மாணவர் தலைவர் கைது : தொடரும் போராட்டங்கள்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டாளார் உதுல் பிரேமரத்ன இன்று காலை பத்தரமுல்லைக்கு அருகில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐ.தே.க.வின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றி பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் போராட்டங்கள் குறித்து விளக்கமளித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருக்கும் வழியிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவர் அமைப்பின் போராட்டங்களுக்கு மூலகர்த்தாவான உந்துல் பிரேமரத்ன கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பல் மருத்துவத்துறை இறுதியாண்டு மாணவராவார்.
மகிந்த ராஜபக்ச அரசின் அடக்குமுறை சிங்கள மக்கள் மீதும் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துள்ளதை இக்கைதுகள் வெளிக்காட்டுகின்றன.
சில தினங்களுக்கு முன்பதாக தான் கைதுசெய்யப்படுவேன் என உதுல் இனியொருவிற்குத் தெரிவித்திருந்தார்.