மானாடு முடித்து மயிலாட வருக……! : வ.ரு.தமானன்

 

செம்மொழிச் சிறப்புக் கவிதை

 

 

தண்டவாளத்தில் தலைவைத்து
தமிழகத்தையே
பெயர்த்தெடுத்த
பெருமகனே
சாகாவரம்பெற்ற
சாகசனே
வணக்கம்…!
*
முள்ளிவாய்க்கால்
குருதியில்
தோய்த்தல்லவோ
எம்மொழியை
செம்மொழியாக்கியது
மையஅரசு…!
*
மையமென்றால்
கல்லறையென்றும்
ஒரு
பொருளுண்டு…
எம்
தமிழர்க்கு
கல்லறைகட்டியதால்
இந்திய அரசும்
ஒரு
மைய அரசுதானே…!
*
இந்த
கல்லறை அரசின்
காவல்தெய்வம்
சோனியாவென்றால்
உமக்கு கிடைத்ததோ
பாவம்
வெட்டியான் வேலை..!
*
செத்துப்போன மொழிகளுக்குதான்
செம்மொழித் தகுதி
தருவது வழக்கம்
*
ஒரு இனமே
செத்தபிறகு
இங்கே
மொழிக்கா விழா
எடுக்கின்றீர்..?
*
நீர்
விழாமல்
எழுந்துநிற்க
வழியன்றோ
தேடுகின்றீர்…?
*
கோவையில்
நடப்பது
பிணங்கள் கூடும்
ஒரு
சவமாநாடு …!
*
பேராசிரியர் சிவ.தம்பிதான்
தலமையிலே
பிரேதங்கள் பற்றிய
ஆய்வரங்கம்…?
*
உமது
சமபந்தியில்
அவர்
சவ.தம்பியாய்
சம்மணமிட்டதே
எங்களின்
பெரும் துயரம்…!
*
ஆலயங்களில்
தமிழில்
வழிபட ஆணையிட்டேன்
என்கிறீரே…
கடுங்கவிக்கோ ரகுமான்
கந்துவட்டி வைரமுத்து
காலிக்கவி வாலி
என
கூலிக்கு மாரடிக்கும்
ஒரு கூட்டத்தையல்லவா
அர்ச்சகராக்கி
அழகு பார்க்கிறீர்…
இவர்களின்
ஜால்ரா சத்தத்தில்
எஞ்சிய
தமிழனின் செவிப்பறையும்
கழிப்பறையாகுமே…!
*
துவக்கப் பாடலில்
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென்ற
சங்கப்பாடலை
வெட்டி ஒட்டிவிட்டு
ஒப்பிலாப்பாடல்
தந்ததாய்
உருகும் தலைவரே…!
*
முதலிரண்டும் சரியென்றாலும்
உறைவிடம் என்பது
ஒன்றேயென்ற கதை
உமக்கெப்படி
பொருத்தமாகும்..?
*
தினம் தோறும்
மறுவீடு போவதை
மறந்தீரோ..?
*
அஞ்சுகத்துக்கு பிறந்து
இன்னும்
பத்து யுகம் வாழப்போகும்
வரலாறே….
மரணத்திற்கே
மலர்வளையம் வைத்த
மாவீரனே…!
மானாடு
முடித்துவிட்டு
மகிழ்வோடு வருக…?
*
நமிதா தலமையில்
மானாடமயிலாட
உம்
வரவுக்காய்
காத்திருக்கிறது..!

2 thoughts on “மானாடு முடித்து மயிலாட வருக……! : வ.ரு.தமானன்”

 1. தன் தலையில் தானே வைத்த தீ
  மொழியின் பெயரால் எம்மைச் சுட
  அனுமதியோம்!

  இனம் அழிந்ததுயெனநீர் என்ன
  உண்ணாமல்,உடுத்தாமல்
  ஒலி/ஒளி ,மனைவி/காதலி இல்லாமல்
  மரமாய் நின்றீரோ!

  தீதும் நன்றும் பிறர் தர வாரா!
  அவரவர் உயர்வுக்கும், தாழ்வுக்கும்
  அவரவ்ர் செயல்களெ காரணம்!
  மற்றவரை குறை சொல்பவன்!
  மதியீனன!

Comments are closed.