுங்கள். அப்போதுதான் நீங்கள் சொல்ல வருவதை மற்றவர்கள் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். 

  //பண்முப பிரச்சனைகளில் ஒன்று தனிமனிதப் பிரச்சனை….இதை எவ்வாறு தீர்ப்பது அல்லது குணப்படுத்துவது அல்லது அடுத்த நிலைக்கு வளர்த்துச் செல்வது என்பதும் இன்று சமூக மாற்றத்தில ;அக்கறை கொண்டு செய்ற்படும் ஒவ்வொருவரது ம் அக்கறைக்கு உரிய விடயமாக இருக்கவேண்டும் எனக் கருதுகின்றேன்….இவ்வாறான ஒரு செய்பாட்டுக்கு மேலைத்தேய விஞ:ஞானத்தை விட கிழைத்தேய மெய்ஞானம் பல வழிகளில் உதவக் கூடியது என்பதே எனது பார்வை….உதாரணமாக கெளதம சித்தாத்தாpன் ஒரு மனிதாpன் மனம ;மற்றுமு; அவரது பிரக்ஞை பற்றிய புரிதலானது இன்று கூட மேலைத்தேய விஞ:ஞானத்தால் முழுமையாக புர்pந்துகொள்ளபட முடியாமலிருக்கின்ற ஒரு விடயம்…//
  இதில் குறிப்பாக என்ன சொல்ல வருகிறீர்கள். கூடு விட்டு கூடு பாய்வதையா, இல்லை மறுபிறப்பையா இதை எதை புரிந்துகொள்ளவில்லை எந்த பிரக்ஞை இதில் மார்க்சிய தத்துவம் புரிந்துகொள்ளவில்லை என்பதை விளக்கமுடிந்தால் என்னை போன்ற எளியேனுக்கு விளக்கவும்.

  இதில் ஒருவர் அசைவமாக இருந்தாலும், சைவமாக இருந்தாலும் இதில் எந்த மாற்றமும் இன்றுள்ள நிலமையில் ஏற்பட்டுவிடப்போவதில்லை. அது எந்த வர்க்கத்திற்கும் சேவை செய்யப்போவதுமில்லை. தேவையற்ற புளங்காகிதம் அடையும் நுணுக்கமான யாருக்கும் புரியாத வாதங்களை அடுக்காதீர்கள். எங்களுக்கு புரியும் அளவில் தெளிவாக விவாதிக்கவும். எந்த தத்துவம் எந்த அறிவை இன்று நீங்கள் பயன்படுத்தவேண்டும் என்பதை பட்டியலிடவும். குறைந்தபட்சம் ஒரு பத்து அளவுக்காவது பட்டியலிடவும். மார்க்சியத்திலிருந்து அது மேம்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள எங்களுக்கு தெரிந்துகொள்ள உதவும். விரைவில் எதிர்ப்பாக்கிறேன்.

 22. நாம் அறிந்தது ஒரே ஒரு மாக்சியம் தான் .அது என்ன மரபு மாக்சியம்?அப்போ சைவ மாக்சியம்,அசைவ மாக்சியம் எல்லாம் இருக்குமோ ?
  2000 வருடங்களாக இருக்கும் மதங்கள் எந்த அளவில் மனிதனை முன்னேற்றி இருக்கிறது.?எல்லோரும் ஆலமரத்தின் கீழேயும் ,அரசமரத்தின் கீழேயும் இருந்து தவம் செய்தால் வரப்போவது தான் என்ன ?

Comments are closed.