மாணவன் கபிலநாத் படுகொலை: சுயேச்சைக் குழு வேட்பாளர்கள் சம்பந்தம் ஈ.பி.டி.பி. குற்றஞ்சாட்டு.

 சாவகச்சேரி மாணவன் கபிலநாத் கடத் தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட  சம்பவம் தொடர்பில் அறிக்கை வெளியிட் டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, இந்தக் கொலை வெறியாட்டத்தை நடத்தியோர், வெளிநாடு ஒன்றிலிருந்து வந்தவர் தலைமையில் யாழ். தேர்தல் களத்தில் போட்டியிடும் சுயேச்சைக் குழு ஒன்றின் வேட்பாளர்களே என்று விசாரணைகளின் போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டிருக்கின்றது.
இது தொடர்பாக ஈ.பி.டி.பி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:

யாழ். குடாநாடு இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் தருணம் பார்த்து மிகக் கொடுமையான முறையில் நடத்தப்பட்டிருக்கும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவனான திருச்செல்வம் கபில்நாத் படுகொலை யாழ். குடாநாட்டை மறுபடியும் வன்முறைக் கலாசாரத்தை நோக்கித் திசை திருப்பிவிடும் செயலாகும். இப்படுகொலைச் சம்பவம் தேர்தல் கால வன்முறைச் சம்பவங்களோடு தொடர்புபட்ட ஒரு நிகழ்வாகவே தெரியவந்துள்ளது.

மக்களின் வாழ்நிலையில் மாற்றங்களை உருவாக்குவதற்காக நடத்தப்படும் தேர்தலில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் தீயசக்திகளும் போட்டியிடும் செயலானது சமூக விரோதச் சக்திகளுக்கு வேட்பாளர்கள் என்ற அந்தஸ்தைக் கொடுக்கும் ஆபத்து நிறைந்த செயலாகும்.
கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட மாணவனின் மீது கொலை வெறியாட்டம் நடத்தியவர்கள் வெளிநாடொன்றிலிருந்து வந்தவர் தலைமையில் யாழ். தேர்தல் களத்தில் போட்டியிடும் சுயேச்சைக் குழுவொன்றின் வேட்பாளர்களே என்பது விசாரணைகளின்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடத்தப்பட்டிருந்த மாணவனின் தந்தையாரான வர்த்தகர் திருச்செல்வம் ஏற்கனவே தனது மகனைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு தன்னிடம் வந்திருந்தமையை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சம்பந்தப்பட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு எடுத்துக்கூறியதோடு, இச்சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதச் சக்திகளை பாரபட்சமின்றி நீதி விசாரணைக்குட்படுத்தவேண்டும் என்றும் சட்டம், நீதி, ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டிய பொலிஸார் இதுபோன்ற கொடூரமான செயல்கள் தொடர்ந்தும் நடவாது பாதுகாப்பதற்காகத் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் என்றும் பணிப்புரை விடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 thoughts on “மாணவன் கபிலநாத் படுகொலை: சுயேச்சைக் குழு வேட்பாளர்கள் சம்பந்தம் ஈ.பி.டி.பி. குற்றஞ்சாட்டு.”

 1. பிள்ளையையும்கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்று ஒரு பழமொழி தமிழில்உள்ளது எல்லோருக்கும் தெரியும். யாழ்பிரதேசம்இலங்கைப்படைகளின்கட்டுப்பாட்டுக்குள் வந்ததன்பின்னர்இங்குதமிழ்மககள்மீதுமேற்கொள்ளப்பட்டஅனைத்துப்படுகொலைகளுக்கும்காரணமானவர்கள் டக்ளஸ் கோஸ்டியே இது எல்லோருக்கும்தெரியும். முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தான படுகொலைகளுக்கு துணை போன இந்தக் கும்பல் இந்த மாணவனின் கொலைக்காகவா மன்னிப்பைக்கோரப் போகின்றது. தமழ் மக்களே இப்பாவியரை மன்னியாதீர். உங்கள் வாக்குகளின்மூலம் இக்கொலைகாரரை சமூகத்தை விட்டு விரட்டுங்கள்.

 2. மாணவன் கபில்நாத்தின் படுகொலை தொடர்பாக வெவ்வேறு விதமான குற்றச்சாட்டுகள் எழுகின்ற போதிலும் இதனை ஒரு சுயேட்சைக் குழுவொன்றின் வேட்பாளர்களே செய்திருப்பதாக ஈ.பி.டீ.பி குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால் சுயேட்சைக் குழுவாக பல குழுவினர் போட்டியிடுகின்றனர் ஒவ்வொரு குழுவிற்கும் வெவ்வேறு இலக்கங்களும் வழங்கப்பட்டதும் தெரிந்த விடயம். இப்படியிருக்கையில் சுயேட்சைக்குழு வேட்பாளர்கள்தான் இப்படுகொலைக்குக் காரணமென ஈ.பி.டீ.பிக்கு தெரிந்திருப்பின் ஏன் அவர்களால் எந்தச் சுயேட்சைக்குழு செய்ததென்பதை உறுதிபட கூறமுடியாதுள்ளது. வெறுமனே இப்படிச்சொல்வதன் மூலம் ஏனைய சுயேட்சைக் குழுவினர்மீது பழியைச்சுமத்தும் நோக்கமா? இதன் மர்மம்தான் என்ன?

 3. ஆடு நனையுதெண்டு ஒநாயல்அழுதாம். யாழ்ப்பாணம் தன்ரை முழு கட்டுபாட்டுக்கை இருகிரதேண்டு சொல்றவர் சொல்றார். அறிக்கை விட்டிருக்கிறார். இந்தக் கொலை வெறியாட்டத்தை நடத்தியோர், வெளிநாடு ஒன்றிலிருந்து வந்தவர் தலைமையில் யாழ். தேர்தல் களத்தில் போட்டியிடும் சுயேச்சைக் குழு ஒன்றின் வேட்பாளர்களே என்று அறிக்கை விட்டிருக்கிறார். இவெண்டை ஆக்கள் தானே வெளிநாடில இருந்து வந்திருக்கினம் எண்டு ஒவ்வொருநாளும் பிரச்சாரம் செயினம். சர்வதேச பொறுப்பாளர் மித்திரன் எண்டு ஒருவர், மற்றது சர்வதேச பிராந்தியங்களின் முக்கியஸ்தர் விந்தன் எண்டு மற்றவர் இப்படி இன்னும் எதனை பேர் போய் நிக்கினமோ தெரியேல்லை. அதோட இலக்கச்சன் முடிய சர்வதேச கட்சி எல்லாரையும் கூடி மாநாடும் வைக்கப்போறதா நியூஸ் போட்டவை. இவை என்னண்டா வெளிநாடில இருக்கிற ஆக்களை இறக்கி இலக்கசனுக்கு வேலை செய்தா அவை தில்லுமுல்லு இப்படி கடத்தல் கப்பம் வாங்கினா ஆக்களுக்கு அடையாளம் தெரியாது தானே. பிறகு விசாரணை வர அவையள் தங்கண்டை நாட்டுக்கு போய்விடுவினம். சனம் யாரை அடையாளம் காட்டுறது.

  இந்த கொலை செய்தவர் ஈ.பி.டி.பி.யின்டை நுணாவில் முகாமில் செயற்பட்டுவந்தவர் எனத் தெரிவிக்கப்படும் ஜீவன் எண்டு வாறதால இனி சொல்லுவினம் இல்லாட்டி அடுத்த அறிக்கை விடுவினம் அந்த ஜீவன் முந்தியே இயக்கத்தை விட்டு விலகிட்டார் எண்டு. முந்தி மகேஸ்வரனையும் போட்டு தங்கண்டை ஆக்கள் பிடிபட இதுதானே சொன்னவை.எதோ அரசாங்கம் தாங்கள் நீதி நியாயமானைவை எண்டு சொல்றவை இப்ப சரத் போன்செகராவை விசாரிக்கிரவை மகேஸ்வரநிண்டை கொலை வழக்கு என்ன நடந்தது. இருந்து பாருங்கோ டக்லஸ் இண்டை அடுத்த அறிக்கை வரும்.

  இதுக்கை அடுத்த ஓநாய் சுரேஷ் பிரேமச்சந்திரன் எண்டவரும் கண்டனம் தெரிவித்துள்ளார். இவரும் டக்லஸ்மும் ஒரே குட்டையில ஊறின மட்டையல் தானே. மாணவனின் குரூரக் கொலையானது மக்கள் மத்தியில் அச்ச உணர்வைத் தூண்டியுள்ளத சொல்ற இவர் எதோ திறமோ இந்தியாகாரனோட சேந்து செய்த அட்டகாசம் கொஞ்சமே.பிறகு கிழக்கில இவெண்டை ராசிக்குழு. ஆளையாள் சாட்டி யார் காசுக்காக கடத்தினான்களோ தெரியாது. வன்னியில கப்பத்தில இயக்கம் நடத்திறவை இன்னும் ஏனோ அறிக்கை விடையில்லை. அதிலையும் சந்தேகம். அவையும் வெளிநாட்டில இருந்து எலக்க்ஷன் பிரசாரத்துக்கு ஆக்கள் வந்திருக்கினம் எண்டு செய்தி போட்டவை. அவையும் இலக்க்ச்ணன் செலவுக்கு இந்த நேரத்தில யார் செய்தது எண்டு தெரியாமல் செய்து இருக்கலாம். இல்லாட்டி இந்த ஜீவனை ஓர் பங்கு போட்டு விலைக்கு வாங்கி இருக்கலாம். பிடி பட்டா ஈ.பி.டி.பி.யின்டை பெயர் கெடும். காசு வந்தால் தங்களுக்கு. இதுக்கு இவையளும் தங்கண்டை வெளிநாட்டில இருந்து பொய் நிக்கிற ஆக்களை பாவிச்சு இருக்கலாம் தானே. அதோட கொலையை பற்றி இவைக்கு சொல்லி கொடுக்க வேண்டுமே. அந்த காலத்தில சுழிபுரத்தில அதே ஊரிலேயே மண்வெட்டி வாங்கி அதே ஊர் பெடியளை தாட்டவையில்ல. இவை இப்ப ஒரு அறிக்கையும் இதை பற்றி விடாமல் இருக்க சந்தேகம் தான். அதோட இவேன்ரை ஆள் ஒருத்தர் செவ்வேள் எண்டு லண்டனில இருந்து போய் யாழில சுயேட்சை குழுவில போட்டியிடுறார்.

  இந்த செவ்வேள் பற்றி லண்டனில நல்ல அபிப்பிராயம் இல்லை. இவர் பழைய (இண்டைக்கும்) புளொட் ஆள். லண்டனில் இவர்தான் 1980களில புளொட் அலுவலகத்தை நடத்தியவர் என நினைக்கிறன். பலமுறை புளொட் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டபோது அதிகாலை வேளை இரவுவேளை என்றில்லாமல் அங்கிருந்து தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்தவர். இவர் தன்னை லண்டனின் முன்னணி சட்டத்தரணி என விளம்பரப்படுத்திறார் ஆனா லண்டனில சட்டத்தரணி அல்ல என்டும் சட்ட உதவியாளராகவே பணியாற்றி வருகின்றார். (க செவ்வேளுக்காக யாழில் ஒட்டப்பட்ட பிரசுரங்கள் அவரை லண்டனின் முன்னணி சட்டத்தரணி என வர்ணித்து இருக்குதாம்). இவர் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மானவர. இப்ப இவரோட யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் இன்னும் வேறை சிலரும் தேர்தலில் போட்டியிடுகினம். சில ஆண்டுகளுக்கு முன் சினிமாத்துறையிலும் ஈடுபட்ட க செவ்வேள் சில படங்களையும் தயாரித்து இருக்கேக்கை இவர் சென்னையில சினிமா ஆசை காட்டி ஒரு பெண்னை பாலியல் பாலக்காரம் செய்து உள்ளதாகவும் அதைப்பற்ரிய செய்திகள் நக்கிரன் பத்திரிக்கையில் செய்தியாக வந்ததாகவும் அதனால இவர் இந்தியாபக்கம் போகமுடியாம இருக்கிறதா லண்டனில சொல்லினம்.

  இப்ப வெளிநாட்டில இருந்து போய் நிக்கிற ஈ.பி.டி.பி. புளொட், சுயேட்சை கட்சிகளிண்டை ஆக்களை வைச்சு விளையாட்டு காட்டுவினம். இல்லாட்டி ஈ.பி.டி.பி. புளொட்காரருக்கு நாட்டில தேர்தலுக்கு ஆக்கள் இல்லேண்டு வெளிநாட்டில இருந்து இவ்வளவு காசு செலவழிச்சு ஏன் இறக்கினம். தேர்தல் தில்லுமுல்லுக்கு தானே. இவை சனத்திக்கை போய் தில்லுமுல்லு இப்படி கப்பம் கொலை செய்தால் சனமும் கண்டு பிடிக்க முடியாது. இவை புது முகமா இருப்பினம். பிறகு அடையாளமும் காட்ட முடியாது. இவை தங்கண்டை நாட்டிக்கு திரும்பி விடுவினம். இதில சந்தேகம் டக்லஸ் சொல்ற மாதிரி வெளிநாடில இருந்து போன யாரோதான் திட்டமிட்டு இதை செய்து இருக்கினம். இந்த எலக்சன் நேரம் இதை டக்லஸ் செய்ய வேண்டி இராது. அதோட பணதிக்கை புரளிர டக்லஸ்க்கு இப்படி ஏன் காசு தேவை இர்ருக்கு. இது அறிக்கை ஒண்டும் விடாமல் இருக்கிற புலோட்காரர் தான் சந்தேகம். இல்லாட்டி புளொட் தலைவருக்கும் தெரியாமல் வெளிநாட்டில இருந்து போய் நிக்கிரவ தன்கேண்ட காசு தேவைக்காயும், டக்லஸ்ண்டை பெயரை கெடுக்கவும் செய்திருப்பினம். அரசாங்கம் இந்த நேரத்தில வெளிநாட்டில இருந்து போய் யாழில அந்த நேரமோ அதக்கு முதலோ நிண்ட கட்சியளுக்கு வேலை செய்யிற ஆக்களை பிடிச்சு ஒழுங்க விசாரிச்சா எல்லாம் தெரியும். முன்று கோடிண்டா சும்மாவா. இன்னும் எத்தனை பேர் இரகசியமா கப்பம் கொட்டுது இருக்கினமோ யாருக்கு தெரியும். வெளியில சொல்ல பயத்தில இருப்பினம்.

  சும்மா புலோட்காரையும் சாட்ட கூடாது. ஆனா அவெண்டை ஆக்களோ யாரோ யாழில வசிக்காத வெளிநாடுகாரர் தனிபட்ட ரீதியிலோ எதோ ஜீவனோடை டீல் வைச்சு செய்து இருக்கினம். இப்ப குற்றவாளி ஜீவன். டீல் வைச்சவை யாரெண்டும் தெரிச்சு இருக்காது வெளிநாட்டுக்கு திரும்பி விடிவினம். டக்லஸ்ண்டை பெயரும் கட்சி பெயரும்தான் கெடும்.

 4. யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பகுதியில் கடத்தப்பட்ட மாணவனான கபில்நாத் கொலையை அடுத்து ஈபிடிபியின் சாவகச்சேரி அலுவலகம் மக்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  மாணவன் கபில்நாத் கொல்லப்பட்டமையை அடுத்து கொலைக்கும் ஈபிடிபி கட்சிக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன.

  இந்த நிலையில் சாவகச்சேரிப் பகுதியில் இன்று பிற்பகல் திரண்ட அப்பகுதி மக்கள் அங்கிருக்கின்ற ஈபிடிபி காரியாலயத்தினை முற்றுகையிட்டனர்.

  அதன் பின்னர் ஈபிடிபி அலுவலக பொருட்கள் அனைத்தும் மக்களால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளன.

  மக்கள் பெரிய அளவில் அவர்களது அலுவலகத்திற்குள் நுழைந்ததை அடுத்து அங்கிருந்த ஈபிடிபியினர் தப்பி ஓடியுள்ளனர்.

  சம்பவம் நடைபெற்ற வேளை அந்தப் பகுதி மக்கள் அனைவரும் திரண்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  தற்போதும் அங்கு பதட்டம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

  வவுனியாவிலும் இவ்வாறான சூழல் தற்போது எதிர்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  1. இளைய தளபதி விஜய் ரசிகர் மன்றம் says:

   இந்தச்செய்தியைபப்டிக்க மனதுக்கு மகிழ்ச்சியாய் இருக்கு.

   மக்களின் இந்தக்கோபத்தை திசைதிருப்பவும் காயடிக்கவும்தானே இந்தத்தேர்தல், திருவிழா, அறிக்கை எல்லாம்?

   மக்களின் இந்தக்கோபத்தை அமைப்பாக்கி, யாழ்குடாநாட்டிலிருந்து ஈ பீ டீ பீ யை மட்டுமல்ல, மக்கள் விரோதச் சக்திகள் அனைத்தையும் அடித்துக்கலைக்க ஏதாவது செய்ய முடியாதா?

   இதைச் செய்ய எந்த அமைப்புக்கும் துணிவில்லை என்றால், தனியாளாக அதனைச்செய்ய எங்கள் தளபதி விஜய் இலங்கைக்கு வரவேண்டும்.

 5. அண்ணோய் நல்ல காலம் இன்றைக்கு லீவு நாள். இணைய செய்திகள் முழுக்க வாசிக்க கூடியது வாசிக்கிறது. இப்பதான் ஈ.பி.டி.பி சயிட்டில செய்தி போட்டிரிக்கினம். ஜீவன் தங்கண்டை உறுப்பினர் இல்லையெண்டு. அதை உங்களுக்கு அப்படியே கட் அண்ட் பஸ்டேடில போடுறன். நிங்களும் வாசியுங்கோ. பாருங்கோ இப்பதான் இதில ஒரு கமெண்ட் எழுதிப்போட்டு வாசிக்க இப்படி இருக்கு.

  உதயன் சுடரொளி பத்திரிகை செய்திக்கு ஈ.பி.டி.பி. தென்மராட்சி அமைப்பாளர் பதில்!

  இன்று 29.03.2010 உதயன் பத்திரிகையின் முன்பக்கத்தில் பிரசுரமான தலைப்புச் செய்தி தொடர்பாக கடந்த 12 வருடங்களாக கட்சியின் தென்மராட்சி பிரதேச அமைப்பாளராகவுள்ளதால் கீழ்காணும் விபரங்களை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதுடன் இதனை தங்களது பத்திரிகையில் பிரசுரித்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

  1. தங்களது பத்திரிகையில் வெளியான மேற்படி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஜீவன் என்பவர் எக்காலத்திலும் நுணாவிலில் உள்ள எமது அலுவலகத்தில் பணியாற்றவில்லை என்பதுடன் அவர் எமது கட்சி உறுப்பினருமல்ல. அவர் எமது கட்சியின் உறுப்பினராயின் நிச்சயம் அவரிடம் எம்மால் வழங்கப்பட்ட அங்கத்துவ இலக்கம் குறிப்பிட்ட அடையாள அட்டை இருக்க வேண்டும்.

  2. மரண விசாரனை மேற்கொண்ட சாவகச்சேரி நீதிபதி அவர்கள் ஜீவன் ஈ.பி.டி.பி. கட்சியின் உறுப்பினர் என எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.

  எனவே ஏற்றுக்கொள்ள முடியாத உண்மைக்கு மாறான செய்திகளைப் பிரசுரித்து எமது கட்சிக்கு தேர்தல் காலத்தில் அவப்பெயரினை ஏற்படுத்தும் செயலில் தங்கள் பத்திரிகை ஈடுபட்டு வருவதாக கருதமுடிகின்றது.

  கடந்த தேர்தல் காலங்களிலும் இவ்வாறு எமது கட்சிக்கு சேறு ப+சும் செய்திகள் வெளி வந்துள்ளமையை தாங்கள் அறிவீர்கள். இத்தகைய செய்திகளை வெளியிடுவது பொதுமக்களை பாதிக்கச் செய்யும் செயலாகவே கருதப்படுகின்றது. எனவே பொறுப்பு வாய்ந்த பத்திரிகை என்ற வகையில் தாங்கள் பத்திரிகை தர்மத்தை காக்க வேண்டும் என்று நாம் வேண்டிக் கொள்கின்றோம்.

  எமது கட்சி மீது களங்கத்தையும் மக்களிடம் குழப்பத்தையும் ஏற்படுத்தும் சான்றுகள் அற்றதும் உண்மைக்கு மாறானதுமான செய்திகளை எதிர்வரும் காலங்களில் பிரசுரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

  நன்றி

  இப்படிக்கு

  சூசைமுத்து அலக்சாண்டர் சாள்ஸ்
  சூசைமுத்து நல்லா முத்தா சொல்றார். அப்ப இனி ஈ.பி.டி.பிகாரருக்கும் ஜீவனுக்கும் தொடர்பில்லை. இவை இன்னும் வடிவா சொல்லி இருக்கலாம். தங்களுடன் முந்தி இருந்தவர் பிறகு நடத்தை சரியில்லை எண்டு வெளியில் விட்டிட்டோம் எண்டு. இல்லாட்டி அவரை துரோக குழு வாங்கிட்டு எண்டு. ஓகே நேரம் போகிறது. அடுத்த கிழமைக்கு இடையில நேரம் இருந்தால் பாப்போம். செய்தி கமெண்ட் எழுதுங்கோ நேரம் கிடைக்கேக்க வாசிப்போம்.

 6. பிரான்ஸ் ………………………………………………………………………………………………………….மனித உரிமைகள்ஆர்வலரான கவிஞர்அருந்ததியுடன் இது குறித்துக்கதைத்தேன். அவரதுவிளக்கங்களின் படி டக்ளசோ டவரதுதோழர்களோ இதுவரை படுகொலைகளில் ஈடுபட்டது கிடையாது எனச் சொன்னார்.எனவே அவரது கருத்துப் படி டக்ளஸ் மீது சேறு பூசுவதை தவிருங்கள்.

  1. “படுகொலை” என்றால் வேறு “கொலை” என்றால் வேறோ?

   மன்னிக்கவும், ஓர் கவிஜருக்கு உள்ள தமிழ் அறிவு சாதாரண தமிழருக்கு இல்லையென்பது தெரியாமல் பொய் விட்டது.

   தங்களிக்கு ஒலிபரப்பாளர் K.S.Raja வை தெரியுமோ? அவர் எப்படி இறந்தார்? (ஓர் உதாரணம்)

  2. இது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய காமெடி. மனிதன் கவலைப் படும் வேளையிலும் இப்படி பகிடி எழுதி (சந்தி)சிரிக்க வைக்கவும் சிலர் இருக்கிறார்களே!

  3. ஓஒஊ…… தற்போதுதான் சரியாகப் பார்த்தேன் அவர் ஓர் “மனித உரிமைகள்ஆர்வலர்” அதுவென்றால் வேறு அர்த்தங்களும் உண்டோ? அது என்ன பிரான்ஸ் இல் இருக்கும் ஷோபா சக்தியும் அப்படி… ஆப்படி!…….. ஒன்றும் புரியவில்லை.

   அவர் தமிழ்க் கவிஜரோ ஆங்கிலக் கவிஜரோ தெரியவில்லை. உங்கள் தேநீர் கடைக்காரருக்கு இதை வாசிக்க சொல்லுங்கள்.
   Navy – EPDP kill thirteen civilians in Allaipiddy-Velanai
   http://transcurrents.com/tamiliana/archives/167

   அது சரி அவர் ஏன் “உத்தமர்” “ஜனநாஜகவாதி” “பண்பாளர்” டக்ளசோ அவரதுதோழர்களோ அரசாளும் தீவகத்தில் சென்று ஓர் தேநீர் கடை வைக்கக் கூடாது?

   இல்லாவிடினும் அம்மைச்சருக்கு பக்கத்தில் ஓர் தேசியக் கவிஞராக சென்று அரச-சபையில் இருக்கலாமே?
   (தற்போது மேதகு அமரர் வேலுப்பிள்ளை பிரபாகரனிற்கு அரசவையில் கவி பாடிய புதுவை இரத்தினதுரை அம்மைச்சருடன் இணங்கப் போகிறார், அதற்கிடையில் சீக்கிரம் “இணக்க-விசா”விற்கு விண்ணப்பிர்க்கும்படி அறிவுறுத்துங்கள்.

   அத்துடன் ஏற்கனவே அம்மைச்சர் புலம் பெயர்ந்தவர்களை அழைத்து ஜனவரியில் ஓர் மாகாநாடு கூட்டியிருந்தார்.
   (எத்தனை பேர் சென்றார்கள் என்று என்னைக் கேட்காதீர்கள் – சொல்ல வெட்கமாக இருக்கிறது)

   தற்போது சென்றால் முன்னர் காசி ஆனந்தன் கூட்டணி மேடைகளில் கவி பாடியது மாதிரி தேர்தலிற்கு கவி பாடலாம்.

   “மனித உரிமைகள்ஆர்வலர்” மனித உரிமையைப் பற்றி அறிய ஆவலாக இருப்பார், இவ் இணையதளத்திலேயே வந்த செய்தியையும் அதன் பின்னூட்டங்களையும் வாசிக்க கொடுங்கள்.
   http://inioru.com/?p=11685

   மேலும் தேவையென்றால் தற்போதைக்கு இதை வாசித்துக் கொடுங்கள்.
   EPDP killing:
   Ramesh and his brother-in-law were shot dead at Wellawatte. With that killing, Douglas re-established control over the paper. Though the LTTE was blamed by Douglas, it was widely suspected that it was an internal EPDP killing.
   Ramesh’s death triggered off an exodus of EPDP Parliamentarians to foreign countries. Today Devananda is the lone EPDP MP in Parliament.

   None of those elected as MPs from the EPDP are in the party today except for Devananda’s uncle Sivathasan and Batticaloa’s Rasamanickam.

   Most of the EPDP ex-Parliamentarians are abroad and many of them, in their refugee claims, have blamed the Ramesh killing on Douglas. This speaks volumes about the inner democracy within the EPDP.
   http://www.nation.lk/2008/03/16/newsfe1.htm

   3. Killings that Cripple a People:
   Some of the killings in Jaffna also appear part of the EPDP’s plan to eliminate electoral rivals, something the LTTE had been doing for a long time.

   On 15th Aug Sambasivam (47) of Nachchimaar kovil Jaffna,who is a distributor for the Tamil daily Uthayan, was returning after distribution in Point Pedro and Atchuvely. He was shot dead near Puttur Junction by killers affiliated to the State. This appears to be a continuation of the attack on Uthayan Press last June by the EPDP killing two employees.

   On the night of 31st August gunmen went to the educated women’s housing scheme in Mannan Kurichchi, close to Mirusuvil and shot dead Mrs. Thavaneswary Saravanalingam (47), and her husband Ponniah Saravanalingam (50). Velayutham Thangarathinam, a lady living next door who looked out to see what was going on was also shot dead. A year ago Thavaneswary and her husband had played a leading role in a protest that blocked the A9 trunk Road demanding the resettlement of displaced civilians in Eluthumadduvaal, Vilivalai, Oththuveli, Usan and Karambaham. The latter areas are now part of the Army’s high security zone. The protesters also invited TNA MP Raviraj to join them. According to local sources the security forces were responsible for this killing and intelligence may have been provided by the EPDP. Charles of the EPDP was seen in the area over the next two days.

   It is only a question of time before state killer groups (Army, EPDP or the Karuna group) start collecting information about them and the circus of white vans and masked men on motorcycles would begin. It is out of such fear that many of them are desperately fleeing to India. In a refugee camp in Trincomalee with 75 Tamil families from the Mutur area, a social worker reported the presence of less than 10 men. The rest were perhaps afraid to show themselves and in hiding somewhere. Under these circumstances resettling the families would remain a pipe dream and that is what those in power perhaps intend.
   http://www.uthr.org/bulletins/bul41.htm

   காலம் காலமாக அகதிகள் இலங்கை அரசாங்கத்திலாலையோ, தமிழீழ விடுதலைப் புளிகளாலையோ உருவாக்கப்படவில்லை, இவர்களாலும்தான். இப்படி எல்லோராலும் காலத்திற்கு காலம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உருவாக்கப்பட்டவர்கள்தான் இன்று இந்திய அகதிமுகாம்களில் வதங்குகிறார்கள். உங்கள் நண்பருக்கென்ன லாப் சப்பலில் கவி பாடிப் பாடி தேநீர் ஊற்றிக் கொண்டிருப்பார். ஆனால் “மனித உரிமை” என்பதை தயவு செய்து கொச்சைப் படுத்தாதீர்கள்.

   இதற்க்கு மேலும் ஆதாரங்களுடன் தேவையென்றால்…. மேலும் தரப்படும்.

 7. தொடரும் மர்மக் கொலைகள்:

  யாழ்ப்பாணம் அளவெட்டி மத்தி அளவெட்டி பகுதியில் தனித்திருந்த மூதாட்டி ஒருவர் இனந்தெரியாதோரால், கொலை செய்யப்பட்டுள்ளார்
  இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

  கொலையுண்டவர் பொன்னுத்துரை பகவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

  எனினும் சம்பவம் நேற்று பகல் தெரியவந்த நிலையில் சடலம் நேற்று மாலை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  இந்த மூதாட்டி கழுத்து வெட்டப்பட்ட நிலையிலேயே கொலை செய்யப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  அத்துடன் வீட்டில் உள்ள பொருட்களும் சிதறிக்கிடந்ததாக தெரிவிக்கப்படடுள்ளது

  சுழிபுரம் மேற்கு கல்விளான் வயல் பகுதி கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று நண்பகல் மீட்கப்பட்டது.

  இது குறித்து கிராமசேவகர் மூலம் மக்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தின் அருகில் இருந்து பயணப் பை ஒன்றைக் கைப்பற்றினர்.

  கைப்பற்றப்பட்ட ஆவணங்களியிருந்து சடலமாக மீட்கப்பட்டவர் சுழிபுரம் பறாளையைச் சேர்ந்த கந்தையா கணேசமூர்த்தி (வயது – 49) என்பவர் என அடையாளம் காணப்பட்டது.

  சம்பவ இடத்திற்கு வந்திருந்த உறவினர்கள் சடலத்தை அடையாளப்படுத்தினர். மேற்படி சடலத்தின் அருகில் ஒரு வித திரவம் நிரப்பப்பட்ட போத்தல் ஒன்றும் கிடக்கக் காணப்பட்டது.

  கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் நீண்ட காலமாகத் தனிமையில் வசித்து வந்த இவர் கடந்த சனிக்கிழமையே யாழ்ப்பாணம் வந்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்தனர்.

  சடலம் யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Comments are closed.